Language Selection

அகிலன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

செய்தியும் செய்திக்கண்ணோட்டமும் 28-08-2010

மனிதர்களால் மனிதர்களுக்குத் தரப்படும் கொடுமைதான்  ……

இன்றைய காலம் வரை நீடித்து வருகிறது

உலக மனிதநேய தினம்    World Humanitarian Day-

உலக மனிதநேய தினம் World Humanitarian Day (WHD). ஆண்டு தோறும் ஆகஸ்ட் மாதம் 19ம் திகதி அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. உலகளாவிய ரீதியில் யுத்தம்இ இயற்கை அனர்த்தங்கள், நோய், போஷாக்கின்மை போன்றவற்றால் பாதிக்கப்பட்ட பல இலட்சம் மக்களை நினைவுகூரும் வகையிலும்இ, துன்பத்திலிருந்து விடுவிக்கப் படுவோருக்காகப் பணியாற்றுவோர் மற்றும் இப் பணிகளின் போது கொல்லப்பட்டோர்இ காயமடைந்தோர் ஆகியோரையும் நினைகூரும் வகையிலும் இத்தினத்தைஅனுஷ்டிக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கையைப் பொறுத்தவரை மோதல் மற்றும் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக மேற்கொண்டுள்ள பணிகளில் எட்டிய வெற்றிகள் மற்றும் சவால்களை வெளிப்படுத்தும் தருணமாக இத்தினம் விளங்குவதாக ஐ.நா. தகவல் நிலையம் 2010 இல் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.

இலங்கையில்  தமிழ்மக்ககளுக்கு ஏற்பட்ட அனர்த்தனங்களுக்கு, மனிதநேயத்தால் கிடைத்த வெற்றி—சவால்களுக்காக, இன்னும் தொடர் போராட்டம் நடத்தவே வேண்டியுள்ளது. அண்மைக் காலங்களாக தமிழ் பேசும் மக்களுக்கு ஆதரவாக, சர்வதேச சமூகத்தால் மேற்கொள்ளப்பட்ட பல மனிதநேய நடவடிக்கைகளுக்கு எதிராக, சிங்களப் பேரினவாதம், தன் தொடர் நடவடிக்கைகளை செய்தவண்ணமே உள்ளது.

முட்கம்பி வேலிக்குள் இருந்த மக்களை, “மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, மறுவாழ்வு” என்ற ஒன்றுக்குள் கொண்டு வந்ததில், அவர்களின் நிலை ‘சட்டிக்குள் இருந்து நெருப்புக்குள் விழுந்த கதையாகியுள்ளது. இம்மக்களின் அவலக்-கொடுமை வாழ்விற்கு, மனிதநேயம் கொண்ட சர்வதேச சமூகம் செய்ய முன்வரும்  உதவிக்கரங்களை எட்டி உதைக்கின்றது சிங்களப் பேரினவாதம். அத்துடன் அங்கு பணியாற்றும் தொண்டு நிறுவனங்களையும் வெளியேற்றும் நோக்கிலும் கருமங்கள் நடைபெறுகின்றது.

வன்னியிலிருந்து தொண்டு நிறுவனங்கள் வெளியேறும் அபாயம்

வன்னிப் பகுதியில் தங்கிஇ சேவையாற்றும் சில சர்வதேச மற்றும் உள்ளூர் அரசு சாரா நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை அரசாங்கம் மேலும் இறுக்கியுள்ளதால், அவை அங்கிருந்து வெளியேற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வன்னிக்குள் சென்று சேவையாற்றுவது என்றால் பசில் ராஜபக்சவின் தலைமையில் இயங்கும் ஜனாதிபதியின் சிறப்பு விசேட ஆணைக்குழுவிடம் அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.அதோடு பாதுகாப்பு அமைச்சத்தின் அனுமதியைப் பெறுவதும் அவசியமாகும். போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சேவையாற்ற விரும்பினால், இந்த அனுமதியை மாதாமாதம் புதுப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மீளக்குடியேறிய மக்களுக்கான சகல உதவிகளையும் அரசாங்கம் வழங்க முற்படுவதில்லை என்பதால், அங்கு தொண்டு நிறுவனங்களின் சேவைகள் மிக அவசியம் என்றும் தெரிவிக்கின்றன.வன்னியில் உலர் உணவு வழங்குவதற்கு உலக உணவுத் திட்டத்துக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. யூ.என்.எச்.சி.ஆர் மற்றும் யுனொப் ஆகியவை இராணுவப் பாதுகாப்புடன் செல்லும் வாகனங்களில் மட்டுமே தமது பொருட்களைக் கொண்டு செல்லலாம் எனக் கட்டுப்ப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்கள் அனைத்தும் ஒரே நாளில் வன்னிக்குச் செல்ல வேண்டும் என்பதோடு,  ஒரு சில யுனொப் பணியாளர்கள் மட்டுமே வன்னியில் தங்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யுனிசெஃப் அமைப்பு வன்னிக்குச் செல்வதற்கு இன்னமும் அனுமதி அளிக்கப்படவில்லை. கெயர்,  பி.ஆர்.சி,  என்.ஆர்.சி,  சேவா லங்கா,  ஆர்.டி.எஸ் மற்றும் ஸோவா போன்ற ஒரு சில நிறுவனங்களே அங்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளன. இந் நிலையில் இவ்வளவு கட்டுப்பாடுகளின் கீழ் பணியாற்ற முடியாத நிலையில் தொண்டு நிறுவனங்கள் அங்கிருந்து வெளியேறும் நிலை ஏற்படக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.

