இலங்கையில் இனங்களுக்கிடையே தொடரும் யுத்தமும், அதன் பரிணாமவளர்ச்சியும், இலங்கையில் முற்போக்கு மற்றும் புரட்சிகர அரசியலும் அதை ஒட்டிய சக்திகளை இல்லாது ஒழித்துக் கட்டுகின்றது. இவை ஒருபுறம் அழித்தொழிப்பு மூலமும், மறுபுறம் சொந்த வர்க்க அடிப்படை மாற்றத்துடன் முற்றுப் பெற்றுவருகின்றது.
சமூக அக்கறைக்குரியவர்களாக காட்டி நடமாடியவர்கள், இன்று பலவகையான பிழைப்புவாத சந்தர்ப்பவாத கருத்துகளை தமது பூர்ஷ்சுவா நிலைக்கு ஏற்ப விசுவாசமாக சுவீகரித்துக் கொண்டனர். இதன்மூலம் நேரடியாக மறைமுகமாக ஏகாதிபத்தியத்துக்கு கோட்பாட்டிலும் நடைமுறையிலும் வெட்க்கமின்றி சேவகம்செய்கின்றனர். இவர்கள்தான் இன்று இலங்கையிலும் புலம்பெயர் தமிழர்களினதும் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கு தடையான முதல் எதிரியாக இன்று பரிணாமித்துள்ளனர். இவர்களுக்கு எதிரான போராட்டம் கோட்பாடு மற்றும் நடைமுறை தளத்தில் கட்டியமைக்கப்பட வேண்டிய அளவுக்கு இன்றைய நிலையில் அவசியமாகின்றது.
இந்த அரசியல் மற்றும் நடைமுறை கோட்பாட்டு உருவாக்கத்துக்கு உள்நாட்டு மற்றும் சர்வதேச புரட்சியை காட்டிக் கொடுப்புடன், குறிப்பாக அவர்களின் சொந்த வர்க்க அடிப்படை மீதான விழிப்புநிலையில் அரங்கிற்குவந்துள்ளது.
இன்று இலங்கையில் சிங்கள பேரினவாதம் உச்சத்தில் விசுபரூபம் எடுத்து ஆடிக்கொண்டிருக்க, அதற்க்கு துரோக இயக்கங்கள் முண்டுகொடுத்து தூக்க, மறுபுறம் புலிகளின் சுத்த இராணுவகண்ணோட்டத்துடன் கூடிய ஜனநாயக மறுப்பை அடிப்படையாக கொண்டு இராணுவவாதமாக சீரழிகின்றது. இந்நிலையில் சிங்கள முற்போக்கு மற்றும் நடுநிலைப்பிரிவுகளை வென்று எடுத்தல் அல்லது நடுநிலைப்படுத்தலுக்குப் பதில், அவர்களை எதிரியாக மாற்றும் நடவடிக்கைகள் தொடர்ரும்நிலையில், சோவியத் மற்றும் சீனாவில்அப்பட்டமான முதலாளித்துவம் அரங்கேறி முன்னைய கம்யூனிச வெற்றிகளை சேறுயடிக்கும் நிலையில், உலகில் நூறுவீத செய்தி அமைப்பை ஏகாதிபத்தியங்கள் தனது கட்டுப்பாட்டில் கொண்டு இருக்கும் நிலையில், உலக ரவுடியான அமெரிக்கா ஏகாதிபத்திய ஒற்றை உலக சாகத்தில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம்.
இன்நிலையில் ஏகாதிபத்திய செய்திகள் மட்டுமே செய்தியாக, முன்னால் சோசலிச அரசுகள் மீது அவதூறுகள் காறி உமிழும் நிலையில், சமூக அக்கறைக்குரியவர்களின் பொருளாதார முன்னேற்றம் மற்றும் முற்றாக மக்களிடம் இருந்து அன்னியப்பட்ட நிலையில், தமது அரசியல் நிறத்தை மாற்றிக் கொள்ள, ஏகாதிபத்திய கோட்பாடுகள் ஏகாதிபத்திய மனிதாபிமான செயல்பாடுகள் இனிப்பான தேன்தடவிய உணவாக இவர்கள் முன் ஜனநாயகத்தின் பெயரில் இன்று உள்ளது.
இலங்கையில் ஏற்பட்ட யுத்தம், தொடர்ச்சியான தமிழினச் சுத்திகரிப்பும் இன அழிப்பு, இயக்க உள்வன்முறைகள் கொலைகள், இயக்க மோதல்கள் கொலைகள், ஜனநாயக விரோத கைதுகள் படுகொலைகள், மற்றைய இனங்கள் மீதான தமிழினத் தாக்குதல்கள் படுகொலைகள் சமூகத்தின் மீது அக்கறை கொண்ட கணிசமான பிரிவுகளை சொந்த மண்ணில் இருந்து வலுக்கட்டாயமாக நாட்டைவிட்டு துரத்தியது.
இந்தவகையில் கொழும்புக்கும் இந்தியாவுக்கும் புலம்பெயர்நாட்டுக்கும் வலுக்கட்டாயமாக தம்மைத்தாம் நாடுகடத்திக் கொள்ள கணிசமானவர்களை நிர்ப்பந்தித்தது. இதைவிட முன்பே பொருளாதார காரணத்துக்காக முன்னமே புலம்பெயர்ந்தவர்களில் சிலர், இங்கு இயக்கசார்பு அரசியலில் ஈடுபட்டு இருந்தவர்கள், இயக்க அழிவுடன் தம்மை இந்த புலம்பெயர் சமூக அக்கறைக்குரியவர்களின் பட்டியலில் அடையாளப்படுத்தினர். இதைவிட எந்த அரசியல் இயக்த்திலும் ஈடுபாடத சிலர்ரும் தம்மை இப்படி அடையாளப்படுத்தினர்.
இந்த சமூக அக்கறைக்குரிய பிரிவு, இலங்கையில் மத்திய மற்றும் மேல்தட்டு பூர்ஷ்வா வர்க்கப் பின்னணியில் இருந்து வந்ததுடன், பெரும்பகுதியினர் முன்பு உழைப்பில் ஈடுபடாததுடன், இராணுவ சாகசத்துக்கு உட்பட்டு இயக்கங்களை நோக்கி ஒடிய தொடர்ச்சியில், எந்த விதத்திலும் மக்களுக்குள் இயங்காத இராணுவவாதத்துக்குள் தான் இவர்களின் அரசியல் தொடங்கியது.
பின்னால் அதற்க்குள் ஆங்காங்கே இருந்த அரைகுறையான புத்தகபடிப்பு மார்க்சியம் மூலமும்;, துரோகம் இழைத்த இந்திய போலி கம்யூனிசக்கட்சியின் வகுப்புகள் மூலமும், நடைமுறையற்ற வரட்டுவாத மார்க்சிய வேடமிட்ட பிழைப்புவாத புத்தியீவிகளின் சவாடல் மார்க்சியம் மூலமும், நடைமுறையற்ற அரைகுறை பிரசவ மார்க்சிய நம்பிக்கைகளுடன், புலம்பெயர்ந்த இந்த அரைவேக்காட்டு மார்க்சியத்துக்கு அப்பால், அன்றும் இன்றும் மார்க்சியம் என்றால் என்ன எனத் தெரியாத அறிவுச் சூனியங்களாகவே அன்றும் இன்றும் நடமாடுகின்றனர்.
