பாரிசில் இருந்து வெளியாகிய 'எக்ஸில்' இதழ் ஒன்றில் எஸ்.வி. ரஃபேல் என்பவர் "விளக்கமளிப்புக் கோட்பாட்டு அணுகுமுறைகளை.....?" என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். இவரே பாரிசில் வெளியாகிய "இருள்வெளி" மலரில் "பெண்ணியத்தை அணுகுதல் குறித்து" என்ற கட்டுரையையும் எழுதியிருந்தார்.

 

 

இவரின் கட்டுரைகள் மனித அவலங்களை மனம், உளவியல், பயம், திணிப்பு........போன்றவற்றுக்குள் இட்டுச் சென்று, பின் அம்மக்களின் பிரச்சனைக்கு எந்தவிதமான தீர்வையும் முன்வைக்காது மார்க்சியம் மீது சேறுயடிக்கின்றார். மக்களின் வறுமை, ஆணாதிக்கம், சாதிஒடுக்குமுறை, நிறஒடுக்குமுறை.....போன்றனவற்றை எதிர்த்த போராட்டத்தை உளவியல், மனம், பயம்.. போன்றனவாக காட்டி, அவர்களின் அடிப்படை உரிமையை, தேவையை சிறுமைப்படுத்தி கொச்சைப்படுத்துவது தான் இந்த மார்க்சிய எதிர்ப்புக் கட்டுரையின் நோக்கம்.

இவர்க்கோ, இவரின் நண்பர்களுக்கோ இருக்கக்கூடிய நிதிப்பிரச்சனை, விசாப் பிரச்சனை போன்ற எல்லாப் பிரச்சனையும், உளவியல், மனம், பயத்தால் நடைமுறையில் எழுபவையல்ல. இன்று ஐரோப்பாவில் சரி, உலகில் சரி மனிதர்களின் அடிப்படை உரிமைகளை, தேவைகளைக் கோர்p போராடியது  பாட்டாளிவர்க்கம்தான் என்பதும், தொடர்ந்து போராடும் ஒரேயொரு கோட்பாடு மார்க்சியம்தான் என்பதும் வெள்ளிடைமலை. இதற்க்கு வெளியில் உளவியல், மனம், பயம் போன்றவையல்ல.

இவர்உட்பட மொழிபெயர்த்து அம்மாவில் வெளியாகிய "ஒடிபஸ் ஸ்ராலின்" என்ற கதை சமூக மற்றும் ஸ்ராலின் பிரச்சனையை உளவியலாக காட்டி மக்களின் துன்பங்களுக்கு போராடும் மார்க்சிய வர்க்கப் பார்வையை படைப்பு கிண்டல் அடிக்கின்றது. சோவியத் போராட்டம் வர்க்கப் பிரச்சனை என்பதை கதை சேறுயடித்துமறுக்கின்றது.

சமூகநிகழ்வுகள், போராட்டங்கள், பிரச்சனைகள் அனைத்தும் மனிததேவைக்கு உட்பட்டவகையில் பகிரப்படாமையாலேயே எழுகின்றன. இதைமறுப்பதன் மூலம் மனித தேவைகளை மறுத்து உளவியல், பயம, திணிப்பு போன்றவற்றின் பிரதிபலிப்பாக காட்டுவதன் மூலம் சிலரின்தேவைகள் அமோகமாக பூர்த்தி செய்வதை பாதுகாக்க கோட்பாட்டு சிதைவை நனவாக கொடுத்து பிரச்சனையை திசைதிருப்பி, மனிதர்களின் தேவையான ஐனநாயகக் போரிக்கையை சேறுயடித்து மறுக்கின்றனர்.

அண்மையில் பிரான்சில் விசா மறுக்கப்பட்டு நாடுகடத்தலுக்கு உள்ளான மக்களின் பிரச்சனைக்காக போராடிவரும் அனைத்து அமைப்புகளும் இடதுசாரி பாரம்பரியத்தைக் கொண்டவைஎன்பதும், இது வரலாறு முழுக்க மீளமீள நிறுவப்படுவதும் காணமுடியும். இல்லாது இப்பிரச்சனை பயம், உளவியலால் எழுந்தவையல்ல என்பதும், இதற்காக உளவியல் என்போர் போராடியதும் கிடையாது என்பது வரலாறாக நீண்டு உள்ளது.

nஐகவா என்ற சமயம் (மற்றைய சமயங்களில் இருந்து வேறுபட்டு) மனிதப் பிரச்சனைகளை திசைதிருப்பி பேசி, நடைமுறையில் வழிகாட்டாத ஆண்டவனிடம் முறையிடும் வடிவம் போல் உள்ளது உளவியல் போன்ற திசைதிருப்பல். மார்க்சியத்துக்கு வெளியில் பேசிக் கொள்ளும் எந்தக் கோட்பாடும் மக்களின் பிரச்சனையை தீர்க்கும் எனச் சொல்ல எந்த கோட்பாட்டு கொம்பனாலும் நிறுவமுடியாது.

இந்தவகையில் எக்ஸில் வெளியாகிய எஸ்.வி.ரஃபேல் கட்டுரையைப் பார்ப்போம். "ஆளுமையை நிர்ணயிப்பதாக உளவியலால் சொல்லப்பட்ட, பாதுகாப்புணர்வையும் அதனால் இருத்தலையும் தருவதான சமயமும், மார்க்ஸியமும் கூட உண்மையில் ஒருவரைப்பயமுறுத்துதலில் வழியாக பாதுகாப்புணர்வின் தேவைக்குத் தள்ளிவிட்டு பின்னர் அதைத் தருகின்றது." என்கின்றார் சேறுயடிப்புடே. இதைப் பார்ப்போம்.

