ஆயுததாரிகளால் கடந்த மூன்று மாதங்களில் 32 பேர் கடத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடத்தப்பட்டவர்களில் ஐவரின் சடலங்கள் கொழும்பிலும் அதனைச் சுற்றியுள்ள பிரதேசங்களிலும் கண்டுபிடிக்கப்பட்டன. கடத்தப்பட்டவர்கள் ஐவர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த ஐந்து மாதங்களில் மூன்று பேர் காணாமற்போயுள்ளனர்.
கடத்தப்பட்டவர்கள் அனைவரும் வெள்ளை வேன்களில் வந்த ஆயுதம் தாங்கியோரால் கடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடத்தப்பட்டவர்கள் காணாமல் போனவர்களில் சமூக செயற்பாட்டாளர்கள், வர்த்தகர்கள் மற்றும் பொலிஸார், பாதாள உலகக் கோஷ்டியினர் என இனங்காணப்பட்டவர்கள் ஆகியோர் அடங்குவதுடன் பொதுத்தேர்தலில் படுகொலை செய்யப்பட்ட பாரத லக்ஷ்மன் கொலைக்கு சாட்சியம் அளித்தவர்களும் இருக்கின்றனர்.
-http://www.neruppu.com/