இது இயற்கையை புரிந்து கொள்ள மறுப்பதில் இருந்து ஏற்படுகின்றது. இயற்கை ஆண், பெண் வேறுபாட்டை பாலியல் சார்ந்து ஏற்படுத்தியுள்ளது. இதைத் தவிர ஆண் பெண் வேறுபாடு பற்றிய விளக்கங்கள், ஆணாதிக்கம் சார்ந்தவை. பாலியல் வேறுபாடு பெண்ணை ஆணின் அடிமையாக்கிவிடவில்லை. இயற்கை சார்ந்த பாலியல் வேறுபாடு, அதற்கே உரிய உறவு விதியைக் கூட இயற்கை சார்ந்து உருவாக்கியது. இயற்கையை மனித வராலாற்றில் பாதுகாக்காதவரை, அவை மக்கள் விரோதத் தன்மை கொண்டவை.

 

இந்த இயற்கையை மறுத்த தொடர்ச்சியில் பாலியல் சார்ந்தும் ஆணாதிக்கமாக வளர்ச்சி பெற்றது.  இது இயற்கை பாலியல் உறவை நலமடித்ததன் மூலம், இயற்கைக்கு புறம்பாக பாலியல் உறவுகளை ஏற்படுத்தியது. இவை இயற்கை உறவை கொச்சைப்படுத்தும் வழியில், செயற்கையான உறவை ஆணாதிக்க எல்லையில் முன்வைக்கின்றது. இயற்கையான உறவை மறுக்கின்ற அனைத்தும் உறவு ஆணாதிக்க வகைப்பட்டவையே. ஆனால் ஆணாதிக்க அமைப்பில் செயற்கை உறவுகள், இயற்கையின் நிர்ப்பந்தின் அடிப்படையில் கூட ஏற்படுகின்றது. இதன் மீது நாம் அனுதபம் கொள்ளமுடியும். இதை மாற்ற இயற்கை நோக்கிய சமூகப் புரட்சியை நடத்த போராட வேண்டும்.

 

இங்கு ஒரிணச்சேர்க்கை இயக்கையானது என்ற வாதத்தில், குரங்கில் இருந்து மனிதக் குரங்கு உருவாகிய காலகட்ட செயற்பாட்டை ஆய்வுக்கு கொள்ளமுடியும். குரங்கும், மனிதக் குரங்கும் குறிப்பானதும் அடிப்படையானதுமான வேறுபாடு கைகளினாலான உழைப்பாகும். மரத்தில் தாவி ஏற பயன்படுத்திய கைகளை உழைப்புக்கு பயன்படுத்திய மனிதக் குரங்கு, குரங்கில் இருந்த திட்டவட்டமாக வேறுபாடுகின்றான்;. கைகளை பயன்படுத்த தெரிந்து இராத குரங்குகள் எப்படி ஒரினச்சேர்க்கையில் ஈடுபட்டிருக்கமுடியும். உதாரணமாக பெண்கள் உணர்ச்சியை எப்படி தீர்த்து இருக்கும். கைகளை பயன்படுத்த தெரிந்திருக்காத குரங்கு, ஒருக்காலும் ஒரிணச் சேர்க்கையில் வெற்றி பெற முடியாது அல்லவா. அத்துடன் பாலியல் இன்ப உணர்ச்சியை தீர்க்கும் குறைந்த பட்ச அறிவை, இயற்கைக்கு புறம்பாக ஒருக்காலும் பெற்றிருக்கவில்லை. கைகளை எப்படி எதற்கு பயன்படுத்தவது என்பது கூட நீண்ட அனுபவ ரீதியான நடைமுறை முற்ச்சிகளில், தற்செயலான சம்பவங்கள் நிர்ணயமான பாத்திரத்தை வழங்கின. அறிவியல் பூர்வமாக கைகள் மூலமோ, வேறு உடலுறுப்புகள் மூலம் பாலியல் இன்பத்தை அடைய முடியும் என்ற அனுபவ அறிவை பெறுவதற்க்கு கூட, நீண்ட காலம் அவசியமாகவே மனிதனுக்கு இருந்தது. மனித பாலியல் உணர்ச்சியையும், இன்ப நாட்டத்தையும் ஆண் பெண் உறுப்புகளின் எப்பாகம் வழங்குகின்றன என்பதை இயற்கை கடந்து, புரிந்து கொள்ளும் அனுபவ அறிவு மனித வராற்றின் பிந்திய காலகட்டத்துக்குரியது. இங்கு ஆண், பெண் உறுப்பு கடந்து எந்த உறுப்பும் பாலியல் அங்கமாக இருந்தது கூட இல்லை. இவை மிக அண்மைய காலத்துக்குரியவையாகும். இன்று ஆண் குரங்கில் அவதானிக்கப்படும் விதிவிலக்கான ஒரிணச்சேர்க்கை பெண்கள் இடையே இல்லை. இந்த ஆண் குரங்கு கூட பரிணாம வளர்ச்சியில் கைகளை மெதுவாக முன்பைவிட சிறப்பாக பயன்படுத்துவதின் விளைவுமட்டுமின்றி, குரங்கில் ஏற்படும் குறித்த கால வேட்கையின் விளைவாக அவதனிக்கப்படுகின்றது. பெண் குரங்கின் எண்ணிக்கை குறைவாக உள்ள போதும், ஆண்களின் போட்டியிலும், அதில் தோற்கின்ற போதே ஆண்  குரங்குகளில் ஒரிணச் செயற்;கை அவதானிக்கப்படுகின்றது. ஆனால் வெற்றி பெறுவதில்லை. இந்த அவதானம் கூட எல்லாவகையான குரங்களிடமும் கணப்படுவதில்லை. இயற்கையாக அதிக உணவை பெற்று ஒய்வை பெறுகின்ற இனங்களிடையே தான், இவை முக்கியமாக அவதானிக்கப்படுகின்றது. இங்கு அவை தன்னிச்சை சேர்க்கையில் ஈடுபடும் போது, அதை ஒத்த நிலையில் உள்ளது உதவிக்கு வருவதன் மூலமே ஒரிணச்சேர்க்கை அவதானிக்கப்படுகின்றது. இங்கு பெண்ணுடன் உடலுறவு கொள்வதில் மற்றைய ஆண்குரங்குடன் போட்டியிட்டு வெற்றி பெறும் ஆண் குரங்கு, ஒரிணச்சேர்க்கையில் ஈடுபடுவதில்லை. இது மற்றைய விலங்குகளில் இருந்து விதிவிலக்காக கூட குரங்கில் அவதனிக்கப்பட்டது. மனிதன் இனவிருத்தியை தடை செய்து வளர்க்கும் மிருங்களுக்கிடையில் கூட ஒரிணச்சேர்;கைகான முயற்சியில் முயல்கின்றதை அவதானிக்க முடிகின்றது. ஆணால் அதில் வெற்றி பெறுவதில்லை. அது இயற்க்கை சார்ந்து ஈடுபட துடிப்பதால், அதில் தோல்வி பெறுகின்றன. இயற்கையாக பாலியலில் ஈடுபட முயன்று தோற்கின்ற போதே, ஒரிணச்சேர்க்கை பொதுவாக நிகழ்கின்றன. ஆணாதிக்க மனித அமைப்பில் பாலியல் நலமடிக்கப்பட்டு, அவை சிதைக்கப்பட்ட நிகழ்வுகளில் தான், ஒரிணச் சேர்ற்கை மையம் கொள்கின்றது. இது இயக்கையானது அல்ல. மாறாக செயற்கையாக ஆணாதிக்க விளைவாக காணப்படுகின்றது.