மனிதப் பிரச்சனையை உளவியலாக, பயமுறுத்தலாக காட்டுகின்றார். இருத்தலை பாதுகாப்புணர்வுடன் ஒட்டிய உளவியல் என்பதன் மூலம், உலகம் நன்றாக உள்ளது என்கின்றார். மார்க்சியம், சமயம் (இங்கு இவர் மர்ர்க்சியம், சமயத்தையும் எல்லா நேரமும் ஒன்றாக காட்டி தனது மார்க்சிய எதிர்ப்பு வக்கிரத்தை சமயத்துடன் ஒப்பிட்டு  முதலாளித்தவ அமைப்பை தூக்கி நிறுத்துகின்றார்.) ஒருவரை பயமுறுத்தித்தான் பாதுகாப்புணர்வையும், தேவையையும் தருகின்றன என்கினறார். மனிதனுக்கு பிரச்சனைகள் இல்லை சும்மா மார்க்சியம் பயமுறுத்தித்தான் பாதுகாப்பு உணர்வை தருகின்றன என்கின்றார். எவ்வளவு மோசமான மார்க்சிய எதிர்ப்பு ஆய்வுரைகள்.

மனிதனின் வறுமை, பெண் மீதான ஆணாதிக்கம், பார்ப்பாணிய சாதி ஒடுக்குமுறை, கறுப்பின மக்கள் மீதான வெள்ளையின ஆதிக்கம், ஆதிக்க இனவாதிகளின் இன மத ஓடுக்குமுறை, ஏகாதிபத்திய சூறையாடல் என நீளும் சமுதாய ஒடுக்குமுறைகள் எல்லாம் உளவியலாக, மனமாக காட்டி பின் மார்க்சிய பயமுறுத்தலால் பாதுகாப்பை  தேடக் கோருகின்றது எனக் கதையளக்கின்றார். அதாவது இருக்கும் சமூக அமைப்பை பாதுகாக்கும் இக்கோட்பாட்டுக்கு (உளவியல் பிரச்சனையாகவும் அதைப் பயமுறுத்தி மார்க்சியம் தீர்ப்பதாகவும்) வெளியில் போராடுவதை பயமுறுத்தலாக காட்டுகின்றார். இதையே ஏகாதிபத்தியம் பயங்கரவாதமாக காட்டுகின்றது.

இங்கு மதம் என்பது இருக்கும் சமூக அமைப்பை மாற்றக் கோருவதில்லை. மக்களின் பிரச்சனையை வழிபடுவதன் மூலம் தீர்க்க முடியும் என்பது, கருத்து முதல் வாதத்துக்குள் வழிநடத்தி இச்சமூக அமைப்பை பாதுகாக்கின்றது. இது மனித அவலங்களின் வெடிப்பை, இருக்கும் சமூக அமைப்பைப் பாதுகாக்க கடவுளிடம் முறையிடவும், கடவுள் பற்றிய பயத்தையும் விதைத்துச் செல்கின்றன.

மார்க்சியம் மக்களின் துன்பம், துயரத்தை தொகுத்து மீளவைப்பதன் ஊடாக, அதன் மீதான   உண்மையான காரணத்தையும் அம்மக்களின் வாழ்வியல் பிரச்சனை மீது கட்டியமைக்கப்பட்டுள்ள பொய்கள் மீது இனம்காட்டுகின்றது. இங்கு மக்களை பயமுறுத்தியல்ல, மக்களின் பிரச்சனை மீது உண்மையைக் காண மீளக் கோருகின்றது மட்டுமின்றி அவர்களையே போராடக் கோருகின்றது. அவர்களின் பிரச்சனையை விஞ்ஞான பூர்வமாக மீள தொகுத்து அவர்கள் முன் மீள வைப்பதைத்தான மார்க்சியம் செய்கின்றது. இதை மறுக்க எல்லா வர்ண மோசடிகளையும் மார்க்சியம் அம்பலப்படுத்தி அவர்களுக்கு கற்றுக்கொடுக்கின்றது. இவைகளை பயமுறுத்தலாக காட்டும் மோசடி, சேறுயடிப்பு எல்லாம் உண்மையில் இந்த ஆளும் வர்க்கங்கள் நடைமுறையில் எதைச் செய்கின்றனரோ அதை கோட்பாட்டில் நியாயமாக விளக்குவதே இதன் பின் உள்ள நோக்கமாகும். மக்களுக்கு பிரச்சனைகள் உண்டா? இல்லையா? என்பதில் இல்லை என்பவர்கள்தான், மார்க்சியம் மக்களின் துன்பம் துயரத்தை சுட்டிக்காட்டி தீர்க்க போராடும் போது, அதை வெறும் உளவியலாக பின் இதன் மீதான பயமுறுத்திய போராட்டமாக வன்மைமிக்க சகிப்பின்மையில் இருந்து சேறுயடிக்கின்றனர்.

ஐரோப்பாவில் ஒருவன் விசாயின்றி இருப்பது உளவியலா? இதற்க்கு எதிரான அவன் மற்றும் சமூக போராட்டங்கள் மதம், மார்க்சியம் பயமுறுத்தி திணிப்பவையா? இல்லை, மதம் விசா பெற வழிபாட்டை முன்வைக்கின்றது. திணிப்பவன் எனக் கூறுபவன், பயமுறுத்தலாக காட்டுபவன், உளவியலாக அடையாளப் படுத்துபவன் அது தானக கிடைத்துவிடும் என மறைமுகமாக பூர்ஷ்சுவா கண்ணோட்டத்தில் வைக்கின்றான். மார்க்சியம் விசாவைக் கோரி நாசித்தனத்துக்கு எதிராக போராடுவதன் மூலம் வாழும் உரிமையை பாதுகாக்க போருகின்றது. இதுமட்டும்தான் தீர்வையும் உண்மையையும் பறைசாற்றுகின்றது.

நாசிசத்துக்கு எதிரான போராட்டமும், நாசிசத்துக்கு எதிரான வாழும் உரிமை மீதான பயமும் மார்க்சியத்தின் பயமுறுத்திய கண்டுபிடிப்பல்ல. மாறாக நாசிசம் கடந்த காலத்தில் ஆறு கோடி மக்களை கொன்று போட்ட அனுபவங்கள், சமூக விஞ்ஞான ஆய்வுகளில் இருந்து மார்க்சியம் எச்சரித்து, போராடக் கோருகின்றது. இதற்க்கு எதிராக போராட்டத்தை மார்க்சிய வாதிகள் மட்டும்தான் முன்னெடுத்துச் செல்வதுடன் இதற்க்கு வெளியில் எந்தக் கோட்பாட்டு நடைமுறையையும் காட்ட யாராலும் முடியாது.

