ஏடெடுத் தேன்கவி ஒன்று வரைந்திட"என்னை எழு"தென்று சொன்னதுவான்!ஓடையுந் தாமரைப் பூக்களும் தங்களின் ஓவியந் தீட்டுக, என்றுரைக்கும்!காடும் கழனியும் கார்முகிலும் வந்துகண்ணைக் கவர்ந்திட எத்தனிக்கும்!ஆடும் மயில்நிகர்ப் பெண்களெல்லாம் உயிர்அன்பினைச் ...

காதலும் கனலாய் என்னையே சுடும்ஈதென்ன மாயமோ!நாதர் மாதெனையே சோதித்தாரோநஞ்சமோஇவ் வஞ்சிவாழ்வு? ஐயையோ!நலியுதேஎன் அகமிகுதியு மலருடலேநனிமெலிதல் அநிதி இதுவலவோ?வனிதை யாளினெதிர் அழகுதுரை விரைவில்வருவாரோ அலது வருகிலரோ?வாரிச விக சித ...

சோலையிலோர் நாள் எனையேதொட்டிழுத்து முத்தமிட்டான்துடுக்குத் தனத்தை என்சொல்வேன்மாலைப் பொழுதில்இந்த மாயம்புரிந்த செம்மல்வாய்விட்டுச் சிரித்துப் பின்போய்விட்டானேடி தோழி! சோலையிலோர்... ஓடி விழிக்கு மறைந்தான் - ஆயினும் என்றன்உள்ளத்தில் வந்து ...

வேற்றூர்போய் நள்ளிரவில் வீடுவந்தவேலனிடம் ஆள்ஒருவன் கடிதம்தந்தான்.ஏற்றதனை வாசிக்க லுற்றான்வேலன்:"என்னருமைக் காதலரே கடைசிச்சேதி;நேற்றிரவு நாமிருவர் பூந்தோட்டத்தில்நெடுநேரம் பேசியதை என்தாய்கண்டாள்!ஆற்றாத துயரால்என் தந்தை,அண்ணன்அனைவரிட மும்சொல்லி முடித்துவிட்டாள்.குடும்பத்தின் பெயர்கெடுக்கத் தோன்றிவிட்டாய்கொடியவளே! விஷப்பாம்பே! ...

நல்ல இளம்பருவம் - மக்கள்நாடும் குணம்,கீர்த்தி,கல்வி இவையுடையான் - உயர்கஜராஜ் என்பவனும்,முல்லைச் சிரிப்புடையாள் - மலர்முக ஸரோஜாவும்,எல்லையிற் காதற்கடல் - தனில்ஈடுபட்டுக் கிடந்தார்.திங்கள் ஒருபுறமும் - மற்றைச்செங்கதிர் ...

 மேற்றிசையிற் சூரியன்போய் விழுந்து மறைந்திட்டான்;மெல்லஇருட் கருங்கடலில் விழுந்த திந்தஉலகும்!தோற்றியபூங் காவனமும் துளிரும்மலர்க் குலமும்தோன்றவில்லை; ஆயினும்நான் ஏதுரைப்பேன் அடடா!நாற்றிசையின் சித்திரத்தை மறைத்தஇருள், என்றன்நனவிலுள்ள சுந்தரியை மறைக்க வசமில்லை!மாற்றுயர்ந்த பொன்னுருக்கி ...

தோட்டத்து வாசல் திறக்கும் - தினம்சொர்ணம் வந்தால் கொஞ்ச நேரம்மட்டும்வீட்டுக் கதைகளைப் பேசிடுவாள் - பின்புவீடுசெல்வாள். இது வாடிக்கையாம்.சேட்டுக் கடைதனிற் பட்டுத்துணி - வாங்கச்சென்றனள் சுந்தரன் தாய்ஒருநாள்!பாட்டுச் ...

