மேதின நினைவு

1994 மேதினம்! அதிர்ச்சியில் உறைந்தது அன்றைய தினம் எமக்கு. நாம் சூரிச் புகையிரத நிலையத்தில் பிரசுரங்களுடன் மூவர், நால்வர் கொண்ட குழுவாக நிற்கிறோம். அன்றைய காலகட்டத்தில் தமிழர்களிடத்தில் கார் பாவனை என்பது அரிதான ஒன்று. அதனால் முக்கிய புகையிரத நிலையங்கள் எமது "மனிதம்“ சஞ்சிகையின் விற்பனை இடமாக இருக்கும். இன்று பிரசுரத்துடன் நிற்கிறோம். ஒருவித பயம். முன்னெச்சரிக்கையாக பைகளில் மறைத்துவைத்தபடி மிளகாய்த் தூள், ஸ்பிறே போன்ற "ஆயுதங்களுடன்“ நின்று இப் பிரசுரங்களை விநியோகிக்கின்றோம். தமிழ்மொழியிலும், யேர்மன் மொழியிலுமான பிரசுரங்கள் அவை. பதட்டத்துடனும் கோபத்துடனும் அடுத்து எதுவெல்லாம் நடக்கப்போகிறது என்ற கேள்விகளுடனும் நாம் நின்றோம். ஆம், நண்பர் சபாலிங்கம் புலிகளால் படுகொலை செய்யப்பட்டதை அம்பலப்படுத்தும் பிரசுரங்கள்தான் அவை.

Read more: மேதின நினைவு

"பெயரிடாத நட்சத்திரங்கள்" - சூழும் அரசியல்

பெயரிடாத நட்சத்திரங்கள் கவிதைத் தொகுப்பு தமிழீழ விடுதலைப் புலிகளில் இணைந்து அல்லது இணைக்கப்பட்டு ஆயுதப்போராட்ட களத்தில் இயங்கிய பெண்களின் குரலாக வந்த கவிதைகளை உள்ளடக்கியுள்ளது. எனவே இந்தக் கவிஞைகளிலும் புலி அடையாளத்தை மட்டும் வைத்து நோக்கும் எளிமையான போக்கு மறைமுகமான எதிர்ப்பாகவும், கள்ள மௌனமாகவும் பேணப்படுகிறதா என்ற சந்தேகம் எழவே செய்கிறது. இந்த 'மறுப்புக்கான' சமூக நியாயத்தை வைக்க முற்படுதல் என்ற நேர்மையான வழியில் இதை உரையாட முன்வருவதே சரியாக இருக்கும். புலி ஆதரவு, புலி எதிர்ப்பு என்ற இருமைகளில் சிக்குண்டு இருப்பது இவ்வகை தேக்கத்தை கடக்க முடியாத நிலையில் பலரை விட்டுள்ளது ஒருவகை அவலம்தான்.

Read more: "பெயரிடாத நட்சத்திரங்கள்" - சூழும் அரசியல்

கலந்துரையாடல் அறிவிப்பு

கலந்துரையாடப்படும் புள்ளிகள்

 

1. இலங்கை இனமுரண்பாடு: 

 

அதன் வெளிக் காரணிகளும் உள்ளகக் காரணிகளும்
தமிழ்மக்களின் எதிர்காலமும்
   
   2. இடம்பெயர்ந்த பெண்கள் குழந்தைகளின் நிலை

 
   3. பங்குபற்றுவோர் கருத்துகளும் விவாதங்களும்


காலம் : 11.10.09 ஞாயிற்றுக்கிழமை

Read more: கலந்துரையாடல் அறிவிப்பு

ஒரு நல்ல மனிதனும் கட்சி அரசியலும் – ரிபிசி கலந்துரையாடல்

கடந்த வியாழன் (29.10.09) அன்று ரிபிசி ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்த்தன அவர்களுடன் ஒரு அரசியல் சந்திப்பை வானலையில் செய்திருந்தது. மொழிபெயர்ப்பில் முக்கிய பங்களிப்பை ஆய்வாளர் சிவலிங்கம் அவர்கள் பொறுப்புடன் செய்திருந்தார்.

 

Read more: ஒரு நல்ல மனிதனும் கட்சி அரசியலும் – ரிபிசி கலந்துரையாடல்

முள்ளிவாய்க்கால் கைமாற்றிய வன்னி மக்கள்

வவுனியா தடுப்பு முகாமில் தேக்கிவிடப்பட்டவர்களை மேலும் மேலும் அவலங்கள் தாக்குகின்றன. புலியரிப்புப் பன்னாடைக்குள் அவர்கள் கிளையப்பட்டுக்கொண்டிருப்பது தொடர்கிறது. இன்னமும் புலிகள் மக்களோடு மக்களாக அங்கு இருக்கிறார்கள் என்பதால் அவையெல்லாம் அரித்து முடிந்தபின் மக்களை வெளியே கொட்டி அள்ளிச்சென்று குடியிருத்தப்போகிறதாம் அரசு.

Read more: முள்ளிவாய்க்கால் கைமாற்றிய வன்னி மக்கள்