குறிப்பாக புலம்பெயர் நாடுகளில் இந்த பிரிவு முதல் முதலாக பணத்தை அடைய முடிந்த நிலையில் இது, இந்தப் பிரிவுக்குள் விமர்சித்து வேரருக்காது மறைந்து கிடந்த பூர்ஷ்சுவா இயல்பை மேல் கொண்டுவந்தது. இதனால் இவர்கள் காட்டிக் கொண்ட சமூக அக்கறை மெதுவாக கைவிட தயங்காத இயல்பான போக்கு அவர்களின் வாய்ச் சவாடலை மீறியும் விழித்துக்கொண்டது. இதனால் பலர்தமது முன்னைய பம்மாத்தை கைவிட்டு மிக மோசமான மனிதர்களாக மாறியுள்ள நிலையில், எஞ்சியுள்ளோர் அதே பாதையை நோக்கி படிப்படியாக புதிய கோட்பாட்டு தாவல்மூலம், எல்லாவற்றையும் கைவிட தயங்காத நிலையில் இன்று முன்னேறுகின்றனர்.
நடைமுறையற்ற மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான போராட்டத்தை கைவிட்ட கோட்பாட்டுத் தேவை மட்டுமே தொடர்ந்து பிரமுகராகவும், சவாடல் அடிக்க நடைமுறையற்ற சூனியத்தின் மீதான தேவையாக இருந்தது மட்டுமின்றி, மக்கள் பற்றி அக்கறையற்ற போக்கு இலங்கை நிலையில் இது சாத்தியமானதாகவும் உள்ளது.
இன்னுமொருபிரிவு நாட்டைவிட்டு நாடுதாண்டிய நிலையில் அங்கு புரட்சி செய்யமுடியும் என்ற சொல்அலங்கார புத்தக பூச்சிகளாக, திரொக்சிய கோட்பாட்டுடன் மக்களை ஏமாற்றி கதைத்தே புரட்சிசெய்கின்றனர். நடைமுறைப்புரட்சி சொந்த நாட்டில் சாத்தியமாக்க போராட முடியாத இப்பிரிவு, வாழும் நாட்டில் தமது இருத்தலை பாதுகாக்க அங்குபுரட்சி செய்வது பற்றி பிதற்றுகின்றனர்.
புரட்சியை கைவிட்டவர்கள் செய்தது போல் இவர்களும் கம்யூனிசக் கட்சி என்ற பெயரை சோசலிச சமத்துவக் கட்சி எனமாற்றி முதலாளிக்கு பங்கம் ஏற்படாத, புரட்சியை பேசாத விளம்பர மலிவுக்கு கட்சியை மாற்றியவர்கள், புரட்சி செய்வதுகூட ஓதுவதற்க்கு மேல் தாண்டியதல்ல.
யாருக்காவது ஓதவெளிக்கிட்டபின் அங்கு முரண்பட்ட நபர்கள் சென்றால், நாயைக் கண்டு ஒடுபவர்கள்போல் நெளிந்து வளைந்து ஒடுகின்றனர்.
கருத்துக்கு நேரடியாக பதில் அளிக்க முடியாத கோழைத்தன அரசியலுடன், எதிர்க்கேள்வி கேட்காத சட்டாம்பிமார்களாக இருக்க விரும்பும் இப்பிரிவு புரட்சிபற்றி வாய்சவாடலடித்து மக்ளை ஏமாற்றுகின்றனர்.
எந்தவிதமான இயங்கியல் தன்மையுமின்றி, மார்க்சியத்தின் அடிப்படை வர்க்கப் போராட்ட விதிகளை மறுத்தபடி பிரச்சனைக்கு நேரடியாக பதிலளிக்க மறுத்து, பிரச்சனைகளுக்கு நேரடியாக பதிலளிக்காத மேதமை தாவல்கள் மூலம் ஏமாற்றி பிழைக்கின்றனர்.
மற்றும்மொருபிரிவு ஏகாதிபத்திய சம்பளப்பட்டியலில் இணைந்து கொண்டதன் மூலம், அதையே சமூகசேவையாக பிரகடனம் செய்யவும் தயங்காத, அதையே உண்மையான நடைமுறை செயல்தள களப்பணி என இன்றைய இலங்கை இராணுவ யுத்த சூனியவாதத்துக்குள், ஏகாதிபத்திய தயவுடன் நிறுவத் தயங்காது உரத்துகுரல் கொடுக்கின்றனர்.
இன்று ஏகாதிபத்திய சம்பளப் பட்டியலில் உள்ளோர் இலங்கை - புலம்பெயர்நாடென எங்கும் குட்டிபோட்ட பூனை போல் பல்கிப் பெருகுகின்றனர். இதுபோல் அறக்கட்டளை பல்கலைக்கழக ஆய்வுகள்............எனப் பற்ப்பலவாக பணம் பெற்று சமூகமாற்றம் பற்றி வீரவசணம் பேசுவது அதிகரித்துச் செல்கின்றது. புலம்பெயர் நாடுகளில் சமூக அக்கறைக்குரியவர்களாக காட்டிக் கொண்டு பிழைக்க தெரிந்தவர்கள், பெரிய சம்பளத்துடன் பெரிய பணப் பொதிகளுடன் சிங்கள - தமிழ் எல்லைப்புறங்களிலும் இராணுவ கட்டுப்;பாட்டு பிரதேசங்களிலும் தரை இறங்கிவருகின்றனர். இந்த ஏகாதிபத்திய கைக்கூலிகள் மட்டும்தான் இன்று இலங்கையில் இராணுவம் - புலியை மீறி எங்கும் எதையும் செய்யும் வல்லமையை ஏகாதிபத்தியம் ஏற்படுத்தி கண்காணிக்கின்றது.
மக்களின் துன்பம், துயரம், பசி, பட்டிணி, இழப்புகள், மரணங்கள், வெட்டவெளி புலம்பெயர்வுகள், முடிவற்ற விதவைகளின் உற்பத்தி, இராணுவ ஆணாதிக்க கொடூரங்கள் என எங்கும் எதிலும் விற்பனைக்குரிய விபச்சார மையங்களாக, ஏகாதிபத்திய கனவுக் கோட்டையாக, ஏகாதிபத்தியத்தின் செயல்தள வீரர்களின் நடைமுறை செயல்தள மையங்களாக இன்று இவை மாறி உள்ளது.
இந்தமனித அவலங்களை தமது வயிறுவளர்க்கவும், இதன் மூலம் ஏகாதிபத்திய சுரண்டலுக்கு தேவையான அரசியல் அடிப்படையை ஏற்படுத்தும் எட்டப்பர்கள் தான், இன்று ஒடுக்கப்பட்ட மக்களின் முதல் எதிரியாக உள்ளனர். இவர்கள் உடன் ஒப்பிடும் போது யுத்தத்தை செய்பவர்களின் மக்கள் விரோதம் மக்கள் முன் நிர்வாணமாக உள்ளதால், இவர்களை மக்கள் எப்போதும் ஒளிவு மறைவுயின்றி நேர்ருக்குநேர் சந்திக்கக் கூடியவர்களாக உள்ளனர்.