பிரான்சில் அண்மைக்காலமாக வெளிநாட்டவருக்கு எதிரான நாசிச சட்டங்களை எதிர்த்து, நடக்கும் போராட்டங்கள் உளவியலோ, பயமுறுத்தலோ, திணிப்புகளோ அல்ல. மாறாக ஒன்றரை லட்சம் விசா மறுக்கப்பட்டு நாடு கடத்தலுக்கு உட்பட (இதற்க்காக போராடிய அமைப்புகள் அனைத்தும் மார்க்சிய தொடர்ச்சி கொண்டவை குறிப்பிடக் கூடியது.) இருந்த நிலையில் எழுந்த இப்போராட்டம் அரைவாசி பேருக்கு அரசை விசா வழங்க வைத்துள்ளது. இதை உளவியலாக பார்த்து இப்பிரச்சனை மீதான போராட்டத்தை பயமுறுத்தலாக, திணிப்பாக அடையாளப் படுத்தின், மறைமுகமாக நாடு கடத்தவும், சிறையில் அடைக்கவும் கோருவதாகும். மார்க்சியம் இவைகளை எதிர்த்துப் போராடி வெற்றி பெறக் கோருகின்றது. இது மட்டும்தான் நியாயமான உண்மையாக உள்ளது.

அடுத்து இவர் எடுத்து வைக்கும் மார்க்சிய எதிர்ப்பு வரிகளைப் பார்ப்போம். "மனிதனுக்கு பொதுவாய் ஒரு பயம் இருக்கிறது மரணபயம். மேற்சொன்னவர்களின் (மேற்சொன்னவர்கள் -  மார்க்சியவாதிகள்) ஆயுதம்  அதைத் தூண்டிவிடுவதுதான். மரணபயம் உச்சத்துக்குப் போனால் தானாய் சரணடைய வைக்கலாம் என்பது தந்திரம்." எனக் கூறுவதன் மூலம் மார்க்சிய ஏமாற்று பேர்வழிகள், தந்திரக்கார மோசடியில் இயல்பான மக்கள் பயத்தை சரணடைய வைத்து பிழைப்பவர்கள் எனப் பலபலவாக மறைமுகமாக கூறிவைக்கின்றார். மக்களின் பயம்காரணமாக உருவாக்கும் பிரச்சனைகளை  ஏமாற்று பேர்வழிகளின் தமது நலனுக்கு மார்க்சியவாதிகள் சரணடைய வைத்துவிடுகின்றனர் என்கின்றார். மக்களின் பிரச்சனைகளை இதைவிட மோசமாக கொச்சைப்படுத்த முடியாது. மக்களின் பிரச்சனை அவர்களின் பயத்தினால் எழுபவையா?, மக்களின் போராட்டங்கள் பயத்தினால் எழுபவையா? போராட்டங்கள் திணிக்கப்பட்டு தூண்டிவிடப்படுபவையா? இப்படித்தான் ஏகாதிபத்திய ஆய்வுகள், அதன்மீதான ஒடுக்கு முறை இயந்திரங்கள் மக்களின் உரிமைப் போர் மீது சேறுயடித்து ஒடுக்கின்றன.

மார்க்சியம் உருவாக முன்பே பலப்பல போராட்டங்களைக் கண்டுதான் மனித இனம் இன்று இந்த நிலைக்கு நகர்ந்துள்ளது. மனிதன் மிருங்களுடான போராட்டத்தில் தான் உயிர்வாழ முடிந்தது. இங்கு வாழ்வு மீதான பயமோ, சரணடைவோ அல்ல வாழ்வதற்கான போராட்டம் மட்டும்தான் போராட்டத்தை நடத்தின நடத்திச் செல்கின்றன. இது எல்லாப் போராட்டத்திலும் எல்லா உயிரினத்துக்கும் விதிவிலக்கின்றி பொருந்தும். வாழ்வதற்க்கான போராட்டமின்றி மனித உயிர்வாழ்தல் கிடையாது. பயம், திணிப்பு, சரணடைவு என்பதெல்லாம் மக்களின் போராட்ட மீதான, அவர்களின் வாழும் உரிமை மீதான சிறுபான்மை சுரண்டும் வர்க்கங்களின் சேறுயடிப்பாகும். அத்துடன் பயம் என்பது  பொருளாதார சூறையாடல் உடன் மனிதனுக்கு புகுத்தப்பட்ட அடக்குமுறைக் கருவியாக உருவானதே. உயிரினங்கள் போராட்டத்தையே மார்க்கமாக கொண்ட போது பயத்தைக் கொண்டிருப்பதில்லை. போராட்டத்ததில் மரணத்தை, இழப்புகளை இயல்பானதாக ஏற்றுக்கொண்டன, கொள்கின்றன. சொத்தைப் பாதுகாக்கும் வர்க்கம்தான் பயத்தால் கெலிபிடித்துப் போய் புலம்புகின்றது. உலகம்பற்றி அதன் கொடூரங்களை கேட்டாலே கிலிபிடித்த தொடை நடுங்கியாக, சொல்வதை தடுக்க பயம் காட்டுவதாக சரணடைய வைப்பதாக அழுகின்றது. போராட்டத்தைக் கண்டு சினந்து புலம்புகின்றது.

