07252021ஞா
Last updateசெ, 20 ஜூலை 2021 1pm

பழைய போர்; புதிய போர்க்களம்

 

பதிவினை முழுமையாக ஒலி வடிவில் கேளுங்கள் :
(ஒலிவடிவில் கேட்டுக்கொண்டே பதிவை வாசிப்பது கூடுதல் விளக்கமாகவும் சலிப்பற்ற அனுபவமாகவும் இருக்கும்)

{play}http://mmauran.net/oli_files/payback.mp3{/play}


சின்னச் சின்னத் துண்டுப்பிரசுரங்களாக அந்த இரகசியச்செய்தி பொதுமக்களின் கைகளுக்கு வந்து சேர்கிறது. வீதிகளில் சுவரொட்டிகளாகப் புரட்சிகர வாசகங்களுடன் அச்செய்தி காணப்படுகிறது. அதிகார அரசின் காவலாளிகள் அவசர அவசரமாகச் சுவரொட்டிகளை அப்புறப்படுத்துகிறார்கள். ஆயிரமா இரண்டாயிரமா? கோடிக்கணக்கான சுவரொட்டிகள். போராளிகள் மறைவாக வந்து சிலர் காதுகளுக்குள் செய்தியைக் கிசுகிசுத்துவிட்டுச்செல்கிறார்கள்.

துண்டுப்பிரசுரங்களிலும், சுவரொட்டிகளிலும், சங்கேத வார்த்தைகளிலும் பரிமாறப்படும் மக்களுக்கான போர்க் குறிப்பை, தாக்குதல் ஒன்றுக்கான ஆணையை வழங்கிய தலைவர் யார்?


கோணேசுவரத்தில் கண்முன்னே முசுலிம் பெண்களுக்கு அனுமதி மறுப்பு - கன்னியாவைக் கைப்பற்றும் பேரினவாதத்தின் ஊற்று எது?

பதிவினை முழுமையாக ஒலி வடிவில் கேட்க :
(ஒலிவடிவில் கேட்டுக்கொண்டே பதிவை வாசிப்பது கூடுதல் விளக்கமாகவும் சலிப்பற்ற அனுபவமாகவும் இருக்கும்)

{play}http://mmauran.net/oli_files/konesar.mp3{/play}

 

== கோணேசர் கோயில் கதை ==

சில மாதங்களுக்கு முன்னர் கனடாவிலிருந்து வந்திருந்த நண்பருக்குத் திருகோணமலையின் முக்கிய பகுதிகளைச்சுற்றிக் காட்டும் சாக்கில் எனது சொந்த ஊரின் சில பகுதிகளை நீண்ட காலத்துக்குப்பிறகு மறுபடியும் பார்க்கும் வாய்ப்புக்கிடைத்தது.

ஆயுதப்போர் முடிந்த பிறகு ஏற்பட்டுள்ள புதிய சூழலில் பவுத்த-சிங்களப் பேரினவாதத்தின் ஆக்கிரமிப்பு எப்படிப் படு தீவிரமாக நடந்தேறி வருகிறது என்பதைக் கண்ணுக்கு முன்னால் தெளிவாகவே வேதனையோடு காண முடிந்தது.

கடைசி நாள் நாம் கோணேசர் கோயிலைப் பார்ப்பதற்காகப் போனோம். அங்கு மட்டும் இந்தச் சம்பவம் நடந்திருக்காவிட்டல் இப்பதிவின் தலைப்பு வேறொன்றாக இருந்திருக்கும்.

(இப்பதிவுக்குத் தலைப்பெடுத்துக்கொடுத்த எம்பெருமான் கோணேசுவரருக்கு நன்றிகள். :))

கோயிலைச் சுற்றிப்பார்த்துவிட்டு படிவழியே இறங்கிக்கொண்டிருந்தபோது ஒரு முசுலிம் குடும்பத்துக்கும் கோயிலின் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் நடந்துகொண்டிருந்தது.

 

பியசேன: கபடத் தமிழ்த்தேசியத்திற்கு கடிக்க நல்ல அவல்!

அம்பாறையில் அவர் வெற்றி பெற்ற போது அந்தச்செய்தி எனக்கு கொஞ்சம் சுவாரசியமாகத்தான் இருந்தது.

அதற்கு மேலதிகமாக பியசேனவின் அரசியல் வரலாற்றையோ கொள்கை கோட்பாடுகளையோ நான் அறிய வெளிக்கிட்டதில்லை.

இந்தப் பியசேன பதினெட்டாவது திருத்தத்தை ஆதரிப்பதாகச் சொன்ன செய்தி வந்ததுமே அடுத்தடுத்து எப்படியான கருத்துக்கள் வரப்போகின்றன என்று ஊகிக்க முடிந்தது.

சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாடு தொடர்பாக தி. ஞானசேகரனுடன் உரையாடல்

சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியம்” என்ற அமைப்பு இலங்கையில் “சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாடு” என்ற பெயரில் மாநாடு ஒன்றினை ஒழுங்குசெய்திருக்கிறது. இம்மாநாடு தொடர்பாக பல்வேறு ஐயங்களும் கேள்விகளும் எதிர்ப்புக்களும் எழுந்துள்ளன. இம்மாநாட்டுக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யுமுகமாகவும் ஏற்பட்டுள்ள ஐயங்களைத் தெளிவுபடுத்துமுகமாகவும் இம்மாநாட்டின் இலங்கை இணைப்பாளராகப் பொறுப்பேற்றிருக்கும் தி. ஞானசேகரன் (ஞானம் சிற்றிதழ் ஆசிரியர்) அவர்களோடு உரையாடினோம். உரையாடல் ஒலிவடிவில் பதிவுசெய்யப்பட்டது.

ஒலிப்பதிவின் சுருக்கம் இங்கே உரைவடிவிலும் தரப்பட்டுள்ளது. இவ்வுரை வடிவம் பருமட்டானதும் சுருக்கமானதுமே. ஒலிவடிவோடு சிற்சில இடங்களில் இவ்வுரைவடிவம் முரண்படவும் வாய்ப்புண்டு. எனவே தயவு செய்து ஒலி வடிவத்தினை முழுமையாகக் கேட்கும்படி வேண்டுகிறோம்.

ஒலிப்பதிவு செய்யப்பட்ட நாளன்று உரையாடியதற்கு மேலதிகமாக, அன்று விடுபட்டுப்போன சில கேள்விகள் அடுத்தடுத்த நாட்களில் தொலைபேசி வழியாகக் கேட்கப்பட்டுப் பதில் பெறப்பட்டது. அக்கேள்விகளும் பதில்களும் பின்னிணைப்பாக இங்கே உரைவடிவில் மட்டும் தரப்பட்டுள்ளது

பால்வினைத்தொழில் - இஸ்லாம் - அறம் என்பதன் வரைவிலக்கணம் - நீ யார் பக்கம்?

கலையரசனின் [கலையரசனின் அரபு விலைமாதர்கள் - நுகர்பொருள் பலியாடுகள் என்ற பதிவினை facebook இல் பகிர்ந்ததைத்தொடர்ந்து அங்கே அறுபதையும் தொட்டு நீளுகிற உரையடால் ஒன்று ஆரம்பித்தது. இவ்வுரையாடலை தொடர்ந்தும் மூடிய நிலையில் fb இல் செய்வது பொருத்தமாயில்லாத காரணத்தால் இங்கே பதிவிடுகிறேன். மிக நீண்ட உரையாடல். ஆர்வமிருந்தால் மட்டும் படியுங்கள்]