ஆணால் ஏகாதிபத்தியத்துக்கு சேவை செய்யும் எட்டப்பர்கள்தான், மக்களின் ஆழ்மனங்களில் கீறியும், கொரிலாவாக எப்போதும் உள்ள மக்களுக்குள் ஊடுருவி உள்ளிருந்தே அரித்து கொறித்து மக்களை சூறையாடியும், மக்களின் போராட்டங்களை சிதைத்தும் ஏகாதிபத்தியத்துக்கு சார்பான வகையில் சமூக இயக்கங்களை வழிநடத்தவும் மட்டுப்படுத்தவும், ஏகாதிபத்தியத்தால் திட்டமிட்டு பயிற்றுவிக்கப்பட்ட செயல்தள ஊழியர்களாக உள்ளனர். இவர்கள் இன்று அப்பட்டமாக சீலை உரிந்து துரோகம் இழைத்த இயக்கங்களைவிட, மிக மோசமான துரோகிகள் மட்டுமின்றி மக்களின் முதல் எதிரியாகவும் உள்ளனர். ஜனநாயக மறுப்பு மக்கள் விரோத போராடும் அமைப்புகளுடன் கூட சில நிபந்தனையின் அடிப்படையில் கூட்டுக்கு போக முடியும், ஆணால் இந்த ஏகாதிபத்திய சம்பளப் பட்டியல் செயல்தள வீரர்கள் உடன் எந்தக் கூட்டும் சாத்தியமில்லை.
கொழும்பு - புலம்பெயர் நாட்டில் இருந்து செல்லும் இந்த அற்ப ஏகாதிபத்திய பிறவிகள் இன்று பெண்கள் அமைப்புகள், அகதிகள் குடியேற்றம், அகதிச்சேவை, விதைவைகளுக்கு மறுவாழ்வளிப்பு, சமூகநோக்கு பத்திரிகை என எண்ணற்ற செயல்தளங்களை அரசு - புலியை மீறி எங்கும் செயல்படக் கூடிய ஒரே செயல்தள அமைப்பாக மாற்றுவதில் ஏகாதிபத்தியம் வெற்றிபெற்றுள்ளது.
காட்டிக்கொடுத்தும் கூட்டிக்கொடுத்தும் பிழைக்கும் இந்தப்பிரிவு போல் அடுத்தபிரிவு முதுகுசொறியும் பிழைப்புவாதிகளாக, கும்பல் சேரும் குழுக்களாக இன்று உள்ளனர். இதில் தலித் என்றும், பின்நவீனத்துவம் என்றும் எண்ணற்ற கலவைச் சாக்கடைக்குள் மூழ்கி எழுந்த நாற்றத்துடன், முதுகு சொறிவதும், தம்மைத்தாம் முதுகு சொறிந்தும் திரிகின்றனர்.
இதில் ஒருபகுதியினர் தரகுமுதலாளிகளுக்கும் நிலப்பிரபுத்துவத்துக்கும் சார்பான வீரகேசரியிலும், சிங்கள இனவாத அரசின் தினகரன் பத்திரிகை முதல் ஜரோப்பிய பத்திரிகைளிலும் தம்மைத்தாமே புகழ்ந்து எழுதிக்கொள்கின்றனர்.
இவர்கள் கோட்பாடுயற்ற சந்திப்புகள், பத்திரிகைகள், வாதங்கள் என பலவற்றை முன்தள்ளுகின்றனர். இந்த சந்திப்புகளில், பத்திரிகைகளில் ஆணாதிக்கம் சார்பாக, சாதிஆதிக்கம் சார்பாக, பாhப்பனியம் சார்பாக, இந்துத்தத்துவம் சார்பாக, ஏகாதிபத்தியம் சார்பாக, குறுகிய இனவாதம் சார்பாக, நாசிகள் சார்பாக, இனவாத சிங்கள அரசு சார்பாக, துரோக இயக்கங்கள் சார்பாக பேசவும் எழுதவும் முடியுமென வாதிட ஜனநாயகத்தின் பேரால், புதியதை தேடுவதன் பெயரால் கட்டுடைப்பின் பெயரால் பல வண்ண விளக்கங்கள் மூலம் உரத்த பிரகடனம் செய்கின்றனர். ஏன் ஜனநாயக விரோதத்தைக் கூட மறுப்பின்றி பிரகடனம் செய்ய முடியும் என்பதை பலமுறை இவர்கள் நிறுவிக் காட்டியுள்ளனர். இவர்கள் தமது சந்திப்புகளில் பத்திரிகைகளில் ஒடுக்கப்பட்ட மக்களைப் பிரதிநிதிப்படுத்தி வரையறுப்பதில்லை மாறாக எல்லா மக்களையும் பிரதிநிதித்துவம் செய்வதாக கூறிக் கொண்டு சுரண்டும் வர்க்க கோட்பாட்டுக்கு நனவு பூர்வமாக செயல்படுகின்றனர்.
ஒரு விபச்சாரியைப் போல் திறந்துவைத்து இருக்க கோரும் இவர்கள், ஒடுக்கப்பட்ட மக்களும் அதன் கோட்பாடுகளையும் கதைக்க எழுதமுடியும் எனக் கூறுவதன் மூலம், அவர்களையும் தம்முடன் விபச்சாரம் செய்ய பாய் விரித்து அழைக்கின்றனர். இதன் மறுபக்கத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் குரல் அனுமதிக்கப்படுவதில்லை என்பதை பல முறை மீளமீள நிறுவியுள்ளனர்.
இவர்களின் விபச்சார சந்திப்புகள் பத்திரிகைகள் எப்படி எதை அடிப்படையாக கொண்டு புகுந்து கொண்டது என ஆராய்ந்தால் அதிர்ச்சிதான் எமக்கு கிடைக்கும். ஆதை ஆராய்வோம்.
இது ஏகாதிபத்தியத்தின் உலகமயமாதல் கோட்பாட்டுடன் தொடர்புடையது. உலகமயமாதல் மூன்றாம் உலகநாடு முதல் எல்லா மக்கள் இடமும் எதைக்கோருகின்றனர்ரோ, அதை அப்படியே முற்போக்காக வடிவம் கொடுத்து மீளக் கோருகின்றனர். உலகமயமாதல் உலக சந்தையை திற எனக் கோருகின்றது. போட்டிச் சந்தை, எல்லோரும் சுதந்திரமாக வியாபாரம் செய்ய (எழுதவும், கதைக்கவும்) இடம்வேண்டும் என்கிறது. சந்தையில் எது வெல்கிறதோ அதை பாதுகாப்போம் (இதை இவர்கள் கோட்பாட்டில் கோருகின்றனர்) என்கிறது.அதாவது இவர்கள் கூறுவது போல் எல்லா கருத்தும் முட்டி மோதி ஒன்று இறுதியில் வெல்லும் என்பதைத்தான், ஏகாதிபத்தியம் இவர்களின் கருத்துறை உட்பட எல்லாவற்றிலும் விதிவிலக்கின்றி கோருகின்றது.
இதற்க்கு இறக்குமதித் தடை, மானியம் , தேசியம் போன்ற ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சாதகமான அனைத்தையும் நீக்கு என்கிறது. இவர்களின் பத்திரிகை சந்திப்பு போல் தடையற்ற சூறையாடலுக்கு ஏகாதிபத்தியம் கோருவது மட்டுமின்றி பாதுகாக்க இவர்களைப் போல் போராடுகின்றது.
