01242021ஞா
Last updateச, 16 ஜன 2021 11am

தொட்டில் ஜனநாயகம் தொடர் புரட்சி வரை

12 ஜனவரி, 2007 ம் ஆண்டு, ஏதென்சில், கிறீஸ் நாட்டுக்கான அமெரிக்க தூதுவரின் வாசஸ்தலத்தின் மீது, ராக்கெட் லோன்ஜெர் தாக்குதல் நடத்தப்பட்டதில், அவரது குளியலறை சேதமடைந்தது. “புரட்சிகர யுத்தம்” என்ற இயக்கம் அனுப்பிய ஊடகங்களுக்கான அறிக்கையில்: “ஈராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு பரிசு.” என்று உரிமை கோரியது.


சிக்காகோ தொழிற்சாலை தொழிலாளர் உடமையாகியது

அமெரிக்க சரித்திரத்தில் முதல்தடவையாக தொழிலாளர்கள் ஒரு தொழிற்சாலையை தமது உடமையாக்கியுள்ளனர். அமெரிக்காவின் சிக்காகோ நகரத்தில் இயங்கி வந்த, "Republic Windows" என்ற தொழிலகம் அண்மைய நிதிநெருக்கடி காரணமாக, நஷ்டத்தில் நடத்த முடியாமல் இழுத்து மூடிவிட்டது.

வர்க்கப் போர் இட்ட தீ: ஏதென்ஸ் எரிகின்றது

ஐரோப்பாவின் அழகிய நகரங்களில் ஒன்றான ஏதென்ஸ், நான்காவது நாளாக எரிகின்றது. வங்கிகள் யாவும் (வெளிப்புறமாக) அடித்து நொறுக்கப்பட்டு விட்டன. நுகர்வுக் கலாச்சாரத்திற்கு மக்களை அடிமைகளாக்கிய, ஆடம்பர வர்த்தக நிலையங்கள் சாம்பலாக கிடக்கின்றன.

நிதி நெருக்கடியால் புரட்சி வெடிக்குமா?

"வங்கிகளுக்கு பணம், எங்களுக்கு மரணம்" - ஐரோப்பாவின் புரட்சிப்புயல் மையம் கொண்டுள்ள கிறீஸ் நாட்டு தெருக்களில் ஒலிக்கும் சுலோகம் அது. சர்வதேச தொலைக்காட்சி கமெராக்கள் மறுபக்கம் திரும்பி விட்டதால், அங்கே எல்லாம் வழமைக்கு வந்துவிட்டது என்ற அர்த்தம் இல்லை.

இலங்கை சிறையில் தமிழ் ஊடகவியலாளர்

இலங்கை தமிழ் ஊடகவியலாளர் திசைநாயகம், பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ், கடந்த 6 மாதங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார். ஆங்கில மொழி பத்தி எழுத்தாளரான இவரது விமரிசனக் கட்டுரைகள் சில இலங்கை அரசுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியதன் காரணமாக, இவர் பயங்கரவாத தடுப்பு பொலிஸாரால், மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார்.