அமரிக்க ராஜாங்க அமைச்சின் அறிக்கையும் இலங்கை அரசியற் பின்புலமும்

 மக்களின் குருதியறைந்து, கொலைகளுக்கு நியாயம் சொல்லுகின்ற ஒரு புதிய கூட்டம் மாரிகாலக் காளான்கள் போல கோரமாய்ப் பரவிக்கொண்டிருக்கும் இக்கட்டான உலக சூழலில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஒரு புறத்தில் இராட்சத வியாபாரிகள் ஆயிரமாயிரமாய் கொலைகளை நிகழ்த்திவிட்டு “வீர சிம்மாசனத்தில்” வீற்றிருக்க அவர்களின் பின்னால் இன்னும் ஆயிரம் “புதிய நியாயங்களோடு” குட்டி வியாபாரிகள் மக்களைச் சூறையாட அணிவகுத்து நிற்கின்றனர்.

Read more: அமரிக்க ராஜாங்க அமைச்சின் அறிக்கையும் இலங்கை அரசியற் பின்புலமும்

புதிய உலக ஒழுங்கு விதி – சாம்பல் மேடுகளிலிருந்து.

பாப்பாண்டவரிலிருந்து   “நோபல்  விருது”  ஒபாமா வரை  புதிய ஒழுங்கு விதி குறித்து நாளாந்த்தம்  துயரடைந்து  அறிக்கை விடுக்கிறார்கள்.  உலகின் செல்வாக்கு மிக்க  பொருளியலாளர்கள்  பொருளாதார   மாற்றுக் கொள்கை குறித்து  விவாதங்கள் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.  ஒரு குறித்த  மூன்று  ஆண்டுகளுக்கு மட்டும் தற்காலிகமாக  ஐரோப்பிய – அமரிக்கப் பொருளாதாரம் சரிந்து  விடாமல்  பாதுகாக்கப் பட்டிருக்கிறது.

Read more: புதிய உலக ஒழுங்கு விதி – சாம்பல் மேடுகளிலிருந்து.

யார் பக்கம் ?

இந்திய ஆதிக்க வர்க்கமும் அதன் இலங்கை அடிமைகளும் கூட்டிணைந்து நிகழ்த்திய வன்னிப் படுகொலைகள் புலிகள் என்ற அமைப்பிற்குக் கிடைத்த தோல்வி மட்டுமல்ல அதன் அதிகாரம் சார்ந்த கருத்தியலுக்கும் சிந்தனை முறைக்கும் கிடைத்த மாபெரும் தோல்வி. இன்னமும் செத்துப் போய்விடாத இந்தச் சிந்தனை முறையும், அரசியலும் இன்னும் எத்தனை மனித உயிர்களைப் பலியெடுக்கப் போகின்றன என்பதே இங்கு புதிய அச்சங்களைத் தோற்றுவிக்கின்றன.

 

Read more: யார் பக்கம் ?

அரச ஆதரவாளர்கள் கட்டமைக்கும் புதிய பிம்பம்

ஹிட்லரின் வீழ்ச்சிக்குச் சற்றுப் பின்னதாக உலகம் முழுவதும் நாஸி இராணுவத்துடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ இணைந்து செயற்பட்ட பலருக்குத் தண்டனை வழங்கப்பட்டது. ஜேர்மனியில் நூரம்பேர்க்கிலும், பிரான்சில் பியேர் லாவாலிலும் என்று ஒவ்வொரு நாடுகளிலும் குற்றவியல் நீதிமன்றங்கள் மனிதத்திற்கு எதிரான குற்றங்களுக்காகத் தண்டனை வழங்கின.

Read more: அரச ஆதரவாளர்கள் கட்டமைக்கும் புதிய பிம்பம்

இந்திய அரசியல் சதி-புதிய முரண்கள் : சபா நாவலன்

இந்தியா தலைமையிலான தெற்காசியப் பொருளாதாரத்தின் பசி, 50 ஆயிரம் தமிழ் பேசும் மக்களின் இரத்தத்தை உறிஞ்சி கொன்றுபோட்டுவிட்டு எதிர்ப்புகள் ஏதுமின்றி வெற்றி கொண்டுவிட்டதாக இறுமாப்படைந்து கொள்கிறது.

Read more: இந்திய அரசியல் சதி-புதிய முரண்கள் : சபா நாவலன்