டார்வின் மனித இனங்களின் போராட்டம் குறித்த ஆய்வில் அதிர்ச்சியான விடையம் ஒன்றை அவர் சந்தித்த மக்கள் கூட்டம் ஒன்றிடம் கேட்டதை இங்கு குறிப்பிடுவது சிறப்பாக பொருந்தும்."நாய்க்கு மனிதனைத் தீனியாக்குகிறீர்களே" எனக் கேட்க்க அவர்கள் "நாய்கள் வேட்டைக்குப் பயன் படும் கிழவிகள் பயன்பட மாட்டார்கள்" என்றார்கள். மனித உயிர்வாழ்வுப் போராட்டத்தில் கிழவிகளை விட நாய்கள் முதன்மையானதைக் காண்கின்றோம். கார்ல் மார்க்ஸ்சிடம் "மகிழ்ச்சி என்றால் என்ன?" என்ற கேள்விக்கு போராட்டம் என்றுதான் பதில் அளித்தார். பயம் என்றோ, சரணாகதியென்றோ பதில் அளிக்கவில்லை. மார்க்ஸ் தொழிலாளர் வர்க்கத்தை போராட்ட தலைமையாக பிரகடனம் செய்யும் போது பயமற்ற தொழிலாளியை அடையாளம் கண்டுதான் பிரகடனம் செய்தார்.

எறும்புகள், தேனீக்ர்கள், கறையான்கள்..........என அனைத்து உயிரினங்களும் வாழ்வின் மீதான பயத்தாலோ, சரணடைவாலோ அல்ல போராட்டத்தால் போராடியே வாழ்கையை நடத்துவதுடன், வாழ்வையும் சாவையும் ஏற்றுக்கொள்கின்றன. இந்த இடத்தில் புலிகள் என்னை கொல்ல கடத்திச் சென்ற போது கேட்டதை இங்கு குறிப்பிடுவது சாலப் பொருந்தும். புலிகள் என்னை கண்ணைக் கட்டி அழைத்துச் சென்று முழு நிர்வாணமாக்கிய பின் கேட்ட முதல் கேள்வி தற்கொலைபற்றி நீ என்ன நினைக்கின்றாய் என்பதன் ஊடாக போராட்ட உணர்வை பரிசோதித்தனர்.

பயம் என்பது பொருளாதார சூறையாடல் மீதான சுரண்டல் அமைப்பின் உருவாக்கத்தின் ஊடாக, மனிதனை அடிமைப்படுத்த திணிக்கப்பட்டவையே. இந்த மனித அடக்குமுறைக்கு எதிராக கோடான கோடி தியாகங்கள் போராட்டங்கள் பயத்தால் அல்ல, மனிதன் வாழ்வதற்கான போராட்டத்தினால் வெளிப்பட்டவையே. இதை பொருளாதார சலுகைக்குள்ளும், அடக்குமுறைக்குள்ளும், சொத்துப் பாதுகாப்புக்குள்ளும் பயத்தை விதைத்து போராட்டத்தை,வாழும் உரிமையை சீரழிக்க மேலும் சூறையாட முடிகின்றது. மார்க்சியம் பயத்தை ஒழித்து போராட அறை கூவுகின்றது. பயம் மீதான எல்லா மனம் பிரமைகளையும் தகர்த்துப் போராட்டத்தை வாழ்க்கையாக, அதையே மகிழ்ச்சியாக மாற்றக் கோருகின்றது. மனிதர்களின் கோடானகோடி தியாகங்களை பயத்தின் விளைவால் ஏற்பட்ட சரணடைவு எனக் கூறுவது, மனிதர்களின் வாழ்கைக்கான போராட்டத்தை சிறுமைப் படுத்தி கொச்சைப்படுத்தும் ஆளும்வர்க்க சேறுயடிப்பாகும். நாளை உணவில்லை என்று எந்த உழைப்பாளியும் பயப்படுவதில்லை. மாறாக போராட்டத்தை, உழைப்பை பதிலீடாக முன்வைத்துப் போராடுகின்றான்.

தாழ்த்தப்பட்ட மக்கள் (பள்ளர், பறையர்...) தமக்கு எதிரான சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் பயத்தால் சரணடைந்தோ, திணிப்புக்கு உள்ளாகியோ போராடுவதாக கதையளப்பது பார்ப்பணிய சதிராட்டமாகும். மனிதனின் துன்பம், துயரம், பயம் காரணமாக திணிப்புகாரணமாக சரணடைவு காரணமாக முன்போ பின்போ உளவியல் மூலம் கட்டமைக்கப்பட்டதாக கூறி சேறுயடிப்பது, மனிதனின் வாழ்வு உரிமை மீதான பூஷ்சுவா மறுப்பாகவும், போராட்ட மறுப்பாகவும் வெளிவரும் ஆளும்வர்க்க ஆதிக்க  தனிநபர் ஐனநாயக கோட்பாடுயாகும்.

இன்று ஆயிரத்து இருநூறு மில்லியன் மக்கள் அடுத்த நேர உணவு என்ன எனத் தெரியாத வறுமையில் உள்ளனர். ஐந்நூறு மில்லியன் மக்கள் குடிக்க தண்ணீரின்றி தாகத்தால் தவிக்கின்றனர். இருநூற்றி ஐம்பது மில்லியன் சிறுவர் சிறுமிகள் மிக மோசமான உடல் உழைப்பில் மழலை மொழி இழந்து கருவாடாகின்றனர். இருநூற்றி ஐம்பது மில்லியன் மக்கள் உயர்சாதியால் தொட்டாலே தீட்டு என்று கூறி அவனை சுரண்டிக் கொழுக்கும் ஐனநாயக பார்ப்பாணிய கொடூரங்கள். இது போல் அரைவாசி பெண்கள் என நீளும்  இது போன்று புள்ளிவிபரங்களே மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கு குவிந்து போயுள்ளது. இதற்க்கு எதிரான போராட்டத்தை பயமுறுத்தல், மரணபயம், திணிப்பு, சரணடைவு என்று கூறும் ஆய்வுரைகள் கருத்துரைப்புகளின் நோக்கம் இதன் மீதான போராட்டத்தை மறுக்கவும், இந்த சமூக அமைப்பை பேனவும் உருவாகும் நனவான கனவாக, பயத்தில் புலம்புவதாக உள்ளது. இதற்க்கு எதிரான போராட்டம் மனிதனின் உயிர் வாழும் இயங்கியலுக்கு உட்பட்டதே. இதை மறுப்பது இருக்கும் ஒற்றை உலக அமைப்பை சிதைவின்றி பாதுகாக்க நடத்தும் ஏகாதிபத்திய ஒடுக்குமுறையின் பல்வேறு வடிவங்களில் இவைகளும் ஒன்று.

