16.1.1996 தொழிலாளர்பாதையின்  புரட்சி கம்ய+னிஸக் கட்சி  ( இவர்கள் தமது பெயரை அண்மையில் சோசலிச சமத்துவக் கட்சி ) என மாற்றி மேலும் சீரழிக்கின்றனர். பாசிசபார்பானிய இந்து மத வெறியை நியாயப்படுத்திய மணிரத்தி னத்துக்காக   குரல் கொடுத்துள்ளனர்.

மணிரத்தினத்தின் வீட்டின் மீது  குண்டுவீசிய சம்பவத்தைச் சுட்டிக் காட்டி  கலை ஞன் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கூறி  வரிக்குவரி முதலாளித்துவம் என ஓப்பாரி வைத்தபடி முதலாளித்துவத்தைப் பாதுகாக்கும்படி பாபர்மசூதி இடிக்கப் பட்டதை மறை முகதமாக நியாயப்படுத்தியுள்ளனர். அதை அவர்களின்  கூற்றில் பார்ப்போம்.

"பொம்பே திரைப்படம் முதலாளித்தவ நரசிம்ராவ் ஆட்சியின் நானாவித கும்பல் களதும் இந்து முஸ்லீம் அடிப்படைவாத பிற்போக்கு கும்பலும் பெரும் வெறுப்புக்கு இலக்காகி உள்ளது.... தமது மதத்தைச்சார்ந்த யுவதி அதனை விட்டு இந்து மத  இளைஞனைத் திருமணம் செய்வதைதச் சித்தரிக்கிறது இத்திரைப்படம்.    இவ்விடயம் மையக்கருவானதையிட்டு முஸ்லீத் தீவிரவாதிகளைக் கொதிப்படைந்து போயிருக்கும் அதேவேளை  சிவசேன தலைவர் பால்தாக்கருக்கு சமமான ஒரு பாத்திரத்தினை திரைப்படம் கொண்டுள்ளதாகக் கூறி  அவரும் சிவசேனனின் பிரபல தீவிரவாதிகளும்  மணிரத்தினத்தையிட்டு வெறுப்படைந்து போயிருந்தனர்.'

என இட்டுக்கட்டிய ஒரு பொய்யை புரட்சிகரகம்ய+னிசத்தின் பெயரால் பிரச்சனை யின் மையக்கருவைத் திசை திரும்பி  பார்பன இந்து வெறிக்கு ஆதரவாக மணிரத் தினம் வழியில் நியாயபப்டுத்தியுள்னர். இந்தப் போலி புரட்சிகரத்தை  புரிந்து கொள்ள சிவசேன முக்கிய புள்ளி பால்தாகட்கரே 31.4.95 “ரைம்ஸ்  ஒவ் இந்தியா” வுக்கு வழங்கிய பேட்டியைப் பார்ப்போம்:-

''மணிரத்தினத்தின் பம்பாய் மிகசிறந்த படம் . நான் படத்தைப்பார்த்தேன்.  சில மாற்றங்களை மட்டும் செய்யச் சொன் னேன், அவ்வளவுதான. பம்பாய் கலவரத்துக்காகாக நான் வருந்துவது போல் ஒரு காட்சி வருகிறது. அது உண்மை யல்ல. நான் எதற்காகவும் வருந்த வில்லை. கலவரத்தை சிலசேன ஆரம் பிக்கவில்லை நாங்கள் பதிலடிதான் கொடுத்தோம். ( மற்றப்படி ) இது மணி ரத்தினம் உருவாக்கியுள்ள அற்புதமான படம். படத்தை நான் வெகுவாக ரசித்தேன்.”

