ஐரோப்பியப் பயணக் கட்டுரை எனக்குறிப்பிட்டு அ.மார்க்ஸ் வெள்ளைத்திமிர் என்ற நூல் ஒன்றை வழமைபோல் விடியல் பதிப்பகமே வெளியிட்டுள்ளது. அ.மார்க்ஸ் ஐரோப்பா வந்து சென்றதை ஒட்டி தொகுக்கப்பட்ட நூலில் ஐரோப்பிய வாழ்வின் எம்மவர்களின் (புலம்பெயர் தமிழரின்) கருப்புத்திமிர் பக்கத்தை மறைத்தும் தனது குருட்டு அரசியலுக்கு எது பொருந்துமோ அல்லது எதை பொருத்த முடியுமோ அதை பொருத்தி வெளியிட்ட நூலே "வெள்ளைதிமிர்" என்ற கருப்புதிமிர் நூல்.

புலம் பெயர் சமூகமாக வாழும் நாம் இந்த மண்ணில் கண்ட மனித விழுமியத்தை எம் சமூகத்தில்  காணமுடியாது கருப்பு நாசித்திமிரை சந்தித்தவர்கள், சந்திப்பவர்கள். நாம் பண்பாடு, கலாசாரம்   என அனைத்துத் துறையிலும் இறுக்கப்பட்ட, அறையப்பட்ட எம் சமூகத்தின் கருப்புதிமிர் வெள்ளைத்திமிரை விட மோசமானது. கேவலமானது. அதை விமர்சிக்கும் தகுதியும் கருப்புதிமிருக்கு கிடையாது.

வெள்ளையினத்தின் ஆளும் பிரிவுகளால்  கட்டமைக்கப்பட்டுள்ள நிறவாத பொருளாதார ஆதிக்கத்தை நாம் எதிர்க்கும்போது, நாம் பொதுவில் அந்த மக்களை நோக்கி விரலை நீட்டக்கூடாது. ஏனெனில் இந்த வெள்ளையின மக்கள்  உலக ஐனநானயகத்துக்காக, சமாதானத்துக்காக, சர்வதேசியத்துக்காக, சொந்த ஆளும் பீடத்தை எதிர்த்து இரத்தம் சிந்திப் போராடியவர்கள். போராடுபவர்கள்.

வியட்நாம் யுத்தத்தின் போது  அல்ஐPரியா யுத்தத்தின் போதும், கொசவோ யுத்தத்தின் போதும், ஈராக் யுத்தின் போதும் அல்லது  இதுபோன்ற யுத்தத்தின்  போது வெள்ளையின மக்கள் சொந்தநாட்டை எதிர்த்து சர்வதேசியத்துக்காக இரத்தம் சிந்தி உயிரை விட்டு போராடியவர்கள். இதைத்தான் தனது அரசியல் குருட்டுதன அரசியலுடன் வெள்ளைத்திமிர் என்கின்றர். இனி நாம் அ.மார்க்சின்  தனிப்பட்ட ஒருதலைச்சார்பு கட்டுரையை பார்ப்போம்.

""என்ன இரண்டு கருப்பு சாமான்கள் நம் பெட்டியில் ஏறுகின்றன?"...   ""நீ ஏன் கருப்பனாக திருடனாக இருக்கின்றாய்"   ஏய் கறுப்பா உன நாட்டிற்கு திரும்பிப் போடா”..  “எளிய கறுப்பு நாயே ஆபிரிக்காவிற்கு போடா என்று கத்திக் கொண்டே போய்விட்டான்.” nஐர்மன் சமூகத்தில் ஏதோ ஒருசிலர் மட்டும் நாசிகளாக இருக்கின்றார்கள் என்பதில்லை. ஒவ்வொருவரிடமும் (அடிக்கோடு எம்முடையது) ஏதோ ஒருவிதத்தில் பாசிசம் குடி கொண்டிருக்கிறது “ என அ.மார்க்ஸ் தனது குருட்டுக் கண்ணாடியால் பார்த்து சுட்டிக்காட்டுகின்றார்.