இது ஒரு புறமிருக்க, மறுபுறத்தில் வன்னிப்பகுதியை சிங்கள மயமாக்கும் நோக்கில் நடைபெறும் புனர்நிர்மாண  வேலைகளுக்கு முன்னாள் போராளிகளான தமிழ்-இளைஞர் யுவதிகளே தொழிலாளர்கள் ஆக்கப்படுகின்றனர்.  குறிப்பாக, யுத்தச் சூழலில் கணவரை இழந்த பெண்கள்,  தடுப்புக்காவலில் கணவனைப் பிரிந்துள்ள பெண்கள், கணவன் காணாமல் போனதால் தனித்து வாழும் பெண்கள் ஆகியோர் முன்னுரிமை அடிப்படையில் கண்ணி வெடி அகற்றும் பணிக்கு எவ்எஸ்டி நிறுவனத்தினால் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்கள்.

கண்ணிவெடி அகற்றும் பணியில் 45 பெண்கள் உட்பட 600 பேர் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக எவ்.எஸ்டி நிறுவனத்தின் இலங்கைக்கான திட்ட முகாமையாளர் நைஜல் ரொபின்சன் கூறுகின்றார்.

இவையெல்லாம் மனித நேயத்தின்பாற்  கண் கொண்டு, ஓர் ஜனநாயக அரசு போரால்–இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்ய வேண்டிய தார்மீகக் கடமைகளாகும்.  செய்யுமா? செய்யத்தான் விடுவார்களா? மனித நேயமற்ற பேரினவாதிகள்.  ஒரு ‘புனிதரான அசல்’  தேரோ ஒன்று என்னதான் சொல்லுதோ!

சர்வாதிகாரியாக ஜனாதிபதி நாட்டை ஆட்சி செய்யவேண்டும்:இனாமலுவே சுமங்கல தேரர்

எதிர்வரும் ஆறு ஆண்டு காலத்திற்கு மனிதாபிமானமுடைய சர்வாதிகாரியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டை ஆட்சி செய்ய வேண்டுமென இனாமலுவே சுமங்கல தேரர் வலியுறுத்தியுள்ளார்.

நிறைவேற்று அதிகாரத்திற்கு அப்பாலான சர்வாதிகார ஆட்சி முறைமையொன்று நாட்டுக்கு அவசியப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று தம்புள்ள விஹாரைக்கு சென்றிருந்த வேளையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டை அபிவிருத்திப் பாதைக்கு இட்டுச் செல்லக் கூடிய ஒரே தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நாட்டில் நிலவி வரும் ஜனநாயக சுதந்திரம் பொருத்தமற்றது எனவும், லீ க்வான் யூ சிங்கப்பூரை அபிவிருத்தி செய்ததனைப் போன்றதொரு சர்வாதிகாரியினால் மட்டுமே நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஆகவேஇ எதிர்வரும் ஆறு ஆண்டு கால ஆட்சியை சர்வாதிகார ஆட்சியாக ஜனாதிபதி முன்னெடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதென்னவோ  ‘மனிதாபிமான சர்வாதிகார ஆட்சி’?  புத்த தர்மத்தின் புதுக் கண்டுபிடிப்போ?  தற்போது நாட்டில் நிலவுவது ஜனநாயக சுதந்திர ஆட்சியாம்.,  அது கூடப் பொருத்தமற்றது என்றால், இந்தத் தேரோவின் (பாசிச-சர்வாதிகார-மதவெறி-கொண்ட) மனோநிலையை என்னவென்பது? அதுவும் ஒரு நாட்டை அபிவிருத்திப் பாதைக்கு இட்டுச்செல்வதற்கு இருப்பதை விட இன்னோர் கொடுமை ஆட்சி தேவையாம். மனிதர்களால் மனிதர்களுக்கு கொடுக்கப்படும் கொடுமைகளை விட. இந்தப் ‘புனிதர்களால்’ போதிக்கப்படும் போதனைகள் மிகக் கொடியது!