இப்படி விமர்சிப்பதை எப்படி திசைதிருப்ப முனைகின்றனர் எனப் பார்ப்போம். "’பாத்தியளே இப்ப இராக் சண்டை உலகப்போராய் வந்திருக்கவேண்டியது, தப்பிப்போச்சு. அடுத்தது வந்தால் அநேகம் யூரோ (நுரசழ) ஏள அமெரிக்காதான். எங்கடையள் விசயம் தெரியாமல் லாச்சப்பலிலை (பாரிஸ் தமிழ் கடைகள் உள்ள இடம்) கடையளும் இந்தியாவிலை வீடுமெண்டு, போர் வந்தால் என்ன நடக்கும் தெரியுமோ. ஓரு சொத்தும் பெறுமதியில்லாமல் போய்விடும். பாங்கில் போட்ட காசெல்லாம் பாங்க்திவாலாகி அம்போதான். கண்ணுக்கு முன்னால பாத்தியள்தானே இந்தோனேசியா காசுமதிப்பு எப்படி விழுந்ததென்டு’ இதைக் கேட்டு அவருக்கு வேர்த்து விறுவிறுத்துப்போய்விட்டது. ஒரு சின்ன ’உரைக்கே’ இப்படிப் பயமாக்கலாம் என்றால், தொடர்ந்த தாக்குதல்களில் எப்படி என்பது வெள்ளிடை . அது நடந்தால் ஆள்சரண்" இப்படி மார்க்சியத்தை கேலி செய்தபடி யுத்தவாதிகளை, கொள்ளையடிப்போரரை, சுரண்டல் நாய்களை காப்பாற்ற புறப்பட்டுள்ளார். இந்த மேற்கோள் ஆய்வுரைகள் சரியா பிழையா என்பதற்க்கு அப்பால், உலகயுத்தங்கள் பணத்திவால்கள் சம்பளம்வழங்காமை வெளிநாட்டவரை நாசிகள் படுகொலை செய்தல் .......போன்றவை வரமுடியாது என்கிறார். இதை முன்கூட்டியே தெரிந்து கொள்பவர் அதை மற்றவர்க்கு சொல்வது பயமுறுத்தல் சரணடைவுக்கான மோசடி என்பதே மார்க்சிய விரோதிகளின் ஆய்வுரைகள்.

ஆணால் இந்த ஏகாதிபத்திய யாதார்த்தம் என்ன?  யுத்த தயாரிப்பும் அதற்காக கொட்டி செலவளிக்கும் மக்களின் பணமும் இவர்கள் கண்டு கொள்ள வேண்டியதில்லை என்கின்றனர். காப்புறுதி நிறுவனங்கள் சட்டதிட்டம் யுத்தக் காப்புறதியை மறுக்கின்றது. அவன் முன்கூட்டியே தயாராக உள்ளான். மார்க்சியம் மட்டும் அதை இனம் காட்டினால் பயமுறுத்தலாக இவர்கள் காட்டிவிடுகின்றனர். இது சனநாயக நாடாக காட்டி கூத்தடிக்கின்றனர். பணம் திவாலாகிய நாடுகள் இல்லை என்றயளவுக்கு உலகில் பல நாடுகள் நீண்டுகிடக்க, ஒருவங்கிகாரன் போல் அது நடவாது என்று கூறி மத்தியதரவர்க்க அற்ப சேமிப்புகளை சூறையாட நல்ல ஆலோசகராக இருக்கவும், அப்பணத்தையே ஏகாதிபத்தியம் மீள் வட்டிக்கு கொடுத்து நாட்டை மறுகாலணியாக்கவும் நல்ல செயல் வீரர்ராக உள்ளார். மக்களின் உழைப்பும்,  தின்னாமல் குடியாது சேமிக்கும் அற்ப்ப சொற்ப சேமிப்புகளும் வெறும் பேப்பர்ராக மாறிய வரலாற்றை மிக சதாரணமாக மார்க்சிய எதிர்ப்பால் கொச்சைப்படுத்திய போக்கும், இந்த ஆய்வுரைகளும் கபடம் நிறைந்தவை. அண்மையில் இந்தோனேசியா மக்களின் பணம் ஏகாதிபத்தியத்தால் சூறையாடப்பட்டு மக்களின் வாழும் உரிமை, அவர்களின் வேலையின்மை அதிகரிப்பு எல்லாம் மார்க்சியவாதிகளின் பயமுறுத்தும் கண்டுபிடிப்பாக காட்டிய சேறுயடிப்பு, அந்த மக்களின் வாழும் உரிமையிழந்து பரிதவிக்கும் வறுமை துன்பம் துயரங்கள் மீதான ஏகாதிபத்திய வசைகளின் தொடர்ச்சிதான்.

