11262020வி
Last updateசெ, 24 நவ 2020 7pm

தன் அதிகாரத்துக்காக அரசியல் அமைப்பைத் திருத்தும் பாசிசக் கூட்டம், இனப் பிரச்சனையை தீர்க்காத பேரினவாதிகளாகவே கொக்கரிக்கின்றது

இலங்கையின் இன்றைய பிரச்சனைகள் தான் என்ன? அவை பற்றி நாட்டை ஆளும் கும்பல் அக்கறைப்படுகின்றதா? இல்லை. தேசிய இனப்பிரச்சனைக்கு அற்ப சலுகையைக் கூட அது கொடுக்க மறுக்கின்றது. இப்படி இனப்பிரச்சனையை தீர்க்க மறுக்கின்ற பேரினவாதிகள், தொடர்ந்து இலங்கையில் இன முரண்பாட்டை பிரதான முரண்பாடாக முன்தள்ளிய வண்ணம் உள்ளனர்.  


இந்தியப் பொலிஸ்சுடன் கூட்டுச் சேர்ந்து கட்டைப் பஞ்சாயத்து நடத்திய சபா நாவலன், குகநாதனிடம் 30 இலட்சம் கோரினார்!

இது ஒன்றும் கற்பனையல்ல. நிஜம். அண்மையில் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக இந்திய பொலிசார் பிடித்த குகநாதனை விடுவிக்க, சபா நாவலன் அவரிடம் இந்திய ரூபா 30 இலட்சத்தைக் கோரினார். நடந்த சம்பவம் உண்மை. கைது, பேரம், ஊழல், இலஞ்சம் … இதில் சபா நாவலன் சம்மந்தப்பட்டது எல்லாம் உண்மை. இதன் பின்னணியில் உலவும் தகவல்கள் பல. பொய், புரட்டு, உண்மை, மூடிமறைப்பு என்று அனைத்தும் கலந்த தகவல்கள் வெளிவருகின்றது. அதைத்தான் இங்கு நாம் தொகுத்துத் தர முனைகின்றோம்.

நான் மத்தியகுழு உறுப்பினர் என்பதை தெரிந்து கொண்டு, தகவல்களை கோரித் தாக்கினர் (வதைமுகாமில் நான் : பாகம் - 34)

புலிகள் தாம் தெரிந்து கொண்ட மார்க்சியத்தை, தங்கள் எதிர்ப்புரட்சிக்கு ஏற்ப பயன்படுத்தத் தொடங்கினர். மாத்தையா தொடர்ச்சியான கேள்விகளை, ஜனநாயக மத்தியத்துவத்தை அரசியல் ரீதியாக எடுத்துக்காட்டி தரவுகளைக் கோரினான். நான் அதீத ஜனநாயகத்தை அடிப்படையாக வைத்து, அவர்களின் கேள்விகளை எதிர்கொண்டு வேகமாக சந்தேகப்படாத வகையில் பதிலளித்தேன். கற்பனைப் பெயர்களைக் கொண்டும், அவர்கள் நன்கு அறிந்த அவர்கள் தேடுகின்ற நபர்களைக் கொண்டும் பதிலளித்தேன். இதன் மூலம் எனக்குத் தெரியாது என அனைத்தையும் மறுத்தேன்;. நான் பகிரங்கமாக, மக்கள் மத்தியில் வேலை செய்யும் உறுப்பினர் என்றேன். அப்படித்தான் அன்று மக்கள் மத்தியில் மிகப் பகிரங்கமாக வேலைசெய்தேன். புலிகள் அறிய விரும்பிய, கைப்பற்ற விரும்பிய பணம், இராணுவ உபகரணங்கள் என் பொறுப்பில், என் கண்காணிப்;பில் தான் இருந்தது. நான் இராணுவக் குழு உள்ளிட்ட தளத்தின் நிதி மற்றும் இராணுவ உபகரணங்களுக்கு கூட பொறுப்பாக இருந்தேன். 

வாய்க்குள் துப்பாக்கியை வைத்து மிரட்ட, சுடடா நாயே என்று கத்தினேன் (வதைமுகாமில் நான் : பாகம் - 35)

என் மீதான தொடர்ச்சியான விசாரணையில், எனது தயக்கமற்ற பதில், முன் கூட்டியே அவர்களுக்கு விடைதெரிந்த கேள்விகள் முடிவுக்கு வந்தது. விடைதெரிய வேண்டிய கேள்விகள் பல. ஆனால் அதை மீள மீளக் கேட்டனர். கேட்கும் போது கண்மூடித்தனமாகத் தாக்கி அடித்தனர். ஏற்பட்டிந்த காயங்களை மீளவும் இரத்தம் வரும் வண்ணம் மீளமீள சிதைத்தனர். 

மகிந்தாவின் குடும்ப சர்வாதிகார பாசிச ஆட்சியை தொடர, முஸ்லீம் காங்கிரஸ் தூக்குக்காவடி எடுக்கின்றது

தேர்தல் "ஜனநாயகம்" எவ்வளவு கேலிக்குரியது என்பதை, இலங்கை சர்வாதிகார ஆட்சியாளர்கள் நிறுவி வருகின்றனர். மக்கள் வாக்களிப்பது என்பது, எவ்வளவு முட்டாள் தனம் என்பதையும், அரசியல்வாதிகளின் நடத்தைகள் எடுத்துக் காட்டுகின்றது. மகிந்த தொடர்ந்து தான்தான் அடுத்த ஆட்சியாளன் என்பதை முன்கூட்டியே முடிவெடுத்துக் கொண்டு, அரசியல் அமைப்புச் சட்டத்தையே மாற்றுகின்றான். இங்கு மக்கள், மக்களின் வாக்கு என்பதெல்லாம் வெறும் தூசு. பாராளுமன்ற ஜனநாயகத்தில், இது விபச்சாரம் செய்யத்தான் லாயக்கு.