*************

இடம் பெயர்ந்த முஸலிம்களின் மீள்குடியேற்றத்திற்கு நிதி சேகரிப்பு

யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களை மீளக் குடியேற்றுவதற்காக மீண்டும் யாழ்ப்பாணம் செல்வோம் எனும் தொனிப் பொருளில் நிதி சேகரிக்கும் நடவடிக்கை ஒன்று கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிதி சேகரிக்கும் நடவடிக்கையினை எம்.எப்.சீ.டி. அரச சார்பற்ற நிறுவனம் ஆரம் பித் துள்ளது. இதன் முதற்கட்டமாக 5 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான 100 வீடுகள் கட்டுதல், சேதமடைந்துள்ள 100 வீடுகளைப் புனர்நிர்மாணம் செய்து கொடுத்தல், வாழ்வாதார நடவடிக்கைகளுக்கு உதவுதல், தொழிற்பயிற்சி நிலையம் அமைத்து முக்கியமான கற்கை நெறி களை பயிற்றுவித்தல், சிறு முதலீடுகளை ஊக்கு வித்தல் மற்றும் ஒஸ்மானியா கல்லூரியை புனர் நிர்மாணம் செய்தல் போன்றவற்றை மேற் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிகழ்விற்கு தலைமைதாங்கி உரையாற் றிய அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபைத் தலைவர் அஷ்ய­ய்க் றிஸ்வி முப்தி, யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட மக்களின் மீள்குடியேற்றத்திற்காக அனைத்து முஸ்லிம்களும் ஒற்றுமைப்பட வேண்டும்.

யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்களை மீளக் குடியேற்றுவதற்காக அரசாங்கத்தின் உதவிக ளை எதிர்பார்த்துக்கொண்டிருக்காமல் தங்க ளால் இயலு மானவற்றை மேற்கொள்வதன் மூலம் மிக விரைவில் அங்கு மக்களைக் மீளக் குடியமர்த்த முடியும். அரசு மீளக் குடியேற்றும் வரை காத்திருந்தால் இன்னும் எத்தனை வருடங்கள் செல்லும் என்றே தெரியாது என றிஸ்வி முப்தி மேலும் குறிப்பிட்டார்.

இதனை எம்.எப்.சி.டி. நிறுவனம் மாத்திரம் தான் மேற்கொள்ள வேண்டும் என்றில்லை. இயலுமான அனைத்து நிறுவனங்களும் இந் நிறுவனத்துடன் இணைந்து செயற்பட முடியும். அனைத்து முஸ்லிம்களும் ஒற்றுமைப்பட்டு இந்தப் பணியை மேற்கொள்வதன் மூலம் விரைவாக மேற்கொள்ள முடியும் இவ்வாறு அனைவரும் ஒற்றுமைப்பட்டு மேற் கொள்வதனால் அரசிடம் இருந்து உதவிகளைப் பெறுவதில்லை என்று அர்த்த மல்ல. அரசினால் வழங்கப்படும் உதவிகளையும் தாம் பெற வேண்டும் எனவும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை தலைவர் அஷ்ய­ய்க் றிஸ்வி முப்தி குறிப்பிட்டுள்ளா

யாழ்-முஸ்லிம் மக்கள் வாழ்ந்த பகுதி, யாழ்-நகருக்குள் ஓர் பாழடைந்த பகுதியாகவே இன்றும் காட்சியளிக்கின்றது. ‘யாழ்-செல்வோம்’ எனும் தொனிப்பொருள் கொண்ட இவ் மனிதநேய நடவடிக்கை, அம்மக்களின் மீள்குடியேற்றத்திற்கான பேருதவியாகும். அரசு தமிழ்ப்பகுதிகளில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களுக்காகவே சகலதையும் செய்கின்றது. அடித்து விரட்டப்பட்ட தமிழ்-முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்திற்கு (கூரைக்கு கிடுகுகூட வாங்க) பணமில்லையென பிச்சைக்காரன் பாணியில் பதில் சொல்கின்றது, இதற்குள் எம்மால் முடியாததது எதுவும் இல்லையென்றும் மார்தட்டுகிறது!  இதுதான் இவர்களின் ‘பிச்சைக்கார’ மகிந்த சிந்தனை!

