சுவடுகள் 78 இல் யமுனா ரா ஜேந்திரன் என்ற சுரண்டும் வர்க்க எழுத்தாளன் படைப்பாளி பற்றிய குறிப்பில் 'எல்லா அமைப்புக்களுக்கும், மாற்றுக்கருத்தை ஒடுக்கும் எல்லா அரசியல் அமைப்புக்களுக்கும் பொருந்துபவை. சர்வாதிகாரம், ஐனநாயகம், கம்யூனிசம் என நிலவிய எல்லா அமைப்புக்கும் பொருத்திப் பார்க்கிறார் ரோமன் போலன்ஷ்க்கி (போலந்து நாட்டைச் சேர்ந்தவர். தற்போது பாரிசில் வாழ்கிறார்) இடது சாரிகளின் மனித உரிமை ஒரு அரசியல் தந்திரோபாயமாகவே இருப்பதை விமர்சிக்கிறார் டோப்மேன். என யமுனா முதலாளித்துவ சுரண்டலுக்காக இழுத்து எடுத்து முன்வைத்து பிதற்றி உள்ளார்.

வன்முறை எப்படி மனிதன் முன் தோன்றியது என்ற கேள்விக்கு பதிலளிக்க முடியாது சூனியவாத விளையாட்டுத்தன சிதைவுகளில் எழுந்து, மேற்பரப்பில் திளைத்தபடி மறுத்து வித்தியாசப்படுத்துவதாகக் காட்டி, இந்த ஏகாதிபத்திய பின்நவீனத்துவ கோட்பாட்டில் தொங்கியபடி, இப்படி ஏகாதிபத்தியத்துக்கு சேவை செய்ய நாக்கில் நீர் ஒழுக ஒடுக்கப்பட்ட வர்க்கத்தை கூவி அழைக்கின்றார்.

கம்யூனிசம் வன்முறையை என்றும் மறுத்ததில்லை. மக்களின் உழைப்பை உறிஞ்சி வாழும் ஒட்டுண்ணி சுரண்டல் வர்க்கத்தை ஒழித்துக் கட்ட வேண்டின், வன்முறைப் போராட்டம் ஊடாக பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிறுவிட அதனூடாக சுரண்டுவோரையும், அதன் கோட்பாட்டுத் தளங்கள் மீதும் வன்முறையை கையாள்வது என்பது, பாட்டாளி வர்க்கம் மீது திணிக்கப்பட்டு தவிர்க்க முடியாததாக்கியுள்ளது இந்த சமூகம்.

சுரண்டுபவனின் மாற்றுக்கருத்துரிமை, சுரண்டும் உரிமையைப் பாதுகாக்க யமுனா என்ற சுரண்டும் வர்க்க கோட்பாட்டுச் செம்மலுக்கு தேவைப்படுவது மனித உரிமை மீறல் பற்றிய புலம்பல்.

சுரண்டுவது மனித உரிமை மீறல் அல்ல, அது ஒரு மனிதனின் அடிப்படை உரிமை என்ற பிரகடனம் தான், கம்யூனிசம் மீதான காழ்ப்புணர்ச்சி கொண்ட தாக்குதல்.

இடது சாரிகள் சுரண்டும் வன்முறையைத் தான் எதிர்க்கிறார்கள். அதைத்தான் மனித உரிமை மீறலாக பிரகடனம் செய்கின்றார்கள்.

இதன் அடிப்படையில் சுரண்டுவோரை ஒடுக்குவதை ஆதரிக்கின்றார்கள். இதை மனித உரிமை மீறலாக ஏற்றுக்கொள்வதுமில்லை.

இதையிட்டு அழும் யமுனாவின் நோக்கம் சுரண்டும் வர்க்கத்தை பாதுகாத்து அதில் பிழைப்பது தான்.

இதன் தொடர்ச்சியில் சுரண்டும் வர்க்கம் சுரண்டல் நலனை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கிய சாதீயம், ஆணாதிக்கம், -- என அனைத்தையும், சுரண்டும் வர்க்கத்தின் மனித உரிமையைப் பாதுகாப்பதன் மூலம், யமுனா மறைமுகமாக பாதுகாத்து தக்க வைக்கும் முயற்சி தான் மனித உரிமை மீறல் என்ற புலம்பல்.

சந்திரிகா இனவாதத்துக்கு எதிராக விழித்துக் கொண்டுள்ளாராம்: