தற்போதுள்ள ஆட்சி முறையின் கீழ், ஆட்சியாளர்களை மாற்றுவது எமது எதிர்பார்ப்பு அல்ல எனவும் தற்போதைய ஜனாதிபதி, ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச ஆகியோரிடைய பாரிய வித்தியாசங்களை காணவில்லை. என மக்கள் போராட்ட அமைப்பின் தேசிய அமைப்பாளர் சமீர கொஸ்வத்த தெரிவித்துள்ளார்.
மக்கள் போராட்ட அமைப்பு கண்டியில் நேற்று ஒழுங்கு செய்திருந்த கருத்தரங்கில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். ஆட்சியாளர்கள் மாறுவதன் மூலம் மாத்திரம் மக்கள் கடும் துன்பங்களுக்கு தீர்வு கிடைக்காது. இதனால் ஆட்சியாளர்களை மாற்றுவதற்கு பதிலாக தமது அமைப்பு எதிர்பார்ப்பது வேறு ஒரு விடயத்தையே எனவும் கொஸ்வத்த கூறியுள்ளார். இதனால் தற்போதுள்ள ஆட்சி முறைமை நாட்டுக்கு தேவையற்றது எனவும் அவர் கூறியுள்ளார்.
lankaviews.com