இதை சாதிக்க அடுத்து வைக்கும் வாதங்களை ஆராய்வோம் "கட்சி நடத்தாத, கட்சியால் நடத்தப்படும் மார்க்சியர்களும் அப்படியே. இது ஒன்றும் பேசக்கூடாத ரகசியமான விசயங்களுமல்ல. கேள்வி கேட்பது, வேறு கருத்தியல்களை, போக்குகளை, விளக்கமளிப்புமுறைகளை, பண்பாட்டுப்பார்வைகளை உதாரணம் காட்டிப்பேசுவது ஏகாதிபத்தியப்பார்வையாகவே பார்க்கப்படும் என்பதில் ஐயம் இல்லை. இதற்கு இருப்புக்குறித்த பிரச்சனையே அன்றி வேறேதும் காரணமல்ல." என மார்க்சியவாதிகளை, மார்க்சிய விமர்சகர்களை தாக்கும் போக்கில் இது இருப்புக் குறித்த பிரச்சனையாக சோடித்துக் காட்டுகின்றார். அதுசரி மார்க்சியத்தை கேள்வி கேட்கின்றார்களாம் எங்கே எனத் தெரியாத புரியாத புதிராக உள்ளது. சுரண்டலை, ஆணாதிக்கத்தை, சாதிய ஒடுக்குமுறையை.......போன்ற அனைத்தையும் ஒழிக்கக் கோராத அனைத்துக் கோட்பாடுகளும் ஏகாதிபத்திய கோட்பாடுகள்தான். இதை எந்தக் கொம்பனாலும் மறுக்க முடியுமா? சமூக ஒடுக்கு முறையில் ஏதாவது ஒன்றை பாதுகாத்த படியோ, சலுகைக்கு உட்பட்ட ஐனநாயக் கோரிக்கை கூட ஏகாதிபத்திய எல்லை பாதுகாக்கும் எல்லைக்கு உட்பட்டதுதான். ஆகவே சமூகத்தை மாற்றக் (தலைகீழாகக்) கோராத அனைத்துக் கோட்பாடுகளும், கேள்விக்கு உள்ளாக்கலும், விளக்கமளிப்புகளும், போக்குகளும், பண்பாட்டுப் பார்வையும் ஏகாதிபத்திய வரைவுகளைக் கொண்டதுதான். இதை யராலும் மறுக்க முடியுமா? ஒருக்காலும் முடியாது. இந்த சமூகத்தை மாற்றக் கோராதவை எப்போதும், எங்கும், எப்படி வைப்பினும் அது ஏகாதிபத்திய கோட்பாடுதான். அது கேள்வி கேட்டால் என்ன, கேட்க்காவிட்டால் என்ன விதிவிலக்கு கிடையாது.

மக்களின் துயரங்களுக்கு முடிவு கட்ட கோரி போராடும் மார்க்சியம், அதற்க்கு எதிராக வண்ணவண்ண கவர்கலராக முன்வைக்கும் எல்லா கோட்பாட்டு ஏகாதிபத்திய வாதங்களை எடுத்து வைத்து அம்பலப் படுத்துவதை இருப்பு குறித்த பிரச்சனையாக காட்டுவது ஏகாதிபத்தியத்தனமாகும். ஏன்எனின் மக்களின் பிரச்சனையை மறுத்து பாதுகாக்கும் இருத்தலில் நின்று போராட்டத்தை மறுக்கும் கோட்பாட்டுக்கு பாதுகாப்பு கவசம் வழங்க முயலும் சேறுயடிப்பு ஏகாதிபத்தியத்தைப் பாதுகாக்கும் நனவுகளில் எழும் வாதமாகும்.

சுரண்டலை எதிர்க்காத எல்லா ஐனநாயக விரோதக் கோரிக்கைகளும் ஏகாதிபத்திய கோரிக்கைதான். இது பெண்ணியமாகட்டும், தலித்தியமாகட்டும் எதுவாக இருந்தாலும் அது தனக்குள்ளான சுரண்டலை எதிர்க்காத நிலையில் ஏகாதிபத்திய கோட்பாடுதான். இதை யாராலும்  மறுக்க முடியாது ஆனால் பின் ஏகாதிபத்திய கோட்பாடு என்று சொல்ல வேண்டாம் எனப் புலம்புவதில் அர்த்தம் கிடையாது. இதை மார்க்சிய இருப்புக் குறித்த பிரச்சனையாக சேறுயடிப்பதன் நோக்கம் தெளிவானது.

நீங்கள் மாhக்சியமல்லாத எல்லா வழிகளிலும் கேள்விகேட்பதையிட்டு மாhக்சியம் ஒருக்காலும் மறுக்கவில்லை. அதை நாம் விமர்சிக்கும் பொதுதான் நீங்கள் எங்களின் விமர்சன சுதந்திரத்தை நிந்திக்கின்றீர்கள். நாங்கள் விஞ்ஞான பூர்வமான விளக்கங்கள் ஊடே சொல்கின்றோம் இந்த ஏகாதிபத்திய அமைப்பை பேண விரும்புகின்ற கோட்பாடுகள் என்றுமட்டும்தான் சொல்கின்றோம். இதை சொல்ல வேண்டாம் எனச் சொல்ல இருப்புக் குறித்த பிரச்சனையாக சொல்லி இப்படி பேசக் கூடாது என எப்படி உங்கள் ஐனநாயகம் மறுக்கின்றதோ, அதையே இன்றைய உலக அமைப்புகளும் கொண்டுள்ளன.

இந்த ஏகாதிபத்திய கோட்பாடுகளை கேள்வி கேட்க்க கூடாது, விளக்கமளிக்க கூடாது (இது மக்கள் ஏகாதிபத்தியத்துக்கு எதிராக போராடுவதை மறுத்து) என மறுத்து, அதை இருப்பு குறித்த பிரச்சனையாக இட்டுக் கட்டுவதன் மூலம், இதற்க்கு எதிரான போராட்டத்தை உளவியலாக, திணிப்பாக, சரணடைவாக, பயமுறுத்தலாக காட்டுகின்றனர் அவ்வளவே.