அ.மார்க்ஸ் இவைகளை நேரடியாக சந்தித்தாரோ இல்லையோ புலம் பெயர் சமூகம் இதுபோன்று சந்திக்காதவர்கள் பெருந் தொகையை உள்ளடக்கியது. நான் nஐர்மனியில் மூன்று முறை சென்று இதே பார்த்திபனுடன்  சென்றவன்.  இப்படி பலரும் உள்ளனர். ஆனால் அ.மார்க்ஸ் மட்டும் சந்தித்தது என்பது  ஆச்சரியமானது மட்டும் இன்றி பொதுவாக nஐர்மனி சமூகம் ஒவ்வொருவருக்கும் என இதை சுட்டுவது அதைவிட ஆச்சரியமானது. இவை நடந்தால் விதிவிலக்குகளே ஒழிய பொதுவானவை அல்ல. பொதுவானதை கைவிட்டு விதிவிலக்குக்கு வக்காலத்து வாங்கி சமூகம் பற்றி உழறுவது குருட்டு வெளவால் தனம். இதுதான் பின்நவீனத்துவம் சமூகத்தை மறுத்து தனிநபர்பற்றி உளறுகின்றது. அதாவது சமூகத்தின் மொத்த தத்துவத்தை மறுத்து தனிநபரை போற்றும் சிறு தத்துவங்களை தனது கருப்புத் திமிரில் உயர்த்துகின்றார்.

குறிப்பான சம்பவத்தை பொதுவானதாக காட்ட முனைவது அயோக்கியத்தனமான நோக்கம் கொண்டவை. nஐர்மன் சமூகம் பற்றியும்,  அதன் போராட்ட வரலாற்றைக் கேவலப்படுத்துவதன் மூலம், சர்வதேசிய போராட்ட வரலாற்றை சேறடிக்க முனைகின்றார்.

புலம் பெயர் சமூகம் முன் nஐர்மனிய, ஐரோப்பிய மக்கள் பற்றி எதிர்ப்புணவை விதைத்துவிட்டால், அவர்களுக்கு இருக்கக்கூடிய ஒரே ஒரு  போராட்டப் பாதையை அடைத்துவிட பின்நவீனத்துவ தனிநபர் புலம்பல் வழிகளில் சாத்தியம் என்ற அ.மார்க்ஸ் கனவு தான் இவை.

புலம் பெயர் சமூகம் ஐரோப்பிய மற்றும் ஐரோப்பிய தொழிலாளருடன் இணைந்து போராடாது இருக்க அவர்கள் முன் எல்லா ஐரோப்பியரையும் இனவாதியாக காட்டிவிடுவது நல்லதல்லவா?

இன்று புலம் பெயர் சமூகத்துக்குள் மிக வேகமாக உலக ஏகாதிபத்திய துணையுடன், மதங்கள் மதமாற்றம் செய்து முடிவு அற்ற மன நோயாளிகளை உருவாக்கி வருவது போல், அ.மார்க்ஸ் சமூக அக்கறையுடையவர்களைச் சிதைத்த மன நோயாளிகளை உருவாக்கிவிட, ஐரோப்பியரை இனவாதியாக முத்திரை குத்தி விடுகின்றார்.

இந்த இடத்தில் தமிழன் அல்லாத மற்றைய அரபு, கருப்பு இனங்கள் எப்படி இச்சமூகத்துடன் இணைந்து உள்ளன என ஆராய அல்ஐPரியா சமூகத்தை எடுத்துப் பார்ப்போம்.

அல்ஐpரியாவை தாய்நாடாக கொண்டு பிரன்சில் வாழும் அரைவாசி ஆண்களும், நாலில் ஒரு பெண்களும் தனது குடும்பத் தெரிவை வெள்ளையின பிரஞ்சு மக்களை தெரிந்து எடுத்து குடும்பமாக வாழ்கின்றனர். 1992 இல் பிரான்சில் நடந்த 2, 71,000 திருமணத்தில் 31,000 திருமணங்கள் வெளிநாட்டு கலப்புத் திருமணங்களாகும். 1980 க்குப் பின் கலப்புத் திருமணம் அதிகரித்து இன்று 57 வீதமாக அதிகரித்துள்ளது. இங்கு திருமணங்கள் வெள்ளைத்திமிரில் நடக்கின்றதா? இல்லை அ.மார்க்சின் கருப்புத்திமிர் பார்வை தான் பின்நவீனத்துவத்தால் குருடாகியுள்ளது.

nஐர்மானிய பாசிட்டுகள் இனப்படுகொலைகளை நடத்தி பல கோடி மக்களை கொன்று குவித்த nஐர்மனியில் அவர்களுக்கு நினைவுச் சின்னம் எழுப்ப எடுத்த முயற்ச்சியைத் தொடர்ந்த நாசிக் கட்சி எதிர்ப்பு ஆர்ப்பட்டங்களை நடத்தின. இருந்த போதும் கிழக்கு nஐர்மானிய மக்கள் நினைவுச் சின்னம் நிறுவ 52 வீத ஆதரவையும், மேற்க்கு nஐர்மனி மக்கள் 40 வீத ஆதாரவையும் தெரிவித்துள்ளனர். (புள்ளிவிபர ஆதாரம் அம்மா-9)  ஆனால் அ.மார்க்ஸ்சுக்கு "ஒவ்வொருவரும்" "பாசிட்டாக" கூறுவதும் அதை கதையாளப்பதும் மக்கள் ஒன்று இணையக் கூடாது என்பதற்கே.

