உயர்வென்று கொட்டுக முரசே -- நல்லஉண்மைத் தமிழர்கள் வாழ்வு!அயர்வில்லை அச்சமிங் கில்லை -- புவிஆளப் பிறந்தவன் தமிழன்.உயர்வென்று கொட்டுக முரசே!அயல் என்று கொட்டுக முரசே!-- உறவான திராவிடர் ...

சூதும் வாதும் நிறைந்த பூதலமீது நல்லார்ஓதும்வழி நடந்தால் யாதும் துயரமில்லைஏதும் சந்தேகம் உளதோ -- நெஞ்சே இதில்தீது சிறிதும் உளதோ?சாதி சமயக்கடை வீதியின் அப்பால்ஒருசோதி அறிவிற் சரி ...

ஆடுவமே பள்ளுப் பாடுவமே! -- தமிழ்ஆட்சியின் மாட்சியில் கூடுவமே -- ஆடுவமே!கோடுயர் வேங்கடக் குன்றமுதல் -- நல்லகுமரிமட்டும் தமிழர் கோலங் கண்டேநாம் -- ஆடுவமே...மானிடம் என்னுமோர் ஆதிப்பயிர் ...

வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே!மாண்புகள் நீயே என் தமிழ்த் தாயே!வீழ்வாரை வீழாது காப்பவள் நீயேவீரனின் வீரமும், வெற்றியும் நீயே!தாழ்ந்திடு நிலையினில் உனை விடுப்பேனோ?தமிழன்எந் நாளும் தலைகுனி வேனோ?சூழ்ந்தின்பம் ...

புகைச் சுருட்டால் இளமை பறிபோகும்பொல்லாங் குண்டாகும்புகைச் சுருட்டால்!முகமும் உதடும் கரிந்துபோகும்முறுக்கு மீசையும் எரிந்து போகும்புகைச் சுருட்டால்!மூச்சுக் கருவிகள் முற்றும் நோய்ஏறும் -- பிள்ளைமுத்தம் தருநே ரத்தில் வாய் ...

காப்பி எதற்காக நெஞ்சே?காப்பி எதற்காக?கையினில் சுக்குடன் மல்லி இருக்கையில்காப்பி எதற்காக?தீப்பட்ட மெய்யும் சிலிர்க்க இளிப்புக்குவாய்ப்புற்ற தெங்கு வளர்ந்த தென்னாட்டினில்காப்பி எதற்காக?ஆட்பட்டாய் சாதி சமயங்களுக்கேஅடிமை வியந்தாய் ஆள்வோர் களிக்கப்பூப்போட்ட ...

பூனை வந்தது பூனை! -- இனிப் போனது தயிர்ப் பானை!தேனின் கிண்ணத்தைத் துடைக்கும் -- நெய்யைத்திருடி உண்டபின் நக்குந்தன் கையைப்பூனை வந்தது பூனை!பட்டப் பகல்தான் இருட்டும் -- ...

என்றன் நாயின் பேர் அப்பாய்! அதுமுன்றில் காக்கும் சிப்பாய்!ஒன்றும் செய்யாது விளையாடும்; பெருச்சாளியைக்கொன்று போடும்; குலைக்கும் எதிராளியை;என்றன் நாயின் பேர் அப்பாய்...அதன் இனத்தை அதுவே பகைக்கும்! -- ...

காக்கை யிடத்திலுள்ள ஒற்றுமை கண்டு -- நீவாழ்க்கை நடத்தினால் நன்மை உண்டுகாக்கை யிடத்திலுள்ள ஒற்றுமை...ஆக்கிய சோறு கொஞ்சம் சிந்திக் கிடக்கும்! -- காக்கைஅழைத்துத்தன் இனத்தொடு குந்திப் பொறுக்கும்காக்கை ...

இத்தனைச் சிறிய சிட்டு! -- நீபார்!எத்தனை சுறுசுறுப்பு! -- தம்பிஇத்தனைச் சிறிய சிட்டு!குத்தின நெல்லைத் தின்றுநம் வீட்டுக்கூரையில் குந்தி நடத்திடும் பாட்டுஇத்தனைச் சிறிய சிட்டு!கொத்தும் அதன்மூக்கு முல்லை ...

நிறையப் பால் தரும் கறவை -- நீமறவேல் அதன் உறவை!குறைவிலாது வைத் திடுக தீனியைக்குளிப் பாட்டிவா நாளும் மேனியை!நிறையப் பால்தரும் கறவை!நோய் மிகுத்து மாளும்! -- கொட்டில்தூய்மை ...

முழுமை நிலா! அழகு நிலா!முளைத்ததுவிண் மேலே --அதுபழைமையிலே புதுநினைவுபாய்ந்தெழுந்தாற் போலே!அழுதமுகம் சிரித்ததுபோல்அல்லி விரித்தாற் போல் -- மேல்சுழற்றி எறிந்த வெள்ளித்தட்டுத்தொத்திக்கிடந் தாற்போல்முழுமை நிலா! அழகு நிலா!குருட்டு விழியும் ...

மழையே மழையே வா வா -- நல்லவானப்புனலே வா வா! --இவ் வையத்தமுதே வாவா!தழையா வாழ்வும் தழைக்கவும் -- மெய்தாங்கா வெப்பம் நீங்கவும்உழுவாரெல்லாம் மலைபோல் எருதைஓட்டிப் பொன்னேர் ...

சினத்தை யடக்குதல் வேண்டும் -- சினம்உனக்கே கெடுதியைத் தூண்டும்!சினத்தினை யடக்கிட முடியுமா என்றுசெப்புகின்றாய் எனில்கேள் இதை நன்றுவலிவுள்ளவன் என்று கண்டு -- சினம்வாராமலே யடக்கல் உண்டு;வலிவிலான்மேல் அன்பு ...

பொறுமைதான் உன்றன் உடைமை! அதைப்போற்றலே கடமைபொறுமையாற் கழியும் நாளிலேபுதுவன்மை சேருமுன் தோளிலே!பொறுமைதான் உன்றன் உடைமை!பொறுமையுடைய ஏழையே கொடையன்!பொறுமையிலாதவன் கடையன்!இறைவனே எனினும் பிழை செய்தோன்ஏதுமற்றவனாகி நைவான்!பொறுமைதான் உன்றன் உடைமை!பலமுறை ...

மெய் சொல்லல் நல்லதப்பா! தம்பிமெய் சொல்லல் நல்லதப்பா!கண்டதைச் சொல்லென்று சொன்னாலும் -- நீஉண்டதைச் சொல்லென்று சொன்னாலும்,மண்டை யுடைத்திட வந்தாலும் -- பொருள்கொண்டுவந் துன்னிடம் தந்தாலும்மெய் சொல்லல் நல்லதப்பா!பின்னவன் ...
Load More