பால்தக்ரேயின் இக்கூற்று புரட்சிகர கம்யுனிஸ கட்சியின் போலிப் புரட்சியை யும் பொய்மையையும் அம்பலப்படுத்து கின்றது. இது மட்டுமல்ல அண்மையில் மணிரத்தினத்திற்கு தாக்கரே சிறப்பு விருது வழங்கி கௌரவித்துள்ளார்.  மணிரத்தினம் இந்து வெறித்தனத்தை மறைக்க தக்ரே வருந்துவது போல் காட்ட அதை நிராகரித்து தக்கரே  அதை நியாயப்படுத்தியுள்ளார். ஆனால் மணிரத்தினம் என்ற பாhப்பனன்  அதைப் ப+சிமெழுகி  சாதாரண மக்க ளுக்கு இந்து வெறிய+ட்டி

சாதாரண முஸ்லீம் மக்கள் மீது மதவெறிய+ட்டியதே பம்பாய்  என்ற திரைப்படம்செய்த புரட்சிகர காரியம். நரசிம்ராவ் அதன் கும்பலும் இத்திரைப் படத்தையிட்டு ஒருபோதும் ஒப்பாரி வைத்ததில்லை.   மாறாக இப்படத்தை பாராட்டி  இப்படத் தை திரையிட எல்லா முயற்சிகளிலும் ஈடுபட்டன.

அவர்களின் பாசிச இந்து வெறித்தனத் தை அழகாக மூடிமறைத்து பம்பாய் சினிமா நியாயப்படுத்தியதுக்கு காங்கி ரஸ்கும்பல்  மணிரத்தினம் என்ற பார்ப்பனனுக்கு கடமைப்பாட்டைச் செலுத்தியது.

இந்து தீவிரவாதிகள் படம் திரையிடத் தடையாக இருந்தார்கள் என்பது அப்பட்டமான பொய். அதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. திரைபடம் ஓடிய போது அவர்கள்தான் முன்வரிசையில் இருந்து விசிலடித்தபடி  பெண்ணின் மார்பை மணிரத்தினம்  காமரா மூலம் திரையில் கொண்டு வந்தபோது ஆணாதிக்க வர்க்கத்துடன் இந்து மதவெறிபாசிசத்தை உள்வாங்கினர்.

இப்படத்தைத் தடை செய்யக்கோரி  அப்பாவி முஸ்லீம் மக்களும்  புரட்சிகரமக்கள் பிரிவு ஆர்ப்பாட்டம் செய்தனர்.  இதை சில முஸ்லீம் தீவிரவாத பிரிவுகளும் பயன்படுத்தின. அவர்கள் தமது எதிர்ப்பபைத் தனிநபர் பயங்கரவாத  வழிகளில் வெளிப்படுத் தினர்.  இது அரசியல் விமர்சனத்திற் குட்பட்டதேயொழிய  பார்ப்பனியபாசிச மதவெறியை  புரட்சியின் பெயரால் மகுடம் சூடுவதல்ல.

பம்பாயில் நடந்த உண்மைச் சம்பவத்தைத் திரித்த மணிரத்தினத்தின் பார்ப்பன சார்பைக் கண்டு  இயல்பாகச் சினந்தெழுவது யதார்த்தமானது. ஆனால் புரட்சியின் பெயரால் தொழிலாளர் பாதை  சம்பவத்தைத் திரித்து முஸ்லீம் பெண் இந்து ஆணுடன்  சென்றாள் என்ற மையக் கருத்துத்தான்  முஸ்லீம் மக்களின்  எதிர்ப்புக்கு கார ணம் என  காதில் ப+ வைக்கின்றனர்.        பம்பாய் கலவரத்துக்கு முன் பாபர்மசூதி உடைத்து நொருக்கப்பட, இந்து பார் பானிய சதியும்: பம்பாயில் இந்து - பார் பானியம் தொடங்கி வைத்த முஸ்லீம் எதிர்ப்பு கரவரத்தையும் மூடிமறைத்து, இந்து வெறி ஊட்டியதே பம்பாயின் கருவாகும். முஸ்லீம் பெண்ணுக்குப் பதில் இந்துப் பெண்ணாக இருந்திருப் பின்  தக்கரே கூட அனுமதித்திருக்க மாட்டார். ஆனால் வரிக்கு வரி  முதலாளித்துவம் பேசும்  தொழிலாளர் பாதை   பார்ப்பன பாசிச இந்து வெறி யை நியாயப்படுத்த  கலைஞன் என்ற முகமூடி தேவைப்படுகிறது. அதைப் புரட்சிகர கம்ய+னிஸக் கட்சி எப்படி கூறுகிறது என்று பார்ப்போம்.

