அமெரிக்கா கூறுகின்றது கொரோனா வைரஸ்சை சீனாவுக்குள் முடக்கி - உலகெங்கும் பரவுவதை தடுத்திருக்க முடியும் என. இது அமெரிக்கா கூற்று மட்டுமல்ல, முதலாளித்துவ சிந்தனைமுறையில் சிந்திக்கின்ற, மனிதர்களின் பொதுக் கருத்தியலுமாகும்.

சீனாவைப் பொறுத்தவரை கொரோனா வைரஸ்சை தன் எல்லைக்குள் கட்டுப்படுத்தி இருக்கும் ஆற்றலையும், அது உலகெங்கும் பரவுவதை தடுக்கும் வல்லமையையும் கொண்டிருந்தது. சமூகத்தை முன்னிறுத்தி அறிவியல்ரீதியாக அணுகினால் சாத்தியமானாக இருந்த போதும், பொருளாதாரரீதியான சிந்தனையும் நடைமுறையும் அதை சாத்தியமற்றதாக்கியது.

சீனாவைக் கடந்து வைரஸ்சின் பரவலை சீனா கட்டுப்படுத்தத் தவறியது என்ற குற்றச்சாட்டின் உண்மைத்தன்மை குறித்த கேள்விகளை ஆராய முன்பு – அனைத்து நாடுகளும் பதில் சொல்ல வேண்டிய இரு விடயங்கள் இருக்கின்றது

1.சீனாவை விட்டு வைரஸ் நாடு கடந்த பின் - சீனா போல் அல்லது உங்கள் வழியில் ஏன் உங்கள் நாட்டில் வைரஸ்சைக் கட்டுப்படுத்த முடியவில்லை? எது தடுத்தது? அனைத்து நாடுகளும் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.

2.வைரஸ் பரவலைத் தடுக்க அரையும் குறையுமாக முடக்கி – மீளவும் செல்வந்தர்கள் செல்வத்தைக் குவிக்க இயல்பு வாழக்;கைக்கு திரும்பும் உங்கள் நடவடிக்கை - வைரஸ் தொற்றை மீள பரவலாக்கும் நடவடிக்கையாகும். இதற்கு பதில் சொல்ல வேண்டும்.

இப்படி உங்கள் நடத்தைகள் ஒருபுரும் இருக்க மறுபக்கம் உங்களையே கட்டுப்படுத்த முடியாதபோது, சீனாவை குறிவைத்து அரசியல் நடத்துவது ஏன்? சீனா கட்டுப்படுத்தத் தவறிய விடையத்தைப் பார்ப்போம். சீனா வேண்டுமென்றே பரப்பியது என்ற குற்றச்சாட்டை, அறிவியல் அடிப்படையின்றி அமெரிக்கா அவதூறாகவே முன்வைத்து வருகின்றது. மேற்கு ஆதரவு முதலாளித்துவச் சிந்தனையாளர்களும் இந்தக் குற்றச்சாட்டையே மீள முன்வைக்கின்றனர். இப்படி அரசியலாகும் இந்தப் பின்னணியில் - என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்.

சீனா உலகெங்கும் பரப்பியது என்பது பொய். உலகெங்கும் திட்டமிட்டோ அல்லது சீன சுற்றுலாப் பயணிகள் மூலமே, கொரோனா வைரஸ் தொற்று உலகெங்கும் நிகழவில்லை. முhறாக சீனா அல்லாத அந்தந்த நாடுகளைச் சேர்ந்தவர்களே, சீனாவில் இருந்து கொரோனாவைக் காவி வந்தனர். இவர்கள் சீனா சென்ற சுற்றுலாப் பயணிகளுமல்ல.

அப்படியானால் கொரோனா வைரஸ்சை காவி வந்தவர்கள் யார்? இவர்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் அரசுகளுக்;கு (சீனாவுக்கு) இருந்ததா? இதை ஏன் இன்று வரை (சீனா உட்பட) யாரும் பேச மறுக்கின்றனர்?

