அண்மையில் பாரிசில் இருந்து "இருள் வெளி" என்ற தொகுப்பு மலரை சுகன் வெளியிட்டிருந்தார். இம்மலர் திட்டவட்டமாக பட்டாளிவர்க்க எதிர்ப்பில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக வெளியாகியுள்ளது. தொகுப்புரையில் ஒரு வார்த்தை கூட சுரண்டலுக்கு எதிராக பேசாது மௌனம் சாதித்து சுரண்டுவோருக்கு கம்பளம் விதித்தவர், சுரண்டலுக்கும் ஆணாதிக்கத்துக்கும் சாதியத்துக்கு எதிராக போராடும் மார்க்சியத்துக்கு எதிராக தனது தாக்குதலை நடத்தியதன் மூலம் குரு அ.மார்க்ஸ் போல் சுரண்டுவோரையும், அதன் எழுத்தாளர்களையும் புல்லரிக்கவைத்துள்ளார்.

 

 

இம் மலர் வெளியீடே ஒரு கடைந்தெடுத்த மோசடியில் தொடங்கியது. 1998 மே யில் nஐர்மனியில் நடந்த இலக்கியச் சந்திப்பு சார்பாக அவர்களுக்கே தெரியாது மோசடியாக அதிகாரத்தை தனதுகையில் எடுத்து, அதன் சார்பாக வெளியிடுவதாக போட்டதன் மூலம் ஐனநாயக சந்திப்பு எனப் பீற்றித் திரிந்த சந்திப்பின் மீது அதிகாரவன்முறையை புலிகளுக்கு நிகராக கையான்டார். ஐனநாயகவாதிகள் எல்லை கடந்த மௌனம், இதன்மீது கேள்விகூட எழுப்பமுடியாத மௌனம், ஐனநாயக விரோதம் பற்றி எழுதும் கைகள் மௌனமாக தமது சகா என்பதால் உறங்கிய மர்ம வேஷசங்கள் வெளிச்சமாகட்டும்.

அடுத்த மோசடியை பார்ப்போம்."இலக்கியச் சந்திப்பின் 10வது ஆண்டினை யொட்டி (1988 - 1998) ஃபிராங்போர்ட்டில் 98 மே, 30-31 தினங்களில் நிகழும் 24வது இலக்கியச் சந்திப்பிற்காக வெளியாகும் பின்நவீனத்துவ இலக்கியப் படைப்புகளின் தொகுதி" எனப் போட்ட பின்நவீனத்துவ மோசடியை, பாசீச அதிகார வன்முறையை, பறித்தெடுத்த ஐனநாயக உரிமையை கேள்விகேட்க்க நாதியற்று போன அதீத ஐனநாயகவாதிகளின் ஐனநாயகம் பற்றிய புலம்பல் புலியெதிர்ப்பும் ஏகாதிபத்திய சார்பு அரசியல்தான்.

பின்நவீனத்துவ படைப்பு எனப் போட்டதன் மூலம் இலக்கியச் சந்திப்பையும் அதன் அரசியலையும் அதன் நோக்கத்தையும் மற்றைய கோட்பாட்டாளர்க்கும் தெளிவாக்கிய பெருமை சுகனைச் சார்ரும். ஆம் நாம் எல்லாக் கருத்துக்கும் கம்பளம் விரிப்பவர்கள் என்று கூறியபடி மார்க்சியத்தின் (மார்க்சியம் எதற்காக போராடுகின்றது எனின் எல்லா மனிதர்களும் சமமானவர்கள் என்பதை அமுல்படுத்த இதை எதிர்த்து இலக்கியச் சந்திப்பு) மீது எல்லோரும் ஒன்றினைந்து நடத்தும் தாக்குதல் மூலம் சுரண்டப்படும் மக்களின் ஓரே குரலை நசுக்கிய பெருமையில் வெளிப்பாடாக எதிர்ப்பின்றி மோசடியுடன் வெளிவந்த நூல்தான் இந்த இருண்டவெளி என்ற இருண்டநூல். இதில் எழுதிய அப்பாவிகள் பலர்க்கு இது பின்நவீனத்துவ சாக்கடை நூல் என்பது  முன்கூட்டியே தெரியாதது மட்டுமின்றி, புலிகள் சிறுவர்களின் அறியாமையில் யுத்தம் செய்வதாக கூறிக்கொள்வோர், அதேபாதையில் எந்த வெட்கமுமின்றி புத்தகத்தின் நோக்கத்தைகூட கட்டுரையாளருக்கு  சொல்லாத அறியாமையில் ஏமாற்றி மோசடி செய்து கட்டுரை பெற்று வெளியான தொகுப்பு இது. இந்த மோசடிக்காரன் அ.மார்க்ஸ்சுடன் இனைந்து பாரிசில் நடந்த இலக்கியச் சந்திப்பு மலர்பற்றி, நிறப்பிரிகை இலக்கம் 9இல் தலித்மலர் வெளியிட்டதாக கதையளந்த மோசடியை பற்றி மௌனம் சாதித்த ஐனநாயகவாதிகளை இனம்காணவேண்டிய நிலையில் உள்ளோம். இதை புலிகள் செய்திருந்தால் விட்டுவிடாத புலியெதிர்ப்புவாதிகள் தமது முதுகுசொறிவு செய்யும் போது மௌனமாக அங்கீகாரம். வாழ்க ஐனநாயகம் என இந்த பன்றிகள் உடன் சேர்ந்து கோசம் எழுப்புவோமாக.