*******************************

வடக்கு மக்கள் மீது அரசுக்கு  சந்தேகம் அதிகபட்சம் உண்டு.  தமது  நிலைப்பாடும் அதுவே என்கிறார் கோத்தபாய

 வடக்கிலுள்ள மக்கள் மீது அரசாங்கத்திற்கும் தனக்கும் அதிக பட்ச சந்தேகமுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும், நல்லிணக்க ஆணைக்கழுவின் விசாரணைகளின் போது சாட்சியமளித்து உரையாற்றிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார். வடபகுதி மக்கள் இன்னமும் விடுதலைப் புலிகள் மீது அனுதாபம் கொண்டவர்களாக இருக்கின்றார்கள். வடபகுதியைச் சேர்ந்த மக்கள் மத்தியில் சரணடையாத விடுதலைப் புலிகள் எத்தனை பேர் உள்ளனர் என எமக்குத் தெரியாது. அடையாளம் காணப்படாமல் எத்தனை பேர் உள்ளனர் என்பதும் தெரியாது. அவர்களில் பலர் விடுதலைப்புலிகளின் கொள்கைகளுக்கு ஆதரவாக முளைச்சலவை செய்யப்பட்டவர்கள். அவர்களே மிக ஆபத்தானவர்கள் எனவும் அவர் கூறினார்.

வடக்கில் விடுதலைப் புலிகள் மீண்டும் தலையெடுப்பதைத் தடுக்கும் பொருட்டு கணிசமான இராணுவத்தினரை அங்கு கடமையிலீடுபடுத்த வேண்டிய நிர்ப்பந்தம் அரசாங்கத்திற் உண்டு எனவும் அவர் தெரிவித்தார்.

கே.பி பற்றி அவர் குறிப்பிடுகையில், விடுதலைப் புலிகளின் மூத்த உப்பினரான கே.பியின் மனதை மாற்றுவதில் இராணுவம் வெற்றிகண்டுள்ளது எனவும் அரசுடன் இணைந்து ஒரே நாட்டை உருவாக்க வேண்டும் என்ற உணர்வை அவருக்கு ஏற்படுத்தியதை பலரும் வரவேற்கின்றனர். இது முக்கியமானதோர் விடயம் எனவும் குறிப்பிட்டார்

பேரினவாத வெறியால் மூளைச்சலவை செய்யப்பட்ட கோதத்தபாயவிற்கு, தமிழ்மக்கள் புலிகளாக-ஆபத்தபனவர்களாக-பயங்கரவாதிகளாகத் தான் தெரியும். ஏனெனில் நீங்கள் அணிந்துள்ள கண்ணாடி அப்படியானது. காலத்திற்கு காலம் உங்களுக்ககு கே.பி. போன்றவர்கள் கிடைக்க, அவர்களை வைத்து உங்கள் தமிழின விரோத அரசியல் வியாபாரத்தில் லாபம் கண்டிடுவீர்கள். உங்களின் கடந்தகால பேரினவாத அரசியல் வியாபாரிகளின்  வியாபாரம் பற்றி மங்கள முனசிங்காவின் சாட்சியத்தையும் கேளீர்.

***************************

பிரபாகரன் ஆயுதம் ஏந்தக் காரணம் தெற்கின் அரசியல் பக்குவமின்மையே!: மங்கள முனசிங்க சாட்சியம்

பிரபாகரன் ஆயுதம் ஏந்திக் களம் இறங்குவதற்குக் காரணம் தென்னிலங்கைத் தலைவர்களின் அரசியல் பக்குவம் இன்மையே. இவ்வாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், பிரிட்டன்,  இந்தியா ஆகிய நாடுகளில் இலங்கைத் தூதுவராகவும் பணியாற்றியவருமாகிய மங்கள முனசிங்க தேசிய நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியம் அளிக்கையில் தெரிவித்தார்.

தேசிய நல்லிணக்க ஆணைக்குழு முன் மங்கள முனசிங்க நேற்று முன்நாள் சாட்சியம் அளித்தார். அவர் அங்கு தெரிவித்தவை வருமாறு:

பிரபாகரன் ஆயுதம் ஏந்திக் களம் இறங்குவதற்குக் காரணம் தென்னிலங்கைத் தலைவர்களின் அரசியல் பக்குவம் இன்மையே. தெற்கில் இரண்டு முக்கிய கட்சிகளின் தலைவர்களும் ஒருவர் மற்றவர் மீது பொறாமையுடனும் அரசியல் எதிரிகளை ஒழித்துக்கட்டி ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற சிந்தனையோடும் செயற்பட்டனர்.

