அம்பேத்காரின் 120-வது ஆண்டு நினைவுதினம்
வாழ்க்கைக் குறிப்பு
அம்பேத்கார் அவர்கள் இந்தியாவின் மத்தியப்பிரதேசத்தில் உள்ள “மோ” என்ற இடத்தில் 1891-ம் ஆண்டு ஏப்பிரல் 14-ம் திகதி பிறந்தார். அம்பேத்கார் பிறந்த போது இவருக்கு தாய் தந்தையர் சூட்டிய பெயர் பீம்ராவ் ராம்ஜி. அம்பேத்கார் தாழ்த்தப்பட்ட சமூகத்தின் மகர்ப் பிரிவில் தோன்றியவர். இவர் தனது 5-வது வயதில் தம் ஊரில் உள்ள மராத்தியப் பாடசாலையில் ஆரம்பக்கல்வியை ஆரம்பித்தார்.
1900-ஆண்டில் உயர்நிலைக் கல்வியை தொடங்கினார். உயர்நிலைக் கல்வியை ஆரம்பித்த போதே பாடசாலையில் ஏனைய தீண்டத்தகாத மாணவரைப் போன்றே அம்பேத்காரும் விலக்கி வைத்தலுக்குப் பலியானார். உயர்சாதி மாணவர்கள் வாங்குகளிலும் அவர் வெறுந்தரையிலும் உட்கார வைக்கப்பட்டார். அவருடன் உயர்சாதிப் பிள்ளைகளுடன் கலந்துரையாடுவதற்கோ, விளையாடுவதற்கோ, தடைசெய்யப்பட்டது. தெய்வீக மொழியைக் கற்பதற்கு தீண்டத்தகாதவர்கள் அருகதையற்றவர்கள் என்ற காரணத்தினால் அவருடைய சமஸ்கிருத ஆசிரியர் அவருக்கு சமஸ்கிருதத்தை கற்பிக்க மறுத்துவிட்டார். இதனால் அவருடைய விருப்பத்திற்கு மாறாக அவர் பாரசீககத்தைக் கற்க் நேரிட்டது. பீம்ராவ் உள்ளிட்ட தீணடத்தகாத மாணவர்களின் சுவடிகளை “தீட்டுப்பட்டுவிடும்” என்ற காரணத்தால் ஆசிரியர்கள் தொடுவதேயில்லை. மேலும் இவர்களுடன் வாய் மொழியாகவோ செய்கை மொழியாகவோ கூட அவ்வாசிர்pயர்கள் கருத்துத் தொடர்புகளைக் ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள். ஏனைய தீண்டத்தகாத மாணவர்கனைவிட மானம்மிக்க அறிவுத்திறமுடைய அம்பேத்கார் இந்த அவமானங்களால் அதிகமாக உணர்ச்சிவசப்பட்டு அதிகமாக வருந்தியிருக்கின்றார்.
இக் காலகட்டத்தில் இவ் உயர்நிலைப் பள்ளியில் உள்ள பிராமண சமூகத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் இவரின் திறமையான கல்வி அறிவையும் ஒதுக்கப்பட்ட சாதிய தீண்டாமை நிலையையும் கண்டு இவரின்பால் தனிப்பற்று கொண்டவராகவும் தத்துப்பிள்ளையாகவும் கருதினார். இந்நிலையில் தன் வாழ்வின் மேம்பாட்டிற்கு ஏணிப்படியாகவும் வழிகாட்டியாகவும் இருந்த தன்னுடைய குருவின்பாற் கொண்ட பாசம்மிகு மதிப்பின் அடையாளமாக அவரின் பெயரை (அமபேத்கார்) தனக்கு சூட்டிக்டிகாண்டார். இதன்பின் சமூகப் புரட்சியாளனாக அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவனாக அம்பேத்கார் இந்திய சமூகத்தில் பரிமாணம் பெறுகின்றார்.