இனக் கலப்பு எப்போதும் உயர்ந்த பண்பாட்டை அடிப்படையாகக் கொண்டவை. எல்லா சுயாதீனமான, ஐனநாயக பூர்வமான கலப்பும் ஒன்று கலத்தலும் முற்போக்கானவை. இப்படி பெருமளவில் நடக்கும் இம் மாற்றம் வெள்ளை நாசித்தனத்திலிருந்து பிறப்பதில்லை. மாறாக அதற்கு எதிரான போராட்டத்தில் தான் நடக்கின்றது. இதைவிட்டு தனது சொந்த கருப்புத்திமிர் நாசித் தனத்திலிருந்து வெள்ளையின  மக்களை நாசியாக காட்டுவது அபத்தமான கற்பிதமாகும்.

ஐரோப்பா சமூகம் நாசித்தன்மையில் ஊறிப்போயுள்ளது எனக் காட்டுவது ஒரு சமுகம் பற்றிய ஆய்வின் ஒருதலைப் பட்சத்தை அதன் கபடத்தையும் தெளிவாக்குகின்றது. சமூகமே நாசியாக அதன் சிந்தனையாக மாறும் போது அங்கு நாசி கோட்பாடும் ஆட்சியும் ஏற்பட்டு விடுவதுடன் பாசிசம் என்பது இருப்பின் எப்படி  வெளிநாட்டவர் பெரும்தொகையில் வாழமுடியும் . அங்கு வெளிநாட்டவர் வாழ்கின்றனர் எனின், அந்த மக்களின் உறுதியான போராட்டத்தில் ஆதரவில் தானே ஒழிய “கற்பிதங்களாக” வெளியில் அல்ல. வெளியில் ஒருக்காலும் வாழவே முடியாது.

ஒரு சமூகத்தின் உற்பத்தி முறை மீதான அரசு வடிவம் மீதான வர்க்கப் போராட்டத்தைப் பொறுத்தே என்ன ஆட்சி முறை என்பது தெளிவாகின்றது. சமூகம் நாசிசமாக, பாசிசமாக இருக்கவேண்டின் அந்த சமூகம் பாசிச ஆட்சிமுறையை நடைமுறையில் எடுத்து விடுகின்றது. ஏன் எனின் சமூகத்தின் வர்க்க முரண்பாடு தான் பாசிசத்தின் தோற்றத்துக்கும் நாசிசத்தின் அடிப்படைக்கும் ஊண்றுகோல். இது ஆட்சியில் ஏற்படாத வரை அதை அரசு கைக்கொள்ளாதவரை சமூகம் ஒட்டுமொத்தமாக பாசிசத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது தெளிவாகும். இது ஒருபகுதி மக்களுக்குள் தான் இருக்க முடியும். அதை எதிர்த்த மக்கள் கூட்டம் போராடுவது பெரியளவில் உள்ளபோது பாசிசம் அரங்கு ஏறமுடியாது. உற்பத்தி முறை மீதான மக்களின் பூர்சுவா கண்ணோட்டம் பொதுவாக உள்ளது எனின் அது எல்லா சமூகத்திலும் காணப்படுவதே. அது Nஐர்மன் சமூகத்துக்கு மட்டும் சுட்டுவது அல்லது ஐரோப்பிய சமூகத்துக்கு சுட்டுவது கருப்புத்திமிரிலிருந்து சொந்த நாசிசத்தை மறைக்கத்தான்.

