Language Selection

அகிலன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

நானறிந்த அளவில்
உலகத்தொழிலாளர் தினமே
மேதினம்!
சிக்காக்கோவில் ஓடிய
குருதியில் பிறந்ததே
செங்கொடி!

இத்தினத்தில்
இக்கொடி ஏந்தும்
சாத்தான்களும் மகிந்தவேதம்
ஓதுகின்றன!

பான்கீமூன் ம்யுத்தவெற்றியை
பொய்யாக்குகின்றாராம்!
நிபுணர்குழுவின் அறிக்கையில்

சதியும் சூழ்ச்சியுமாம்! — ஓ
சாத்தான்களே!

மகிந்தப்பேயாட்டத்திற்கு
வெள்ளைக்கொடியேந்தி வந்தழிந்தவர்களும்
முள்ளியவாய்க்காலுமே
முக்கியசாட்சி!

இதையுருவாக்கம் செய்த
கொலைஞனர்களுக்கு புதுவேதம்
புனையாதீர்! ஏனெனில்
இத்தினம் போ
ர்க்குற்றவாளிகள்
தினமல்ல!

அகிலன்

01/05/2011