உலகம் புதிய ஆக்கிரமிப்புகளை உலக மயமாதல் மூலம் சந்திக்க தொடங்கிவிட்டது. அமெரிக்க தலைமையிலான ஒற்றை உலக அமைப்பு மற்றைய ஏகாதிபத்தியங்கள் உடன் இனைந்து உலகை பங்கிட்ட போக்கில் புதிய பரிணாமங்கள் அரங்கிக்கு வந்துள்ளது. இதுவரை காலமும் பொருளாதார ஆக்கிரமிப்பு மூலம் உலக மயமாதலை ஏகாதிபத்தியம் நடைமுறையாக்கிய போக்கில் புதிய பரிணாமாக அண்மையில் சூடான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகள் மீது நடத்திய இராணுவ தாக்குதல் எல்லை கடந்த அதிகாரத்தை ஏகாதிபத்தியம் சட்டப்படியாக்க ஐனநாயக வடிவமாக்க மாற்றத் தொடங்கியுள்ளது. தனிநபர் பயங்கர வாதங்களை தமக்கு சாதகமாக்கி தேசங்களின் தேசிய எல்லையை அழிக்கும் ஆக்கிரமிப்பில் உலக மயமாதல் இராணுவத்துறையிலும் அப்பட்டமாக தொடங்கியுள்ளது.
முன்பு ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புகள் நேரடியான காலணியாக்கத்துக்குள்ளும், மனிதாபிமான உதவிக்குள்ளும் நடந்த போக்குகளை கடந்து இனி உலகம் ஒற்றை அதிகாரத்துக்குள் ஆளப்பட வேண்டும் என்பதை இத்தாக்குதல் மிகதெளிவாக்கியுள்ளது. பொருளாதாரத்தில் தேசியங்களை உடைத்து நொருக்கி ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட ஏகாதிபத்தியம் இதற்க்குள்ளும் தம்மால் சுரண்டுவது போதாது என்ற நிலையில் நேரடியான அதிகாரம் மூலம் உலகை கட்டுப்படுத்த, தனது அதிகாரத்தை உலகளவில் முழுமையில் நிறுவ, உலகில் சுரண்டுவதில் ஒரு சட்டயமைப்பு கொண்டுவர விரும்பும் போக்கில் நடத்தப் பட்ட காட்டுமிராண்டி தாக்குதல் தான் இது.
இனியும் தேசங்கள் சுயாதீனமானது எனவோ, சுதந்திரமான தேசவிடுதலைப் போராட்டமோ இருக்கவோ நடக்கவோ முடியாது என்பதை இத்தக்குதல் மூலம் மீள ஒருமுறை உலகிக்கு துல்லியமாக்கியுள்ளது. தேசங்களின் சுயாதீனத்துக்கான போராட்டம் உலகளாவிய ரீதியில் ஐக்கியப்பட்ட போராட்டத்தின் ஊடாக ஏகாதிபத்திய சுரண்டலை எதிர்த்து போராட்டமாகவே இருக்கும் ஒரே மார்க்கத்தை நாம் சரியாக இனம் கண்டுகொள்ள இத்தாக்குதல் மேலும் துல்லியமாக்கியுள்ளது.
உலகளவில் தேசியம் கடந்த சுரண்டல், இராணுவ அரசு வன்முறைகள் மிககோரமாகியுள்ள நிலையில் சமூகம் பற்றிய எமது அக்கறை என்ன என்பதே எம்முன் உள்ள முக்கிய பிரச்சனையாகியுள்ளது. அண்மைக்காலமாக உலகு எங்கும் நாட்டு பொருளாதாரங்கள் திவாலாகி பணவீக்கத்துக்கு உள்ளாகியுள்ள (உ+ம் மாக ருசியா, இந்தோசீனா......) நிலையில் அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியம் கடன் பிச்சையிட்டு முண்டு கொடுப்பதுடன் பொம்மையரசுகளை பாதுகாத்தும், உருவாக்கியும் ஐனநாயகம் பேசுகின்ற நிலையில், நாம் எந்த ஐனநாயகத்துக்கு குரல் கொடுப்பது என்பது எம்முன் உள்ள பிரச்சனையாகியுள்ளது.
இலங்கை முதல் புலம்பெயர் தமிழ் சிங்கள சமூகங்களின் சமூக அக்கறைக்குரியோர் என வலிந்து காட்டிக் கொள்வோர் சமூகம் பற்றிய அக்கறையை படிப்படியாக கைவிட்டுச் செல்கின்றனர். சமூகத்தின் நடைமுறை நெருக்கடிகள் மீது தமது எழுத்தை, பத்திரிகையை, நடைமுறையை நகர்த்துவதுக்குப் பதில் சமூகத்துக்கு வெளியில் ஆள்வோர்pன் நிலைக்காக நேரடியாகவும் மறைமுகமாகவும் குரல் கொடுக்கின்றனர். ஐனநாயகம் பற்றியும், மனித உரிமை மீறல் பற்றியும், தமது சொந்த வக்கிரங்களையும் பற்றி பேசியும் எழுதியும் கொள்ளும் இவர்கள் அதை இந்த ஏகாதிபத்திய எல்லைக்குள்ளான கோட்பாட்டுதளத்துக்குள் சிந்தித்தும் எழுதியும் சமூகத்துக்கு எதிராக திட்டவட்டமாக ஏகாதிபத்தியத்துக்காக சேவை செய்கின்றனர்.
இன்று தேவை சமூகம் பற்றிய பார்வை. சுமூகத்தின் நேரடிப்பிரச்சனை மீது தலையிடவும் அதை மாற்றவும் புரட்சி செய்யவும் உலகளாவிய ரீதியில் ஒத்த புரட்சிகர கோரிக்கையுடன் உள்ளடக்கிய போராட்டமார்க்கம் எல்லாத்துறையிலும் முடுக்கிவிடப்படவேண்டும். இது அல்லாத அனைத்து ஏகாதிபத்திய கோட்பாட்டை அம்பலப்படுத்தியும் வேர் அறுத்தும் போராடவேண்டும். உங்கள் எழுத்துகளை, பத்திரிகைகளை, நடைமுறைகளை உலகளாவிய ரீதியில் சமூகத்தைப் புரட்டிப் போடும் புரட்சிக்காக மாற்றக் கோரி சமூக அக்கறைக்குரியவர்களிடம் அறைகூவுகின்றோம். இதை எதிர்த்த, மறுத்த, பேசாத அனைத்தின் பின் உள்ள ஏகாதிபத்திய சார்புத்தனத்தை அம்பலப்படுத்தி புரட்சி செய்ய அறைகூவுகின்றோம். இது மட்டும்தான் இன்று சமூகத்தின் வாழ்வோர் முன் உள்ள ஒரேஒரு புரட்சிகர முற்போக்கு மார்க்கமாக உள்ளது.