இதை ஏகாதிபத்தியம் பொருளாதாரம், பண்பாடு, கலாச்சாரம் என அனைத்திலும் இடைவெளியின்றி கோருவதுடன் அதை நடைமுறைப்படுத்தி பாதுகாத்து போராடுகின்றது. இவர்களும் தமது சந்திப்புகளிலும் பத்திரிகைகளிலும் எந்த திட்டமுமின்றி ஏகாதிபத்திய உலகமயமாதல் கோட்பாட்டுக்கு அமைய முற்போக்கின் பெயரால், ஜனநாயகத்தின் பெயரால், கட்டுடைப்பின் பெயரால், சுதந்திர விவாத்தின் பெயரால் ஏகாதிபத்தியம் கோருவது போல் அதை மீளக் கோருகின்றனர்.
அண்மையில் பிரான்சில் அமெரிக்கா கலாச்சாரத்தை குறிப்பாக அமெரிக்க திரைப்படங்களை தடுக்கும் பிரான்சின் சட்டத்தை நீக்கக் கோரி இவர்களைப் போல் அமெரிக்கா குரல் கொடுத்தது. பிரான்ஸ் மற்றைய துறைகளில் இதை உலகளாவிய ரீதியில் கோரியும் கலாச்சாரத்தில் அனுமதிக்க முடியாது என்கிறது. ஆணால் அமெரிக்கா இவர்களைப் போல் எல்லா கலாச்சாரமும் முட்டி மோதட்டும் என்கிறது. அதில் வெல்வதைக் கொண்டு நாம் உலக கலாச்சாரத்தை தீர்மானிப்போம் என்கிறது. இவர்களோ மோதி வெல்லும் கோட்பாட்டைக் கொண்டு புரட்சி செய்வோம் என்கின்றனர். அதாவது இவர்கள் தேடிக் கண்டுபிடிக்கும் மட்டும் மக்கள் செம்மறி மாதிரி இருக்க கற்றுக் கொள்ள வேண்டும் என்கின்றனர்.
ஏன் அண்மையில் தரகு பார்பாணிய இந்தியாரூடே தனது ஆசிரியர் தலையங்கத்தில், பத்திரிகைத்துறையை ஏகாதிபத்தியத்துக்கு பரந்தவிவாத தளத்துக்கு திறந்து விடவேண்டும் என ஜனநாயகத்தின் பெயரில் எந்தவேறுபாடுமின்றி இவர்களைப் போல் கோரியிருந்தனர். அப்போதுதான் மக்கள் செய்தியைப் படித்து உண்மையை வந்தடைய முடியும் என இவர்களைப் போல் ஏகாதிபத்தியத்துக்காக எச்சில் வடிய எழுதினர். இவர்கள் எல்லாக் கோட்பாடும் முட்டி மோதித்தான் புரட்சி செய்யும் கோட்பாட்டை வந்தடைய முடியும் என்கின்றனர். இதையே இந்தியவில் நிறப்பிரிகை பத்திரிகைக் குழுவும், அதன் சந்திப்புகளும் மாபெரும் கண்டுபிடிப்புகளாக பீற்றியபடி, இந்தியாரூடே வழியிலும் ஏகாதிபத்தியக் கோட்பாட்டு வளர்ச்சியில் முன்வைத்து வம்பளக்கின்றனர்.
இதையே அண்மையில் பிரான்சின் வலதுசாரி கட்சி நாசிகள் உடன் கூட்டுச் சேர்ந்து பிரான்சின் சில அதிகார மையங்களை கைப்பற்றிய போது, இங்கிலாந்து தொழில்கட்சியைச் சேர்ந்த பிரதமர் டொனிபிளேயர் பிரான்சின் பாராளுமன்றத்தில் பேசும் போது, தான் வலது - இடது அற்ற பாதையில் போவதாகவும் (இவர்களைப் போல்), அதை பிரன்சில் நடைமுறைப்படுத்த கோரியபோது பிரான்சின் ஆட்சியளார்கள் வலது - இடது வேறுபாடுயின்றி தமது வாழ்த்துகளை தமது கைதட்டு மூலம் தெரிவித்துக் கொண்டனர். அதாவது வலது - இடது இனித் தேவையில்லை எல்லோரும் சேர்ந்து கூடிச் சுரண்டுவோம் என்பதைத்தான், கோட்பாடற்ற சந்திப்புகளில், பத்திரிகைகளில் கூடியிருந்து பேசி ஏமாற்றுவோம் என தமிழ் முற்போக்கின் பெயரால் பிரகடணம் செய்கின்றனர்.
கோட்பாடுயற்ற தேடுதல் தீர்வை பின்நவீனத்துவ சாக்கடையில் இருந்து இன்று இவர்கள் தோண்டித் துருவி முன்வைக்கின்றனர். பின்நவீனத்துவ சாக்கடையை முதலில் முன்வைக்க பிரான்சின் 1968இல் ஏற்பட்ட எழுச்சியே காரணமாகும். எழுச்சியின் தொடர்ச்சியில் இதைத் தடுக்க மக்கள் போராட்டங்களைக் கட்டுப்படுத்த ஆளும்வர்க்கங்களால் அதன் அருவருடிகளால் முன்தள்ளப்பட்ட கோட்பாடே இவை. இதைப்போன்று நடைமுறையில் ஆளும்வர்க்கத்தால் சேர்ந்து விவாதிக்க இவர்களைப் போல் உருவாக்கப்பட்ட முதலாளி - தொழிலாளி; (ஊழுஆஐவுவுநு நுNவுநுPசுஐளுநு) கொண்ட அமைப்புதான் பிரான்சின் சமூக நெருக்கடியை விலைபேசி காட்டிக் கொடுத்து விற்றது. இன்று பிரான்சில் லட்சத்துக்கு மேற்பட்ட முதலாளி - தொழிலாளி கூடித் தீர்வுகாணும் நடைமுறை பிரான்சின் தொழிலாளிவர்க்கத்தை விலை பேசி விற்க்கும் சந்திப்புகளாக உள்ளது.
தொழிலாளர் தனியாக அமைப்பாகி போராடுவதை முதலாளி விரும்பாதது போல், இவர்களும் இன்று ஒடுக்கப்பட்ட மக்கள் ஒன்றினைவதற்க்குப் பதில், கூடிக்கூலாவி குடித்துக் கும்மாளமடிப்பதன் மூலம் தீர்வு காணமுடியும் என முதலாளிகள் போல் பிரகடணம் செய்கின்றனர்.
அதாவது இன்று மக்கள் பலகட்சி தேர்தலில் மாறிமாறி கொள்கை கேட்டு வாக்களிப்பது போல் இவர்கள் அதையே தமது நடைமுறையாக கொள்கின்றனர். பலகட்சிகள் தமது கொள்கையை வைத்து மக்கள் தீர்வை அடைவது போல், நாமும் அதே வழியில் விவாதிக்கின்றோம் எனக் கூறுவதன் மூலம் கட்சிகள் மக்களை ஏமாற்றி பிழைக்கின்றனவோ அதுபோல் இவர்களும் நடைமுறையில் இருப்பதால் அதையே கோருகின்றனர்.
தொழிலாளி வர்க்கம் திட்டவட்டமாக தனக்கான தனியான அமைப்பைக் கொண்டு இருக்கவேண்டும். இதைவிடுத்து இவர்களைப் போல் முதலாளி - தொழிலாளி கூடியிருக்கும் அமைப்போ, விவாதமுறையோ துரோகத்துக்கு மட்டுமின்றி, முதலாளியின் தலைமையில் தொழிலாளரை இவர்களைப் போல் அணிதிரட்டுவதாகும்.
