Language Selection

சமர் - 20 : 01 -1997
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

அம்மா

நண்பர்கள் என்னைத்தேடி வந்து

கதவிலே தட்டும் போதெல்லாம்

தாயே, நீ வெம்பிக் கண்ணீர் -மல்குவதை

எண்ணி நான் வேதனைப்படுகிறேன்

 

ஆனால் வாழ்க்கையின் சிறப்பு என்

சிறையிலே பிறக்கிறதென்று

நான் நம்புகிறேன் அம்மா.

என்னை இறுதியில் சந்திக்க வருவது

ஒரு குருட்டு வெளவாலாய்

இருக்காதென்றும் நான் நம்புகிறேன்

அது பகலாயத்தான் இருக்கும்

அது பகலாய்த்தான் இருக்கும்

 

சமீஹ் அல் காசீம்

நன்றி:- பலஸ்தீனக் கவிதைகள்-