இந்திய ஏகாதிபத்தியங்களது நலன்களுக்கு, தேசங்கடந்த பன்னாட்டு நிறுவனங்களின் கொள்கைக்கு கதவை அகலத்திறந் விட்டுள்ளது இந்திய மக்கள் விரோத அரசு. அந்நிய முதலாளிகள் இந்திய மக்களை சுரண்டவும், இயற்கை வளங்களை சூறையாடி சுற்றுச் சூழலை நாசப்படுத்தவும் ஆரம்பித்துள்ளனர். அன்னியர்களின் இலாபவேட்டையில் தமது வாழக்கையை இழந்து வரும் மக்கள் போர்க்கோலம் ப+ண்டு வருகின்றனர்.
இந்தியாவின் கர்நாடக மாநில ஜனதா அரசு இப்போது 7 மிகப்பெரிய அந்நியத்தொழில் நிறுவனங்களுக்கு ஒப்புதல்அளித்துள்ளது. அமெரிக்காவின் நேரடி முதலீடு கொண்ட "கொஜென்டிரிஸ்" அனல்மின்நிலையம் மட்டுமன்றி அந்நியக்கூட்டுடன் மிகப்பெரிய தரகு முதலாளித்துவ நிறுவனங்ளும் கர்நாடகாவின் மங்கரைச் சுற்றியுள்ள பகுதிகளில் தமது ஆலைகளை நிறுவியுள்ளன.
நாகார்ஜூனா எஃகு நிறுவனம் , மங்க@ர் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை கிரேசிம் செயற்கை இழை ஆடை நிறுவனம் ,கனரா எஃகுத் தகடு நிறவனம், பி,ஏ,எஸ்,எஃப் சாயத்தொளிற்சாலை ,உஷா இரும்புத்தாது நிறுவனம் குதிரேமூக் இரும்புத்துத்தாது நிறுவனம் முத லான மிகப்பெரிய ஆலைகளின் விளைவாக இப்பகுதியே படிப்படிபடியாக நஞ்சாகி வருகின்றது. ஆலைகளிலிருந்து வெளியேறும் எண்தெணய், கிரீஸ்,அமோனியா,பினாயில்,சயனைடு,சலபைடு மற்றும் உலோகத்தாதுக் கழிவுகளின் விளைவாக நேத்ராவதி,குர்புர், சீதாநதி , சுவர்ணநதி ஆகிய ஆறுகள் மாசுபட்டுப்போயுள்ளன. நிலத்தடி நீரும் நஞ்சாகிப்;போயுள்ளது. எல்லாவற்றிற்க்கும் மேலாக இந்நச்சுக்கழிவுகளால் மீன்கள் செத்து மிதப்பதால் மீனவர்களின் வாழக்;;கையே இன்று கேள்விக்குறியாகிவிட்டது. இது தவிர, இந்
நஞ்சுக் கழிவுகளால் சுற்றுச்சூழல் கடுமையாகப் பாதிக்கப்பட்டு காடுகளிலுள்ள அரிய விலங்கினங்களும் ப+ச்சி-பறவையினங்களும்அழிந்து வருவதாகச் சுற்றுச்சூழல்வாதிகள் எச்சரிக்கின்றனர்.
இநிநிலையில் கர்நாடகத்தின் கடற்கரையோர மாவட்டங்களைச் சேர்ந்தவிவசாகிகளும், மீனவர்களும் மாநில அரசின் புதியதொழிற்கொள்கையை எதிர்த்து போர்க்குணத்தோடு போராடி வருகின்றார்கள்.
கடந்த டிசம்பர் 19ந் திகதி முதல் 25ந் திகதி வரை மங்க@ர் எண்ணெய் சுத்திகரிப்பு-பெற்ரோலிய நிறுலனத்துக்கு எதிராக ஆ ர்ப்பாட்டம்-பேரணிகளை நடத்திய இம்மக்கள் அந்நிறுவனத்தின் எண்ணெய்க் குழாய்களையும் உடைத்தெறிந்துள்ளனர். தடியடி,துப்பாக்கிச்சூடு நடத்தியும் முன்னணியாளர்கள் 300 பேரைக் கைது செய்தும் பொலிசு அடக்குமுறையை ஏவிய போதிலும் இம்மக்களின் போராட்டத்தை அடக்கமுடியவில்லை.
இந்நிறுவனங்களுக்காக விவசாய நிலங்கள் 2000 ஹெக்டேர் அளவுக்கு விவசாயிகளிடமிருந்து நயவஞ்சகமாக பறிக்கப்பட்டு அவர்களுக்கு உரிய நிவாரண வசதிகள் செய்து தரப்படவில்லை. விளைநிலங்களை அபகரித்து தங்ளை ஏமாற்றிய அரசுக்கு எதிராக விவசாயிகள் ஏற்கனவே போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மத்தி யமாநில அரசுகளின் நாட்டைச் சுடுகாடாக்கும் நாசகார கொள்கையை எதிர்த்து ஏற்கனவே "கார்கில்" விதை நிறுவனம் , "கெண்டகி" கோழி இறைச்சி நிறுவனங்களைத் தாக்கியழித்த கர்நாடக விவசாயிகள் இப்போது ஏகாதிபத்தியக் கூட்டுடன் நிறுவப்பட்டுள்ள நச்சுக்கழிவு ஆலைகளுக்கெதிராக தமது போராட்டத்தைத் தீவிரப்படுத்தி வருகின்றார்கள்.
நன்றி - புதிய ஜனநாயகம்.
பீகார்:-
அன்னிய நிறுவனங்களுக்கு எதிராக கர்நாடக விவசாயிகள் போர்க்கோலம்
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Helvetica Segoe Georgia Times
- Reading Mode