இன்று இந்தமாதிரி கோட்பாடு அற்ற கூட்டு கதம்ப சந்திப்புகள், பத்திரிகைகள் அடிப்படையில் ஒடுக்கப்பட்ட மக்களை ஏகாதிபத்திய கோட்பாட்டுக்கு பலியிடுவதற்க்கு செய்யும் திட்டமிட்ட சதியாகும்.
ஓடுக்கப்பட்ட மக்கள், மூன்றாம் உலகநாடுகள் தமது பொருளாதாரம் பண்பாடு கலாச்சாரத்தை திறந்த ஏகாதிபத்திய செயல்தளத்தில் குறைந்தபட்சம் பாதுகாக்கவே முடியாது. பின் வெல்வது எப்படி? இதற்க்கு நடைமுறை அணுபவம் உலகம் முழுக்க நீண்டு போய் உள்ளது. ஒடுக்கப்பட்ட மக்கள் தமது கோட்பாட்டை கோட்பாடுயற்ற திறந்த சந்திப்புகளில், பத்திரிகைகளில் வெல்வது இருக்கட்டும் முன்வைப்பதே வரையறுக்கப்பட்ட எல்லைக்கு அப்பால் சாத்தியமில்லை.
அண்மையில் வெளியாகிய மாசி "கவிதாசரன்" இதழில் எப்படி திறந்த விவாதம் நடத்தும் நிறப்பிரிகை விவாத அரங்கில் கருத்துகள் முன்வைப்பது மறுக்கப்பட்டு இருட்டடிப்பு செய்யப்படுகின்றது என்பதை, அதில் பங்குபற்றிய நிலையில் குறிப்பிட்டு எழுதப்பட்டுள்ளது.
ஏகாதிபத்திய தளத்தில் சரி அல்லது இதுபோன்ற கோட்பாட்டைக் கொண்ட எல்லா தளத்திலும் ஒடுக்கப்பட்ட மக்களினதும், மூன்றாம் உலகமக்களினதும் இருத்தலுக்கான அனைத்து அடையாளத்தையும் தின்று செறிக்கவும், பின் ஏப்பமிடவும் தான் இப்படியான விவாதங்களின் பின் உள்ள உண்மையான நோக்கமாகும்.
இன் நிலையில் ஒடுக்கப்பட்ட மக்கள் தமது விடுதலைத் தத்துவத்தையும் சரி, மூன்றாம் உலக மக்கள் தமது அடையாளத்தைப் பாதுகாப்பது சரி, திறந்த கோட்பாடு அற்ற செயல் தளத்தை எதிர்த்த ஒரு போராட்டத்தில் மட்டுமே பாதுகாக்கப்பட முடியும் என்பதற்க்கு நீண்ட பல வரலாறுகள் நீண்டு போய்யுள்ளது. அவை மட்டுமே உண்மையில் மனிதனின் போராட்டங்களை நடத்தின நடத்தும்.
இன்று புலம்பெயர் நாடுகளிலும் மற்றைய இடங்களிலும் கோட்பாடுயற்ற சந்திப்புகள், செயல் தளங்களில் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக் கோட்பாடுகளை தின்று செறிக்கப்படுவதுடன், அதன் மீதான சேறுயடிப்புகள் தான் விதிவிலக்கின்றி அரங்கேறுகின்றன. இது நேரடியாகவும் மறைமுகமாகவும் ஏகாதிபத்தியத்துக்கு சேவை செய்யும் வழியை, அவர்களிடம் இருந்தே இரவல் பெற்று கனவான நனவுகளுடன் மானம் வெட்கமின்றி அரங்கு ஏற்றுகின்றனர்.
இவர்கள் சீரழிவதுடன் மாறுபட்ட கோட்பாட்டு தளத்தில் வம்பளப்பு மையங்களாக மாறிவிடுகின்றது. இதனால் முதுகு சொறிவது தேவையான அடிப்படை விடையமாக மாறிவிடுகின்றது. இந்த முதுகு சொறிவு கூட வரையறுக்கப்பட்ட எல்லைக்கு அப்பால் அறிவு சூனியத்தால் மூழ்கிவிடுவதால், தமக்கு தாம் முதுகு சொறிவது அவசியமாகிவிடுகின்றது.
கோட்பாடுயற்ற சந்திப்புகள் கூட்டமுன்பே பத்திரிகைச் செய்தியை தயார் செய்தபடிதான் தமது முதுகுசொறிவைத் தொடங்குகின்றனர். இங்கு தமது பெயர் பத்திரிகையில் வருவதுதான் முக்கியமான விடையமாகி விடுகின்றது. இதனால் மற்றவர் கொண்டு முதுகு சொறிவது அல்லது தம்மைத் தாம் முதுகு சொறிந்து பத்திரிகைக்கு எழுதிவிடுகின்றனர். இந்த மோசடிக்கு புனைபெயரிலும் மற்றவர்களின் பெயரிலும் எழுதிவிடுகின்றனர். மறுபுறம் புத்தியீவிகள் பற்றி மயிர்பிளக்கும் தாக்குதலை தொடுக்கும் இவர்கள், புத்தியீவியாக நடமாட வேறு அங்கலாய்ப்புடன் நெளிந்து புரளுகின்றனர். தனிநபர் புகழ்பாடலை கண்டு சீறுவதாக காட்டும் இவர்கள், தம்மைத் தாம் தனிநபர் புகழ்பாடி அறிக்கை எழுதுகின்றனர்.
உதாரணமாக அண்மைய பாரிஸ் இலக்கியச் சந்திப்புபற்றி சரிநிகர்க்கு புனைபெயரில் எழுதியவர், தனக்கு வழக்கமாக முதுகுசொறிபவர்களை புகழ்ந்தபின், தன்னை புகழ்ந்து எழுதியது மட்டுமின்றி தன்னைத்தான் கவிஞர் எனப் போட்டும் புகழ்ந்துவிடுகிறார். இதுபோல் லண்டன் வெளி பத்திரிகைக்கு வழக்கமாக முதுகுசொறிபவர் தன்னைப்புகழ்ந்து எழுதியது மட்டுமின்றி, சரிநிகரில் தன்னைக் கவிஞர்எனப்போட்டு எழுதியவரை புகழ்ந்ததுமல்லாது அதில் இவரை புகழ்ந்த விசுவாசத்துக்கு ஏற்ப்ப ஒரேமாதிரி இருவரும் எழுதியிருந்தனர். இந்த முதுகுசொறிவில் தன்னால் முதுகுசொறியக் கூடிய வேறு ஒருவரின் பெயரைக் கூட பாவிக்க தயங்காத இயக்க மரபில் இருந்து கையாண்டுள்ளனர்.
இதுபோல் வீரகேசரி, தினக்குரல் ...............என எங்கும் தம்மைத்தாமும், மற்றவர்களையும் முதுகுசொறிந்த இந்த நபர்கள், தமது பெயர்களைப் போடுவதன் மூலம் இன்றைய நடைமுறையற்ற இராணுவ சூனியவாதத்துக்குள் பிழைத்துக் கொள்;ள அங்கலாயத்து, கொப்புமாறி கொப்பாக தாவி அலைகின்றனர்.