தனது சுரண்டும்வர்க்கச் சார்புடன் சுரண்டலையெதிர்த்து பின்நவீனத்துவ வழியில் "இருள்வெளி" என்ற இருண்ட  நூல் ஊடாக சுகன் கூறுவதைப் பார்ப்போம். "சாதி வெறியை மறைக்க வர்க்கப் பூனூல் போடுவோர் ஆணாதிக்கத்தைக் காக்க வர்க்க மட்டப்பலகையுடன் மார்க்சியத் தூக்குகுண்டுடனும் இரவும் பகலும் உழைக்கும் மேசன்மார்" என அழகாக தனது சுரண்டப்படும் மக்களுக்கு எதிரான பின்நவீனத்துவ சுரண்டும் கோட்பாட்டை முன்மொழிந்துள்ளார். இதைப் புகழ்ந்து கொள்ள ஒரு கூட்டமும், இதில் எழுதியதை சுயவிமர்சனம் செய்யாது நக்கிப் பிழைக்கும் ஒரு கூட்டமும் இருக்கத்தான் செய்கின்றது. அத்துடன் இம்மலரையொட்டி சுகித்த கூட்டத்தில் வீணி ஒழுக கூடித்து கும்மாளம் அடித்தனர். மலர் தொகுப்புரை  பொன் மொழிகளில் இதை ஆராய்வோம்.

மறுதலையை எழுதின் பார்ப்பணியத்தை மறைக்க தலித்தியம், ஆணாதிக்கத்தை மறைக்க  பூர்சுவா பெண்ணியம், ஏகாதிபத்தியத்தை மறைக்க பீன்நவீனத்துவம் இதைத்தான் "இருள்வெளி" என்ற இருண்ட மலர் கோருகின்றது. இல்லை என்றால் சுரண்டலை ஒழிக்க, ஆணாதிக்கத்தை ஒழிக்க, சாதியத்தை ஒழிக்க என்ன மாற்று மார்க்சியத்துக்கு வெளியில் உண்டு என நாம் கேட்பதில் நியாயம் உண்டல்லவா?. இதைக் கேட்பது ஆணாதிக்கமாம், சாதிவெறியும் எப்படி? தெரிந்தவர்கள் சேர்ந்து சுகித்தோர்தான் உடன்பட்டவர்கள் இதில் எழுதியதுக்கு சுயவிமர்சனம் செய்யாதவர்கள் தான் விளக்க வேண்டும். இல்லையெனின் அவர்களும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான மக்கள் விரோதிகள்தான்.

தொழிலாளர், கூலிவிவசாயிகள் முதலாளிக்கும் நிலப்பிரபுக்கும் ஏகாதிபத்தியத்துக்கும் பார்ப்பணியத்துக்கும் ஆணாதிக்கத்துக்கும் எதிராக போராடினால் எப்படி ஐயா சாதிவெறியை, ஆணாதிக்கத்தை நிலை நிறுத்தும் செயல் என்பதை கொஞ்சம்  உங்கள் தலித்திய பின்நவீனத்துவ வழிகளில் சொல்லியிருக்கலாமே. இப்படி கதையளப்பவர்கள், சொல்விளையாட்டு நடத்துபவர்கள் ஏகாதிபத்தியமும், அதன்கோட்பாட்டாளர்களுமே. ஓடுக்கப்பட்ட வர்க்கத்துக்காக சாதியை எதிர்த்தும், ஆணாதிக்கத்தை எதிர்த்தும், சுரண்டலை எதிர்த்தும் இது போன்ற அனைத்து ஒடுக்கு முறையையும் எதிர்த்து போராடும் ஒரே தத்துவம் மார்க்சியம் மட்டும்தான். இதற்க்கு வெளியில் யாராவது ஒரு கோட்பாட்டை முன்வைக்க முடியாத பேடித்தனமும், மார்க்சியத்தின் மீதான சேறுயடிப்பும் அதன் நோக்கமும் ஏகாதிபத்திய உலகை ஆணந்தமாக காப்பாற்றும் முயற்சி என்ற உண்மையைச் சொன்னால், ஏன் உங்களுக்கு கோபம் பொத்துக்கிட்டு  வருகின்றது. நீங்கள் சுரண்டல், ஆணாதிக்க, சாதிய ஓடுக்கு முறைக்கு எதிரான உங்கள் கோட்hபாட்டை வையுங்கள் பார்க்கலாம், எப்படி இதை ஒழித்துக் கட்டுமென்று. இதை எக்ஸில், இருள்வெளி.... என எங்கும் எழுதும் எல்லா எழுத்தாளர்களையும் சவால் விட்டுக் கோருகின்றோம். இது முடியாத அனைத்துக் கோட்பாடும் ஏகாதிபத்திய கோட்பாடு என்கின்றோம். மறுக்க முடியுமா?

இந்த இடத்தில் இருள்வெளி முன்னுரையில் "தலித்தியமா புகலிடத்திலா என்று புருவத்தை நெரித்தவர்கள்" என்று புலம்பும் சுகன் தன்னுடைய புகலிட தலித்தியம் என்ன என தனது தலித்திய புத்தகத்தில் ஒரு இடத்தில் தானும் சொல்ல முடியாத வார்த்தையாடல்கள் எள்ளிநகையாடப்பட வேண்டியது. பின்நவீனத்துவ தொகுப்பு, தலித்திய குத்தகையாளன் அவைபற்றி ஒருவார்த்தை புத்தகத்தில் எழுத முடியாத அறிவுச் சூனியம் என்பதை திட்டவட்டமாக நிறுவியுள்ளார். தலித்தல்லாத உயர் சாதியின் பிரதிநிதியாக உள்ள சுகன் வசதிகருதி தன்னை தலித்தாக காட்டி உலாவரும் போது, தலித் மக்களுக்கு என்ன தீர்வை சாதியொழிப்பில் முன்வைக்கின்றார் எனக் கேட்டால் மௌனம் முடிவற்ற மௌனம் ஆணால் தலித் விடுதலை என சொல்லடுக்கு என்பதுதான் விடுதலைக்கு வழியாகும். அரசல்புரசலாக சில இடத்தில் சொன்னதாக "இரட்டை வாக்குரிமை" தான் தலித்விடுதலையின் அத்திவாரம் என்றாராம். இலங்கை சாதி ஒழிப்பில் இரட்டை வாக்குரிமை எப்படி சாதியை ஒழிக்கும்? இந்தியாவில் இருக்கும் தலித்பிரிவு அதிகாரவர்க்கத்தின் எண்ணிக்கை இரட்டிப்பானல் எப்படி சாதியொழியும். தலித் ஏழில்மலை போல் பார்ப்பாணிய வானரங்களுடன் இந்திய பராளுமன்ற சேற்றில் உழன்று சேறுபூசி எழத்தான் முடியும். இதற்க்கு வெளியில் பாதை காட்ட வழி காட்ட முடியுமா? முடியவே முடியாது.

