10012020Thu
Last updateMon, 28 Sep 2020 8pm

டீச்சர்.. அருந்ததி ராய் என்னக் கிள்ளிட்டா - நிர்மலா சீதாராமன்!!

ருந்ததிராய் மற்றும் கிலானி இருவரையும் அரசுக்கு எதிராக சதி செய்ததாகக் கூறி கைது செய்ய வேண்டும்என்று மதச்சார்புள்ள பாஜகவும், 'போலி கம்யூனிஸ்டுகளின் அக்மார்க் முத்திரையுடன்' மதசார்பற்றதாக காட்டப்படும் காங்கிரசும் ஒரே களேபாரம் செய்தன நேற்று. பிரச்சினை என்னவென்றால், 'விடுதலை ஒன்றுதான் தீர்வு' (Azadi - The Only Way) என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி அல்ல என்ற பேருண்மையை அவர்கள் இருவரும் பேசிவிட்டார்கள். அதுவும் டெல்லியில். குறிப்பாக அருந்ததிராய் சொன்னது #$த்தில் சுண்ணாம்பு தடவியது போலாகிவிட்டது: "காஷ்மீர் எந்த காலத்திலும் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்ததில்லை. இது வரலாற்று உண்மை. இதனை இந்திய அரசாங்கமும் ஏற்றுக் கொண்டுள்ளது".


அயோக்கியா: தீர்ப்பும், வரலாறும்!!

"கடந்த கால கசப்பு அனுபவங்களை மறந்துவிட்டு முன்னேறிச் செல்வோம்" - ஆர் எஸ் எஸ் தலைவன் மோகன் பகவத் சொல்கிறான். பல நூறு வருடங்களுக்கு முன்பு நடந்த ஆதாரமற்ற கசப்பனுபவமாம் ராமன் கோயில் இடிப்பு என்ற கதையை வைத்துக் கொண்டு பல ஆயிரம் உயிர்களை பலியெடுத்த பயங்கரவாத அமைப்பின் தலைவன் சொல்கிறான் இதை.

'வினை'யகர் சதுர்த்தி!!

பெரும்பாலான வீதி முனைகளில் இருட்டின் துணையுடன் ஒன்னுக்கடிக்கக் கூடிய வாய்ப்பான இடங்கள் அமைந்திருக்கும். பாதசாரிகளின் 'ஒன்னாம்' நம்பர் அவசரத் தேவைகளுக்கு உடனடித் நிவாரணமாக அமைபவை இத்தகைய முனைகளே. மூத்திரச் சந்துகளை விட இந்த தெரு முனைகள் சுகாதாரமானவை, பாதுகாப்பானவையாகும் என்பது இவற்றின் பிரபல்யத்திற்கான காரணமாக அமைகின்றன. அப்படியான மூத்திர முக்குகளையெல்லாம் திட்டமிட்டு ஆக்கிரமித்து விநாயகர் சதுர்த்தி என்ற பெயரில் விநாயகனின் சிலையை வைக்கும் அபாயகரமான கலாச்சாரம் தமிழ்நாட்டில் பெருகி வருகிறது. இது தமிழகத்து ஆண்களின் உயிர்நாடியில் கை வைக்கும் ஒரு அத்துமீறல் என்பதாகவே நான் உணர்கிறேன்.

இந்தியாவைப் பீடித்த பன்றிக் காய்ச்சலும், பாபர் மசூதி வழக்குத் தீர்ப்பும்!!!

டிசம்பர் 6, 1992 அயோத்தி பாபர் மசூதியை இடிக்க கையில் கடப்பாரைகளுடன் 200,000 காவி வெறியர்கள்கூடினர்.

கையில் கடப்பாரைகளுடன் இத்தனை பேர் காராப் பூந்தி சாப்பிடக் கூடியதாக போலீசு நினைத்துவிட்டது போலும், அவர்களை தடுக்கவோ அல்லது இத்தனை பேர் ஓரிடத்தில் அபாயகரமான முறையில் கூடுவதை நிறுத்தவோ போலீசு ஒன்றுமே செய்யவில்லை. இதுவே, நியாயமான கோரிக்கைகளுக்கு ஒரு பத்து பேர் கூடினாலே சட்டம் ஒழுங்கு என்று ஒப்பாரி வைத்து தடியடி நடத்தி மண்டையுடைக்கும் போலீசு, காவிக் கறையைக் கண்டால் மட்டும் பல்லிளிக்கிறது.

முற்றும் கழண்ட டவுசர்!! அடடே ஆர் எஸ் எஸ் அம்மணக்கட்டை!!

சிபிஐ வசம் இருக்கும் சில முக்கிய விடியோக்களை போன வாரம் ஹெட்லைன்ஸ் டுடே என்ற செய்தித் தொலைக்காட்சி சேவை நிறுவனம் ஒலிஒளி பரப்பியது (6 விடியோக்கள்) . அவை அனைத்தும் பட்டாசு ரகங்கள். ஆர் எஸ் எஸ்ன் முக்கியத் தலைவர்கள் பயங்கரவாதிகள் என்ற உண்மை வெளிவந்தது. இந்தியாவின் குடியரசு துணைத் தலைவர் ஹமீத் அன்சாரியை கொல்வதற்கான திட்டங்களையும் வகுத்துள்ளனர் ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகள்.