இன்று ஒருவரை புலி என்றும் ஈபி (நுPசுடுகு) என முத்திரை குத்திஅதில் வம்பளந்து பிழைப்பதும், பின் அவர்கள் உடன் கூடிக் கூலாவிக் கொண்டு நாய்பிழைப்பு நடத்துகின்றனர்.
இந்த நபர்கள் மக்களுக்கு வழிகாட்டி மக்களின் விடுதலைக்கு உழைப்பார்கள் என நம்ப முட்டாள்கள் அல்லத்தான். ஆணால் இன்றைய இராணுவ சூனியவாதத்துக்குள் சொந்த தனிநபர் புகழ்பாடல் மூலம் பிரமுகர்களாக காலாற நடக்க முடிகின்றது.
இந்த நபர்களைப் போல் இந்தியாவில் அ.மார்க்ஸ் - ரவிக்குமார்ரும் மற்றும் இந்தியாவில் ஏகாதிபத்திய கோட்பாடுகளை உடனுக்கு உடன் சுடச்சுட வியாபாரம் செய்யும் எல்லா எடுபிடிகளும் சாக்கடை அரசியலால் உயிர் வாழ்பவர்களே.
ஏகாதிபத்தியம் வீசும் எச்சில் எலும்புகளை கௌவ்வியபடி அதற்காக உழைத்து நியாயப்படுத்தும் தரகுமுதலாளி போல், இவர்களும் அதற்காகவே கோட்பாட்டில் வாய்யைப் பிளந்து அலைகின்றனர்.
பின்நவீனத்துவம், தலித்தியம்..............என முன்வைக்கும் எல்லா வண்ணக் கோட்பாடுகளும் எப்படி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு விடுதலையை போராட்ட வழியை காட்டும் எனக் கேட்டால் கண்முழி பிதுங்க அப்படி ஒன்று உண்டா என வாய்பிதுங்கி நிற்கின்றனர்.
இவர்கள் தாம் வைக்கும் கோட்பாடுகளில் தெளிவுமின்றி, மார்க்சியம் பற்றி எந்த அறிவுமற்ற சூனியங்களாக இருந்தபடி, மார்க்சியம் மீது ஏகாதிபத்திய எச்சிலில் இருந்து தாக்குகின்றனர். பாட்டாளி வர்க்க ஜனநாயகம் மீது ஏகாதிபத்திய சக்திகளை நக்கி காறி உமிழ்கின்றனர்.
தத்தமது கோட்பாடுகள் எப்படி மக்களை வழிநடத்தும், எப்படி அது போராடும், என்ன தீர்வைத் தரும், முரண்பாடுகளை எப்படி கையாளும் என எதுவும் முன்வைக்க முடியாத, தமது இயல்பான பூர்ஷ்சுவா தப்பித்துச் செல்லும் இருத்தலுடன், தெளிவற்ற சூனியத்தை முன்வைத்து புலம்பித் திரிகின்றனர்.
தலித் எப்படி தலித் விடுதலையைத் தரும், பின் நவீனத்துவம் எப்படி விடுதலையைத் தரும் என சொல்லத் தெரியாத இவர்கள் இந்தியாவில் உள்ளவர்கள் போல் முதுகுசொறியச் செய்வதுடன், திறந்த விவாதம் பத்திரிகை எனத் தொடங்கி விபச்சாரம் செய்கின்றனர்.
இவர்கள் நடைமுறையற்ற பிரமுகர்த்தனத்தை விரும்புவதுடன், சமூக அக்கறைக்குரியவர்களை சிதைக்க தம்மால் இயன்ற அனைத்தையும் செய்கின்றனர். மக்களின் துன்பம் துயரங்கள் தொடர வேண்டும் என்ற நனவான கனவுடன், ஏகாதிபத்திய கோட்பாட்டுக்கு நனவாக செயல்படுகின்றனர்.
இப்படி அ.மார்க்சின் கோட்பாடு அருள் பெற்று வரிந்து கட்டி நின்ற மனிதம்குழுவினர் இன்று சீரழிந்து போன வரலாறு, என்னால் அன்று சரியாக சுட்டிக்காட்ட முடிந்தது. அன்று விடாப்பிடியான உடும்புபிடியான மூடிமறைப்புடன் கூடிய தாவித் திரிந்த விவாதம் மூலம் தம்மை கவசமிட்டவர்கள், இன்று அதன் முன்னணி பிரிவு புலிக்காக திரைப்படம் (முன்பு மனிதம் 1,2,3 என்ற தரமான வீடியோ கசெட்டை வெளியிட்டனர்.) தயாரித்து போட்டிக்கு அனுப்பிய போது, யார்ரும் மூக்கில் விரல்வைக்க முடியாத நாற்றத்தால் நாறத் தொடங்கியுள்ளது.
அ.மார்க்ஸ்க்கு எந்த கோட்பாடு புலிகள் உடன் கூடிக்குலாவ உதவியதோ, அதைக் கொண்டே அ.மார்க்ஸ் போல் புலிகள் உடன் மனிதம் குழுவும் கைகோத்துக் கொண்டது.
ஏன் அண்மையில் பாரிசில் உள்ளோர் ஜ.பி.சி தமிழ் சேவைக்கு (சுயுனுஐழு) நிகழ்ச்சி நடத்தியதும் இதே கோட்பாட்டின் தொடர்ச்சியில் தான். இந்த ஜ.பி.சி யை முன்பு புலி எனக் கூறித் திரிந்ததும் இவர்கள்தான் என்பது ஆச்சரியமான விடையங்கள் அல்ல இன்றைய கோட்பாட்டு நடைமுறைகள்.
பாரிஸ் தமிழ்ஒலியும், லண்டன் ஜ.பி.சி பச்சை குறும் தேசியத்தை கையாள்வது மட்டுமின்றி, புலிகளின் போராட்டத்தை ஒரு இந்து போராட்டமாக சிதைக்க, பெரியளவில் பிரச்சாரத்தை செய்யும்களத்தில் இறங்கியுள்ளனர்.
இந்தியாவின் பாசிச பார்ப்பானிய இந்துத்துவ பாரதியஜனதாவை ஊழலற்ற மனிதாபிமான ஜனநாயக சோசலிச மக்கள் அரசுயென பார்பானிய சதியுடன் கூடிய வர்ணனையை ஓரு பார்ப்பானனை விட கச்சிதமாக தொடங்கியுள்ளனர்.
பார்ப்பனியத்துக்காக சேவை செய்யும் யமுனா ராஜேந்திரன் இச்சேவையில் ஆய்வு என்ற போர்வையில் கோட்பாடற்ற அரசியல் சந்தர்ப்பவாத பேர்வழியாக ஈரோஸ் போல் இயங்குகின்றார்.
இந்தநபர் புலிகளுக்குளும் புலிகளுக்கு எதிரானவர்களுக்கும் முற்போக்கு வேடம் போடமுடிந்த சக்களத்தி அரசியல் அ.மார்க்சின் பின்நவீனத்துவ பிதற்றலில் மையமிட்டு தொடங்கிறறு.
