06192021
Last updateவெ, 18 ஜூன் 2021 3pm

இனவாத தீ மூட்டலுக்கு எதிராக அணிதிரள்வோம்!

கடந்த சில நாட்களாக காலி மாவட்டத்தில் கிங்தொட்டயை அண்டிய பகுதிகளில் நடந்திருக்கும் அமைதியின்மை மற்றும் இனவாத- மதவாத மோதல்கள் அதிகரித்துள்ளமை சம்பந்தமாக சம உரிமை இயக்கம் என்ற வகையில் நாம் சமூகம் விழிப்புடன் இருக்க வேண்டுமென எதிர்ப்பார்க்கின்றோம். கிடைக்கும் தகவல்களுக்கமைய சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களின் வீடுகளும் ஏனைய சொத்துக்களும் சேதமாக்கப்பட்டுள்தோடு, உயிரழப்பொன்றும் நடந்திருக்கின்றது.

நவம்பர் 13ம்திகதி காலி மஹஹபுகல பகுதியில் நடந்த வாகன விபத்துதான்  இந்த பரிதாப நிலைக்கு முழுமுதற் காரணமாக இருந்தது. அந்த விபத்தில் சம்பந்தப்பட்ட ஒரு சாரார் சிங்களவர்களாக இருந்ததோடு மற்றவர்கள் முஸ்லிம்களாக இருந்தனனர். வாகன விபத்தினால் ஏற்பட்ட கருத்துவேறுபாடால் இரு சாராருக்கும் மத்தியல் மோதல் உருவாகியிருந்த நிலையில்தான் அது இனவாத மோதலாகப் பரவியது. தனிப்பட்ட பிரச்சினை காரணமாக ஏற்பட்ட மோதலை இனவாத மோதலாக பரவச் செய்வதற்கு பிரதேச அரசியல்வாதிகள் பாரதூரமான முறையில் தலையிட்டிருக்கின்றனர். அது எதிர்வரும் பிரதேச சபை தேர்தலில் அதிகாரப் போட்டி சம்பந்தப்பட்டதாகும்.


இனவாத-மதவாத-பொறிக்குள் மீண்டும் சிக்குவதா?

நாம் இத்துண்டுப்பிரசுரம் ஊடாக உங்களைச் சந்திப்பது நாட்டின் ஒருபகுதியில் இனவாத, மதவாத கொடுந்தீ கொழுந்துவிட்டு எரியும் சந்தர்ப்பத்திலாகும். அண்மையில் தர்க்காநகரில் ஆரம்பித்த இந்தத்தீ அளுத்கம பேருவளை வழியாக பரவிவருகிறது. மதப்பற்றுள்ள சிங்கள பௌத்தர்களுக்கும் மார்க்கப்பற்றுள்ள முஸ்லிம்களுக்கும் இடையிலான சிறு சிறு பிரச்சினைகளுக்காக, குழந்தைகள் முதியவர்கள் உள்ளிட்ட அப்பாவி மக்கள் படுகொலையாவுமளவுக்கு சென்றதேன்?. தற்போது வியாபார நிலையங்கள் பல தீயிடப்பட்டுவிட்டது, பல உயிர்கள் பலியாகியுள்ளன, மேலும் பலர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இத்தனை கொடுமைகளும் எதனை பகிர்ந்துகொள்ள முடியாமல் போனதற்காக? இந்த வன்முறை ஆரம்பமாகியது எப்படி?

கடத்தல், காணமலாக்கல் மற்றும் அடக்குமுறைக்கு முடிவு கட்டுவதற்காக ஏகாதிபத்தியத்திற்கும் தேசிய அழுத்தத்திற்கும் இனவாதத்திற்கும் எதிராக போராடுவோம்!

தினக்குரல் பத்திரிகையின் யாழ். வடமாரச்சிக்கான பிரதேச நிருபர் சிவஞானம் செல்வதீபன் கடந்த 14ம் திகதி இரவு அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டு கடுமையான காயங்களுடன் பருத்தித்துறை மாந்தை அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். செல்வதீபன் இற்றைக்கு சில வருடங்களுக்கு முன்னர் செல்வதீபனின் சகோதரர் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டதற்கு எதிராக குரலெழுப்பியவராகும்.

மறுபடியும் ஓர் கறுப்பு ஜூலையா? மாபெரும் ஆர்ப்பாட்டம்!

இலங்கையில் இன்று முஸ்லீம் சகோதரர்களுக்கு எதிராக நடாத்தப்படும் திட்டமிட்ட இனக்கலவரம், கொலைகள், சொத்துகளைச் சூறையாடுதல்- அழித்தல் போன்ற நடவடிக்கைகளை கண்டித்து சமவுரிமை இயக்கம், நாளை (18.06.204) மாலை 4 மணிக்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளது.

மூவின மக்களும் கலந்து கொண்ட சம உரிமை இயக்கத்தின் லண்டன் கலந்துரையாடல்

நேற்றைய தினம் லண்டனில் சம உரிமை இயக்கத்தின் கலந்துரையாடல் இடம் பெற்றது. இதில் இலங்கையின் மூவினங்களை சார்ந்தவர்களும் கலந்து கொண்டிருந்தனர். இப்படியான சகல இன மக்களும் ஓரிடத்தில் கூடி அரசியல் குறித்து கலந்துரைடிய நிகழ்வு முன்னர் எப்போதும் சாத்தியமானதாக இருந்ததில்லை. சம உரிமை இயக்கத்தின் ஜரோப்பிய முன்னணி செயற்பாட்டாளர்களான தோழர்கள் நியூட்டன், நுவான் இருவரும் மூவின மக்களும் இணைந்து சகல இனம், மதம் சார்ந்த ஒடுக்கு முறைகளிற்கு எதிராக போராட வேண்டியதன் அவசியம் குறித்தும், இனவாதம் மதவாதத்திற்கு எதிரான பரந்து பட்ட மக்கள் இயக்கம் ஒன்றின் தேவை குறித்தும் உரை நிகழ்த்தினார்கள்.