இப்பேர்ப்பட்ட அம்பேத்கார் 1907 ல் மெட்ரிகுலேசன் படிப்பை முடித்தார். இதன் பின் பரோடாவிளன் சிர்திரூத்த மனப்பான்மையுள்ள மன்னர் மகாராஜா சாயாஜிராவ் கெய்க் வாடாவால் அளிக்கப்பெற்ற மாத உதவித்தொகையான 25 ரூபா வைத்துக்கொண்டு அம்பேந்தர் தன் அடுத்த மேற்படிப்பை தொடங்குகி;ன்றார் 1913-ல் பீ.ஏ. பட்டதாரியாகி அதன்பின் நியூயோர்க்கிலுள்ள கொலம்பியப் பல்கழைக்கழகத்தில் அடுத்த மேற்படிப்பையும் நிறைவு செய்து அங்கு அரசாங்க ஊழியன் ஆகினார்;. அதன் ஊடாக கிடைத்த ஊதியத்தை மேலும் தன் மேற்படிப்பிற்காகவே செலவழிக்கின்றார். இதன் பயன்பாடு அவரை ஓர் எம்.ஏ. பட்டதாரியாக்குகின்றது.
அத்தோடு ஜக்கிய அமெரிக்காவிலுள்ள கொலம்பியாவில் இருந்து மேற்கு நாடுகளில் செல்வாக்குடன் திகழ்ந்த கல்வியறிவு மையமான ஜக்கிய அரசிலுள்ள இலண்டன் பொருளாதார அரசியலறிவியல் பள்ளிக்கு ஒரு பட்டதாரி மாணவனாகச் சென்றார். அங்குப் பேராசிரியர் செலிக்மான் அளித்த அறிமுகக் கடிதத்துடன் பேராசிரியர் கானன் அவர்களையும் சந்தித்தார். அவர் “பார் அட்லா” விற்குத் தகுதி பெறுவதற்கு ‘இக்ரேஇன்’ என்ற சட்டக் கல்லூரியிலும் அனுமதி பெற்றார். பரோடா மன்னர் உதவித் தொகையை நிறுத்தி விட்டமையால் அவருடைய எம்.எஸ்சி. ஆய்வுக் கட்டுரைக்காக ஒரு வருடம் உழைத்துப் பின்னால் அவருடைய படிப்பை நிறுத்தவும் நேரிட்டது. போராசிரியர் கானனின் நல்லெண்ணத்தின் காரணமாக அக்டோபர்த் திங்கள் 1917லிருந்து நான்கு வருடங்களுக்குள் எப்போது வேண்டுமானாலும் தன் கல்வியைத் தொடர அம்பேத்கர் சிறப்பு அனுமதியைப் (நன்றியுடன்) பெற்றார்.
இந்தியாவில் மறுபடியும் பரோடா மன்னரிடம் படைத்துறைச் செயலராகப் பணியேற்றார். இது இறுதியில் அரசாங்கத்தின் நிதி அமைச்சராவதற்கான முன்னோடியாகும் எனலாம். ஆனால் தன் சொந்த நாட்டிற்குத் திரும்பியபோது முழு அவமானமே அவரை வரவேற்றது. தன் சொந்த இடத்திற்குப் புகழ் மாலைகளுடன் திரும்பும் ஒருவருக்கு அங்கு வரவேற்பில்லை. எந்த விடுதியிலும் அவர் தங்குவதற்கு இடம் கிடைக்கவில்லை. பார்சி விடுதியொன்றில் தன் அடையாளத்தை வெளிக்காட்டாமல் அடைக்கலம் புகுந்து தங்க நேரிட்டது. இருந்தும் சாதிய வெறியர்கள் அவரை அடையாளம் கண்டுவி;டடனர். அவரின் சொந்த அலுவலகத்தில் அடிப்படைப் பணியாளர்கள் தாள்களையும் கோப்புகளையும் அவர்மீது வீசி எறிந்தனர். அவர் அருந்துவதற்கு தண்ணீர் கிடைக்கவில்லை. விடுதியில் இருந்து பொது நூலகத்திற்கு அடைக்கலம் புக நேரிட்டது. இதில் தலையிடுமாறு மன்னரிடம் முறையிட்டும். எப்பயனுமில்லை. சாதி இந்துக்களின் மனத்தில் ஆழப் புதைந்துள்ள ஓரவஞ்சனைகளில் இருந்து, இவருடைய தனிமனித வெற்றிகள், சாதனைகள் இருந்தும் தன்னை காத்துக் கொள்ள முடியவில்லையே என்று இவர் மனக் கசப்படைந்தார். அவர் கண்ணீர் விட்டழுதார். மனக்குறைவுடன் பரோடாவைப் பிரிந்தார்.
