Language Selection

குருச்சேவ் முதலாளித்துவ மீட்சி நடத்தவே ஸ்டாலினை தூற்றினான்

முதலாளித்துவ மீட்சியை பலப்படுத்த பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை தூற்றும் போது “ஸ்டாலின் ஒரு கோடாரியைக் கொண்டு தனது அதிகாரத்தை நிலைநிறுத்தினார்” என்றான். அவன் பாட்டாளி வர்க்க ஆட்சியைப்பற்றி குறிப்பிடும் போது, “பயங்கர” ஆட்சி என்றான். மேலும் கூறும் போது “அந்தக் காலத்தில் வேலைக்குச் செல்லும் ஒரு மனிதன் அடிக்கடி, மீண்டும் வீட்டுக்குத் திரும்புவோமா, தனது மனைவியையும் குழந்தையையும் மீண்டும் காண்போமா என்பதைப் பற்றி நிச்சயமற்றிருந்தான்” என்றான். இப்படி பாட்டாளி வர்க்க சர்வாதிகரத்தை தூற்றியவ அதே குருசேவ் தான், 1937 இல் “நமது கட்சி, துரோகிகளையும் காட்டிக்கொடுக்கும் கும்பலையும் ஈவு இரக்கமின்றி நசுக்கும். டிராட்ஸ்கிய வலது கழிச்சடைகள் அனைத்தையும் துடைத்தெறியும்.. இதற்கான உத்தரவாதம் நமது மத்திய கமிட்டியின் அசைக்க முடியாத தலைமையாகும். நமது தலைவர் தோழர் ஸ்டாலின் அவர்களின் அசைக்க முடியாத தலைமையாகும். நாம் எதிரிகளை முழுவதுமாக கடைசி மனிதன் வரை அழித்தொழித்து அவர்களுடைய சாம்பலை காற்றில் தூவிவிடுவோம்” என்று பிரகடனம் செய்தான், ஆனால் ஸ்டாலின் மறைவுக்கு பின் தூற்றினான். அனைத்தையும் ஸ்டாலின் மேல் சுமத்தினான். டிராட்ஸ்கிகள் குருச்சேவை ஆதரித்தனர். ஸ்டாலின் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் பற்றி குறிப்பிடும் போது “உட்புறத்திலிருந்து கோட்டையைக் கைப்பற்றவது மிகவும் எளிது” என்றார். அது தான் நடந்தது. உள்ளிருந்த மூடிமறைக்கப்பட்ட சந்தர்ப்பவாதம் தான், முதலாளித்துவ மீட்சியை உள்ளிருந்து நடத்தியது.

இந்த முதலாளித்துவ மீட்சியைப் பற்றி யூகோஸ்லாவிய முதலாளித்துவ மீட்சியாளன் டிட்டோ 1956 இல் கூறும் போது “இப்போது உள்ள பிரச்சனை இந்த பாதை வெல்லுமா அல்லது மீண்டும் ஸ்டாலின் பாதை வெல்லுமா என்பது தான்” என்று அங்கலாய்த்தான். பாட்டாளி வர்க்கமா அல்லது முதலாளித்துவ வர்க்கமா எது நீடிக்கும்? என்ற கேள்வியை முன்வைத்து தமது நிலையை தெளிவாக்கினர். இதை டிராட்ஸ்கிகள் ஆதரித்தனர். குருசேவ் வர்க்க விசுவாசத்துடன் டிட்டோவை வர்க்கச் சகோதாரன் என்று கூறியதுடன் “முன்னனிற்கும் நோக்கங்களின் ஒற்றுமையில் கட்டுண்ட சகோதாரர்னும் உற்ற துணைவனும்” என்றான். அவர் மேலும் யூக்கோஸ்லேவியா பற்றி குறிப்பிடும் போது “நமது கருத்து ஒன்றே, நம்மை வழிநடத்துகின்ற கோட்பாடு ஒன்றே” என பிரகடனம் செய்தான்.