இதன் பின்னர் வடக்கில் நடந்த தேர்தல்களில் இளைய சமுதாயம் உற்சாகமின்றிச் சோர்வுடன் காணப்பட்டது. அதன் விளைவாகவே ஒரு கட்டத்தில் அனைத்து அரசியல் கட்சிகளையும் தீவிரவாதக் குழுக்களையும் அகற்றிவிட்டு பிரபாகரன் ஆயுதங்களுடன் களமிறங்கினார்.

தேச நலன் சார்ந்த விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அரசியல்வாதிகள் ஒருவரோடு ஒருவர் மோதிக் கொண்டனர். இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் தமிழர்களின் வாக்குரிமைகளை ஐக்கிய தேசியக் கட்சி பறித்து விட்டது. பண்டா செல்வா ஒப்பந்தத்தை எதிர்த்து ஐக்கிய தேசியக் கட்சியினர் செயல்பட்டனர். இதுவே 1983 ம் ஆண்டின் ஜூலைக் கலவரத்துக்கு வித்தானது.

கடந்த கால போர் நிறுத்த ஒப்பந்தம் முழுமையாக அமுலுக்கு வராமைக்கு பரஸ்பர நம்பக்கையின்மையே காரணம். இந்தப் போரை இனப் போராகவோ, தீவிரவாதத்துக்கு எதிரான போராகவோ கருத முடியாது.

இது முற்று முழுதான அரசியல்நோக்கம் கொண்ட போராகும். முன்பொரு காலத்தில் தமிழர்களும், சிங்களவர்களும் ஒற்றுமையுடன் இணைந்தே வாழ்ந்தனர், ஒன்றாகப் பணியாற்றினர். ஆனால் சுதந்திரம்பெற்ற பின்னர் நாட்டின் தலைவர்கள் பொறாமையால் உந்தப்பட்டனர்.

தேசநலனை பற்றிய எண்ணம் எதுவுமின்றி அரசியல் எதிரிகளை ஒழித்துக் கட்டி ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்கிற சிந்தனையோடு செயல்பட்டமையாலேயே பிரச்சினை ஏற்பட்டது. இந்த எண்ணம் சிங்கள் தமிழ் அரசியல்வாதிகளிடம் இருந்தது.  இன்னமும் இந்த நிலையே நீடித்துக் கொண்டிருக்கிறது.

தீவிரவாதம் காலப்போக்கில் ஏற்பட்ட ஒன்று தான். இந்நாட்டின் இரண்டு முக்கிய கட்சிகளின் தலைவர்களுமே பொறாமையுடனும், ஒருவர் மீது ஒருவர் அதிகாரம் செலுத்துகின்றமையை ஒன்றையே குறிக்கோளாக கொண்டும் செயற்பட்டனர். அவர்களின் அரசியல் பக்குவம் குறைந்து போனது.

இதன் பின்னர் வடக்குப் பகுதியில் நடந்த தேர்தல்களில் இளைய சமுதாயம் சோர்வுடன் உற்சாகமின்றிக் காணப்பட்டது. இதன் விளைவாகவே அனைத்து அரசியல் கட்சிகளையும்இ தீவிரவாதக் குழுக்களையும் அகற்றிவிட்டு பிரபாகரன் ஆயுதங்களுடன் களமிறங்கினார்.

வடக்கு பகுதியில் இடம்பெற்ற தேர்தல்கள் ஜனநாயக ரீதியில் நடந்திருக்குமானால், இளைஞர்கள் வன்முறைப் பாதைக்கு சென்றிருக்கமாட்டார்கள். ஆனால் அனைத்துமே தலைகீழாகி இருந்தன.

தேசநலனில் அக்கறையின்றி செயற்படுகின்றமையையும், ஒருவர் மீது ஒருவர் ஆதிக்கம் செலுத்தவேண்டும் என்கிற நினைப்பால் சண்டையிடுகின்றமையையும் அரசியல்வாதிகள் விட்டுவிட வேண்டும். நாட்டு மக்களுக்காக ஒற்றுமையுடன் உழைக்க முன்வரவேண்டும்” என்றார்.