உலகமயமாதலையும், அதை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்தையும்  கட்டுப்படுத்தும் அதிகாரம் அரசுகளுக்கு கிடையாது. உதாரணமாக மாஸ்க் உற்பத்தியை எடுங்கள். உற்பத்தி, விற்பனை, விற்றதை இடையில் மறித்து அதிக விலைக்கு விற்கும் - வாங்கும் அதிகாரம் .. எதிலும் அரசுகள் தலையிட முடியாது. அண்மையில் பிரான்ஸ் வந்த மாஸ்க்கை இடையில் வைத்து அமெரிக்கா வாங்கிச் சென்ற கதை போல், பல உதாரணங்கள் உண்டு. உலகமயமாதல் இந்தச் சந்தைவிதி போல் - கொரோனாவும் சுதந்திரமாக உலகமயமாதல் பொருளாதார விதியின் கீழ் தான் - சீனாவை விட்டுப் பறந்தது.

சீனாவில் வூகானில் உள்ள உலகக் காப்பரேட் நிறுவனங்களின் அதிகார வர்க்கம் தான், பிற நாடுகளுக்கு கொரோனா வைரஸ்சை கொண்டு சென்றனர். இவர்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் சீனாவுக்கு கிடையாது.

வூகான் என்பது உலகமயமாதலின் ஒரு மையம். உலகச் சந்தைப் பொருளாதார உற்பத்தியின் மையமுமாகும். உலகச் செல்வந்தர்கள் செல்வத்தைக் குவிக்கும் மூலதனச் செயற்பாட்டை வழிநடத்தும் தலைமையகமே வூகான் தான். மிக மலிவான கூலியில் உலகில் அதிக தொழில்நுட்பவியலாளர்களைக் கொண்ட சீனா – வர்க்கரீதியாக அமைதியான (சுரண்டுவதற்கு ஏற்ற) நாடும் கூட. கம்யூனிசத்தின் பெயரில் சீன முதலாளிகள் கட்டுப்படுத்தி வைத்திருக்கும் உழைக்கும் வர்க்கத்தின் உழைப்பை, வூகானில் இருந்து காப்பரேட் மூலதனம்  கொள்ளையிடுகின்றது.

இப்படி உலகின் பெரும் பணக்காரர்களை உருவாக்கும் சுரண்டலை முன் நின்று வழிநடத்தும் காப்பரேட் நபர்களை கட்டுப்படுத்தும் அதிகாரம், எந்த நாட்டுக்கும் கிடையாது. மூலதனத்தின் அதிகாரம் என்பது எல்லைகளற்ற – அதிக வல்லமை கொண்டவை.

இப்படிப்பட்ட சூழலில் வூகானாலில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு - அது ஒரு தொற்றாக அறிவிக்கப்பட்டது. சீனா வூகானை முடக்கிய போது, காப்பரேட்டையும்  உள்ளடக்கியது தான். கம்யூனிசத்தின் பெயரில் உள்ள சீன முதலாளித்துவ அரசின் முடிவு என்பது, சீன முதலாளிகளின்  முடிவு. ஆனால் காப்பரேட் கம்பனிகளில் உயர்பதவி வகித்த சீனர்கள் அல்லாதவர்கள், இந்த வைரஸ் குறித்த நடவடிக்கையை முன்கூட்டியே அறிந்ததுடன்,  சீனாவை விட்டு சுதந்திரமாக வெளியேறியும் விட்டனர். இதன் பொருள் வைரஸ்சை உலகெங்கும் மிகச் சுதந்திரமாக காவிச் சென்றனர்.