மார்க்சிய லெனினியம் கைவிடப்பட்டது. பட்டாளி வர்க்க சர்வாதிகாரம் அழிக்கப்பட்டு முதாலளித்துவ சர்வாதிகார‌ம் அவ்விடத்தில் மாற்றி வைக்கப்பட்டது. இதன் மூலம் சோவியத் ஒரு சமூக எகாதிபத்தியமாகியது. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை கைவிட்ட குருசேவின் நிலையை ஏகாதிபத்தியங்கள் வாழ்த்தி வரவேற்று தொடர்ச்சியாக கொண்டாடின. அமெரிக்காவின் அரசு செயலாளர் குருச்சேவின் பணியைப் பாராட்டி “… நல்ல சாப்பாடு, இரண்டாவது கால்சராய் இத்தகைய விசயங்கள் இன்று ரசியாவில் எந்த அளவுக்கு அதிக முக்கியத்துவம் உள்ளவையாகி விட்டனவோ அந்த அளவுக்கு மிதவாதம் செல்வாக்கைச் செலுத்தும் நிலமை எற்பட்டுள்ளது எனக் கருதுகின்றேன்” என்று போற்றினர். இந்நிலையில் “ஸ்டாலினிசத்தின் ஏகாதிகபத்தியத்துடனான அரசியலுக்கு ஆதரவாக டிமிட்ரோவ் போன்றோரும் களம் இறக்கப்பட்டனர்” என்று தூற்றுவது, டிராட்ஸ்கியத்தின் கடைந்தெடுத்த அவதூறூகும். டிமிட்ரோவ் சர்வதேச கம்யூனிச இயக்கதினை வழிநடத்துவதில் வகித்த‌ பொறுப்பான பங்களிப்பை சிறுமைப்படுத்துவதாகும். ஏன் அன்று டிராட்ஸ்கிகள் இந்த டிமிட்ரோவ்வை ஸ்ரானிசத்தின் பிரதிநிதி என்று தூற்றினர்? டிமிட்ரோவுக்கும், சர்வதேச கம்யூனிச இயக்கத்துக்கும் எதிராகவே அன்று அவர்கள் இயங்கினர் என்பதே உண்மை.

ஸ்டாலின் காலத்தை வெறுத்த எகாதிபத்தியங்கள், குருச்சேவ் காலத்தை போற்றின. ஏகாதிபத்திய பத்திரிகையான நீயூஸ்வீக், “ஸ்டாலின் காலத்து அய்க்கியப்பட்ட முகாமை நிகிதா குருச்சேவ் மீட்க முடியாதவாறு அழித்துவிட்டார். இது கம்யூனிசத்திற்கு அல்ல, மேற்கத்திய உலகத்துக்கு குருச்சேவ் செய்த மாபெரும் சேவையாகும்” என்று எழுதியது. ஆனால் டிராட்ஸ்சிகள் அங்கு சோசலிசம் முன்னேறுவதாகவும், ஸ்டாலினின் அதிகாரம் நொறுக்கப் படுவதாகவும் விளக்கம் அளித்து ஆதரித்தன. அமெரிக்க செய்தித்துறை எஜென்சியின் இயக்குனர் ஸ்டாலினுக்கு எதிரான குருச்சேவின் அவதுறை குறிப்பிட்டு “நம்முடைய நோக்கங்களுக்கு மிகவும் பொருத்தமான ஒன்று” என்று 1956 இல் அறிவித்தார். ஸ்டாலின் தூற்றப்பட்டு மார்க்சியத்தை கழுவில் எற்றி கொன்ற போது, சுற்றி நின்று தத்தம் தூப்பாக்கிகளால் வானை நோக்கி சுட்டு தத்தமது மகிழ்ச்சிகளை ஏகாதிபத்தியங்கள் தெரிவித்தன. இதற்கு டிராட்ஸ்கிகள் ‘ஆகா என்ன மகிழ்ச்சி’ என்று குதுகலித்தபடி, தர்பாரைச் சுற்றி நின்று ஜோராக கைதட்டினர். அதை இன்று ஒரு மகழ்ச்சிகரமான நிகழ்ச்சியாக கொண்டாடத் தயங்கவில்லை. ஸ்டாலினையும் மார்க்சியத்தையும் கழுவில் எற்றிய குருச்சேவ் கும்பல் முதலாளித்துவ மீட்சியை சோசலிசமாக காட்டிக் கொண்டது.

