செய்தியும் செய்திக்கண்ணோட்டமும் 03/07/2011
பான்கீமூன் அறிக்கை சனல் 4-ன் காணொளி போன்றவற்றால் மகிந்த-சகோதரப் பேய்கள் ஊர் உலகம் முழுவதும் அபயக்குரலுடன் வெருண்டடித்து ஓடித்திரிகின்றன. தருமஸ்தன் அறிக்கை பொய். சனல் 4-ன் படங்கள் போலியென சம்பந்த — சம்பந்தமில்லாமல் உளறுகின்றன.
சனல் நான்கின் படங்கள் போலியானவை என்பதை சரியாக உற்று நோக்கினால் தெரியும் –
“அரசாங்கம் ஏற்கனவே இரண்டு அறிக்கைகளை தயாரித்துள்ளது. அமுலாக்கப்பட்ட மனிதாபிமான நடவடிக்கையின் போது என்ன நடந்தது என்பது குறித்து இந்தவாரம் அல்லது அடுத்த வாரம் எனக்கு ஒப்படைப்பார்கள். இதே வேளை பொது மக்களை புலிகள் எவ்வாறு சுட்டுக் கொன்றார்கள் என்பது குறித்து நான் ஆளில்லாத விமானங்கள் எடுத்த படங்களைப் பார்த்திருக்கிறேன்.
அதனை அனைத்து தூதுவர்களும் பார்த்துள்ளார்கள். பாதுகாப்பு தேடி வந்த மக்களை புலிகள் சுட்டுக் கொல்வதை அவை படம் பிடித்துள்ளன. இந்த சனல்4 படங்கள் போலியானவை என்பதை சரியாக உற்று நோக்கினால் தெரியும். அதாவது சுடப்பட்டு விழுபவர் கவனமாகவே விழுகிறார். இது ஒரு திரைப்படத்தை தயாரிப்பதைப் போன்றே அமைந்துள்ளது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
____________________________________________________________________
இலங்கையின் கொலைக்களம் உண்மையானது நிபுணர்கள் மூலம் அதனை உறுதி செய்தோம் – ஆவணப்படத் தயாரிப்பாளர் தெரிவிப்பு
வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின்போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சனல் 4 தொலைக்காட்சியின் ஆவணப்படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள காணொளிக் காட்சிகளின் நம்பகத்தன்மையை உரிய துறைசார் நிபுணர்களைக்கொண்டு தாம் உறுதி செய்த பின்னரே அக்காணொளிக் காட்சிகளைத் தாம் ஒளிபரப்பியதாக இந்த ஆவணப்படத்தின் தயாரிப்பாளர் ஹலும் மக்ரே (Callum Macrae) தெரிவித்துள்ளார்.
இந்த ஆவணப்படத்தின் பல காணொளி காட்சிகள் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களால் வழங்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் இந்த ஆவணப்படத்தில் இருக்கும் காட்சிகளின் நம்பகத்தன்மையை எப்படி உங்களால் உறுதிப்படுத்த முடியும் என்று ஹலும் மக்ரே (Callum Macrae) யிடம் பி.பி.சி. செய்திச் சேவை கேட்டபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இந்த ஆவணப்படத்தில் காண்பிக்கப்பட்ட இருகாட்சிகளின் தொகுப்புக்கள் இலங்கையில் போர் நடைபெற்றபோது எடுக்கப்பட்வை. அதுவும் தமிழர்கள் வாழும் பகுதிகளில் எடுக்கப்பட்டவை அதற்குப் பின்னர் இடம் பெறும் காட்சிகள் இலங்கைப் படைத்தரப்பினரின் கைத்தொலைபேசியில் எடுக்கப்பட்டவை. இக்காட்சிகளில் நிராயுதபாணிகளாக இருப்பவர்கள் சுட்டுக்கொல்லப்படுவதை காட்டும் காட்சிகள் இறந்தவர்களின் நிர்வாண உடல்கள் கொல்லப்படுவதற்கு முன்னர் பாலியல் ரீதியாக பலாத்காரம் செய்யப்பட்டிருக்கலாம் என்பது ரீதியிலான காட்சிகள் ஆகியவை இலங்கைப் படைத்தரப்பினரால் எடுக்கப்பட்டவை.
இக்காணொளிக்காட்சிகள் எவ்வகையான கைத்தொலைபேசியில் படம் பிடிக்கப்பட்டன எந்த திகதியில் இவை எடுக்கப்பட்டன என்பது குறித்தெல்லாம் எமது தரப்பில் என்னவெல்லாம் பரிசோதனைகளை செய்யப்படல் வேண்டுமோ அதை உரிய தகைமைசார் நிபுணர்களைக் கொண்டு மேற்கொண்டு உறுதிப்படுத்திக் கொண்டோம். காயங்களின் தன்மை, துப்பாக்கிச் சூட்டின் தாக்கம் ஆகியவற்றை இந்நிபுணர்கள் ஆராய்ந்தார்கள். இவை சுயாதீனமான நிபுணர்களால் பரிசோதிக்கப்பட்டன. எனவே இவை உண்மையற்றவை என்றோ மோசடி செய்யப்பட்டவை என்று கூறுவதற்கு எந்த நியாயமும் இல்லை.
