சாரு ஆன்லைன் - பெண்கள் ஜாக்கிரதை!

கோபமும், ஆவேசமும், அவமானமும், இயலாமையுமாக அப்பெண் பதிவர் எம்மை தொடர்பு கொண்டார். 21 வயதே உடைய சிறுபெண். கவிதை எழுதும் ஆர்வமும் புனைவுகளை பகிரும் தளமுமாகவும் தனக்காக ஒரு வலைத்தளத்தை உருவாக்கிக் கொண்டு வீட்டுக்குள் முடங்கி கிடந்தாலும் இணையம் வாயிலாக உலகை வலம் வந்த சராசரி தமிழ் பெண். அவரது கவிதைகளையும் மற்ற படைப்புகளையும் குடும்பத்தினர் அனுமதி கொடுத்தால் மட்டுமே பிரசுரிக்கபடும் அளவே அவரது சுதந்திரம் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. நண்பர்களுக்காகவும் விவாதங்களில் கலந்து கொள்ளவும் புதிய நட்புகளை ஏற்படுத்திக் கொள்ளவும் பேஸ்புக் தளத்தையும் உபயோகத்தில் வைத்திருந்தார் அவர். அவையும் அவரது குடும்பத்தினரின் கண்காணிப்பிலேயே இருந்திருக்கிறது. இப்படி 6 மாதங்களாத்தான் இணையத்தின் மூலமாக வெளி உலக தொடர்புகளோடு இயங்கிக் கொண்டிருந்தார் அவர்

 

Read more: சாரு ஆன்லைன் - பெண்கள் ஜாக்கிரதை!

லெனின் பேசும் பெண்ணியம்!

"பெண்களுக்கு முழு சுதந்திரம் வாங்கிக் கொடுக்காத வரையிலும், பாட்டாளி வர்க்கம் முழு விடுதலையை அடைய முடியாது." - லெனின் [21.02.1920]

பெண்களின் உடல் உழைப்புகளை குடும்பத்திற்கு மட்டும் உபயோகித்துக் கொண்டு இழிவான அநீதியை பெண்களுக்கு ஏற்படுத்தி இருக்கிறது முதலாளித்துவம். இதன் மூலம் பெண்களை அடக்கி ஆளவும் எதற்கும் உபயோகமற்றவர்களாகவும் சித்திரித்து தங்கள் கட்டுக்குள் வைத்திருக்க முயல்கின்றனர்.

Read more: லெனின் பேசும் பெண்ணியம்!

ஸ்டாலின் முன்னிலையில் நடந்த மே தின விழாவில் பெரியார்!

பெரியார் ஐரோப்பியாவில் உள்ள பல நாடுகளுக்கும் சுற்றுப்பயணம் செய்த போது ரஷ்யாவுக்கு செல்கிறார். அவ்வரலாற்று நிகழ்வினை மே நினைவு தினமான இன்று உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். 

Read more: ஸ்டாலின் முன்னிலையில் நடந்த மே தின விழாவில் பெரியார்!

போலி இலக்கியவாதிகள் குறித்து டால்ஸ்டாய் கருத்து!

"மனிதர்களின் நலன்சார்ந்த தொடர்பில்லாத எவ்விதமான விஞ்ஞானமும், கலையும் போலிகள் அன்றி வேறில்லை. புதிய புதிய கொலை ஆயுதங்களைக் கண்டுபிடிப்பவர்கள், புதிய பயங்கர வெடிகுண்டுகளால் நாசம் செய்பவர்கள் போல் ஆபாசமாக இசை, நாடகங்கள், நாவல்கள், கவிதைகள் எழுதும் இலக்கியவாதிகள் எல்லோரும் போலிகள். சமுதாயத்தின் விஷ விதைகள்... நோய்கிருமிகள்..."

Read more: போலி இலக்கியவாதிகள் குறித்து டால்ஸ்டாய் கருத்து!

பெண் ஏன் இப்படியானாள்?

இதோ வந்துவிட்டது. மார்ச் 8, சர்வதேச மகளிர் தினம் [International Women´s Day] வருடத்திற்கு ஒருமுறை ஏதேதோ தினங்களும், விழாக்களும் வருகின்றன.   அதுபோலத்தானே இந்த மகளிர் தினமும் என்று பெண்களாலேயே நினைக்கப்படும் அளவிற்கு மேட்டுக்குடியினராலும், விளம்பர நிறுவனங்களாலும்,  அரசாங்கத்தாலும் நடத்தப்படும் ‘ஃபேஷன் ஷோ’ போல் ”பெண்களின் குரல்” [Women´s veice] ஆக்கப்பட்டிருக்கிறது.

Read more: பெண் ஏன் இப்படியானாள்?