புலத்து வியாபாரிகளை நிராகரித்திடுவோம்!!

“எமது தாயகம் தமிழீழம்எமது குறிக்கோள் தமிழீழம், எமது தலைவர் பிரபாகரன்” என்று 2009ம் ஆண்டு புலம் பெயர்ந்த நாடுகளின் தெருக்களில் நின்று மக்களை கூக்குரல் போடவைத்த புலம்பெயர் வியாபாரிகள், இன்று தமக்குள் புலிகளின் பெயரால் மக்களை ஏமாற்றி பெற்ற சொத்துகளுக்காக வெட்டுக் குத்துப்படுகின்றனர். தமிழ் மக்களின் பணத்தை தின்று ஏப்பம்விட்ட இந்த பிரகிருதிகள்,  மீண்டும் புலிகள் இயக்கம், பிரபாகரனின் பெயர் மற்றும் உயிர் நீர்த்த மாவீரர்களை பாவித்து வியாபாரம் செய்து மீளவும் மக்கள் பணத்தில் உல்லாசமாக வாழ முற்படுகின்றனர்.

Read more: புலத்து வியாபாரிகளை நிராகரித்திடுவோம்!!

புலிகளை விமர்சனம் செய்வதனை கைவிடுங்கள் ?

இரண்டு வருடங்களுக்கு முன் தமது வலுவை இழந்து தமிழ் மக்களை அடிமைகளாக்கி விட்டு யுத்தத்தில் அழிந்து போய்விட்ட புலிகள் பற்றிய விமர்சனங்கள் வரும் போது, புலிகளை விமர்சிப்பது தற்காலத்தில் அவசியம் அற்றது என்னும் போக்கு, தங்களை கடந்த காலங்களில் ஜனநாயகவாதிகளாக இனம் காட்டி புலியின் பக்கமோ அன்றி அரசின் பக்கமோ வெளிப்படையாக சாராதிருந்த பலரிடம் இன்று காணப்படுகின்றது. இதற்கு இவர்கள் கூறும் காரணங்கள் பல:

Read more: புலிகளை விமர்சனம் செய்வதனை கைவிடுங்கள் ?

மூடிமறைத்து அரசியல் செய்யும் போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள்!!!

மனிதனின் வாழ்வில் பின்னிப்பிணைந்தது அரசியல். அப்படிப்பட அரசியலை ஒரு சிலர் “அரசியல் ஒரு சாக்கடை” என்றும், “எனக்கு அரசசியலுடன் ஈடுபாடில்லை” என்று செல்வதும் கூட அரசியல் தான். தாம் எந்த அரசியலில் இருக்கின்றார்களோ அந்த அரசியலைக் காப்பாற்ற கூறும் கூற்றுகள் இவை. இதை இன்றைய இந்த சமூகத்தில் நிறையவே காணலாம்.

Read more: மூடிமறைத்து அரசியல் செய்யும் போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள்!!!

தூக்குத் தண்டனை விவகாராத்தில் எங்கே போனது அன்னையின் முகத்தில் கண்ட இரக்கம்?

லண்டனில் உள்ள இந்திய தூதரகத்திற்கு முன்பாக 30.08.2011 அன்று இந்திய முன்னாள் பிரதமர் ரஜீவ் கொலையில் சம்பந்தப்பட்டதாக பொய்க் குற்றம் சாட்டி தூக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரை விடுதலை செய்யுமாறு ஆர்ப்பாட்டம் ஒன்று நிகழ்த்தப்பட்டது.

Read more: தூக்குத் தண்டனை விவகாராத்தில் எங்கே போனது அன்னையின் முகத்தில் கண்ட இரக்கம்?

மக்களின் எதிரிகள் வருகிறார்கள்

வேதாளம் மீண்டும் முருங்கையில் ஏறியதாம் என்பது தான் ஞாபகத்திற்கு வருகின்றது இனியொரு இனையத் தளத்தைப் பார்க்கும் போது. மீண்டும் கள்வர் கூட்டம், மீண்டும் சதிகளின் ஆரம்பம், மீண்டும் மக்களை மந்தைகளாக நினைக்கும் கூட்டம். சுயநலவாதிகளின் கூட்டம். மீண்டும் இரத்தம் குடிக்கும் காட்டேரிகளின் கூட்டம். எல்லாம் ஒன்று சேர்கின்றன. இதை விளம்பரப்படுத்தும் இணையம் தான் இனியொரு. இனியொரு பற்றி இங்கு கவனத்தை செலுத்திவதிலும் விட இதில் வெளியாகிய நூறு கருத்துக்கள் முட்டி மோதட்டும் நூறு பூக்கள் மலரட்டும் என்ற தலைப்பில் வந்த கட்டுரையைப் பற்றி பார்ப்பதே இங்கு பிரதான நோக்கமாகும்.

 

Read more: மக்களின் எதிரிகள் வருகிறார்கள்