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது என்பது வல்லவன் வகுத்தடா என்பதில் உண்மை இல்லாமல் இல்லை! தெற்கின் அரசியல் பக்குவமில்லா நிலை ‘மனுநீதி கொண்ட மகிந்த மன்னனுக்கும்’ ஏன் ஏனைய சிங்களப் பேரினவாதிகளுக்கும் தெரியாத ஒன்றல்ல! இன்றைய ‘திரிபுற்ற’ வரலாற்றுச் சூழல் அப்படி.! இத்திரிபில் பிற்போக்கு-முற்போக்கு, ஏன் பொதுவுடமைவாதிகள் என்போரும் உளர்.

***************

ஓரு முதலாளித்துவ அரசை மாற்றியமைக்கின்ற சக்தியாக விவசாயிகள் (ரொட்ஸிஸ விளக்கம்) ஒருபோதும் விளங்க மாட்டார்களாம்!

இது ஒரு ‘புதிய ஜனநயக மார்க்ஸியரி’ன் கண்டுபிடிப்பு.., ருஸ்ய-சீனப்புரட்சியின் பிரதான சக்தி யார்? லெனினும் மாவோவும் மார்க்ஸ் சொன்ன அந்த‘அசல் பாட்டாளி’ வர்க்கத்தை ஏனைய நாடுகளிலிருந்து இருந்து இறக்குமதி செய்தா புரட்சி செய்தார்கள்? சாதியப் போராட்டத்தை தாங்களே நடாத்தியதாக சொல்பவர்கள், அதை ஓர் தேசியக் கூறாக வரையறுக்கக் கூடாதாம். ஏனென்றால் மத-பிரதேச-ஊர்-தேசியம் என்றெல்லாம் வகுக்கவேண்டி வருமாம்! அது கட்சி கலைப்பு வாதமல்லவோ எனக் கத்துகின்றார்கள். சில வைதீகப் பொதுவுடமைக்காரர்கள்!  இதெல்லாம் ஏதோ இலங்கையிலை இல்லாத மாதிரி கதை சொல்கிறார்கள். இவர்கலெல்லாம் புரட்சிக்கென்று ஒரு ‘பிறேம்’ போட்டு அதைக் கட்சிக் காரியாலயங்களில் மாட்டி வைத்திருக்கினறார்கள். அதில் உதுகள் இல்லையென்றால், ஐய்யய்யோ! உதெல்லாம் எங்கடை புதிய ஜனநாயகப் புரட்சிக்குள்ளே வராது என்பார்கள்.!  “மெத்தப் படித்த” இந்தப் புரட்சிக்காரர்கள் எல்லாம் சமூக விஞ்ஞானத்தை இப்படி தலைகீழாக புரட்டும்போது, சிங்களப் பேரினவாதம் தன் இருப்புக்காக யதார்த்தத்தை எப்படிப் புரட்டிப்போடும்!?  இதில் கோத்தபாய என்னே பிரட்டல் பிரட்டுகிறார்!

************************

மாவோயிஸ்டு  தாக்குதலால்  ரயில்வேக்கு  1000 கோடி இழப்பு: மம்தா

மாவோயிஸ்டுகள் ரயில்களை குறிவைத்து 217 தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இதனால் ரயில்வே துறைக்கு | 1000 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்தின் போது கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்து பேசுகையில் ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி இத் தகவலைத் தெரிவித்தார்.

மாவோயிஸ்டுகள் பந்த் நடத்தியதால் கடந்த காலத்தில் 416 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. 75 மெயில்களின் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டன என்று அவர் கூறினார்.

ரயில்களை குறிவைத்து மாவோயிஸ்டுகள் தாக்குவதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. இது தீவிரமான விவகாரம். இதனால் பொதுச் சொத்தான ரயில்களை குறிவைத்து தாக்கும் செயல்களில் மாவோயிஸ்டுகள் இதற்குமேல் ஈடுபடக்கூடாது என்று அவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன் என்றும் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

சமீபத்தில் லால்கரில் உங்கள் தலைமையில் (மம்தா) நடைபெற்ற பேரணியில் ஞானேஸ்வரி ரயில் விபத்துக்கு காரணமானவர்கள் (மாவோயிஸ்டுகள்) பங்கேற்றது ஏன்? என்று மம்தாவிடம் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.

ஆனால் எதிர்க்கட்சியினரின் இந்த கேள்வியால் மம்தா கோபம் அடையவில்லை.

ஞானேஸ்வரி ரயில் விபத்து சம்பவம் பழி தீர்க்கும் நடவடிக்கையா என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறோம் என்று மம்தாவிடம் பாரதிய ஜனதா உறுப்பினர் பல்வீர் புஞ்ச் தெரிவித்தார்.