அதேவேளை இலங்கை அரசாங்கம் இந்த ஆவணப்படத்திலிருக்கும் சில காட்சிகளை அறிவியல் நிபுணர்களைக் கொண்டு ஆய்வு செய்ததாகவும் அவை கோர்வையாக இல்லாமல் படத்தொகுப்பு செய்யப்பட்டு சில இடங்களில் குரல்கள் இணைக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகிறார்களே என பி.பி.சி. செய்திச் சேவையின் சார்பில் அவரிடம் கேட்கப்பட்டது
இக்கேள்விற்கு பதிலளித்த அவர் இலங்கை அரசாங்கம் ஒரு நிபுணரை பயன்படுத்தியுள்ளதாக தாங்கள் அறிவதாகவும் நிபுணர்கள் குறித்து விமர்சிப்பது தனது பணியல்ல என்றும் தெரிவித்தார். இலங்கை அரசாங்கம் ஒரு நிபுணரை பயன்படுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை நான்கு நிபுணர்களை பயன்படுத்தியது. நாங்கள் இரு நிபுணர்களை பயன்படுத்தியுள்ளோம்.
இலங்கை அரசாங்கம் பயன்படுத்திய அவுஸ்திரேலிய நிபுணரைத் தவிர இக்காணொளிக் காட்சிகளை பார்த்து ஆராய்ந்த அணைத்து நிபுணர்களும் இவை ஆதாரமானவை தான் என்று கூறியுள்ளனர். எனவே இக் காணொளிக் காட்சிகள் நம்பகமானவை தான் என்பதில் எங்களுக்கு சிறுதுளியும் சந்தேகமில்லை. ஒரு ஊடகவியலாளர் என்ற வகையில் முறையாக ஆராய்ந்து செய்திவெளியிடுவது தான் எனது பணி..
இன்றைய தேசிய—சர்வதேசியத்தின் நெருக்கடியில், நெருக்குவாரத்தின் மத்தியில் மகிந்த மண்டை குழம்பித் தான் போயுள்ளது. இதை வலுவேகமாக துவக்கிவைத்து அதில் லாபம் அடைந்த இந்தியாவே இதில் இப்போ அவசரப்படமாட்டோம் என்கின்றது. ரஸியா—சீனாவிற்குள்ள நன்றி கூட இந்த இந்தியாவிற்கு இல்லையென மகிந்தாவிற்கு பெரும் கடுப்பு. கடுப்பின் வேகத்தில் தன் “இனிய நண்பனான சரத்பொன்சேகாவையும், தன்னையும் பிரித்தது இந்தியா தான் என்கின்றார். ஊர் உலகெங்கும் ஓடிய களைப்பால், இயலாமையால், இறுதியாக விளக்கமே தவிர பதில் இல்லை என்கின்றனர்.
____________________________________________________________________
சனல்4 காணொளி தொடர்பில் விளக்கமளிக்கப்படுமே தவிர பதிலளிக்கப்பட மாட்டாது : அரசாங்கம.
செனல்4 காணொளி தொடர்பில் விளக்கமளிக்கப்படுமே தவிர பதிலளிக்கப்பட மாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்தக் காணொளி தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், சட்ட நடவடிக்கை எடுப்பதா இல்லையா என்பது குறித்து வெளிவிவகார அமைச்சே தீர்மானிக்கும் .
இதேவேளை, தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகளாக எவரையும் ஏற்றுக் கொள்ளத் தயாரில்லை. மக்களுக்கு தீர்வு அளிக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் திட்டம.
காணொளிக்கு பதில் இல்லை விளக்கம் தான் என்பது, விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது சட்டநடிக்கையா? இல்லையா? என்பவைகள் (வரும் ஆனால் வராது) “பின்நவீனத்துவப்” பாணி; போலல்லலோ உள்ளது. மகிந்தா உந்த பின்நவீனத்துவ சிந்தனையை யாரிடம் கற்றாரோ? அது என்னவோ தமிழ் மக்களுக்கு தீர்வு அளிக்க வேண்டுமென்ற திட்டம்?
தாங்கள் சொல்லும் “தமிழ் மக்கள் உண்டு உறங்கி உயிர் வாழ்ந்தால் போதும்” அரசியல் தீர்வு இல்லை எனும் மகிந்த சிநதனைத தத்துவமோ? முள்ளிய வாய்க்காலின் பின்னான அரசியல் தீர்வு என்பது 13-வது ஆகி, பின்பு அதை உயிர் அற்றதாக்கி, 13-ற்கு முன்–பின், மேல—கீழ் எனச்சொல்லி, சீ.. அதெல்லாம் சரிப்பட்டு வராது, அது வேண்டாம். இன்னொன்று உள்ளது. அதை எழுத்தில் தருகின்றோம் எனச் சொல்லி, அதுவும் இலவு காத்த கிளியாட்டம் (கூட்டமைப்பிற்கு) போலாகியுள்ளது. இப்போ அடுத்தொரு கண்டு பிடிப்பு பாராளுமன்றத் தெரிவுக்குழு.
“இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காணும் முழுப்பொறுப்பும் விரைவில் நியமிக்கப்படும் பாராளுமன்ற தெரிவுக் குழுவிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.”
‘அதேநேரம் பாராளுமன்ற தெரிவுக்குழு எடுக்கும் தீர்மானமே இனப்பிரச்சினைக்கு இறுதித் தீர்வாகவும் அமையும். பாராளுமன்ற தெரிவுக்குழு எடுக்கும் எந்த முடிவையும் நான் ஏற்றுக் கொள்வேன்’ என்கின்றார் மகிந்தர்.
“குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு” என்பார்கள். இபபோ மகிந்தாவிற்கும் இந்நிலையே. தற்போதைய “பாராளுமன்றக்குழு, இறுதித் தீர்வு, என்பது நாளை அல்லது நாளை மறுநாள் மகிந்தக்குழு மகிந்தத் தீர்வாகவே வரும்.” இதுதான் தமிழ்மக்களின் உண்மையான எதிர்கால அரசியல் தீர்வு!