Language Selection

அகிலன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மத்திய அரசு “மதிப்பற்ற பண்டமாகியுள்ளது”!

கேரள-பாராளுமன்ற இடதுசாரிகள் பிரதேச இனவாதத்திற்குள் மூழ்கியுள்ளனர்!

ஏறச்சொன்னால் எருதுக்கு கோபம். இறங்கச்சொன்னால் முடவனுக்கு கோபம். என்றொரு பழமொழியுண்டு. இந்நிலையில் உள்ளது முல்லைப் பெரியாறு பற்றிய தழிழக–கேரள நிலவரம்!

முல்லைப் பெரியாற்றுப் பிரச்சினை நீண்டதோர் வரலாற்றுப் பின்னணி கொண்டதாகும். இதிலுள்ள உண்மைத் தன்மைகள் பிரதேச நோக்கிலாக்கப்பட்டதன் விளைவே இன்றைய இனவாத நோக்கிலான மோதல்களுக்கான அடிப்படைக் காரணி!

சென்ற மாதம் பெய்த கடும் மழையினால் முல்லைப் பெரியார் அணையின் நீர்மட்டம் அதிகரிக்கத் தொடங்கியவுடன், அணை உடையப்போகின்றதென்ற விசமப் பீதிப் பிரச்சாரங்கள் கேரளா முழவதும் பரப்பப்பட்டன. இதில் பிற்போக்கு சக்திகளுடன் பாராளுமன்ற இடதுசாரிகளும் சேர்ந்து!

 

1979-ல் முல்லைப் பெரியாறு அணைக்கு கீழாக 50-கி.மீ.தொலைவில் “இடுக்கி அணை” யென பெயர் கொண்டதோர் அணையை  கேரள அரசு கட்டியது. இதன் நோக்கம் முல்லைப் பெரியாறு உடைந்தாலும் அந்நீரை உள்வாங்கி தேக்கி ஓட வைப்பதற்கும், மக்களை அழிவிலிருந்து காப்பதற்குமேயாகும். இருந்தும்…

 ”1979ல் மோர்வி எனறொரு அணை உடைந்து சேதம் ஏற்படுத்தியதை காரணம் காட்டி காலத்தால் பழசாகிப் போனதும் நீர்க்கசிவு உடையதும் ரொம்பப் பழைய தொழில் நுட்பத்தால் கட்டப்பட்டதும் புவி அதிர்ச்சிப் பகுதியில் அமைந்துள்ளதுமான முல்லைப் பெரியாறு அணை உடையும் பட்சத்தில்அதையண்டிய பகுதிகளில் வாழும் சுமார் 40 இலட்சம் மக்கள் அழிவது உறுதி! 

பெரியாறு அணை உடைந்தால் கீழே உள்ள இடுக்கி உட்பட மேலும் இரண்டு அணைகள் சேர்ந்து உடைந்து சேதத்தை அதிகமாக்கும் எனவும் அரிய உயிரினங்களும் இயற்கை வளங்களும் நிறைந்த பெரியாறு வனப்பகுதியும் அழியும் எனவும் பிரச்சாரம் செய்யப்பட்டது. “இது கடந்தமாத மழையுடன் புதுப்பிக்பட்ட விசமப் பிச்சாரமாகியதின் விளைவே இன்றைய கலவரங்களுக்கான பிரதான காரண.p இதில் வேடிக்கை என்னவெனில் இடுக்கி அணையை கட்டிய சி.பி.எம். கட்சியும் இவ்விசமத்தனப் பிசாரங்களுக்கு துணை போவதும், தமிழக மக்கள் தாக்கப்படுவதைப் பார்த்து சந்தோசப்படுவதுமே!