இதற்கு பதில் அளித்த மம்தா பானர்ஜிஇ ஞானேஸ்வரி ரயில் விபத்து சம்பவத்தை நடுநிலையோடு என்னை கையாள விடுங்கள். அரசியலாக்காதீர்கள். ஞானேஸ்வரி ரயில் விபத்து சம்பவம் பழிவாங்கும் நடவடிக்கையாக இருக்கலாம் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விவகாரத்தை சிபிஐ விசாரித்து வருகிறது என்றார்.

ரயில்களை குறிவைத்து தான் மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்துகின்றனர். இது ஏன்? நீங்கள் (மம்தா) அவர்களிடம் மென்மையாக நடந்து கொள்வதால் தான் ரயில்களை குறிவைத்து தாக்கி வருகின்றனர் என்று பகுஜன் சமாஜ் உறுப்பினர் கங்கா சரண் குற்றம்சுமத்தினார்.

கங்கா சரண் இப்படி பகிரங்கமாக குற்றம்சுமத்திய போதும் மம்தா பானர்ஜி கோபம் அடையவில்லை. நிதானமாகப் பதில் அளித்தார்.

“”2009-10-ல் 100 ரயில் விபத்துக்கள் நிகழ்ந்தன. இதில் 7 விபத்துக்கள் குண்டை வெடிக்கச் செய்து நிகழ்த்தப்பட்டன. இந்த ரயில் விபத்துக்களால் 64 மனித உயிர்கள் பலியாகின. ரயில்வே துறைக்கு | 54 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டது” என்றார் மம்தா பானர்ஜி.

சமகால இந்திய அரசியல்:- பாருக்குள்ளே நல்ல நகைச்சவை அரசியலாக பேசப்படுகிறது. பாராளுமன்ற உறுப்பினர்களின் மூன்று மடங்கு சம்பள உயர்வு, (பாராளுமன்றத்தில் சண்டை செய்வதற்கு) காஷ்மீர் பிரச்சினை, ஆண்டர்சனை தப்பவைத்த தலைவர்களின் தேசப்பற்று, மம்தா-மாவோயிஸ்ட்டுகளின் ஜக்கிய முன்னணி அரசியல் கொண்டாட்டங்கள் போன்றன. இதில் மம்தா அரசியலே அமோகமாயுள்ளது. இந்திய அரசு சொல்கிறது மாவோயிஸ்ட்டுக்களின் பயங்கரவாத அரசியலால் நாட்டுக்கு அச்சுறுத்தல் என. சிதம்பரம் சொல்கிறார் இப் பயங்கரவாதிகளுடன் யாரும் கூட்டு வைக்கக் கூடாதென. ஆனால் இவர்களின் மந்திரியான மம்தாவோ எல்லோருடனும் கூட்டு. மத்தியில் காங்கிரஸ் கூட்டு ஐக்கியத்தில், மாவோயிஸ்ட்டுக்களை தாக்குவது, மேற்கு வங்க மாவோயிஸட்டு கூட்டு, ஐக்கியத்தில், காங்கிரசை தாக்குவது.  இவ்விடயத்தில் இப்போ மம்தாவை யாரும் கண்டிப்பதேயில்லை, மம்தா மாவோஸிட்டுக்களையும்-காங்கிரஸையும் தன் மடியில் வைத்து (மேற்குவங்க முதல்வராக) விளையாடுகிறார். இவர்களும் மம்தா கொடுக்கும் (கிலுகிலுப்பை) விளையாட்டுச் சாமான்களை வைத்து விளையாடுகிறார்கள். இதில் காங்கிரஸிற்குத்தான் மம்தா தேவையென்றால், மாவோஸிட்டுக்களுக்கு? …உங்களின் லால்கார் (புலிப்போராட்டப் பாணி) பழங்குடி மக்கள் போராட்டம் பற்றி, ‘பென்னாம்பெரிய’ புரட்சிக்காரர்களும் அல்லவோ புகழ்ந்து தள்ளுகின்றார்கள். என்னே என்பது இந்தப் புரட்சியாளர்களின் ‘மக்கள் போராட்டக்’ கண்டுபிடிப்பை!