''ஒரு கலைப்படைப்பின் கலைத்திறன்  அல்லது குறைநிறை என்னவாக இருப்பினும்  ஒரு கலைஞனைத் தாம் விரும்பிய விதத்தில் சுதந்திரமான முறையில் தமது படைப்பினை வெளிக் கொணரும் சக்தியும்  உரிமையையும் பற்றிய பிரச்சனை. அதைக் காட்டிலும் பெரிதும் முக்கியமானதாகும்.”  எனத் தமது அரசியல் வழியைத் தெளிவாக்கி யுள்ளனர். இதில் என்ன கலைஞனுக்கு மட்டும் விதிவிலக்கு?  முதலாளிக்கும் தானே. இது தெரியவில்லையா புரட்சிக் கம்ய+னிஸக் கட்டசியே!?

கலைஞன் வானத்திலிருந்து வந்தவனா?  இப்படி எல்லாப் பிரிவு மக்களுக்கும் இந்த வகையில் தமது துறையில் சுதந்திரம்  இருக்கவேண்டும் அல்லவா?  ஒரு முதலாளிக்கு தான்  முதலாளியாக இருக்கும் உரிமையுண்டு அல்லவா?  தொழிலாளர் பாதைக்குப் புரிகிறதா?  நீங்கள் எதை நியாயப்படுத்துகின்றீர்கள் என்பதை?

கலைஞனின் கருத்துச்சுதந்திரம் என்பது என்ன?  அதன் பொருள்முதல் பார்வை என்ன?   திறந்த மார்பைவெளிக்காட்டும் ஒரு பெண்ணின்  கலைத்திறன்  திறந்த மேனியில் வெளிக்காட்டும் கலைத்திறன்,  சிறந்த மசாலாதிரைப்படக் கலைத்திறன், முதலாளித்துவ , நிலப்பிரபுத்துவ  வாழ் வை நியாயப்படுத்தும் கலைத்திறன்,  கிட்லரின் பாசிசத்தை நியாயப்படுத்தும் கலைத்திறன் என அனைத்துக்கும்  கருத்து சுதந்திரம் கோரும்  புரட்சிகர கம்ய+னிஸக் கட்சியின்  புரட்சிகர ஏமாற்றை நாம் இனம் கண்டு கொள்ள வேண்டும். இவர்கள் தொழிலாளர்கள் என்பது வெறும் வெற்று வார்த்தையே. உண்மையிலே இவர்களின் கனவுகள் முதலாளித்துவ கனவுகளே!

கலை முதல் எல்லா செயல்பாடுகளும் உழைக்கும் மக்களைச் சார்ந்து இருக்க வேண்டும்.  இல்லாமல் உழைக்காத பிரிவை நியாயப்படுத்தும் அனைத்து கலைக்கும்  சுதந்திரம் என்பது ஏகாதிபத்தியத்தின் போலி ஜனநாயகத் தை மறைமுகமாக தொழிலாளர் என்ற பெயரால் நியாயப்படுத்துவதேயாகும். தொழிலாளர் பாதையின்  அரசியல் எது என்பதை , அவர்களின் மேற்கோள்கள் மிகத் தெளிவாக அம்பலப்படுத்துகிறது. இதை நாம் சரியாக இனம் கண்டு கொள்வதன் மூலம் அவர்களின் போலி புரட்சிகர  தன்மைகளை இனம் கண்டு வேறறுக்க முன் வர வேண்டும்.