இந்த சோசலிசம் வர்க்க மோதலற்ற சமுதாயமாக திகழும் என்றான். வர்க்க மோதலற்ற உலகத்தையும், சமாதான சக வாழ்வையும் கொண்ட கட்சியை கட்டும் என்றான். “ஸ்டாலின் சொந்த நாட்டில் இருந்து உலகம் வரை வர்க்கம் என்ற கோடாரியைக் கொண்டு உலகை பிளந்து வைத்திருந்த ஒரு கொடுங்கோலன்” என்றான். குருச்சேவ் வர்க்கம் என்ற அடிப்படையைத் தகர்க்க “நாம் (ரசியாவும், அமெரிக்காவும்) உலகிலேயே மிக வலிமை வாய்ந்த நாடுகள். நாம் சமாதனத்திற்காக இணைந்தால் எந்த யுத்தமும் நடக்காது. பின் எந்தப் பைத்தியக்காரனாவது போரை விரும்பினால் அவனை எச்சரிப்பதற்காக நாம் விரல்களை அசைத்தால் போதும்” என்றான். உலகை நாங்கள் இருவரும் பங்கிட்டு கொண்ட அடக்கியாள முடியும் என்றான். உலக சமாதானம் என்பது, சுரண்டலை வலிமையாக நடத்துவதும் அடக்கியாள்வது தான் என்றான். நாம் இதில் இணைந்து விட்டால் எதையும் யாரும் எதுவும் செய்து விடமுடியாது என்றான். இதை மறுத்த ஸ்டாலின் தூற்றப்பட்டார். “உலக சமாதனத்துக்கு தடைக் கல்லாக இருந்த ஒரு முட்டாளின் ஆட்சி” என்றான். “இரண்டு சமுதாய அமைப்புகளுக்கு இடையிலான தவிர்க்க இயலாத போராட்டம் முற்றிலும் கருத்துப் போராட்டம் என்ற வடிவத்தை மட்டும் மேற்கொள்ளச் செய்ய வேண்டும்..” என்று கூறி வர்க்க சமரசத்தை, எதார்த்தத்தில் பேணும் வழி வகையைப்பற்றி தத்துவ விளக்கம் வழங்கினான். கருத்து போராட்டம் மட்டும் போதுமானது என்று, மார்க்சியத்தை பிரமுகர்தனத்தின் எல்லைக்குள் சிறைமைப்படுத்தி சிறைவைத்தான். ஸ்டாலின் இதற்கு எதிராக இருந்தார். “அமெரிக்கா மற்றும் மற்றயை நாடுகளின் தொழிலாளர் இயக்கங்களின் விடுதலைப் போராட்டங்களை ஆதாரிப்பதை சோவியத்யூனியன் கைவிட்டால், முரண்பாடுகளை இலகுவாக கையாள முடியும் தானே என்று ஸ்டாலினிடம் கேட்ட போது, ஸ்டாலின் கூறினார் “.. நமக்கு நாமே நேர்மையற்றவர்களாக மாறாமல், நாம் இந்த அல்லது இது போன்ற சலுகைகளை அளிக்க சம்மதிக்க முடியாது” என்றார்.

