சரிநிகர் 123 இல் " கோணேஸ்வரிகள் '' என்று தலைப்பிட்டு கலா ஒருகவிதை எழுதியிருந்தார். இக்கவிதையைத் தொட்டு பல விமர்சனங்களை சரிநிகர் எதிர் கொண்டு சிலவற்றை வெளியிட்டு இருந்தனர்ஆணாதிக்கம்  இனவாதத்து டன் இணையும் போது ஒரு தமிழ் பெண் சந்திக்கும்  இனவாத ஆதிக்கத் தை மிக அருமையாக துல்லியமாக படம் பிடித்து  கலா காட்டிருந்தார். இதன் மூலம்  சமுகத்தின் இயலாமைக் கு  சவால்விட்டுள்ளனர். அதை நேரம்  இனவாதம் சிங்களப் பெண் மீதான இராணுவ வன்முறையை ஒத்தி வைத் துள்ளதை அழகாக சுட்டிக் காட்டுவதன் மூலம்  இலங்கை அரசியலை சரியாக  மிக நேர்த்தியாக சுட்டிக் காட்டுகின்றது இக்கவிதை.

 

 

ஆனால் பெண் அமைப்பாளர்கள், ஜனநாயகவாதிகள், பெண்கள் பத்திரி கையாளர்கள் எனக் கொஞ்சப் பேர் இதை  எதிர்த்து அழுதுவடிந்துள்ளனர்.

தம்மீது கட்டமைக்கப்பட்ட ஆணாதிக்க நிலையில் நின்றும்  இனவாதக் கட்ட மைப்பில் மீதும் நின்றும் நடத்தும் வன் முறையை ஒரு பெண்ணின் மீதான  கொடுமையை சரியாக சுட்டும் போது எதிர்த்துப் புலம்பியுள்ளனர்.

காலம்காலமாக நடக்கும் இனவாத சாவு அதிரவைப்பதில்லை. உணர்வுகள் மரத்துப் போகின்றன. சமாதானத் திற்காகப் போராடமுடியாத  அரசியல் குரோதத்தில் முடங்கிப் போகும் போது  நீங்கள் நிர்வாசனமாக ( உடல் . இனவாத அடிப்படை எப்படியாயினும் ) இருப்பதுதான் உங்கள் நிலை புத்தரின் பேரால்  சமாதானம் பேசுகின்றனர். ( இங்கு புத்தரை அல்ல) யுத்தவாதிகள்  அவர்களின் ஆணாதிக்க வக்கிரத்தை தீர்க்க யோனியை அரசியல் அற்ற நிதர்சனமானதென்றாலும்,  சமுகமும் ஆஒhதிக்கத்தில் யோனியைத் திறந்து தான்  வைத்திருக்கும் யதார்த்தில்.

பிறக்கும் குழந்தையை வக்கிர அடை யாளத்தை அதன் எழுச்சியையும் சிதைக்க யோனியின் உள்வைத்த கைக்குண்டு,  பெண்ணின் உறுப்பு மீது இந்தச் சமாதானவாதிகளின் கருனை நாளை சிங்களப் பெண்கள் மீது பாயத் தயாராக உள்ளனர். இதுதான் கவிதை யின்  அடிப்படை.  வளருட்டும்  கலா வின் கவிதைகள் மலரட்டும் பலவாக. ஆணாதிக்க அதிகார இனவாதிகள் மட்டும்தான் இதற்கு எதிராக ஊழையி டுவார்கள். பண்பாடு என்பர். பெண்மை என்பார்கள். ஆபாசம் என்பார்கள். ஏன்nனில் ஆணாதிக்க ஒழுக்கம்  இவையல்லவா?  இதை எதிர்த்துப் போராட அழைப்புவிடுகிறார் கவிதை மூலம் இதை சமாதானத்துக்காகவா செய்தீர்கள்? எனக் கேட்க இது இனவாதக் காய்ச்சலை  உண்டாக்கிறது. அருவருப்பு உணர்;ச்சியை தருகிறது என்கிறார் பெண்ணிலைவாதி செல்வி திருச்சந்திரன்.  நாகரீகம் தாண்டிய கவிதயாம். ஆணாதிக்க, இந்த உலகச் சார்ந்த நாகரீகத்தை கோரும் செல்வி திருச்சந்திரன்.

யோனி,  நிர்வாணம்  என எழுதுவது அவமானம் என்கின்றனர். உயிரியல் படிக்கும் ஆண் பெண்  மருத்துவம்படிக்கும் ஆண், பெண்  இதை யதார்த்த மாய் கேட்கின் றனர். சொல்லுகின்றனர். அருவருப்பாக அல்ல. ஆனால் ஆணாதிக்க சமுகம் பெண்ணைப் பொத்தியதைப் போல் இதைப் பொத்தி மூடி மறைத்து அநாகரீகம்  எனக் கூறுவதன் மூலம,; அந்தப் பெண்ணை  யோனியையில்  பாலியல் வல்லுறவுக் குட்படுத்துவதை மூடி மறைத்து நியாயப்படுத்துகின்றது. இதையுத்தம் மீது  செய்வதை மறைத்து, யுத்தத்தை சமாதானத்தின் பேரில் பாதுகாக்க முனைகின்றனர்.

நேற்றைய அவளுடைய சாவு - எனக்கு

வேதனையைத் தரவில்லை.

மரத்துப் போய்விட்ட உணர்வுகளுக்குள்

அதிர்ந்து போதல் எப்படி நிகளும்.

 

அன்பான என் தமிழச்சிகளே,

இத்தீவின் சமாதானத்திற்காய்

நீங்கள் என்ன செய்தீர்கள்!?

ஆகவே: வாருங்கள்

உடைகளைக் களற்றி

உங்களை நிர்வாணப்படுத்திக் கொள்ளுங்கள்

என் அம்மாவே உன்னையும் தான்.

 

சமாதானத்திற்காய் போரிடும்

புத்தரின் வழிவந்தவர்களுக்காய்

உங்கள் யோனிகளைத் திறவுங்கள்.

 

பாவம்,

அவர்களின் வக்கிரங்களை

எங்கு கொட்டுதல் இயலும்.

 

வீரர்களே! வாருங்கள்

உங்கள் வக்கிரங்களை தீர்த்துக் கொள்ளுங்கள்.

என் பின்னால்

என் பள்ளித் தங்கையும் உள்ளாள்.

தீர்ந்தா எல்லாம்

அவளோடு நின்றுவிடாதீர்!

எங்கள் யோனிகளின் ஊடே

நாளைய சந்ததி தளிர்விடக்கூடும்.

ஆகவே:

வெடிவைத்தே சிதறடியுங்கள்

ஒவ்வொரு துண்டுகளையும் கூட்டி அள்ளி

புதையுங்கள்

இனிமேல் எம்மினம் தளிர்விடமுடியாதபடி.

 

சிங்கள சகோதரிகளே!

உங்கள் யோனிகளுக்கு

இப்போது வேலையில்லை.

 

-கலா-

17.05.1997 அன்று பத்து பொலிசாரால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு, பெண்குறியில் கிரனைட் வைத்து கொல்லப்பட்ட மட்டக்களப்பு 11ம் கொலனி யைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாய்.

 

நன்றி:- சரிநிகர்.