இந்த நபர் 'ரங்கூனுக்கு' அப்பால் என்ற சினிமா தொடர்பாக நோர்வை 'சக்தி' இதழில், பர்மாவில் இராணுவ சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக வழமைபோல் தலைமை தாங்கும் வெளிநாட்டு நாய்;, அமெரிக்காவின் வாலாட்டும் நாயாக அமெரிக்காவை தலையிடக் கோரி, அமெரிக்காவின் மறுகாலணியாக புதிய ஒழுங்குக்கு உட்பட்ட ஜனநாயகத்தை பெயரளவில் இராணுவத்திடம் மீட்டுத்தரக் கோரி, அமெரிக்கா தூதரகம் முன் ஆர்ப்பாட்டம் செய்வதை முற்போக்கான மனிதத்துவத்தைக் கொண்ட படம் எனச் சொல்லும் துணிவுக்கு, ஒடுக்கப்பட்ட மக்கள் துரோகிகள் என்ற பரிசே கொடுப்பார். இதைப் போல் மூன்றாம் உலக எட்டப்ப துரோகிகள் படம் எடுக்க வேண்டும் எனக் கோரி வேறு ஆலோசனை வைக்கின்றார். இப்படி எல்லாம் துரோகமான கோரிக்கைகளை மக்களுக்கு முன்வைக்க உதவும் கோட்பாடு பின்நவீனத்துவ சாக்கடைக்குள் தான் உயிர்த்தெழுகின்றது.
இதே போல் பச்சை பாசிச பார்பனியத்தை நியாயப்படுத்திய பம்பாய் படத்தை இதே தத்துவத்தால் நியாயம் கொடுத்து மகுடம் சூட்டி, தமிழீழத்துக்கு போராடும் இயக்க சார்பு பத்திரிகையில் எழுதிய பார்பனியத்துக்கு என்ன பதில் என்பதை, பார்பனியத்துக்கு எதிராக போராடும் ஒரு வழியில் மட்டும்தான் பதில் கூறமுடியும்.
ஏன் அம்மா 5இல் யதார்த்தப் படைப்பு பாசிசம் பயங்கரவாதம் என ஏகாதிபத்தியத்துக்காக, அதைப் பாதுகாக்க எழுதிய போது புல்லரிக்கத்தான் செய்கின்றது. ஒடுக்கப்பட்ட மக்கள் அனுபவிக்கும் யதார்த்தம் பேசுவது, அதனால் கிளர்ந்து எழுவதும் விடுதலையைக் கோருவதும் பாசிசமாக பயங்கரவாதமாக இருக்கும் என்ற பார்ப்பனிய நரித்தனம் தான் பம்பாய் முதல் கொண்டு எல்லாவற்றையும் நியாயப்படுத்தும் துணிவும், அதை புலிகளின் தேசியம் சார்பான பத்திகையிலும் முற்போக்கு பத்திரிகையிலும் எழுதும் துணிவுக்கு, அவரிடமல்ல எம்மிடம் கேட்க்கப்பட வேண்டிய கேள்வியாக உள்ளது.
ஆபிரிக்கா வானம் என்ற அவரின் புத்தகத்தில் சோவியத் கமியூனிசக்கட்சி ஆட்சியை இழந்த ஜந்து வருடங்களின் பின் ஆபிரிக்கா நாடு ஒன்று சோவியத் கமியூனிசகட்சியின் எடுபிடியாக உள்ளது என எழுதும் நேர்மை எங்கிருந்து உருவாகின்றது. தன்னையும் மீறி காக்கும் கம்யூனிச எதிர்ப்புதான், இவரின் அடிப்படை ஏகாதிபத்திய நக்குத்தனமாகும்.
இவரைப் போன்று அதே நரித்தனத்துடன் நேரடியாக கொழும்பில் இருந்து இலங்கை அரசின் கைக்கூலியான இ.பி.டி.பி (நுPனுP) என்ற துரோகக் குழு நடத்தும் தினமுரசு பத்திரிகை இன்று தேசவிடுதலைப் போராட்டத்தை சிதைப்பதில் ஏகாதிபத்திய ஆலோசனையுடன் மிகத் தீவிரமாக இயங்குகின்றது.
சிங்கள இனவாத அரசின் உளவுத்துறையுடன் மிக நெருக்கமாக கைகோர்க்க அன்னிய ஆலோசனையுடன் வெளிவரும் வாரப்பத்திரிகைதான், இலங்கை புலம்பெயர் நாடுகளிலும் புலிகளுக்கும் அதிகமாக விற்க்கப்படும் பத்திரிகையாக உள்ளது.
இப்பத்திரிகை புலிகளை புகழ்வது போன்று நடித்தபடி, அதன் அணிகள் மீதும், தேசிய விடுதலையில் அக்கறை கொண்டோர்க்களுக்கும் எதிராக, திட்டமிட்ட தேசிய எதிர்ப் பிரச்சாரத்தை அன்னிய ஆலோசனையுடன் நடத்திவருகின்றது.
வருடம் அண்ணனவாக நாலு கோடி ரூபா விற்பனையை எட்டியுள்ள இச்செய்தியேடு, இலங்கையின் உளவுத்துறையுன் மிக நெருங்கிய வகையில் கைகோர்த்துள்ளதால், இலங்கையில் மற்றைய சிங்கள தமிழ் ஏடுகள் பெறமுடியாத துல்லியமான யுத்த தகவல்கள் உடனுக்கு உடன் தாக்குதலின் அடுத்த கணத்தில் வெளியீடுவதன் மூலம், இயக்க மற்றும் இராணுவ வராற்று கட்டுரை மூலமும், போராட்ட மற்றும் ஆதரவு சக்திகளின் ஆர்வத்தை விருப்பத்தையும் அதன் காதலையும் கவர்ந்து, மிக நேர்த்தியாக கற்பழிப்பதில் முரண்பாட்டு எதிர்ப்பின்றி சதியாளர்கள் அரங்கேறுகின்றனர்.
தேசிய போராட்ட வரலாற்றை தொடர்ந்து வெளியிடும் இப்பத்திரிகை இலங்கை அரசின் கடந்தகால உளவு மற்றும் பொலிஸ் செய்தியையும் தமது இயக்க தொடர்பை மட்டும் கொண்டு வெளியிடுவதை கொஞ்சம் ஆராய்ந்தால் இனம் காணமுடியும். தக்குதலில் ஈடுபட்டவர்கள் கூட திகதிவாரியாக வெளியிட முடியாத செய்திகளை உளவுத்துறை மட்டுமே தனது விசாரனையில் தகவலாக கொண்டு உள்ளனர். இது போல் உளவுத்துறைக்கும் காலம் கடந்தபின்னும் எது தெரிய வில்லையோ அவை மட்டுமே இக் கட்டுரை கொண்டு இருக்கவில்லை. இதில் அவர் இருந்த இயக்க நடவடிக்கையில் அவருக்கு தெரிந்தவை மட்டும் விதிவிலக்கா உள்ளது. இதை விட இந்த அரசியல் பகுதிகளை எழுதிவரும் ஈ.பி.டி.பி எம்.பி யாழ்பாணத்தில் சில பத்து வாக்கு பெற்று மக்களின் விடுதலைப் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்து துரோகியாக உள்ளவர். இன்று இராணுவ தாக்குதல்கள் திட்டமிட்டு தாக்குதல் தொடங்கிய அடுத்த நிமிடமே உளவுத்துறையால் கொடுக்கப் பெற்று செய்தியாகின்றது. இதை ஏன் உளவுத்துறை செய்கின்றது என்ற கேள்வி எல்லாவற்றிலும் அடிப்படையானது.