இதற்கு நேர் மாறாக நேர்மையற்றவராக மாறி, அமெரிக்காவின் வலைப் பிடிக்க, எல்லா ஸ்டாலின் எதிர்ப்பளர்களும் ஒருவர் வாலில் ஒருவர் தொங்கினர். டிராட்ஸ்கிகள் யூகோஸ்லாவிய பற்றி கூறும் போது ஸ்டாலினால் டிட்டோவுக்கு சூட்டப்பட்ட பட்டங்கள் மறைந்து, யூகோஸ்லாவியா சோசலிச நாடு என்று எற்கப்பட்டது என்றனர். டிட்டோ கும்பலோ அமெரிக்கா உற்பத்தியை சோசலிச பொருளாதாரம் என்றனர். குருச்சேவ் அமெரிக்கா சாதனைகளை “எப்போதும் உயர்வாக கருதவதாக” கூறினார். அதை வருணிக்கும் போது “அமெரிக்கர்களின் சாதனைகளைக் கண்டு சந்தோசம் அடையும் பொழுது சில சமயங்களில் பொறாமை கூடப் படுகின்றேன்” என்றான். “அதை நோக்கி நாம் முன்னேற வேண்டும்” என்றான். அதை நியாப்படுத்த அமெரிக்க மக்கள் “மோசமாக வாழவில்லை” என்றான். அமெரிக்கர்கள் மோசமாக வாழாமல் இருக்க, உலகளவில் காலனிய மக்கள் தங்கள் முதுகுத் தோலையே அமெரிக்கர்களின் செருப்பு தோலாக மாற்ற வேண்டியிருந்தது. உலகில் பலமான ஏகாதிபத்தியமாக, பொருளாதாரத்தில் முன்னணி நாடாக அமெரிக்கா நீடிக்க, உலகையே ஒட்டு மொத்தமாக கொள்ளையடித்தனர். இந்தப் பாதையில் நாம் செல்ல வேண்டும் என்றான் குருச்சேவ். அப்போது தான் ரூசியா முதலாளிகள் உருவாக்கவும், மற்றவர்கள் அமெரிக்காவைப் போல் எம்மைப் பார்த்து பொறமைப்பட முடியும் என்றான். இந்த பாதையில் ரூசியா ஒரு சமூக எகாதிபத்தியமாகியது. ஸ்ராடலின் தூற்றுப்பட்டார். ஸ்டாலின் மறுக்கப்பட்டார். ஆனால் ஸ்டாலின் 1952 இல் என்ன சொன்னார். “நமது புரட்சிகர கொள்கையை கைவிட்டு சர்வதேச மூலதனத்திற்கு பல சலுகைகளை அளிக்க சம்மதித்தால் அந்த நிலைமையில், நமது சோசலிச நாட்டை ‘நல்ல’ முதலாளித்துவ குடியரசாக மாற்ற உதவி செய்வதற்கு சர்வதேச மூலதனத்திற்கு சந்தேகத்திகிடமின்றி எவ்வித ஆட்சேபனையும் இருக்காது” என்றார். ஸ்டாலினை மறுத்த குருச்சேவ் நாட்டை முன்னேற்ற சாத்தனிடமிருந்து கூடக் கடன் வாங்கத் தயாராக இருப்பாதாக பலமுறை பிரகடனம் செய்தான். இதை மறுத்த ஸ்டாலினை ஒரு ‘முட்டாள்’, ‘கொலைகாரன்’, ‘மடையன்’, என்றான்.

ஆயுதங்கள் அற்ற, ஆயுதப்படைகள் அற்ற போர்கள் அற்ற உலகை நாம் படைக்க முடியும் என்று டிட்டோவும், குருச்சேவும் கூறத் தவறவில்லை. முனைப்பான சமாதான சகவாழ்வுதான் யூகோஸ்லாவியா வெளிவுறக் கொள்கை என்று பிரகடனம் செய்ய, குருச்சேவ் சமதான சகவாழ்வே அயல்துறைப் பொது வழி என்ற கூறி வர்க்கப் போராட்டத்தையே உலகளவில் மறுத்தான். இதை மறுப்பதாயின் ஸ்டாலின் மறுக்கப்பட வேண்டும். ஆகவே இருவருமே ஸ்டாலினை மறுத்தனர். ஸ்டாலினைத் தூற்றினர். மார்க்சியத்தை அதன் அடிப்படையில் இருந்தே மறுத்தனர். ஆனால் ஸ்டாலின் என்ன கூறினார் “ஏகாதிபத்தியத்தின் எமாற்றுத்தனமான அமைதிக் கோட்பாடு உழைக்கும் வர்க்கத்தினுள் ஊடுருவுவதற்கான பிரதான ஏஜெண்ட சமூக ஜனநாயகமே. மேலும் யுத்தங்கள் மற்றும் ஊடுருவலுக்கான தயாரிப்பில் முதலாளித்துவத்தை ஆதரிப்பதற்கு உழைக்கும் வர்க்கத்தின் மத்தியில் உள்ள முக்கிய சக்தி இதுவே” என்றார். அமைதிக் கோட்பாடு, சமாதன சக வாழ்வு என அனைத்தும் எகாதிபத்தியத்தின் மிக மோசமான எமாற்றுடன் கூடிய சரக்கையே குருச்சேவ் – டிட்டோ கும்பல் விற்பனைக்கு விட்டது. அதையே ஆகா ஒகோ என்று கூறி, தம் கொள்கைகள் என்பதால் டிராட்ஸ்கியம் இலவச விளம்பரம் செய்தது. ஸ்டாலினை மிதித்து நடத்திய முதலாளித்துவ மீட்சியை பாதுகாக்க பரஸ்பரம் தம்மைத் தாம் தொழுதனர். குருசேவ் யூகோஸ்லாவியாவை “சோசலிச நாடு” என்றார். டிட்டோ கும்பலை “அரசு என்னும் கப்பலின் சுங்கானை பிடித்திருக்கும் சகோதரக் கட்சி” என்று கூறினான். குருச்சேவ் யூகோஸ்லாவியா பற்றி “முன்னேறிய” சோசலிச நாடு என்றும், அங்கே சோசலிசம் பற்றி வம்பளப்பது இல்லை என்றான். சோசலிச அமைப்பு உள்ளபடியே கட்டியெழுப்பப்படுவதைக் காணலாம் என்றான். இந்த வளர்ச்சி உலகளாவிய புரட்சிகரத் தொழிலாளர் இயக்கத்துக்கு பருண்மையான பங்களிப்பு என்றான்.