“முல்லை பெரியாறு அணை 116 ஆண்டுகளுக்கு முன்னர் கேரள-தமிழ்நாடு எல்லையில் கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்திலுள்ள தேக்கடியில் கட்டப்பட்டது. 1886ம் ஆண்டில் திருவிதாங்கூர் மன்னருடன் அன்றைய பிரிட்டிஷ் அரசின் சென்னை மாகாணம் செய்து கொண்ட  ஒப்பந்தத்தின்படி நீர்த்தேக்கத்திற்கென 8000-ஏக்கர் நிலத்தையும் அணைக்கென மேலும்  100 ஏக்கர் நிலத்தையும் 999 ஆண்டு குத்தகைக்கு திருவிதாங்கூர் அரசு அளித்தது. அன்றிலிருந்து இன்றுவரை அதற்கான குத்தகையை தமிழகமே செலுத்தி வருகின்றது.”

“தரை மட்டத்திலிருந்து 881 அடி உயரத்தில் அமைந்துள்ள இவ் அணை 176 அடி உயரம் உடையது. 22.5 டி.எம்.சி நீர் ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்திற்கு இதன் மூலம் கிடைக்கிறது. அணை கேரளப் பகுதியில் அமைந்துள்ள போதிலும் அணையின் நிர்வாகம் அணையின் நீர்ப் பயன்பாடு எல்லாம் தமிழகத்திற்கே உரியது. இதற்கென திருவிதாங்கூர் அரசுக்குச் சென்னை மாகாண அரசு ஆண்டொன்றுக்கு ஏக்கருக்கு 5 ரூபாய் குத்தகை அளிக்க வேண்டும் என்பதுஅன்றைய ஒப்பந்தம்.”

“பிரிட்டிஷ் ஆட்சி போனபின் (1947)–ஒப்பந்தத்தைப் புதுப்பிக்கப்பட்ட (1950-58-69 காலப்பகுதிகளில்)  பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு இறுதியில் அச்சுதமேனன் கேரள முதலமைச்சராக இருந்தபோது (1970) ஏக்கர் ஒன்றிற்குக் குத்தகைத் தொகை ரூ 30அ, உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கு கிலோவாட்டுக்கு ரூ12ம் கொடுக்க வேண்டுமென ஒப்பந்தம் திருத்தப்பட்டது. இதன்படி தற்போது ஆண்டொன்றுக்கு 2.5 லட்ச ரூபாய் நில வாடகையாகவும், 7.5 லட்ச ரூபாய் மின்சார உற்பத்திக்காகவும் தமிழக அரசு கேரளத்திற்குக் கொடுத்து வருகிறது.!”

வரலாற்று ரீதியாகவும் சமகால நிலைமைகளையும் கண்க்கில் கொண்டால் கேரள அரசுகள் தமிழகத்திற்கு, அதுவும் தமிழக விவசாயிகளுக்கு பெரும் துரோகமிளைததே வந்தன- வருகின்றன. கடந்த காலங்களில் தமிழக அரசுகளால் முன்வைக்கப்பட்ட நியாயமான கோரிக்கைகள் வேண்டுகோள்கள் யாவும் வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்ன!

அத்தோடு நீதிமன்றங்களால் வழங்கப்பட்ட நியாயமான தீர்ப்புகள் யாவும் புறந்தள்ளப்பட்டன. இதில் நீதிபதிபதிகள் தீர்ப்பு வழங்கி சலித்த நிலைமைகளும,; ஏனைய வழக்குகள் அப்பீல் மீள்விசாரணை எனும் காரணங்களினால் ஆண்டாண்டு காலமாக கிடப்புகளிலும் கிடக்கின்றன. இவையத்தனையும் தாண்டிய நிலையிலேயே  பிரதேச வாதமும் யதார்த்த நிலைமைகளுக்கு அப்பாற்ற விசமப் பிரசாரங்களும் கரைபுரண்டோடுகின்றன! இதற்கு அண்மையில் தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட 999-சினிமாப் படமும் ஓர் சான்றாகும்!

