11242020செ
Last updateசெ, 24 நவ 2020 7pm

காஞ்சி மடத்தின் வரலாறு : பொய்யிலே பிறந்தது

01_2005.jpg

""ராகுலா
பொய்பேச வெட்கப்படாதவர்களின்
சிரமணத்தன்மை (துறவு)
கால் கழுவிய நீரைப் போல
விலக்குதற்குரியது!
நீரை ஊற்றிய பிறகு உள்ள
மண்பாண்டம்போல வெறுமையானது!
''   புத்தர்

(அசோகனின் பாப்ரு கல்வெட்டில் உள்ள "ராகுலோவாத ஸூத்தம்' என்ற சூத்திரத்திலிருந்து)


சங்கராச்சாரியா நீதிபதி?

01_2005.jpg "அப்புப் பிறை நடுவே அமர்ந்துறை விஷ்ணுவை; உப்புக் குடுக்கைக்குள்ளே உணர்ந்தறிவது எக்காலம்?'' என்று பத்திரகிரியார் உடம்பை ஆண்டவனுக்கு ஒப்படைக்க ஏங்கித் தவித்தார். லோகச் சேமத்திற்குத் தவம் இருப்பதாய்ச் சொல்லும் சங்கராச்சாரியோ ""அப்பு மாட்டிக் கொண்டாலும், தான் தப்புவது எக்காலம்?'' என்று "சரீர' விடுதலைக்கு சட்டத்தின் ஆன்மாவை நோண்ட ஆரம்பித்து விட்டார்.

ஜெகத்துரு ஜெயலலிதேந்திர ஸரஸ்வதி

சங்கரராமனைக் கொலை செய்தது ஜெயேந்திரன்தான் என்பது உண்மையே ஆனாலும், அதற்கு எப்பேர்ப்பட்ட அசைக்க முடியாத ஆதாரங்கள் இருந்தாலும் ஜெயேந்திரனைக் கைது செய்யுமாறு ஜெயலலிதா எப்படி உத்திரவிட்டிருக்க முடியும்?

 

 ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்பாளர்களையும் ஆர்.எஸ்.எஸ்.காரர்களையும் ஒரே நேரத்தில் குடைந்து வரும் கேள்வி இது.