இன்று தலித் என்ற தொடர்ச்சியான சொல் உச்சரிப்பு ஆதிக்கத்தால் மருண்டு வெருண்டு போய் தலித்தை உச்சரிப்போரும், எதோ உண்டு என்போரும் தலித் விடுதலையை, சாதி ஒடுக்குமுறையை எப்படி ஒழிக்கும் என்பதை கூறக்கூடாது என சபதம் எடுத்தாற் போல் சொல்லால் நியாயப்படுத்துவதை நிறுத்தி அறிவியல்பூர்வமாக, விஞ்ஞான பூர்வமாக ஆராய்வது அல்லவா சமூக அக்கறைக்குரியவரின் அழகு. இதை மறுத்தால் உங்களுக்கு சமூக நோக்கம் கிடையாது என்பதை கூறுவதில் என்ன தவறு.

சிலர் தலித்திலக்கியம் படைக்கப்பட்டுள்ளது. இதற்க்கு முன்னோடியாக இது உள்ளது எனக் கதையளக்கின்றனர். நான் உங்கள் இடம் கேட்கின்றேன் தலித் விடுதலையை வழிகாட்டி எத்தனை படைப்புகள் வெளியாகியுள்ளது. டானியல் படைப்பை தலித் படைப்பாக்கியது போல் சாதி ஒடுக்குமுறையை பேசிய படைப்புகளை தலித் படைப்பாக்கியதுதான் நிகழ்தது. தலித் பெயரில் வெளியாகி இதுபோன்ற படைப்புகளை விட வெளியில் நிறைய படைப்புகள் வெளியாகியுள்ளது. இதுபற்றி ஆய்வு செய்யின் இதை துல்லியமாக்கும். தலித் அரசியலை பேசும் படைப்புகள் அல்ல சாதி ஒடுக்குமுறையைப் பேசும் படைப்புகள்  தான் வெளியாகின. இது சாதாராணமாக ஒடுக்குமுறைக்கு எதிரான போக்கில் வெளிவந்து கொண்டிருப்பவைதான். இது சமூக ஏற்ற இறக்கத்துக்கு உட்பட்டதுதான்.

இந்த இருண்ட "இருள்வெளி"த் தொகுப்பில் முதலாவது பக்கத்தில் சங்கானை சாதிப் போராட்டத்தில் கொல்லப்பட்டவர் நினைவாக எனப் போட்ட சதியைப் பார்ப்போம்.

மார்க்சியத்துக்கு எதிரான  முன்னுரையில் "சாதி வெறியை மறைக்க வர்க்கப் பூனூல் போடுவோர்" எனக் குற்றம் சாட்டியவர் மார்க்சியம் சாதியை ஒழிக்க போராடி வரலாற்றில் கொல்லப்பட்டவர்க்கு நினைவாக தொகுப்பு என்பது மோசடிப் பிழைப்புவாதமல்லவா. மார்க்சியத்தின் போராட்டவெற்றிகள் எல்லாம் வேண்டும், ஆணால் மார்க்சியம் மட்டும் வேண்டாம், அதன் மேல் சேறு வீசும் உரிமை வேண்டும், அதன் ஊடாக பிழைப்பதை கண்டுகொள்ளக் கூடாது என்பதே பெரும்பாலன எழுத்தாளர்களின் கோரிக்கை. வாழ்க பிழைப்புவாதம் என வாழ்த்துவோமாக.

சங்கானைப் போராட்டத்தை முன்னெடுத்தது 1960களில் தாழ்த்தப்பட்ட மக்களின் எழுச்சிக்கு கம்யூனிசக் கட்சி தலைமை தாங்கி போராடிய தியாக வரலாற்றை மார்க்சிய சேறுயடிப்பூடாக சேறுயடித்தபடி அதில் கொல்லப்பட்டவர் பெயரில் புத்தகத்தை கொண்டுவருவது அப்போராளியின் தியாகத்தை வர்க்கப் போராட்ட தியாகத்தை தமது முதுகு சொறிவுக்கு தீணியாக்கிக் கொள்ள தயங்காத மோசடியில் வெளிவந்ததே "இருள்வெளி" என்ற இருண்டமலர். சங்கானைப் போராட்டம் வர்க்க தலைமைகளால் மார்க்சிய தூக்குண்டன் உடன் இரவு பகலாக கிராமம் கிராமமாக அணிதிரட்டி நடந்த போராட்டத்தை மறைத்து சேறுயடிக்கும் தலித்குஞ்சுகள், அந்த மக்கள் பற்றிய அனுதாபத்தில் அல்ல தமது விளம்பரத்துக்கு அஞ்சலிதான் எஞ்சிப்போய்யுள்ளது.

