01242021ஞா
Last updateச, 16 ஜன 2021 11am

புதிய தாலிபான் யுத்த தந்திரங்கள்

நான் தனிப்பட்ட முறையில் அந்த அமெரிக்க இராணுவ முகாம் கொமாண்டருடன் உரையாடியிருக்கிறேன். எமது ஊருக்கு அருகில் அந்த முகாம் இருந்தது. 22 ம் திகதி டிசம்பர் மாதம்(2002) நள்ளிரவு திடீரெனச் செல்கள் விழுந்து வெடிக்கும் சத்தம் கேட்டது. அடுத்த நாள் நான் போய் பார்த்த போது, முகாம் முற்றிலும் சேதமாகியிருந்தது. யாரும் உயிரோடு தப்பியதாகத் தெரியவில்லை. " - பாகிஸ்தான் எல்லையிலிருந்து சில கிலோமீட்டர் தூரத்தில் இருந்த "மஷடத் கொட்" இராணுவ முகாம் தாக்குதல் சம்பவம் பற்றி ஒரு வயோதிபர் பத்திரிகையாளரிடம் விபரித்தபோது கூறியவை இவை.


இலங்கை சமர்க்கள நிலவரம்: சுனந்த தேசப்பிரியவுடன் நேர்காணல்

தன்னார்வ தொலைக்காட்சி நிறுவனமான "The Real News TV", இலங்கையின் தற்போதைய நிலமை குறித்து அறிவதற்காக, பிரபல ஊடகவியலாகர் சுனந்த தேசப்பிரியவுடன் நடத்திய நேர்காணல் வீடியோ:

பொருளியல்: கடன் நெருக்கடி உருவானது எப்படி?

வீட்டுக் கடன் நெருக்கடி உருவானது எப்படி? ஒரு போதும் இறங்காது என நம்பப்பட்ட வீடுகளின் விலைகள் வீழ்ச்சியடைந்தது எப்படி? அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளத்தக்கவாறு தயாரிக்கப்பட்ட விவரணப் படம்.

மக்களை மனிதக் கேடயமாக்கும் இஸ்ரேலிய இராணுவம் [வீடியோ ஆதாரம்]

ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதி ஒன்றில், இராணுவ நடவடிக்கையில் ஈடுபடும் இஸ்ரேலிய படையினர், இரு சிறுவர்களை மனிதக் கேடயமாக பயன்படுத்திய சம்பவம் வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வெனிசுவேலாவில் தொழிலாளர் நிர்வகிக்கும் தொழிற்சாலை ( வீடியோ)

வெனிசுவேலாவில் 2006 ம் ஆண்டிலிருந்து, தொழிற்சாலை நிர்வாகத்தை தொழிலாளர்கள் பொறுப்பெடுத்து நடத்துவது அதிகரித்து வருகின்றது. முதலாளிகள் நட்டத்தில் இயங்குவதாகக் கூறி தொழிலகத்தை மூடுவதற்கு எத்தனிக்கும் வேளை, உற்பத்தி சாதனங்களை கையகப்படுத்தும் தொழிலாளர்கள், மனேஜர்களையும் விரட்டி விட்டு தாமே நடத்துகின்றனர். விற்பனையில் கிடைக்கும் லாபத்தை தொழிலாளர்கள் சமமாக பங்கிட்டுக்கொள்கின்றனர்.