அடுத்து இவர் மு.தளையசிங்கத்தின் எடுகோள் ஒன்றை தனது மார்க்சிய எதிர்ப்புக்கு இசைவாக முன்வைப்பதைப் பார்ப்போம். "கட்சி ஏதாவது ஒரு படிக்கட்டில் கூடாரம் அடித்துக்கொண்டு குந்திவிடுகின்றது. அதைமீறி வருபவர்களுக்கு அங்கு இடமில்லை. அதைப் பொறுத்தவரை யேசு அல்லது மார்க்ஸ்ஸோடு மனிதவளர்ச்சி முற்றுப்பெற்றுவிடுகிறது. எல்லாவற்றையும் பைபிளிலேயே பார்க்கலாம் என்று சொல்லும் nஐகோவாவின் சாட்சிகளும் எல்லாவற்றையுமே மாhக்ஸிடமே கேட்கலாம் என்று நினைக்கும் சோசலிஸ்ட் யதாhத்தவாதிகளும் அப்படி ஒருநிலையில்தான் இருக்கின்றார்கள்." என்று மு.தளயசிங்கத்தின் மேற்கோள்ளை எடுத்து போட்டதன் ஊடாக தனது நிலையை தெளிவாக்கின்றனர். கட்சியில் என்ன ஐயா வேலை உங்களுக்கு? கட்சி மக்களின் துயரங்களுக்கு போராடுகின்றது. இதைக் கைவிட கட்சியைத் திறந்துவிட என்ன துணிவு உங்களுக்கு. நாங்கள் கண்டவன் போனவன் வந்து போக விபச்சார விடுதி நடத்தவில்லை. அதைச் செய்யக் கோரும் உங்கள் விபச்சாரத்தனத்தைக் கண்டு நாங்கள் கோபம் கொள்கின்றோம்.

மார்க்ஸ்சியத்தை ஏற்றுக் கொண்டோர் சுரண்டலை எதிர்த்து, ஆணாதிக்கத்தை எதிர்த்து, இனவாதத்தை எதிர்த்து, சாதியை எதிர்த்து.........இது போல் சமூகத்தில் உள்ள அனைத்து சமூக முரண்பாடுகள் மீதான போராட்டத்தை முன்னெடுக்கவும், சுயதியாகம் செய்ய தயாரானவர்களின் கட்சியில் திண்ணை எழுத்தாளருக்கு என்ன ஐயா வேலை. மார்க்ஸ்சியமும் அதன் கட்சியும் மக்களுக்காக புரட்சி செய்ய அவர்களால் உருவாக்கப்பட்டது. புரட்சிபற்றி அக்கறையற்ற யாருக்கும் அங்கு இடமில்லை. இப்படி திறந்துவிடக் கோருபவர்கள் தங்களைப் போல் விவாதிப்பதும், கதைப்பதையும் நடைமுறையாக்க கட்சிக்குள்ளும் செய்யும் கோரிக்கையில் தான் கட்சியை திறந்துவிட கோரும் கோரிக்கையாகும்.

சமூக அவலத்தையிட்டு அக்கறையற்ற, அதை மாற்றக் கோராத, அதை நடைமுறைப்படுத்த முன்வராத யாருக்கும் திறந்துவிட இது ஒன்றும் சத்திரமில்லை.

அடுத்து மார்க்ஸ்சியத்தையும், மதத்தையும் அடிக்கடி ஒப்பிட்ட போக்கு கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதிகளின் இரட்டைத்தன்மையாகும். இது இன்று மதத்தையும், மார்க்ஸ்சியத்தையும் மறுதலிக்கும் ஏகாதிபத்திய நிலையை முற்போக்கின் பெயரில் அரங்கேற்றுவதாக உள்ளது. மதம் மார்க்ஸ்சியத்தை எதிர்கின்றது. மார்கஸ்சியம் மதத்தை எதிர்க்கின்றது. இரண்டு நேர் எதிரான வகையில் உலகை ஆய்வு செய்கின்றது. இதில் எந்தப்பக்கமும் உடன்பாடு இருப்பதில்லை. இரண்டையும் ஒன்றாக காட்டுவதன் மூலம், இருக்கும் ஏகாதிபத்தியத்தின் நிலையை பொது எதிர்ப்பு நிலையில் நின்று பாதுகாப்பதுமாகும். ஏகாதிபத்திய வளர்ச்சிக்கு மதம் மார்க்சியம் தடையாக உள்ளதால் இரண்டையும் இவர் போல் எதிர்க்கின்றனர். மர்க்சிய அபாயம் உள்ள இடத்திலும் மூன்றாம் உலக நாடுகளிலும் மதத்தை ஏகாதிபத்தியம் வளர்த்தெடுக்கின்றது.

அதுசரி மு.தளையசிங்கம் என்ன விடையத்தை சமூக வளர்ச்சிக்கு, சமூக மாற்றத்துக்கு விட்டுச் சென்றுயுள்ளர். ஒன்றுமேயில்லை. மாறாக மார்க்ஸ்சியத்துக்கு எதிரான போக்கையும், அதற்க்கே உரிய கோட்பாட்டு ஆதரவு தளத்தையும் விட்டுச் சென்றுள்ளார். மனிதர்களின் துன்பம், துயரத்துக்கு தீர்வாக எதையும் வழிகாட்ட முடியாத இவர்களின் மேற்கோள்கள் யாருக்குதான் தேவை. இதைப் படித்து மனிதன் முன்னேற எதுவும் இருப்பதில்லை.

அடுத்த பகிடியை கொஞ்சம் ஆராய்வோம். "வரலாறு 'நகராமல்' விட்டதோ என்று ஐயங்கொள்ளுமாறு தளையசிங்கம் காலத்திலிருந்து (அது 1970கள் என்று கொண்டால்) இன்றையநாட்கள் வரைக்கும் எமது சூழல் மாறவில்லையா?" எனக் கேட்டு மார்க்ஸ்சியம் இல்லை என்றால் நாங்கள் வாழவில்லையா என்பதை மறைமுகமாக கேட்டுவைக்கின்றார். ஐயா எந்தச் சூழல் மாறி உள்ளது. சுரண்டல், ஆணாதிக்கம், சாதி ஒடுக்குமுறை.....என எல்லாம் காணாமல் மந்திர தந்திரத்தில் போய்விட்டதாக நம்பக் கோருகின்றீர்களா? மாறி விட்டது எது ஒடுக்கு முறை புதிய வடிவில் மிக மோசமாக மாறியுள்ளது. இதற்கான பொறுப்பு மு.தளையசிங்கத்துக்கும் உண்டு. மக்களை விடுவிக்க போராடாத தங்கள் அரிப்பு சொறிப்புகளை பேசுவதற்காக எழுதித்திரிந்த இவர்கள், மக்களுக்காக என்னத்தை கிழித்தனல் இன்று நிலைமாறிப் போய்யுள்ளது. மக்கள் அதே துன்பம். அதே ஒடுக்குமுறை. அதே இலக்கிய புலம்பல். ஆணால் சுருதிகள் மட்டும் மக்களை ஏமாற்ற, அடக்க, ஒடுக்க மாறியுள்ளது.

