ஊழல் மோசடியில் படுகுழியில் வீழ்ந்த திமுக ஆட்சியை மீள நிமிர்த்துவதற்கான காய்களை கலைஞர் நகர்த்த தொடங்கியுள்ளார்.
“ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா முன்வைத்துள்ள தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்காவிடின், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிலிருந்து விலகுவது தொடர்பாக செயற்குழுவைக் கூட்டி முடிவெடுப்போம்” என்றும் “நாங்கள் மத்திய அரசுக்கு வழங்கி வரும் ஆதரவை வாபஸ் பெறுவது குறித்தோ அல்லது அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்வது குறித்தோ நானாக மட்டும் முடிவு செய்ய முடியாது. எங்களது செயற்குழு கூடித்தான் முடிவெடுக்கும்” எனவும் பழைய அதே வெடிக்காத குண்டொன்றை தூக்கிப்போட்டுள்ளார்.
--முரளி 15/03/2012