01242021ஞா
Last updateச, 16 ஜன 2021 11am

போபால் கொலைகார 'டௌ' - வே வெளியேறு

""நாபாம்'' தீக்குண்டு, ""ஏஜெண்ட் ஆரஞ்ச்'' போன்ற இரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்களை உற்பத்தி செய்யும் உலக முன்னணி நிறுவனம் ""டௌ கெமிக்கல்ஸ்''. அதன் நாசகார ஆயுத உற்பத்திக்கு எதிராக அமெரிக்கா உட்பட உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் மக்கள் போராடுகிறார்கள். குறிப்பாக, வியத்நாம் போரில் பயன்படுத்தப்பட்ட பேரழிவு ஆயுதங்களை உற்பத்தி செய்ததும் டௌ கெமிக்கல்ஸ் நிறுவனம் தான்.

 


இராக் அமெரிக்கப் படை விலக்கம் ஊரை ஏய்க்கும் நாடகம்

""அமெரிக்கப் படைகள் இராக்கில் நடத்தி வந்த போர் நடவடிக்கைகள் ஆகஸ்ட் 31, 2010 அன்றோடு முடிவடைந்துவிட்டதாக'' அறிவித்திருக்கிறார், அமெரிக்க அதிபர் ஒபாமா. அவர் இந்த அறிவிப்பை வெளியிடுவதற்கு இரண்டு வாரங்கள் முன்னதாக, இராக்கை ஆக்கிரமித்திருக்கும் அமெரிக்கப் படைகளின் ஒரு பகுதி இராக்கிலிருந்து வெளியேறியது. இந்த நடவடிக்கைகள் மூலம், ""இராக் தற்பொழுது சுதந்திரமான சுயாதிபத்தியமுள்ள நாடாக ஆகிவிட்டதாகவும், இராக்கிற்கு விடுதலை பெற்றுத்தரும் தனது நடவடிக்கை வெற்றிகரமாக முடிவடைந்துவிட்டதாகவும்'' உலக நாடுகளுக்கு அமெரிக்கா அறிவித்திருக்கிறது.

 

விளை நிலங்கள் வீட்டு மனைகள் ஆக்கப்படுவதைத் தடைசெய்

திருவாரூர் தனி மாவட்டம் ஆன பின், மாவட்ட நிர்வாகக் கட்டிடங்களைக் கட்டுவதற்காக திருவாரூரின் அருகே அமைந்துள்ள விளமல், சிங்களாஞ்சேரி, தண்டலை, மே.மங்கலம் ஆகிய கிராமங்களின் விளைநிலங்கள் அரசால் கையகப்படுத்தப்பட்டன. இதனால் வேலை இழந்த விவசாயிகளுக்கு எவ்வித மாற்று வேலையும் வழங்கப்படவில்லை. மாறாக, அவர்கள் அரசு உயர் அதிகாரிகள், அரசு ஒப்பந்தக்காரர்களின் வீடுகளில் துப்புரவு பணியாளர்களாகவும், எடுபிடிகளாகவும் வேலை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

 

சாராயக் கடைக்கு மூடுவிழா! மக்களுக்குத் திருவிழா !

சென்னை, சேத்துப்பட்டு பள்ளிக்கூடச் சாலை "டோபி கானா' எதிரில் பெண்கள், மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்களைப் பாதிக்கும் வகையில் 1997 முதல் சாராயக் கடை (ஒயின்ஸ் கடை) ஒன்று இயங்கி வந்தது. அதை அகற்றும்படி கோரி பொதுமக்கள் ம.க.இ.க. தலைமையில் பல ஆண்டு களாகப் போராடி வருகின்றனர். தனியார் முதலாளியிடம் இருந்தபோது இப்பகுதியின் ரவுடி தங்கைய்யாவையும் போலீசையும் வைத்து தோழர்களை மிரட்டியும் விலைக்கு வாங்கவும் முயன்று தோற்றுப் போனார்கள். மாவட்ட ஆட்சியாளர் ஆய்வுக் குழு அனுப்பினார். அதைச் சந்தித்து முறையிடப் போன மக்கள் ஊர்வலத்தை வழிமறித்த போலீசு சாராய வியாபாரிக்குத் துணை நின்றது.

 

சந்தி சிரித்தது - இந்துஸ்தான் யூனிலீவரின் அடக்குமுறை

புதுவை வடமங்கலத்திலுள்ள இந்துஸ்தான் யுனிலீவர் லிமிடெட் என்ற பன்னாட்டு நிறுவனத்தில் தொடர்ந்து நிலவிவரும் தொழிலாளர் விரோதப் போக்குகளைக் கண்டித்தும், பு.ஜ.தொ.மு. இணைப்பு சங்கமான இந்துஸ்தான் யுனிலீவர் ஒர்க்கர்ஸ் யூனியன் தலைவர் தோழர் அய்யனார் 12(3) ஊதிய ஒப்பந்தத்தின் குறைகளை சுட்டிக் காட்டியதால், அவருக்கு வழங்கப்பட்ட 10 நாட்கள் பணியிடை நீக்கத்தை ரத்து செய்யக் கோரியும் 15.09.2010 அன்று ஆலைவாயில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 


 

 

கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு இந்துஸ்தான் யுனிலீவர் ஒர்க்கர்ஸ் யூனியன் பொதுச்செயலாளர் எழில் தலைமை உரையாற்றினார். தோழர் முத்துக்கிருஷ்ணன், தோழர் லோகநாதன் கண்டன உரையாற்றினர். பு.மா.இ.மு. புதுவை மாநில அமைப்பாளர் தோழர் கலை மற்றும் பு.ஜ.தொ.மு. புதுவை மாநிலப் பொருளாளர் செல்வம் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். கண்டன ஆர்ப்பாட்டத்தில் தோழர்கள், பன்னாட்டு நிறுவனங்கள் தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டி வருவதையும் நமது வரிப்பணத்தில் கொழுத்து வருவதையும் அதற்கு துணைநிற்கும் ஓட்டுக்கட்சித் துரோகிகளையும் அம்பலப்படுத்திப் பேசினார்கள்.

மாற்றுத் தொழிற்சங்கத்தை அம்பலப்படுத்தியும், சாதிரீதியாக தொழிலாளர்களைப் பிளவுபடுத்தி வைத்திருப்பதை உணர்த்தும் வகையில் தோழர்கள் பேசியதும், தொழிலாளர்கள் அனைவரும் வர்க்கமாய் அணிதிரண்டு நக்சல்பாரிப் பாதையில் போராட வேண்டும் என்று அறைகூவி அழைத்ததும் தொழிலாளர் மத்தியில் புதுத்தெம்பையும், உத்வேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

பு.ஜ.தொ.மு., புதுவை.