மாற்றம் நிகழ வேண்டுமாயின் சமூகம் தலைகீழாக புரட்டப்பட வேண்டும். இது புரட்சியின்றி உலகில் நடந்ததாக சாட்சியமில்லை. இது எல்லாத் துறையிலும் விதிவிலக்கின்றி நடக்க வேண்டும். இது உங்கள் பயங்களுக்கு வெளியில் போராட்டமாக ஒரே தீர்வாக உள்ளது. இதற்க்கு வெளியில் மக்களின் துன்பம் துயரங்களைப் போக்க மு.தளையசிங்கம் உட்பட எந்த கோட்பாட்டு கொம்பனிடமும் தீர்வோ, வழியோ கிடையாது என அடித்துக் கூறுகின்றோம். இப்படியிருக்க மார்க்ஸ்சியத்தை எதிர்ப்பது என்பது உண்மையில் இருக்கும் சமூக அமைப்பான ஏகாதிபத்தியத்தை காப்பாற்ற அவர்களுடன் சேர்ந்து போடும் அரோகராவாகவே உள்ளது.

அடுத்த பொன்வரிகளைப் பார்ப்போம்.".......நமக்கு வெளியே இருந்து வரலாற்று, நிலைவியல், புவியரசியல் நிலைமைகளினால் நம்மீது விட்டெறியப்படும் 'சாதாம்சமான' 'மிகுமுகம்' கொண்ட அனைத்துமுறைமைகளையும் 'நம்பிக்கையின்' அடிப்படையில் ஏற்றுக்கொள்ள வேண்டுமா?" எனக் கேட்பதன் மூலம் மார்க்ஸ்சியம் மீதான தனது வன்மைமிக்க தாக்குதலை தொடுக்கின்றார். மார்க்ஸ்சியம் நம்பிக்கையின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளக் கோரவில்லை. அது விஞ்ஞான பூர்வமான ஆய்வையே நடத்தக் கோருகின்றது. அறிவியல் பூர்வமாக சமுதாயத்தைப் பார்க்கக் கோருகின்றது. இதற்க்கு வெளியில் எந்தக் கோட்பாடும் இதை செய்வதில்லை. எந்த தத்துவவாதியும், எந்தக் கோட்பாடும் விஞ்ஞான உண்மைகளில், அறிவியல் உண்மைகளில் ஆய்வு செய்வதாக யாராலும் நிறுவமுடியாது.

மர்க்ஸ்சியம் பொருளை முதன்மையாகக் கொண்டு பொருளை ஆய்வுசெய்கின்றது. இது எல்லா நாடுகளுக்கும் பொருந்தும் பொதுவான உண்மை. சுரண்டல், ஆணாதிக்கம், இன நிறவெறி, சாதிஒடுக்குமுறை (சாதி உள்ள நாடுகள்).... என அனைத்தும் எல்லா நாடுகளுக்கும் உள்ள பொதுவான உண்மையாகும். இங்கு ஒடுக்குமுறை வேறுபட்ட சமூகச் சூழல்மட்டும் வேறுபடுகின்றது. இது புவியியல், வரலாறு, சூழல், பொருளாதாரம், கலாச்சாரம், மதம்....... போன்ற மாறுபட்ட வரலாற்று நிலைமைகளில் தான் ஒடுக்குமுறை வடிவங்கள் மாறுபடுகின்றன. ஆணால் இங்கு சுரண்டும், ஒடுக்கும் வடிவம் மாறுபடுவதில்லை. இதில் பொதுத்தன்மை கொண்ட நலன்கள் உலகளாவிய ரீதியில் பொதுவாக உள்ளது.

பாட்டாளி வர்க்கம் பொதுவான ஒடுக்குமுறை வடிவங்கள் மீது குறிப்பான நிலைமைகளை கவனத்தில் ஓட்டுமொத்த சமூகமாற்றத்துக்காக போராடுகின்றது. மார்க்ஸ்சியம் ஒவ்வொருநாட்டுக்கும், ஒவ்வொரு கிராமத்துக்கும், ஒவ்வொரு வீட்டுக்கும் உள்ள ஏற்றத் தாழ்வை மிக நுணுக்கமாக கவனத்தில் எடுத்து பொதுவானதுடன் இணைத்துப் போராடுகின்றது. இதனால் உலகில் எந்த தத்துவமும் சாதிக்க முடியாத அளவுக்கு பல வெற்றிகளையும் போராட்டங்களையும் நடத்தின. நடத்துகின்றன. நடத்தப் போராடுகின்றது.

அந்தளவுக்கு உலகில் எந்தப் போராட்டத்துக்கும் இல்லாத எதிர்ப்புக்குள்ளும் இது தொடர்ந்து போராடுகின்றது. இது மட்டும்தான் சுரண்டலையும் அதையொட்டியுள்ள அனைத்து ஒடுக்குமுறையையும் ஒழித்துக்கட்ட போராடுகின்றது. மற்ற எந்தத் தத்துவமும் இதை ஏற்றுக் கொள்வதேயில்லை. இதனால் தான் இதற்க்கு எதிராக எல்லோரும் போராடுகின்றனர். சுரண்டலை ஏற்றுக்கொள்ளும் அனைத்துக் கோட்பாடும் ஏகாதிபத்திய கோட்பாடாக உள்ளது. அதை எதிர்க்கும், அதை மாற்றக் கோரும் கோட்பாடு மட்டும் ஏகாதிபத்தியத்துக்கு எதிராக உள்ளது. இதற்க்கு வெளியில் யாராலும் கோட்பாடு உருவாக்கவோ, காட்டவோ முடியாது என்பதை மிக தெளிவாக காணமுடியும்.