அண்மையில் கொழும்பிலிருந்து வெளியாகும் சரிநிகர் வரமுடியாத வகையில் பல்கலைக்கழக ஆசிரியர் குழு தடுத்து நிறுத்தியது. ஆசிரியரை மாற்றவும், செய்திகளை மாற்றவும் என எண்ணற்ற வேண்டுகோளுடன், பத்திரிகை ஆசிரியர் குழுமீது தமது அழுத்தத்தைப் பிரயோகித்தினர். இதன் தொடர்ச்சியில் ஆசிரியர், உழியர்கள் ஒரு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்த வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட சமரசத்தின் பின் பத்திரிகை வெளிவந்ததுடன் ஒரு பாரிய மாற்றத்தைக் கொண்டிருந்தது.
முன்பு பத்திரிகை ஆசிரியர் ஓரிரண்டாக இருந்து தீடீரென எட்டாக உயர்ந்ததுடன், இரு கருத்து நிலைகளையும் சமப்படுத்தும் வகையில்அங்கு 4 ஆக எட்டு ஆசிரியர்கள் போடப்பட்டிருந்தது. இதில் என்ன கருத்து முரண்பாடு என ஆராயின், தமிழ்ப் பேசும் மக்கள் மீதான சிங்கள இன ஒடுக்குமுறையை, சிங்கள இராணுவ அடி, உதை, படுகொலையை.... மற்றும் தமிழ்த் தேச சுயநிர்ணயத்தை உயர்த்துவது, எழுதுவது புலிசார்பு என முத்திரை குத்தும் பல்கலைக்கழக ஆசிரியர்குழு அதை எதிர்த்து பத்திரிகையை வழிநடத்தக் கோரினர். அதாவது இவைகளை அம்பலப்படுத்துவதை முன்னெடுப்பதை விடுத்து புலிகள் செய்வதை மட்டும் உயர்த்தும் படி கோருகின்றனர்.
ஓர் இனம் அழிவுநிலையில் இன்றுள்ளது. அதை அரசானது உச்சக்கட்ட நிலையில் ஒடுக்க, புலிகள் குறும்தேசிய நிலையில் நின்று அதை ஊக்குவிக்க பல்கலைக்கழக ஆசிரியர் குழு தேசிய இனம் அழியும் நிலையை மூடிமறைத்து அதை அழிக்க புலி பயங்கரவாதம் காட்டி ஊக்குவிக்கின்றனர். இந்நிலைமை என்பது கடந்த பலகுழுக்கள் நடந்த உடைந்த சிதறிப்போன போது பல உட்படு கொலைகளை சந்தித்து அதன் வழியில் இன்று மீளவும் பல்கலைக் கழக ஆசிரியர் குழு வெளியில் இருந்தபடி, சரிநிகருக்குள் சதிகளை நடத்த தமது இன்றைய அரசு, ஏகாதிபத்தியச் சார்பு என்ற பலமான நிலையில் நின்று திணிக்கின்றனர். இவர்களை எதிர்க்கும் பிரிவின் பலவீனமான, பாதுகாப்பற்ற, புலிமுத்திரை குத்தப்பட்டு இனவாதத்தாக்குதலை எதிர்க்க முடியாத இன்றைய நிலையில் பல்கலைக் கழக ஆசிரியர் குழு அவர்களைக் கடந்து உயர் பாதுகாப்பு நிலைகளில் நின்று சரிநிகரைக் கைப்பற்றி தமிழ்த் தேசிய இனத்திற்கு எதிராக திருப்பிவிட முனைகின்றனர்.
புதிய ஆசிரியர் குழு எதிர்காலத்தில் மேலும் மோதலுக்கு நகரும் என்பதை அதன் குழுத்தெரிவு எட்டாகும் போதே தெளிவாகிவிடுகின்றது. இந்தப் பச்சோந்திகளான பல்கலைக்கழக ஆசிரியர் குழக்களின் மனிதாபிமான, ஜனநாயக வேடத்தை நாம் சரியாக இனம்கண்டு கொள்வதும், எதிர்த்துப் போராடுவதும் இன்றைய வரலாற்றுத் தேவையாகவே எம்முன் உள்ளது.