காதலியின் கடிதம் என் அன்பே, இங்குள்ளோர் எல்லோரும்க்ஷேமமாய் இருக்கின் றார்கள்;என் தோழியர் க்ஷேமம்!வேலைக்காரர் க்ஷேமம்! இதுவுமன்றிஉன்தயவால் எனக்காக உள்வீட்டுக்களஞ்சியநெல் மிகவு முண்டே,உயர்அணிகள் ஆடைவகை ஒவ்வொன்றில்பத்துவிதம் உண்டு. மற்றும்கன்னலைப்போற் பழவகை ...

தாமரை பூத்த குளத்தினிலே - முகத்தாமரை தோன்ற முழுகிடுவாள்! - அந்தக்கோமள வல்லியைக் கண்டுவிட்டான் - குப்பன்கொள்ளை கொடுத்தனன் உள்ளத்தினை! - அவள்தூய்மை படைத்த உடம்பினையும் - ...

குன்றின்மீது நின்று கண்டேன்கோலம் என்ன கோலமே!பொன் ததும்பும் "அந்திவானம்"போதந் தந்த தே - டி - தோழி!குன்றின்மீது... முன்பு கண்ட காட்சி தன்னைமுருகன் என்றும் வேலன் என்றும்கொன் ...

சிட்டுதென்னை மரத்தில் - சிட்டுப்பின்னும் அழைக்கும் - ஒருபுன்னை மரத்தினில் ஓடிய காதலி"போ போ" என்றுரைக்கும்.வண்ண இறக்கை - தன்னைஅங்கு விரித்தே - தன்சென்னியை உள்ளுக்கு வாங்கிஅச் ...

உலகமிசை உணர்வெழுப்பிக் கீழ்த்திசையின் மீதில்உதித்துவிட்டான் செங்கதிரோன்; தகத்தகா யம்பார்!விலகிற்றுக் காரிருள்தான்; பறந்ததுபார் அயர்வு;விண்ணிலெலாம் பொன்னொளியை ஏற்றுகின்றான் அடடா!மிலையும்எழிற் பெருங்கடலின் அமுதப்ர வாகம்!மேலெல்லாம் விழிஅள்ளும் ஒளியின் ப்ரவாகம்!நலம்செய்தான்; ஒளிமுகத்தைக் ...

 மாலைப் போதில் சோலையின் பக்கம்சென்றேன். குளிர்ந்த தென்றல் வந்தது.வந்த தென்றலில் வாசம் கமழ்ந்தது.வாசம் வந்த வசத்தில் திரும்பினேன்.சோலை நடுவில் சொக்குப் பச்சைப்பட்டுடை பூண்டு படர்ந்து கிடந்துகுலுக்கென்று சிரித்த ...

காட்சி 1[மணிபுரி மாளிகையில் ஓர் தனி இடம். சேனாபதிகாங்கேயனும் மந்திரியும் பேசுகின்றனர்]சேனாபதி:மன்னன் மதுவினில் ஆழ்ந்து கிடக்கின்றான்!மின்னல்நேர் சிற்றிடை ராணி விஜயாநமக்கும் தெரியாமல் எவ்விடமோ சென்றாள்.அமைப்புறும் இந்த மணிபுரி ...

அகவல்அரசன் அமைச்சர்பால் அறிவிக் கின்றான்:"அமுத வல்லிஎன் ஆசைக் கொருபெண்!தமிழிலக் கியங்கள் தமிழிலக் கணங்கள்அமைவுற ஆய்ந்தாள்; அயல்மொழி பயின்றாள்;ஆர்ந்த ஒழுக்கநூல், நீதிநூல் அறிந்தாள்;அனைத்தும் உணர்ந்தா ளாயினும், அன்னாள்கவிதை புனையக் ...

குயில்கூவிக் கொண்டிருக்கும்; கோலம் மிகுந்தமயிலாடிக் கொண்டிருக்கும்; வாசம் உடையநற்காற்றுக் குளிர்ந்தடிக்கும்; கண்ணாடி போன்றநீர்ஊற்றுக்கள் உண்டு; கனிமரங்கள் மிக்க உண்டு;பூக்கள் மணங்கமழும்; பூக்கள்தோறும் சென்றுதேனீக்கள் இருந்தபடி இன்னிசைபா டிக்களிக்கும்;வேட்டுவப் ...
Load More