ஏகாதிபத்தியங்களுடன் கூடிக் கூலாவியபடி சொந்த நாட்டு உற்பத்தியை முதலாளித்துவமாக மீட்டபடி யூகோஸ்லாவியா எப்படி மாறியது என்பதை மேலே விரிவாக பார்த்திருந்தோம். ஆனால் குருச்சேவ், டிராட்ஸ்கிய வாதிகள் அங்கு சோசலிசம் முன்னேறுவதாகவும், அதுபற்றி அங்கு வம்பளப்பதில்லை என்று கூறி, வர்க்கப் போராட்டத்தையே அரசியலில் இருந்து கழுவேற்றினர். அதுவே ஸ்டாலின் தூற்றுப்பட்டு மார்க்சியத்தை கழுவில் எற்றுவதில் இவர்களை ஒன்றுபடுத்தியது.

7.சோவியத்யூனியனில் குருச்சேவ் நடத்திய முதலாளித்துவ மீட்சி - இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் - 7

6.இன்று வரை தொடரும் ஸ்டாலின் அவதூறின் அரசியல் எது? - இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 6

5.மார்க்சியத்தை தூற்றிய யூகோஸ்லாவியா எகாதிபத்தியத்தைப் போற்றியது - ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்? பகுதி 5

4.யூகோஸ்லாவிய பொருளாதாரத்தில் முதலாளித்துவ மீட்சி -ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? : பகுதி – 4

3.யூகோஸ்லாவியா பற்றி ஸ்டாலினின் மார்க்சிய நிலைப்பாடும்; டிராட்ஸ்க்கிய மற்றும் குருச்சேவின் நிலைப்பாடும் - - ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? : பகுதி – 3

2.ஸ்டாலின் ஏன் மறுக்கப்பட்டார்? ஏன் தூற்றப்பட்டார்? இன்னும் ஏன் தூற்றப்படுகின்றார்? - ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? : பகுதி –

1.தூற்றுவதாலோ, திரிப்பதாலோ, திருத்துவதாலோ வர்க்கப் போராட்டங்கள் நின்றுவிடுவதில்லை - ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? : பகுதி – 1


Most Read

முற்றவெளியில் பிணத்தை எரிக்க, கொள்ளிக்கட்டை கொடுத்த வெள்ளாளியப் பண்பாடு

யாழ். நாகவிகாரை விகாராதிபதியின் உடலை யாழ் முற்றவெளியில் எரிக்க வேண்டும் என்று அடம்பிடிக்க, அதை எதிர்க்கும் அளவுக்கு இனவாத - இந்துத்துவ சாதிய அரசியல் நடந்தேறியிருக்கின்றது. மக்களை ஒடுக்குவதையே தங்கள் அரசியலாகக் கொண்ட ஒடுக்கும் தரப்புகள், ஒடுக்கப்பட்ட தமிழ்மக்களின் மேலான தங்கள் அதிகாரத்தை அரசியல் மயமாக்கும் அரசியலாக, தகன நிகழ்வை மாற்றியிருக்கின்றனர்.

