தமிழ் பேசும் சமூகம் எதிர்நோக்கும் வரலாற்றுத் துரோகம் :வன்னியிலிருந்து கண்மணி

கலாச்சாரத்திற்கும் பழக்கத்திற்கும் ஏதாவது தொடர்பு உண்டா என்று பார்த்தால் இல்லை என்று தான் சொல்வார்கள். கலாச்சாரம் என்பது பாரம்பாரியமாக இருந்து வரும் ஒரு இனக் குழுமத்தின் செயற்பாட்டு நடைமுறைகள் என்றும் சொல்வீர்கள்.

ஆனால் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் சுருங்கிவரும் உலகத்தில் இவை காலச்சாரமாகி விடுவதை அவதானிக்கலாம். இருந்தாலும் இலங்கையில் தமிழர்களுக்கு என்று தனியான கலாச்சார பண்பாடுகள் உண்டு. அந்த கலாச்சார அடித்தளத்தையே தகர்ப்பதில் அந்நிய சக்திகள் போட்டி போட்டுக் கொண்டு செயற்படுகின்றன.

Read more: தமிழ் பேசும் சமூகம் எதிர்நோக்கும் வரலாற்றுத் துரோகம் :வன்னியிலிருந்து கண்மணி

உயிர் வலிக்கும் கணங்கள் - வன்னியிலிருந்து கண்மணி

வன்னி மனித அவலத்தின் உச்சம் அரங்கேறிய காலம் அரசியல் பாதுகாப்பு வலயம் என காலத்துக்கு காலம் அறிவிக்கப்படும் பகுதிகளை நோக்கி மக்கள் இடம்பெயர்வார்கள். பின்புதான் தெரியும் அது பாதுகாப்பு வலயம் அல்ல உயிர்கொல்லும் வலயம் என்று. இவ்வாறு நாங்களும் அக்கராயனில் இருந்து பல இடப்பெயர்வுகளைச் சந்தித்து இறுதியாக அம்பலவன் பொக்கணை என்னும் ஊரில் இடைக்காடு என்னும் இடத்தில் குடியிருந்தோம். அங்கும் எறிகணைகளும் துப்பாக்கிவேட்டுச் சத்தங்களும் மக்கள் நடமாட்டம் பார்க்காது வீழ்ந்து உயிர்களை காவு கொண்டது. பலர் இரத்தவெள்ளத்தில் கிடந்து துடித்தார்கள். ஏராளமானோர் பதுங்கு குழிக்குள்ளேயே வாழ்க்கையை நடத்தினர். ஒருவேளை உணவிற்கே பட்டினியால் வாடி தவித்து கஞ்சி கொடுக்கும் இடங்களை தேடி அலைந்தனர். அப்போது இடம்பெற்ற இச் சம்பவம் என் உயிர் உள்ளவரை மறக்கமுடியாது.

Read more: உயிர் வலிக்கும் கணங்கள் - வன்னியிலிருந்து கண்மணி

பிரபாகரானே! எங்களுக்கு என்ன பதில் கூறு? - வன்னி அகதி முகாமில் இருந்து கண்மணி

பிரபாகரானே!
உன்னிடம் சில
கேள்விகள்?
நீ
இருக்கின்றாயோ
இறந்தாயோ
எமக்குத் தெரியாது
இருந்தும்
கேட்கின்றோம்?

Read more: பிரபாகரானே! எங்களுக்கு என்ன பதில் கூறு? - வன்னி அகதி முகாமில் இருந்து கண்மணி

ஊருக்குப் போயிருந்தேன் - வன்னி அகதி முகாமில் இருந்து கண்மணி

நீண்ட நாள் கழித்து கிடைத்த,
விடுமுறையொன்றில்
ஊருக்குப் போயிருந்தேன்
முன்பு கிடைத்த,
சந்தோசம் எதுவுமே
இருக்கவில்லை!
பிள்ளையாரடிச் சந்தியும்
வேம்படிக் கோயிலும்
வெறிச்சோடிக் கிடப்பதைக்
கண்ட எனக்கு

Read more: ஊருக்குப் போயிருந்தேன் - வன்னி அகதி முகாமில் இருந்து கண்மணி

மன்னித்து விடு தாயே! - வன்னி அகதி முகாமில் இருந்து கண்மணி

முகம் தெரியாத தாயே!
உனது வயிற்றில்
உருவான
முதற் கருவின்
கண்ணீர் வரிகளம்மா!
வன்னி அவலத்தின்
கண்ணீர் வாழ்கையில்

Read more: மன்னித்து விடு தாயே! - வன்னி அகதி முகாமில் இருந்து கண்மணி