வைரஸ் தொற்று இறைச்சிச் சந்தையை அடிப்படையாகக் கொண்டு சீனாவில் இனம் காணப்பட்ட பின்னணியில், எப்படி சீனா அல்லாத காப்பரேட் உயர் அதிகாரிகளுக்கு பரவியது என்ற கேள்வி எழும். செல்வ அடுக்குகளில் மேலே இருப்பவர்களின் வீட்டு வேலைகளைச் செய்பவர்கள், செல்வ அடுக்கில் கீழே இருப்பவர்கள் தான். செல்வம் சிலரிடம் குவிய வீட்டு வேலை என்பது, உலகமயமாதலில் பெரிய மனித உழைப்பாக மாறி இருக்கின்றது. உதாரணமாக பிரான்சில் வீட்டு வேலையில் ஈடுபடுவோர் 10 இலட்சம் பேர், இது இந்தியாவில் 600 இலட்சம் (6 கோடி) பேர். செல்வ அடுக்கில் கீழேயுள்ள சீன ஏழைகள், காப்பரேட் கம்பனிகளின் உயர் அதிகாரிகளின் வீட்டு வேலைகளை செய்பவராக, கார் ஓட்டுபவர்களாக … பலதரப்பட்ட வேலைகளைச் செய்கின்றனர். இவர்கள் மூலம் கொரோனா வைரஸ் தொற்று காப்பரேட் அதிகாரிகளுக்கு ஏற்பட்டு, சீன அரசுக்கு கட்டுப்படாத காப்பரேட் ஊழியர்கள் மூலம் - வைரஸ் உலகெங்கும் பரவியது.

இப்படி உலகெங்கும் சென்றவர்கள் மூலம் உலகெங்குமான வர்க்க மேலடுக்களிலேயே வைரஸ் முதலில் பரவியது. இந்த வகையில்

1.உலகெங்கும் காப்பரேட் மூலதனத்தை விரிவாக்கும் சர்வதேச கூட்டங்களை நடத்தியவர்களிடையே கொரோனா பரவியது.

2.சீனா முடக்கத்தை முன்கூட்டியே அறிந்து சீனாவில் இருந்து வெளியேறிய காப்பரேட் அதிகாரிகள் - அரசியல்வாதிகள் - உயர் வர்க்கங்களுக்கு இடையிலான உறவுகள் மூலம் பரவியது

3.காப்பரேட் தொடர்புகளை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் பணக்கார காப்பரேட் மதக் குழுக்களின் தொடர்பு வழியில் வைரஸ் பரவியது

4.சீனாவில் இருந்து வெளியேறிய காப்பரேட் பணக்கார வர்க்கம் - தங்கள் சொந்த நாடுகளில் தங்கள் வீட்டுவேலைக்கு வைத்திருந்த நபர்கள் மூலம், சாதாரண மக்களுக்கு வைரஸ்சைப் பரப்பியது

இப்படி உலகமயமாதல் காப்பரேட் பொருளாதார வடிவத்தில் வைரஸ் பரவிய ஒழுங்கை,  சீனா எந்த வகையிலும் தடுக்க முடியாது. வைரஸ் தொற்று உலகத் தொற்றாக மாறிய போது, உலகளாவிய கூட்டு செயற்பாடு மூலம் கட்டுப்படுத்தும் செயற்திட்டங்கள் எதையும் - எந்த நாடும் பின்பற்றவில்;லை. நாட்டு எல்லையை முன்னிறுத்தும் தேசியவாத - ஏகாதிபத்திய முரண்பாடுகள் கூர்மையடைந்து காப்பரேட் மயமாவதன் மூலம், உலகம் முரண்பாடுகளாக பிளவுண்டு வருகின்றது. வைரஸ் அதை ஆழமாக்கியுள்ளது.

சீனாவுக்குள் முடக்கி இருக்க முடியும். எப்படி என்றால் முரண்பட்ட உலகமயமாதலுக்கு பதில் ஒருங்கிணைந்த சர்வதேசியமாக உலகம் தன்னை முன்னிறுத்தியிருந்தால் - கொரோனா பரவுவதை தடுத்திருக்க முடியும். நாடுகளால் கூட கட்டுப்படுத்த முடியாத மூலதனத்தின் அதிகாரம், ஏகாதிபத்தியங்களிடையேயான குழிபறிப்புகள், இன-மத-நிற அரசியல் வெறித்தனங்களே வைரஸ்சை உலகமயமாக்கியது.

இப்படி உண்மைகள் இருக்க முதலாளித்துவம் தங்கள் உள்நாட்டு நெருக்கடியை திசைதிருப்ப - தாம் அல்லாத நாடுகள் மீது போலியாக குற்றம் சாட்டுகின்றனர்.