புலிகளை யுத்ததில் வெல்ல முடியாது என்ற பேர்உண்மையை புரிந்து கொண்ட ஏகாதிபத்தியமும் சிங்கள இனவெறி அரசும் புலிகளுள் சென்று கலாச்சார பண்பாட்டு ரீதியாக சிதைப்பதன் மூலம் தமிழ் மக்களின் போராட்டத்தை சிதைக்க முடியும் என்ற பேர்உண்மையில் தான் இப்பத்திரிகையின் அடிப்படையே தொடங்குகின்றது. இது உலகளவில் சோவியத், சீனா என பல நாடுகளில் பல செயல் தளங்களில் பலமுறை நடந்தன நடக்கின்றன.
பொதுவாகவே புலிகள் மற்றைய செய்திகளை படிப்பதில்லை என்பதையும், படிக்க வைப்பதாயின் அவர்களைப் புகழ்வது போன்ற தோற்றப் பாட்டை ஏற்படுட்தவும், அதே நேரம் புலிகளின் அரசியலற்ற இராணுவ தன்மையை பயன்படுத்தி புலிகளை இராணுவ தன்மைக்குள் இழுப்பதன் மூலம் பத்திரிகையை வாங்க தூண்டுவதில் சிங்கள இனவாத அரசு வெற்றி பெற்றது.
இவர்கள் அரசியலில் சமரசம் செய்பவர்கள் அல்ல. அதாவது இலங்கை அரசுடன் கூடி ஏகாதிபத்தியத்துக்காக தமிழ்மக்களுக்கு எதிராக செயல்படுவதில் சமரசம் செய்யமறுப்பவர்கள். அதை அவர்கள் 19.7.1998 தினமுரசில் "........அரசியல் அலசல்கள் கருத்துகள் என்பவற்றை பொறுத்தவரை வியாபார ரீதியான சமரசத்திற்க்கு இடமின்றி வெளிவருகின்றது." என்பதன் மூலம் புலி ஆதரவு நடாகம் புலிகளை உள்ச்சென்று சிதைக்கும் என்பதை மிகத் தெளிவாக இ.பி.டி.பி எம்.பி கூறுகின்றார்.
இச்செய்தியை வாசிக்க தூண்டிய தொடர்ச்சியில் தான் பண்பாட்டு கலாச்சார சிதைவுக்கான வேலை தொடங்கி வைக்கப்படுகின்றது. அதாவது புலிகளிடம் சாதாரண மக்களை விட இருக்க கூடிய விடுதலைபற்றிய சிந்தனையுணர்வு, பண்பாடு கலாச்சார ரீதியில் சிதைப்பதன் மூலம் போராட்டத்தை சிதைக்க முடியும். போராட்டத்தை ஒட்டிய செய்திகளை வாசிக்க தூண்டிய பின்பு மிக மோசமான வக்கிர ஆண்ணாதிக்க சினிமா கவர்ச்சிப் படங்கள் செய்திகள், டயானா பூலான்தேவி, இடியமீன் போன்றவர்களின் விறுவிறுக்கும் வக்கிர செக்ஸ் செய்திகளுக்குள் இட்டுச் சென்று போராட்ட உணர்வுகளை வடிய வைக்கின்றனர். இதைவிட போராட்டத்தை நிராகரிக்கும் ஆண்மீகம், 15 முதல் 25 வயதுக்கு உட்பட்ட ஆண் பெண் படத்துடன் கூடிய கவர்ச்சி பேனாநன்பர் பகுதி மூலம் போராட்ட சக்திகளை அதன்பால் கவனத்தை நேரத்தை இழுப்பதன் மூலம் பொதுவாக போராட்டத்தை சிதைக்கின்றனர். அண்ணளவாக 250 இதழ்கள் மூலம் 3000 பேரின் படங்களை வெளியிட்டதன் மூலம் அவர்களை இதற்குள் முடக்கியதுடன், பலரை பெண் பேனா நன்பிகள் பால் அலையவைத்துள்ளனர். இப்படி பத்திரிகை தமிழ் மக்களுக்குள்ளும் போராட்ட சக்திகளுக்குள்ளும் எதிர்கருத்து நிலையை விதைக்க பலவகை பண்பாட்டு சிதைவுக்கு இசைவாக செய்திகளை திட்டமிட்டு தொகுக்கின்றது. நீலப்படம் போல், மஞ்சள் பத்திரிகையாக கலந்து போராட்ட செய்திகளை உளவு அமைப்புடன் இணைந்து தொகுத்தளிக்கின்றது.
யுத்தத்தில் வெல்ல முடியாத போது பண்பாடு கலாச்சார ரீதியாக சிதைப்பது யுத்தத்தை இலகுவாக வெல்வதற்கான ஒரு பாதையாக உள்ளது. இது ஆயுதம் ஏந்தா யுத்தமாக சதியை அடிப்படையாக கொண்ட சூதாட்டமாக இருப்பதை சரியாக இனம்காணவேண்டிய காலத்தில் நாம் உள்ளோம்.
புலிகளின் அரசியல் வங்குரோத்துடன் கூடிய புகழ்ச்சியைக் கோரிய இராணுவ வாதத்தை இலங்கை உளவுத்துறை மற்றும் துரோககுழு சரியாக உள்வாங்கியதன் மூலம் தமது எதிர்புரட்சி சதியை தினமுரசுக்கு ஊடாக கட்டியமைக்கப்படுகின்றது.
புலிகள் புகழ்பாடலை வெறும் நன்பனாக பார்ப்பதும், அதேநேரம் விமர்சனத்துடன் கூடிய தேசிய விடுதலைச் சக்திகளை எதிரியாக பார்க்கும் வகையில் அரசியல் ரீதியில் சீரழிந்து கிடக்கின்றனர். இதைத்தான் தினமுரசுக்கு பின் உள்ள சதியாளர்கள் தமது அரசியல் மார்க்கமாக கையில் எடுத்துள்ளனர்.
புலிக்கும் - எமக்கும் உள்ள முரண்பாடு சனநாயகம் என்ற ஒரு விடையத்தில் அரசியலுக்கு அப்பால் உள்ளது. அரசியலுக்கு அப்பால் சனநாயகம் உள்ள நிலையில் ஜக்கியப்படவும் போராடவும் தயாரக இருந்துள்ளோம். இதை புலிகள் எதிராக காண்பதும், அரசின் அரவணைப்பில் உள்ளவர்களின் புகழ்பாடலை நட்பாக பார்ப்பதும் என்பது, தேசிய விடுதலைப் போராட்டத்தை மேலும் சிதைக்க முன்கையெடுத்து கொடுத்தாக உள்ளது.
புலிகளின் அரசியலில் மதிநுட்பம் இன்மை எதிரியை நன்பனாக பார்ப்பதும், நன்பனை எதிரியாக பார்ப்பது என்பது, புலி தனக்குதானே சவக்குழி தோண்டத் தொடங்கியுள்ளது.
இன்று இதற்க்கு வெளியில் கோட்பாடுயற்ற பிரகடணங்கள், ஏகாதிபத்திய சம்பளப் பட்டியல் செயல்தளங்கள், போராட்டத்தை சிதைப்பதுடன் மக்களை விற்று ஏகாதிபத்தியத்துக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் காலாற சேவையை செய்கின்றனர். மக்கள் தமது விடுதலையைப் பெற எதிரியை இனம் காண்பதும் நன்பனை அடையாளம் காண்பதும் இன்றைய வரலாற்று தேவையாக உள்ளது.