10192020Mon
Last updateFri, 16 Oct 2020 7pm

இந்தியமீனவர் துன்பத்தில் குளிர்காய்ந்தபடி, இலங்கையில் இனமுரண்பாட்டை வளர்க்க முயலும் தமிழ் - குறுந்தேசிய வெறியும் இலங்கையின் கடல்வளமும் - பகுதி 7

மீன்பிடித்தொழிலும் தமிழ், சிங்கள தொழிலாளர்களுக்கிடையிலான உறவும்

சிறிமாவோ பண்டாரநாயக்க ஆட்சி செய்த 72 -77 வரையான காலத்தில் தென்னிலங்கையில் அரசியல்ரீதியாக அசாதாரண நிலை நிலவியது. பெரும்பான்மையான மீன்பிடி சார்ந்த கிராமத்தவர் பலர் ஜேவிபி யில் இணைந்திருந்தனர். இக்காரணங்களால் நீர்கொழும்பு தவிர்ந்த ஏனைய பகுதிகளில் பாரிய மீன்பிடி அபிவிருத்தியொன்றும் அரசால் மேற்கொள்ளப்படவில்லை. அதனால் 1977 இல் ஆட்சிக்கு வந்த ஜெயவர்த்தன அரசால் உலக நாணயநிதியத்தின் உதவியுடனும், மேற்குநாடுகளின் உதவியுடனும் இப்பகுதிதியைச் சேர்ந்த 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட மீன்பிடிக் கிராமங்கள் உல்லாசப் பயணிகள் வந்து தங்கிச் செல்லும் விடுதிகளையும், கேளிக்கை அரங்குகளையும் கொண்ட தலங்களாக மாற்றப்பட்டது. இன்றும் கூட 70 சதவீதத்திற்கும் அதிகமான உல்லாசவிடுதிகள் இப்பகுதிகளிலேயே அமைந்துள்ளன. இந்த மாற்றமானது பாரிய கலாச்சார சீரழிவுகளையும், சமூக-பொருளாதார மாற்றங்களையும் ஏற்படுத்தியது. யுத்தத்தால் உல்லாசப் பயண வியாபாரம் படுத்த வேளையில் இப்பகுதி மக்கள் பாரிய பொருளாதார வறுமைக்குள் தள்ளப்பட்டார்கள். வளங்கள் நிறைந்த கடலிருந்தும் அவர்களால் தொழில் செய்யமுடியவில்லை. காரணம் இருபது வருடங்களாக கடல்சார் தொழில் செய்யாததனால் தொழில் அனுபவம் மறக்கப்பட்டதும், மீன்பிடித் தொழிலுக்கான உள்கட்டுமானம் அழிக்கப்பட்டிருந்ததுமாகும். வறுமையைப் போக்க பல குடும்பங்கள் கொழும்பு போன்ற பெருநகரங்களுக்கு புலம்பெயர்ந்தனர். ஆண்கள் தங்களை கடற்படையிலும், இராணுவத்திலும் இணைத்துக் கொண்டனர். பாணந்துற, பேருவள, ஹிக்கடுவ, காலி, மிசற, தங்கல போன்ற பிரதேசங்களை உல்லாசப் பயண அபிவிருத்தியால் பாதிக்கப்பட்ட முன்னாள் பெருமை மிகு மீன்பிடித்துறைகளுக்கு உதாரணமாகக் கூறலாம்.

 


இந்தியமீனவர் துன்பத்தில் குளிர்காய்ந்தபடி, இலங்கையில் இனமுரண்பாட்டை வளர்க்க முயலும் தமிழ் - குறுந்தேசிய வெறியும் இலங்கையின் கடல்வளமும் - பகுதி 6

உதாரணம் 2 :

ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல சிறையா இன மீன்கள் கரையோரம் பிறந்து கடற்தாளைகளைக் கொண்ட ஒரு பாக ஆழத்திற்கு மேற்பட்ட பிரதேசத்தில் சீவிக்கும். இழுவைப்படகுகள் இதன் வாழ்விடமான கடற்தாளைகளை அழித்து அவற்றிடையே மீன் பிடிக்கின்ற போது, நீரின் மேல்தளத்தில் நீந்தக்கூடிய தன்மை கொண்ட சிறையாக்கள் இழுவை மடியில் இருந்து தப்பித்து விடும். ஆனால் அவற்றின் வாழ்விடம் அழிக்கப்படும் போது அவை வேறு பகுதிக்கு புலம் பெயரும் அல்லது கரையோரமாக ஒதுங்கி இறந்து விடும். செட்டிபுலம், துறையூர், கெட்டில், நாவாந்துறை, சாவற்கட்டு போன்ற கிராமத்து தொழிலாளர்கள் பல பரம்பரையாக வேலணைக்கும் புங்குடுதீவுக்கும் இடைப்பட்ட பகுதியில், அதாவது வேலணையையும் புங்குடுதீவையும் இணைக்கும் பாலத்திற்கு கிழக்காக உள்ள கடற்பரப்பில் விடுவலை, மற்றும் சிறையாவலை பாவித்து சிறையா மீன் பிடிப்பது வழக்கம். இந்திய இழுவைப்படகுகள் சிறையாக்களின் வாழ்விடமாமான வேலணைக்கும் புங்குடுதீவுக்கும் இடையிலுள்ள கடற்பரப்பில் நாசகார மீன்பிடியில் ஈடுபடுவதனால் தற்போது விடுவலை தொழில் முற்றாக அழிந்து விட்டது. சிறையாவலை சிலரால் பாவிக்கப்பட்டாலும் முன்னைய காலம் போல் பெரிய அளவில் உழைக்க முடியாதுள்ளது என அப்பகுதி கடற்தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர் .

இந்தியமீனவர் துன்பத்தில் குளிர்காய்ந்தபடி, இலங்கையில் இனமுரண்பாட்டை வளர்க்க முயலும் தமிழ்-குறுந்தேசிய வெறியும் இலங்கையின் கடல்வளமும் - பகுதி 4

இந்திய அத்துமீறல்களும், இயற்கைவள அழிவும் இலங்கை தமிழ் மீனவரின் வாழ்நிலையும்

இலங்கையின் வடபிரதேசக் கடலில் இந்திய நாசகார மீன்பிடி எவ்வகை அழிவை ஏற்படுத்துகிறதென பார்க்கமுன், பாதிக்கப்படும் பிரதேசங்களின் கடல்வளத்தை பற்றியும், அவற்றின் தன்மை பற்றியும் அறிந்து கொள்வது, அழிவு எவ்வாறு நிகழ்த்தப்படுகிறது, மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் விளங்கிக் கொள்வதற்கு இலகுவாக இருக்கும்.

வடபகுதியின் கடல் பகுதியில் மீன்வள உருவாக்கதிற்கான இருவகை சூழல்கள் காணப்படுகின்றது.

 

1.கடற்கரையில் இருந்து இரண்டு கடல் மைலுக்கு உட்பட்ட ஐந்து பாகம் வரை ஆழம் கொண்ட பிரதேசம்.

2. ஐந்து பாகத்திற்கு மேற்பட்ட ஆழம் கொண்ட கடற்பிரதேசம். (இலங்கையின் பிரத்தியேக பொருளாதார கடல்வலைய எல்லை வரையான பிரதேசம்)

 

1. கடற்கரையில் இருந்து இரண்டு கடல் மைலுக்கு உட்பட்ட ஐந்து பாகம் வரை ஆழம் கொண்ட பிரதேசம்.

இப்பிரதேசம் கடற்கரையில் இருந்து இரண்டு கடல் மைலுக்கு உட்பட்ட, மூன்றிலிருந்து ஐந்து பாகம் ஆழம் கொண்டதாகும். இதன் அடித்தளம் பெரும்பான்மையாக முருகைக்கல்லும், மணலும், சேறும் கலந்ததாகவிருக்கும்.

இப்பிரதேசத்தைக் கடலடித்தளத்தின் தன்மை, தாவரவியல், போன்றவற்றின் அடிப்படையில் இரண்டாக பிரிக்கலாம்.

1. கரையிலிருந்து ஒரு பாகம் ஆழத்தைக் கொண்ட சேற்று மற்றும் மணல் அடித்தளத்தைக் கொண்ட பிரதேசம்

2. ஒன்றிலிருந்து ஐந்து பாகம் வரை ஆழம் கொண்ட முருகை மற்றும் மணல் அடித்தளத்தைக் கொண்ட கடற்பிரதேசம்.