பாசிசம், நாசிசம், ஐரோப்பாவில் சிறுபிரிவினரிடம் வௌவேறு வகையில் வளர்ச்சி பெற்றுள்ளது. எல்லா நாடுகளிலும் ஒரே மாதிரி இல்லை. ஆனால் இதற்கு எதிரான அபிப்பிராயம் ஐரோப்பாவில் எல்லா நாட்டிலும் பெரும்பான்மையான மக்களிடம் உள்ளது. பூனை கண்ணை மூடியபடி பால் குடிக்கும் போது நினைக்கின்றது ஒருவருக்கும் தெரியவில்லை என்று. அது போல் தான் குருட்டுக் கண்ணால் குருட்டு பின்நவீனத்துவ தத்துவத்தால் பார்ததால் எல்லாம் மங்கலாகத் தான் தெரியும். தேவை கண்ணாடி என்றால் அது சர்வதேசியக் கோட்பாடு தான்.  அது மட்டும் தான் சமூகத்தை உண்மையாக, நேர்மையாக ஆராய கற்றுத் தரும்.

இனவாதத்துக்கு எதிரான போராட்டம் என்பது இவர் குறிப்பிடும் ஆட்டோநாம்களின் செயல்பாட்டில் அல்ல ஆட்டோநாம்களின் கோட்பாடு என்ன? அவர்கள் யேர்மன் சமுகத்திலிருந்து அன்னியப்பட்ட லும்பன்களின் அராஐக தனிநபர் மையமாகும. இவர்கள் அராஐகவாதம், சமுகக்கூட்டமைப்பை எதிர்த்து சமுகத்தில் இருந்து அன்னியப்பட்ட எவ்வளவு தான் முற்போக்காக இருந்தாலும் வரையறையற்ற  வன்முறை கும்பலாக சமூகத்துக்கு எதிராக உள்ளனர் .

இவர்களின் போராட்டம் என்னதான் வெளிநாட்டவர்க்கு உடனடியாக சார்பானலும்  ஆதரவாக இருந்தாலும் அது சமுககண் ணோட்டத்தில், சமுக ஒத்துழைப்பில் வெளிநாட்டவர்க்கு எதிரானவராக உள்ளனர். அதாவது Nஐர்மனிய சமூகத்துடன் ஒட்டோ உறவோ அற்ற அராஐக லும்பன் நடவடிக்கை சமூகத்திலிருந்து அன்னியப்பட்ட வன்முறைப் போராட்டங்கள் சமூகத்திடம் எதிர்ப்பை உண்டு பண்ணும்போது அப்போராட்டம் வெளிநாட்டவருக்கு சார்பானதாக இருப்பினும் அது யெர்மன் சமூகத்திடம் இருந்து வெளிநாட்டவருக்கு எதிரான எதிர்ப்பை மேலும் வளர்த்து எடுக்கிறது.

லும்பங்களான அராஐகவாத ஆட்டோநாம்களின் செயல்பாடு எப்போது எந்த ஆட்சி வந்தாலும் ஒரே மாதிரியானதாக சமூகத்தை எதிர்க்கும் தன்மை கொண்டது. மனிதன் உழைப்பதை மறுத்த, ஒன்று இணைந்த செயல்பாட்டை மறுத்த சமூக அராயகத்தை கோரும் இந்த பிரிவு, நியாயமான போராட்டத்தை சமூகத்திடம் இருந்து அனனியப்படுத்தும் வகையில் இவர்களின் அராஐகவாதமும் கட்டமைக்கப்பட்டு விடுகிறது.

அரசும் நாசி கட்சிகளும் ஐரோப்பாவில் வெளிநாட்டவருக்கு எதிராக உருவாக்கி வரும் செயல்பாடுகளை எதிர்த்து ஐரோப்பிய மக்கள் தன்னெழுச்சியாகவும்  சிறு சிறு மா-லெ-மா  குழுக்களாகவும, நாசி எதிர்ப்பு குழுக்களாகவும்  திட்டமிட்டு நடத்தப்படும் தொடர்ச்சியான போராட்டம் மட்டுமே வெளிநாட்டவரை இங்கு வாழவைத்தது வாழவைக்கின்றது அல்லாது நாசித்தனம் வாழ வைக்கவில்லை.

இந்த மக்களின் வீரச்செரிந்த போராட்ட வரலாறு பரந்துகிடக்கிறது. அது இன நிற மத வாதத்திற்கு எதிராகவும் ,  காலனிஎதிர்ப்பு , வர்க்கபோராட்டம் என நீடிக்கின்றது.

பீன்நவீனத்துவத்தின் வலதுபிரிவான அ.மாக்சுக்கு மார்க்சியம்  என்றால்  காய்ச்சல் வரக்கூடிய எதிர்ப்பும்,  அவர்களால் நடத்தப்பட்ட நடத்தப்படும் போராட்ட மரபை சிறுமைப்படுத்தி அல்லது மறைப்பதற்கு “வெள்ளைத்திமிர்” கொண்ட சமூகமாக ஐரோப்பாவை காட்டுவது தனது அரசியல் நோக்கத்துடன் தேவையாகின்றது.