பிரமுகர்கள் மரணமாகும் போது பொதுவெளிகளில் தகனம் செய்யும் புத்த மதத்தின் மரபை, ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் முதுகில் போட்டு எரிப்பதற்;கு "நல்லாட்சி" அரசு கங்கணம் கட்டி நின்று, அதை தங்கள் அதிகாரங்கள் மூலம்  அரங்கேற்றினர். இந்த இனவாத அரசியல் பின்னணியில் "நல்லாட்சி" அரசின் தூண்களான கூட்டமைப்பின் அனுசரணையுடனேயே, இந்த முரண்பாடு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான அரசியலாக்கப்பட்டது.

வேள்வியை தடைசெய்யக் கோரும் வெள்ளாளிய இந்துத்துவம்

யாழ் குடாநாட்டில் மிருகபலி மூலம் நடைபெறும் வேள்வியானது பாரம்பரிய வரலாறு கொண்டது மட்டுமின்றி ஆதி மனித வழிபாட்டு முறையின் தொடர்ச்சியாக இருக்கின்றது. இது காலகாலமாக இந்து வெள்ளாள சாதிய வழிபாட்டு முறைக்கு முரணாகவும் இருந்து வருகின்றது. ஆதிமனித வழிவந்த ஒடுக்கப்பட்ட சாதிகளால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட மிருக பலி மூலமான வழிபாட்டு முறையானது, ஒடுக்கும் சாதியைச் சேர்ந்த மக்களையும் தனக்குள் உள்வாக்கிக் கொண்டதுடன் வேள்வியான உணவுக் கொண்டாட்டமாக மாறி இருக்கின்றது. இறைச்சி விரும்பி உண்ணும் உணவாக மாறி இந்து-சாதி பண்பாட்டு கூறுகளை அழிக்கின்றது. இதானல் இதை சாதிய இந்துத்துவவாதிகள் தடை செய்யக் கோருகின்றனர்.

மிருக பலி !?

இலங்கையில் மாடு வெட்டுவதை தடை செய்வது பற்றி ஜனாதிபதி கூறியதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றது. உழைக்கும் மக்கள் மாட்டு இறைச்சியை தங்கள் உணவாக உண்பதை சமூக பண்பாடாகக் கொண்டவர்கள். இதற்கு எதிராக "மாடு புனிதமானது" என்றும் மாட்டு இறைச்சியை உண்ணக் கூடாது என்ற பிரச்சாரத்தை வெள்ளாள சாதிய இந்துத்துவ மதவாத சக்திகள் முன்னெடுத்து வந்ததுடன், மாட்டு இறைச்சியை ஓடுக்கப்பட்ட சாதிகளின் "இழி' உணவாக காட்டி வந்தனர். அதேநேரம் பௌத்த மத அடிப்படைவாதிகள் கூட இதே இந்துத்துவ சாதிய அடிப்படையில் முன்வைத்து வந்ததுடன் முஸ்லீம் மக்களின் உணவுப் பண்பாட்டுக்கு எதிரான பிரச்சாரமாகவும் இதை முன்னெடுத்து வருகின்றனர்.

உலகை குலுக்கிய வர்க்கப் புரட்சியின் 100 ஆண்டு

மார்க்சியம் என்பது கற்பனையல்ல. மானிட வாழ்வியலைப் பற்றிய தத்துவமே மார்க்சியம். மார்க்சிய தத்துவத்தின் நடைமுறையே, 1917 உலகைக் குலுக்கிய வர்க்கப் புரட்சியாகும்.

இந்தப் புரட்சி தனியுடமைக்கு எதிரான வர்க்கப் புரட்சி என்பதாலே, எல்லாப் புரட்சிகளிலும் இருந்து வேறுபட்டு நிற்கின்றது. இதனாலேயே 1917 நடந்த புரட்சி, உலக வர்க்கப் புரட்சிக்கான ஆயுதமாகி நிற்கின்றது. எல்லாவிதமான ஒடுக்குமுறைகளுக்;கும் எதிரான உண்மையான நேர்மையான தத்துவமாக மார்க்சியம் இருப்பது போல், 1917 புரட்சியே இன்றைய புரட்சிகளுக்கு எல்லாம் நடைமுறையாகவும் இருக்கின்றது. இது தான் இன்றைய எதார்த்தம்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

MOST READ