1917 இல் நவம்பர் திங்கள் அவர் மறுமுறையும் பம்பாய்க்குத் திரும்பிவிட்டார். அவரை வாழ்த்துவதற்கென்று பம்பாயில் ஏற்பாடு செய்யப் பெற்ற விழாக் கூட்டத்திற்குத் தலைவர் பொறுப்பு ஏற்றுக் கொண்ட சர்.செடல்வால் கலந்துகொள்ளவில்லை இந்நேரத்தில்தான் “இந்தியாவில் சிறு குத்தகை நிலங்களும் அதன் தீர்வுகளும்” என்ற தலைப்பிட்ட நூலைத் தனக்கேயுரிய வழக்கமான திறனுடனும் அறிவு நுட்பத்துடனும் வெளியிட்டார். பும்பாயிpல் அவர் தன் வாழ்க்கையையும் வருமான வழிமுறைகளையும் திருத்தி அமைத்துக்கொள்ள வேண்டியிருந்தது. மாணவர்களுக்குத் தனிக்கல்வி அளிக்கத் தொடங்கியதோடு பங்குப்பத்திரங்களில் அறிவுரை வழங்க ஓர் நிறுவனத்தையும் ஆரம்பித்தார். ஆனால் ஓர் தீண்டத்தகாதவரின் அறிவுரைக்கு செல்வதா என்ற எண்ணத்தால் வாடிக்கையாளர்கள் வரவில்லை என்பதாலும் எதிர்பார்த்தவாறு திட்டம் செயற்படவில்லை. சிறிது காலத்திற்கு ஒரு பார்சி வியாபாரியின் கணக்காளாராக இருந்து தன் காலத்தைகக் கழித்தார். 1918-ல் நவம்பரில் பம்பாயிலுள்ள சைடனம் கல்லூரியில் அரசியல் பொருளாதாரப் பேராசிரியர் பணியை ஏற்று தன் திறமையூடாக எழுச்சியூட்டும் ஆசிரியர் என்ற முத்திரையைப் பதித்தார். இதனால். ஏனைய பிற கல்லூரி மாணவர்கள் அவர் உரையைக் கேட்க அவரைச் சூழ்ந்தார்கள். இருந்தபோதிலும் சமூகத்தின் சிறுமைப்படும் நிலையில் சிறிதும் மாற்றமில்லை. ஆசிரியர்களுக்கான அறையிலிருந்த பானையிலுள்ள நீரைப் பருகுவதற்கு அவருடன் பணிபுரியும் ஆசிரியர்களால் அனுமதிக்கப்படவில்லை. இதனால் மனமுடைந்த அவர் இப்பதவியை துறக்கின்றார். அத்துடன் தன் பெருமுயற்சியால் ;1920 மார்ச்சில் கோலம்பூர் மன்னனின் உதவியுடன் தன்னுடைய பொருளாhரச் சட்டக் கல்வியை தொடர லண்டன் பயணமாகின்றார்.
1920-செப்டெம்பரில் இலண்டன் பொருளாதார அரசியல் அறிவியல் பள்ளியிலும் க்ரேஸ்கின்னிலும் ஒரே நேரத்தில் தன்னை பதிவு செய்துடிகாண்டார். அம்பேத்கரின் நிதிநிலைமை அவருடைய வெளிநாட்டுப் படிப்பின் இரண்டாம் பகுதியிலும் நிறைவளிக்கவில்லை. இத்தருணத்தில் நல்வாய்ப்பாக கோலாம்பூர்; சாகு மன்னர் அவருக்கு உதவ முன்வருகின்றார். தன் உணவையும் துறந்து முன்பைவிட மிகக் கடுமையாக உழைத்தார். தன் அன்றாட வாழ்க்கையில் கேளிக்கைகளை ஒதுக்கிவிட்டு கல்வி இலக்குகளில் மட்டுமே அதிக நாட்டத்தை வெளிப்படுத்தினார். 1921-ல் யூனில் “பிரிட்டிஸ் இந்தியாவில் அரசாங்க நிதி நிருவாக அதிகாரங்களைப் பகிர்ந்தளித்தல்” என்ற ஆராய்ச்சிக் கட்டுரையை எழுதி எம்.எஸ்.சி.பட்டதாரியாகின்றார். 1923-ல் அவர் வழக்கறிஞர்கள் சங்கத்திற்குள் வழக்கறிஞராக சேர்த்துக் ;கொள்ளப்படுகின்றார். அதே ஆண்டில் பம்பாய் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக தன் தொழிலை ஆரம்பிக்கின்றார். வாதிடும் தொழிலை ஏற்றுக்கொண்டாலும் தீண்டாமை என்ற களங்கம் அவருடைய காலடியைப் பின் தொடர்ந்தது. அவர் ஓர் தீண்டத்தகாதவர் என்ற வழக்கமான காரணத்தினால் அவருடனிருந்த வழக்கறிஞர்கள் பணித்தொடர்பை வைத்துக்கொள்வதைக் கூடத் தவித்தார்கள். முக்கியத்துவமில்லாத பிற வேலைகளை மட்டும் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டார்;. இருந்தும் கண்ணியமான மனிதநேயம் கொண்ட சில வழக்கறிஞர்களும் அவருக்கு உதவ முன்வந்தார்கள். இதைக்கொண்டும் ஏனைய சில பகுதிநேர வேலைகளுக்கு ஊடாகவும் தனக்குத் தேவையான வருமானத்தை தேடிக்கொண்டார்.
