01212021வி
Last updateச, 16 ஜன 2021 11am

உலக வர்த்தகக் கழக(W.T.O)த்தின் ஹாங்காங் ஒப்பந்தம் : மறுகாலனியாதிக்கத்தின் பிடி இறுகுகிறது

01_2006.jpgதனியார்மயம் தாராளமயத்தின் மூலம் இந்திய விவசாயமும், சிறுதொழிற்துறையும், வங்கி, காப்பீடு, கல்வி போன்ற சேவைத்துறையும் பன்னாட்டு நிறுவனங்களின் விருப்பத்துக்கு ஏற்ப மாற்றியமைக்கப்படுவது, தங்கு தடையின்றி நடந்து வருகிறது. இந்தியா மட்டுமின்றி, இந்தியா போன்ற ஏழை நாடுகள் அனைத்திலும் பொருளாதார சீர்திருத்தம் என்ற பெயரில் இந்த மாற்றங்கள்தான் திணிக்கப்படுகின்றன. இப்படிப்பட்ட நிலையில், ஏழை நாடுகளின் இம்மூன்று துறைகளையும் ஒரே அடியில், முற்றிலுமாகத் தங்களின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வர, ஏகாதிபத்திய நாடுகள் உலக வர்த்தகக் கழகத்தின் மூலம் முயன்று வருகின்றன.


வாசகர் கடிதம்

01_2006.jpgசாதிய ஆதிக்கத்தைத் தகர்ப்பதே தமது லட்சியம் என்று புறப்பட்ட திருமா, இன்று ஆதிக்கசாதி பிழைப்புவாத அரசியல்வாதிகளுடன் கைகோர்த்துக் கொண்டு வலம் வருவது தாழ்த்தப்பட்ட மக்களுக்கெதிரான துரோகமும் அரசியல் பித்தலாட்டமும் பிழைப்புவாதமுமாகும்.

ச. மதியழகன், ஊற்றங்கரை.

பெங்களூர் "கால் வென்டர்" பெண் ஊழியர் கொலை:அந்தியச் செலாவணி வருமானத்தின் பலிகிடாக்கள்!

01_2006.jpgபெங்களூர் நகரில், பிரதிபா மூர்த்தி என்ற ""கால் சென்டர்'' நிறுவன பெண் ஊழியர் பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதை, அனுதாபம், கண்ணீர் அஞ்சலி என்ற வழக்கமான சடங்குகளுக்குள் முடித்துவிடத் துடிக்கிறார்கள், அத்தொழில் ஜாம்பவான்கள். இந்தச் சம்பவத்தை அதற்கு மேல் நீட்டித்துக் கொண்டே போனால், இந்த நவீனத் தொழிலில் வேலை பார்க்கும் ஊழியர்களின் பரிதாபகரமான நிலை வெட்ட வெளிச்சமாகி விடுமோ என அஞ்சுகிறார்கள், ""கால் சென்டர்'' தொழில் அதிபர்கள்.

இங்கேயும் ஒரு அபுகிரைப்

01_2006.jpgவீரப்பனைத் தேடுவது என்ற பெயரால் மலைவாழ் மக்களின் மீது அதிரடிப்படை ஏவிவிட்ட சித்திரவதைகள், மனித உரிமை மீறல்கள் சதாசிவம் கமிசனால் உறுதி செய்யப்பட்டுள்ளன

 

சந்தனக் கடத்தல் வீரப்பன் கும்பலை வேட்டையாடுவதற்காக, தமிழக மற்றும் கர்நாடக மாநில அரசுகளால் உருவாக்கப்பட்ட சிறப்பு அதிரடிப் படைகள், சத்தியமங்கலம், தாளவாடி, கொள்ளேகால் பகுதிகளைச் சேர்ந்த மலைவாழ் மக்களின் மீது நடத்திய மனித

வெள்ளப் பகுதிகளில் புரட்சிகர அமைப்புகளின் நிவாரணப் பணிகள், போராட்டப் பணிகள்

01_2006.jpgகடந்த நவம்பர் டிசம்பர் மாதங்களில் தமிழகத்தைத் தாக்கிய பெருமழை பெருவெள்ளத்தால் இருக்கின்ற வாழ்வும் சிக்கலாகி உழைக்கும் மக்கள் நிர்கதியான நிலைக்குத் தள்ளப்பட்டனர். இத்தகயை இயற்கைப் பேரிடர் பேரழிவு மக்களைத் தாக்கும் போது, நிவாரணம் மீட்புப் பணிகளில் ஈடுபடுவது ஒரு அரசியல் இயக்கத்தின் கடமை மட்டுமல்ல் ஒவ்வொரு மனிதனின் தார்மீகப் பொறுப்பாகவும் இருக்கிறது.