மார்க்சியம் மட்டும்தான் சாதியொழிப்பு போராட்டத்தில் விடாப்பிடியாகவும், உறுதியாகவும் போராடின போராடி வருகின்றது.

மற்றையவை பெயருக்கு முன் பட்டம் போட்ட போட விரும்பும் தலித்தியம். தலித்துக்கள் சாதியை பேணவிரும்பும் பார்ப்பாணியம். மக்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு பாதை காட்டாத பிழைப்புத்தனம். சுரண்டுபவனை பகைக்காத எதிர்க்காத கோட்பாட்டு பன்றித்தனம். இதுதான் இன்றைய நவீன கோட்பாட்டு உற்பத்தியில் கேள்விக்குள்ளாக்கல் ஊடேயான இவர்களின் கருத்துச் சுதந்திரம் மீதான புலம்பல்.

அடுத்து இராஐகுலேந்திரன் என்ற புனைபெயரில் எழுதிய புலியெதிர்ப்பு அரசுசார்பு செய்தியில் தமிழ் கலண்டர் மாவோவை கொச்சைப்படுத்தியதை இவர் மேலும் அவர்களைவிட மோசமாக கொச்சைப்படுத்தி கையாண்டவர், பெரியாரை கொச்சைப்படுத்தியதை பாதுகாக்க பின்நிக்காத போக்கு பாட்டாளி வர்க்க எதிர்ப்பில் எழுந்த வர்க்க எதிரியின் நச்சுத்தனங்கள் ஆகும்.

இதே சுகன் எக்ஸில் இரண்டில் புலம்பியதைப் பார்ப்போம். "தன்னைச் சாதிவெறியன் இல்லை என்று தொடர்ந்து நிரூபிக்காதவரை ஒவ்வொரு வெள்ளாளனும் சாதி வெறியனேதான் என்று தலித் கருதுவதில் தவறில்லை." தனி வெள்ளாளன் சாதிவெறியன் அல்ல என நிறுவுவது மட்டுமல்ல, அதற்க்கு எதிராக போராடுவதும் மட்டுமின்றி அதை கருவறுக்க முன்வராத வாய்சவடலும், எழுத்தும் கூடமறைமுகமாக சாதியை பாதுகாப்பதுதான். சாதியை ஓழித்துக்கட்ட நடைமுறையில் சாத்தியமான வழியில் ஓடுக்கப்பட்ட மக்கள் உடன் இனைந்து போராடவேண்டும். இது தனிய வெள்ளானுக்கு மட்டுமல்ல தலித்துக்கும் பொருந்தும். தலித்துக்குள் உள்ள உயர்சாதி பார்ப்பணியத்துக்கும், சாதிகட்டமைப்பான பார்ப்பணிய சிந்தனைக்கு எதிராக போராடுவதன் மூலம், தலித்துக்குள் உள்ள சாதி கட்டமைப்பை தகர்க்க போராட வேண்டும். இதை மறுத்த பிழைப்புத்தனமான சாதி பாதுகாப்பு அதே வெறிபிடித்த வெள்ளாளத் தனம்தான். சாதியைக் கடந்த அமைப்பு முறை மட்டும்தான் அனைத்து சாதிய ஒடுக்குமுறையையும் தகர்க்கும். இதை மறுத்து சிலரின் நலனுக்காக சிலவற்றை மட்டும் மறுப்பது, சாதியை அணைகட்டிப் பாதுகாக்கத்தான். சாதியைக் கடந்த போராட்ட மார்க்கம் ஒடுக்கப்பட்ட மக்கள் தமது விடுதலையை சாதிக்க வர்க்கப் போராட்ட பாதையில் அணிதிரள்வதன் மூலம் சாதியை கடந்த சமூகத்தை போராடிப் பெற வேண்டும்.