இதனூடே அவர் தன் அழுத்தமான சமுதாயப் பொதுத்தொணடையும் ஆரம்பிக்கின்றார். 1924-மார்ச் 9-ம் நாள் தாமோதர் கூடத்தில் ஒடுக்கப்பட்ட இன மக்களின் நிலையின் மீதான கவனத்தை ஈர்க்க ஓர் பொதுக் கூட்டத்தை ஏற்பாடு செய்கின்றார். இக்கூட்டத்தில் “ஒடுக்கப்பட்டோர் நலக்கழகம்” என்ற அமைப்பு உருவாகின்றது. இவ்வமைப்பு ஒடுக்கபபட்டமக்களின் கல்வி-பொருளாதார-நிலையை உயர்த்தலும் இவ்வகுப்பினரின் பெருந் துன்பங்களையும் வெளிப்படுத்துவதுமே உடனடி வேலையாக அமைந்தது. இக்காலகட்டத்தில் அவருக்கு வழங்கப்பட்ட ஓர் கல்லூரிப் பேராசிரியர் பதவியையும் கோலாப்பூர் அரசின் அமைச்சர் பதவியையும் சமூகத்தொண்டினை தொடர வேண்டுமென்பதற்காக ஏற்க மறுத்துவிட்டார்.
1927-ஏப்ரலில் “பகிஸ்கரிக் பாரத்” என்ற இதழை ஆரம்பிக்கின்றார். இவ்விதழ் ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்களுக்காகவும் குறைகளுக்காகக் குரல் கொடுக்கவும் குறிப்பாக நடக்கவிருக்கும் அரசியல் சட்டச் சீர்திருத்தங்களின் கண்ணோட்டத்திலும் ஆரம்பிக்கப்பட்டது. ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் ஒட்டுமொத்த நிலையை உயர்த்த கல்வியே சிறந்த கருவியென அம்பேத்கார் கருதினார். கல்வியை குறிப்பாக மேல்நிலைக் கல்வியை பெறுவதன் வாயிலாக மட்டுமே சமூக-பொருளாதாரச் சமத்துவம் கைகூடும் என்று அவர் கருதினார்;. இந்நோக்கில் கல்விப்பணியை தங்கள் தனி உரிமையாகப் பிராமணர்கள் அமைத்துக் கொண்டதை அவர் எதிர்த்தார்.
1928-ல் அம்பேத்கார் பம்பாய் அரசினர் சட்டக் கல்லாரியில் சட்டத்துறைப் பேராசிரியர் ஆகின்றார். பதவிகள் பல வந்தபோதிலும் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையிலேயே தீவிரவாதியாகத் தீவிரமாகச் செயற்பட்டார். இந்தியாவிலுள்ள அரசியல் சட்டச் சிக்கல்களுக்கு தீர்வு காண இலண்டனில் வட்டமேசை மாநாடு கூட்டப்படவேண்டுமென சைமன் குழு என்ற அமைப்பிற்கூடாக பரிந்துரைத்தார். அத்துடன் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தனிப்பிரதிநிதித்துவம் வேண்டும் என்ற வாதத்தையும் முன்வைத்தார். இதனால் 1930-ல் இலண்டனில் கூடப்படவிருந்த இம்மாநாடு அங்கு கூடப்படவில்லை. இதை காங்கிரஸ் பலவழிகளில் இழுத்தடித்தது. பின்பு பல்வேறு கட்சிகள் நலச்சங்கங்களின் நெருக்குவாரத்தால் இம்மாநாடு கூட்டப்பட்டு அம்பேத்கார் ஒடுக்கப்பட்டமக்களின் பிரதிநிதியாக அழைக்கப்கட்டார். காங்கிரஸ் இம்மாநாட்டை புறக்கணித்தது மட்டுமல்லாமல் நாடு தழுவிய எதர்ப்பையும் காட்டியது.