 

இந்தியமீனவர் துன்பத்தில் குளிர்காய்ந்தபடி, இலங்கையில் இனமுரண்பாட்டை வளர்க்க முயலும் தமிழ்-குறுந்தேசிய வெறியும் இலங்கையின் கடல்வளமும் - பகுதி 5

இழுவைப் படகுகளின் பாதிப்புகள்

பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்தது போல இனவெறிப்போரின் கொடுமையிலிருந்து தப்பிய என் மாமன் குடும்பம் போல பல ஆயிரம் குடும்பங்கள் இன்று இந்திய இழுவைப்படகுகளின் கடற்கொள்ளையால் அன்றாடம் சோற்றுக்கு தவிக்கும் நிலையில் உள்ளனர்.

இழுவைப்படகு மீன்பிடி என்பது படத்தில் காண்பது போன்று இயந்திரப்படகின் கடையால் பகுதியில் பாரிய பை போன்ற வலையை இணைத்து இயந்திர உதவியுடன் கடல் அடித்தளத்தை வடிகட்டுவதாகும். இந்த வகை மீன்பிடி முறையானது பின்வரும் கடல்வள அழிவையும், இயற்கை மாசடைதலையும் ஏற்படுதுகிறது.

அவையாவன :

1. மீனின் வகை, தொகை, நிறை, அளவு போன்ற எதையும் கணக்கில் கொள்ளாமல் மீன்பிடித்தல்

2. கடலடித்தள தாவரங்களை அழிப்பதன் மூலம் தாவரவியலில் மாற்றமேற்படுத்துவது

3. கடலடித்தள பவளப்பாறைகள் - முருகைகளை அழித்தல்

4 மீன் இனத்தின் முட்டைகளையும் குஞ்சுகளையும் அழிப்பதன் மூலம் மீன் உற்பத்தியை தடைப்படுத்துதல்

5. இயற்கையின் சமநிலையைக் காக்கும் கடலடித்தள சிறு நுண்ணுயிர்களையும் உணவுக்கு உதவாத மீன்வகைகளையும் அழிப்பதன் மூலம் இயற்கை அழிவை ஏற்படுத்தல்.

6. பலமணி நேரம் தொடர்ச்சியாக இழுவைப்படகு இயங்குவதன் மூலம் பல நூறு லீட்டர் எரிபொருள் மூலம் சூழல் மாசடைதல்.

 

இந்தியமீனவர் துன்பத்தில் குளிர்காய்ந்தபடி, இலங்கையில் இனமுரண்பாட்டை வளர்க்க முயலும் தமிழ்-குறுந்தேசிய வெறியும் இலங்கையின் கடல்வளமும் - பகுதி 3

மீன்பிடித்திறன் அதிகரிப்பும் கடல்வள அழிவும்

கடலில் உருவாகும் மீன்வளத்தின் அடிப்படையில் கிடைக்கவல்ல வருமானத்திற்கு மீறியதான மீன்பிடித்திறனை அதிகரிக்க முதலீடுசெய்வதும், அதைக் கட்டுப்படுத்தி மீன்வளத்திற்கேற்ப முதலீடு செய்ய வகைசெய்யாமல், மீன்பிடித்துறையில் தாராளமய முதலீட்டை ஒரு அரசு தனது கொள்கையாக கொண்டிருக்குமானால் அதனால் முதலில் பாதிப்படைவதும், அழிவுக்குள்ளாவதும் கடல்சார் வளங்களே.

உற்பத்தி உபகரணங்களில் முதலீடு செய்யும்போது, அதை இலாபத்துடன் திருப்பிப் பெற்றுக்கொள்ள வேண்டிய தேவை முதலீட்டாளருக்குண்டு. ஆனால் மீன்பிடித்தொழில் ஒரு தொழிற்சாலையில் இயந்திரங்களையும், மனிதரின் உழைப்பையும் அடிப்படையாகக் கொண்டு மூலதனத்தை உயர்த்துவது போலல்ல. மீன்வளம் இயற்கை சார்ந்தது. ஒரு தொழிற்சாலையில் இயந்திரத்தை வைத்து உற்பத்தியை கூடவோ அல்லது குறைக்கவோ முடியும்.