“நில அதிர்வுப் பீதியைக் கேரள அரசு எழுப்பியதையொட்டி தமிழக அரசு அணைப் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய அமைத்த  நால்வர் குழு இந்தியத் தர நிர்ணயங்களின்படி அணை பாதுகாப்பாக உள்ளதாக அறிவித்தது. இப்பகுதியில் நில அதிர்வு மூன்றாம் அளவு நிலைக்குள்ளேயே உள்ளது என் பதால் ஆபத்துக்கு வாய்ப்பில்லை என்பதும் நிபுணர்களின் கருத்தாக உள்ளது.! “

 நிபுணர்களின் கருத்துக்கூட மூடநம்பிக்கையின் பாற்பட்ட பாமரத்தனமான கருத்துக்களால் பின்தள்ளப்பட்டுள்ளது! இது சாதாரண மக்கள் மத்தியில் செல்லும்போது பிரதேச இனவாதமாக இனவெறியாகவே மாறும் இதன் பிரதிபலிப்பையே கேரள-தமிழக மாநிலங்களில் காணமுடிகின்றது. இதை நிவர்த்தி செய்யவேண்டிய பெரும் பொறுப்பு மத்திய அரசின் பாற்பட்டதே! மத்திய அரசோ “இஞ்சி தின்ற குரங்காட்டம்” உள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி பிரதமரை (முல்லபை பெரியாறு விவகாரம் பற்றி) சந்திக்கவுள்ளார்! அபபோதுதான் அத்வானியிடம் கேட்பார்போல் உள்ளது தமிழகத்தில்-கேரளத்தில் என்ன நடைபெறுகின்றதென….

இந்தியப் பிரதமர் பற்றி அண்மையில் ஒர் இந்தியப் பத்திரிகை கருத்து தெரிவிக்கையில் “இந்தியாவிற்கு இனிமேல் பிரதமர் பதவி தேவையில்லையென்ற நிலை வந்தாச்சு” இதை மக்மோகன்சிங் ஏற்படுத்தி வைத்துவிட்டாரென! இது எதைத்தான் காட்டுகிறது மக்மோகன் சிங் கையெழுத்திடும் ஒர் பொம்மையே! இவரிடம் போய் அத்வானி கதைப்தை விட பிரச்சினைக்குரிய பிரதேசங்களுக்கு சென்று பிரதேச-இனவாதம் தணிய பிரச்சாரம் செய்யலாம்!

பிரச்சாரம் எனும் போதே சி.பி.எம். எனும் “மாக்சிஸட்” கட்சியின் கைங்கரியங்களும் கண்முன்னாகின்றன! இவர்கள் கடந்த கால் நூற்றாண்டிற்கு மேல் கேரளத்தை ஆட்சி செய்தவர்கள். இவ்வணை விவகாரத்தின ஊடாக பிரதேச-இனவாதத்திற்குள்ளாலேயே ஆட்சி செய்திருக்கின்றார்கள்! வர்க்கம், சமூக விஞ்ஞானம், சோஸலிசம் பற்றி பேசுகின்றவர்கள், கேரள்த்தில் சமதர்மத்தின் பேரால் குறைந்தது இனங்களுக்கிடையிலான இணக்கப்பாட்டையாவது ஏற்படுத்தினார்களா?

கேவலம்! தண்ணீர் என்பது இயற்கையின் கொடை இதை அணை கட்டீ தழிழக மக்களுக்கு கொடுக்கவந்த வெள்ளை ஏகாதிபத்தியத்தின் பெருந்தன்மை கூட, தமிழக மக்களிடம் வரிவாங்கிய இந்த “மாக்சிஸர்களுக்கு வரவில்லை! 

இந்த அளவுகோல் கொண்டே இவர்களைக் கேட்க வேண்டியுள்ளது. நீங்கள் மாக்சிஸட்டுக்களா? அல்லது பாசிஸ்டுக்களாவென?

-அகிலன்