அடுத்த பொண்ணான மேற்கோள்களைப் பார்ப்போம். "பலமா? யாருக்கு? ’செற்றியிருந்து nஐhனிவோக்கர் அடித்தபடி சோவியத் யூனியனின் சரிவை ஆராய்ந்தார்கள்’ (பார்த்திபன் சிறுகதை)".................எனபதை சுகன் பின்நவீனத்துவ தலித் வழியில் "எனக்கு உறுத்துகின்றது, நான் சாராயம் காய்ச்சி விற்கின்ற விளிம்பு மனிதன்." என்கின்றார்.

நாங்கள் சாராயம் காய்ச்சி விற்க்கும் எல்லோருக்கும் எதிரானவர்கள். சாராயம் காய்ச்சி விற்க்கும் முதலாளியால் (அது தலித்தென்டாலும் சரி, பிற்படுத்தப்படாலும் சரி எந்த நாய்யானாலும் சரி) கொல்லப்பட்ட ஆயிரம்ஆயிரம் குடும்பங்கள் சார்பாக, பிற்படுத்தப்பட்ட  சாராயத்தை குடித்து விட்டு வீடு சென்று வீரம் பேசும் ஆண்களிடம் அடிவாங்கி பட்டிணியில் உழலும்  பெண்கள் சார்பாக கூறுகின்றோம், இந்த சாராய கொட்டத்தை ஒழித்து கட்டும்வரை நாம் ஒய்ந்துவிடப்போவதில்லை. அன்றாட அற்ப கூலியை பறித்துவிடும் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட சாராய்யம் காய்ச்சி விற்க்கும் முதலாளிகள், அதிகார வர்க்கத்துடன் கூட்டுச் சேர்ந்து நடத்தும் இந்த கடைந்தெடுத்த பிழைப்பை எதிர்த்து இதனால் பாதிக்கப்படும் பெண்கள் சார்பாக, பட்டினி கிடக்கும் குழந்தைகள் சார்பாக, குடும்ப அங்கத்தவரை இழந்து தவிர்க்கும் எழைகள் சார்பாக எச்சரிக்கின்றோம், நீங்கள் தலித்தென்றோ அல்லது எந்த வேஷம் போட்டாலும் எமது எதிரியில் நீயும்தான் என்பதை மறந்து விடாதே.

அற்ப கஞ்சிக்குரியதை இடையில் கடை விரித்து பறிக்கும் நாயிலும் கீழான உன் பிற்படுத்தப்பட்ட சாராய ராச்சியத்தை உன் குண்டர் படையை தலித்தின் பெயரில் வந்தாலும் சகித்துக் கொள்ள முடியாது. சாராயம் காய்ச்சுபவன் தலித் என்றாலும் எந்த நாய்யென்றாலும் மக்களின் எதிரி எதிரிதான்.

பெண்கள் சாராய்யம் காய்ச்சுபவர்களை எதிர்த்து அடித்து நொருக்கும் போராட்டத்தில் தலித் முதலாளிகள் சாராய முதலாளியின் பக்கத்தில்தான். ஏன்எனின் அவன் விளிம்பு மனிதன், தலித் அல்லவா.

அடுத்து இன்று அதிகாரபீடங்களில் உள்ள எல்லா ஆளும் கும்பலும் குடித்துவிட்டு மக்களின் பெயரில் தீர்மானங்களையும், சதிகளையும் செய்யும் தமது பொழுது போக்கு சுகிப்பு அரசியலை சகித்துக் கொள்ள உரிமை கோரும் விளிம்பு கோரிக்கைள் விளக்கங்கள் மக்களின் கோவனத்தையே களவெடுக்கும் பின்நவீனத்துவ வாதமாகும்.

திண்டு குடித்து கூத்தடித்து பெண்களை சுகித்தபடிதான் ஆணாதிக்க ஆளும்கட்சி முதல் எதிர்க்கட்சிகள் ஈறாக தனியாகவும் கூட்டாகவும்  ஈடுபடுவதை மக்கள் காண்கின்றனர். இதை அனுமதிக்க முடியாது என்பதை மக்கள் கண்டு போராட எழுகின்றனர். நாம் அந்த மக்களின் பின்னே ஒழிய சுகன் போன்ற அனைத்து குரங்குகளினதும் மக்கள் விரோத பாதையில் அல்ல எமது போராட்ட மார்க்கம்.