*****************************

இஸ்ரேல் என்ற நாடு யூத  மத அடிப்டை கோட்பாடுகளுக்கு மாறானது  என்று கூறும் யூதர்கள்

1948ல் ஐ.நாவின்  தலைமையில் பாலஸ்தீனத்திற்கு எதிரான அநியாயம் விதைக்கப்படுகிறது. யூதர்களுக்கு என்று ஒரு சட்ட விரோத நாடு உருவாக்க படுகின்றது .  கி.பி 7ஆம் நூற்றாண்டிலிருந்தே அராபியர்கள் அங்கு வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் இருந்தும்  ஆக்கிரமிப்பு சட்ட அந்தஸ்தை பெறுகின்றது. யூதர்களின் “ஊடுருவல்” 1948க்கு நெடுங்காலம் முன்பே தொடங்கியது. 1880களிலிருந்து யூதர்கள் பாலஸ்தீனத்தில் குடியேறத் தொடங்கிவிட்டார்கள் .

எப்படி இந்தியாவில் பாபர் மஸ்ஜிதை இடிபதற்கு ஆதாரம் அற்ற புராண-இதிகாச கதைகள் காராணமாக அமைந்ததோ அதே போன்று இஸ்ரேல் உருவாக புராண-இதிகாச கதைகள் ஆதாரமாக அமைந்தது சியோனிஸ்டுகள். பைபிளின் பழைய ஏற்பாட்டின்படி தமது தாயகமான இஸ்ரேல், அப்போது பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த பாலஸ்தீனத்தில் இருப்பதாக கூறினார்.  சியோனிஸ்டுகள் தமது இயக்கத்திற்கான அரசியல் தத்துவார்த்த நூலாக பைபிளின் பழைய ஏற்பாட்டினை எடுத்துகொன்டனர். இஸ்ரேல என்ற யூத சியோனிச கற்பனை நாட்டை பலஸ்தீன் என்ற முஸ்லிம் தேசத்தில் இருப்தாக தெரிவித்து,  1948ல் ஐ.நா சபையின் தலைமயில் அமெரிக்க இ பிரிட்டன் உதவியுடன் இஸ்ரேல என்ற கற்பனை நிஜ உருவம் பெற்றது. விரிவாக பார்க்க:

அன்றில் இருந்து இன்று வரை தமது புராண-இதிகாச கதைகளுக்கு ஆதாரம் தேடி இ சரித்திர ஆசிரியர்களையும்இ தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களையும், மொழியியல் அறிஞர்களையும் பணியில் அமர்த்தி பலஸ்தீன மண்ணை கிட்டி புரட்டி வருகின்றது . இஸ்ரேல் உருவாகி 60 ஆண்டுகளாகியும், இந்த ஆராய்ச்சியளரால் பைபிளில் உள்ளபடி “புலம்பெயர்ந்து வாழும் யூத மக்களின் தாயகம் இஸ்ரேல்” என்னும் கருத்தை இன்று வரை நிரூபிக்க முடியவில்லை.

பலஸ்தீன மக்களின் 80 வீதமான நிலம் தோண்டப்பட்டது. ஆனால் இவர்களின் எதிர்பார்ப்புக்கு மாற்றமாக 1980 ம் ஆண்டு இடம்பெற்ற நிலநடுக்கம் சியோனிச கட்டுக்கதைகளை அம்பலப்படுத்தியது. அதுவரை அறியாத பழங்கால இடிபாடுகளை வெளிப்படுத்தியது, அந்த கண்டு பிடிப்புகள் எதுவும் யூத கதைகளை உண்மையென்று நிரூபிக்க வில்லை. மாறாக முஸ்லிம்களின் வரலாற்றை கூறுபவையாக இருந்தது.  தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஏமாற்றமடைந்தனர். அதிலிருந்து தான் இஸ்ரேலின் அல்லது யூத வரலாற்றை புதிய கண்ணோட்டத்துடன் பார்க்கும் போக்கு ஆரம்பமாகியது.  யூத அடிப்டை வாதிகளில் ஒரு பகுதியினர் இஸ்ரேல் என்ற நாடு சட்ட விரோத மானது. அப்படி ஒரு நாட்டை உருவாக்கியமை யூத மத அடிப்டை கோட்பாடுகளுக்கு மாறானது என்ற குரல் சற்று வலுவாக ஒலிக்க காரணமாக அமைந்தது.  இஸ்ரேல் என்ற நாடு சட்ட விரோத மானது என்று கூறும் அமெரிக்க யூதர்களில் ஒரு பிரிவினர் கடந்த மாதம் அமெரிகாவில இஸ்ரேல் ஆக்கிரமிப்பு அரசுக்கு எதிராக செய்யத ஆர்ப்பாட்டத்தை இங்கு பார்க்கலாம்.