1930-31-ம் ஆண்டில் இந்தியத் தேசியக் காங்கிரஸ் சட்டமறுப்பு இயக்கத்தையும் காந்தியின் தலைமையில் உப்புச் சத்தியாக்கிரக போராட்டத்தையும் ஆரம்பித்தது. 1931-மேயில் காந்தி-இர்வின் உடன்படிக்கையின்படி காங்கிரசும்-பிரிட்டிஸ் அரசும் ஓர் முடிவிற்கு வந்தார்கள். அது 1931-ஆகஸ்டு – டிசம்பருக்கிடையில் வட்டமேசை மாநாட்டை கூட்டுவதென. இனச்சிக்கல்தான் இம்மாநாட்டின் மையப்பொருளாகும். இதனுள் தீண்டத்தகாதவர்களுக்கு தனித்தொகுதி என்பது மிக முக்கிய பிரச்சினையாகும். காங்கிரஸின் பிரதிநிதிகள் காந்தி, மாளவியா, சரோஜினி நாயுடு, ஆகியோர் ஆவர். தீணடத்தகாதோரின் நலப்பிரதிநிதி யார் என்ற பிரச்சினையில் அம்பேத்கருக்கம் காந்திக்கும் கருத்து மோதல் ஏற்பட்டது. தீணடத்தகாதோரின் பிரதிநிதி என்று காந்தி உரிமை கோருவதை அம்பேத்கார் ஏற்க மறுத்தார். இனப்பிரதிநிதித்துவம் என்ற பிரச்சினையில் எவ்வித உடன்படிக்கையையும் இந்த மாநாடு காணமுடியாமல் தோல்வி அடையுமளவிற்கு பெரும் பிளவை ஏற்படுத்திவிட்டது.
காந்திஜி திரும்பியபோது, காங்கிரசும் அதன் தலைவர்களும் (காந்திஜி உட்பட) அரசின் அடக்குமுறைக்கு உள்ளானார்கள். திரள்திரளாக கைதானார்கள். காந்திஜியும் கைதானார். தீண்டத்தகாதவர்களுக்கு தனித்தொகுதி என்ற கோரிக்கையை ஏற்றுக்கொண்ட இனத்தீர்ப்பை அதிகாரபூர்வமாக 1932-ஆகஸ்டில் ராமசே மெக்டொனால்டு அரசு அறிவித்தது. இந்து சமுதாயத்தின் ஒற்றுறமையை இது உடைக்கிறது என்ற அடிப்படையில் இதைத் தீவிரமாக காந்திஜி எதிர்த்து, இத்திட்டம் திரும்பப் பெறவில்லையென்றால் சாகும்வரை உண்ணாநோன்பு என்றறிவித்தார். இதற்கு நிகராக அம்பேத்கார் அவர்களும் இதனைச் செயற்படுத்தியாக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். ஆனால் சப்ரு, ஜெய்கர், முதலான தலைவர்களின் குறுக்கீட்டின்படி அவர் ஓர் உடனபடிக்கைக்கு உட்பட, காந்திஜின் உண்ணாவிரதம் வற்புறுத்தியது. முழுமையான தனித்தொகுதிகள் என்பதற்கு பதிலாக கூட்டுத் தொகுதிகளில் தீண்டத்தகாதவர்களுக்கு தொகுதி ஓதுக்குதல் என்பதே இவ்வொப்பந்தம். “பூனா ஒப்பந்தம்”என்ற இவ்வொப்பந்தம் 1932-ல் ஏற்படுத்தப்பட்டது. அரசியல் சட்ட சீர்திருத்தங்களின் பாராளுமன்றக் கூட்டுக்குழுவில்பணியாற்றுவதன் வாயிலாக அரசியல் சட்டத்தை உருவாக்குபவராகவும், 1932-33-ல் நடைபெறும் மூன்றாம் வட்டமேசை மாநாட்டிற்கு உறுப்பினராக செல்லவும், அதற்கான தன் வேலைகளையும் ஆரம்பித்தார்.
- அகிலன்-