இதன் மூலம் மா-லெ-மா சிந்தனையின் உறுதியான ஐரோப்பிய போராட்ட மரபை, போராட்டத்தை மறுதலித்து மூடி மறைத்து தனது சொந்த “கறுப்புத்திமிர்” பாசிசத்தை நிலைநாட்ட பாதுகாக்க குருட்டுதனமாக முனைகின்றார்.

அடுத்து அ.மார்க்ஸ் “சொந்த நாட்டு பிரச்சினைகளிருந்து தப்பித்து ஓடி சொகுசான வாழ்க்கை வாழ்கிறார்கள் என்கிற குற்றசாட்டு புலம்பெயர் தமிழர்களின் மீது வைக்கப்படுவதுண்டு. இத்தனை சொகுசுகள் இருந்தபோதிலும் அங்கே யாரும் நிம்மதியாக இல்லை....... வாழுமிடத்தில் மூன்றாம் தரக்குடிமக்களாக இருக்கும் அவலத்தை வார்த்தைகளால் விளக்கிவிட முடியாது. எதிர்ப்படும் ஒவ்வொரு ஐரோப்பியன் கண்ணிலும் தென்படும் அலட்சியம, தெறிக்கும் நிறவெறி நம்மைக் கூச வைத்துவிடுகின்றது.  புலம்பெயந்தவர்கள் குறிப்பாக ஆசிய ஆபிரிக்க இசுலாமியர்கள் கிரிமினல்களாகவே அங்கு கருதப்படுகின்றனர்.

போதைபொருள் கடத்துபவர்கள் , திருடர்கள்  இப்படி பத்திரிகைகள்,  தொடர்புசாதனங்கள் எல்லாம் அப்படித்தான் சித்தரிக்கின்றன. அழுக்கர்கள்——  கெட்டுப்போகிறது என்கிற எண்ணம் ஒவ்வொரு ஐரோப்பியனிடமும் இருக்கிறது" (அடிக்கோடு நாம்) என அ.மார்க்சின்  அருமை பெருமையான பின்நவீனத்துவ, தலித் ஆய்வுக்கண்டு பிடிப்பை கொஞ்சம் திரும்பிப்பார்ப்போம்.

ஒவ்வொரு அய்ரோப்பியனும் ஒரு நாசி  எனச் சொல்லும் அ.மார்க்ஸ் போட்டு இருந்த கண்ணாடி மார்க்சிய எதிர்ப்பே. ஐரோப்பியன் போராட்டச் சிந்தனை அதன் கட்டமைப்பு மா-லெ-மா சிந்தனை வழியாக  கட்டமைக்கப்பட்டவை மட்டும் இன்றி உயிர்வாழ்கின்றன.  மா-லெ-மா-சிந்தனையை மறுக்க ஐரோப்பியன் ஒவ்வொருவனையும் இனவாத நாசியாக முத்திரை குத்துவதன் மூலம்  மா-லெ-மா  சிந்தனையை அதாவது மார்க்சியத்தை நாசி மார்க்சியமாக, வெள்ளைதிமிர் மார்க்சியமாக காட்டுவதன் மூலம் இந்தியாவில் மா-லெ-மா சிந்தனைக்கு எதிராக கொஞ்சமேனும்  பிரச்சாரம் செய்ய முடியும் என்ற கனவுதான். ஒவ்வொரு ஐரோப்பியனுக்கும் நாசி முத்திரை குத்துவதற்கு நாசி கட்சி கூட இப்படி கூற தயாராக இல்லை. ஆனால் அ.மார்க்ஸ் எந்த வித ஆதாரமும் இன்றி பச்சையாக பார்ப்பனர் போல் (பார்ப்பான் என்ற பெயர் உழையாது பாhத்துக் கொண்டிருத்தல் என்ற அர்த்தத்தில் பெரியாரால் வைக்கப்பட்டது.) சதி செய்து உள்ளார்.  இரண்டாவது பத்திரிகை தொலைகாட்சி என்பது நாசிசத்தின் ஒரு பிரச்சார அமைப்பாக உள்ளது எனக்கூறுவது அப்பட்டமான முழுப் பொய. ஏனெனில் நிறைய பத்திரிகைகள் வெளிநாட்டவர்களுக்கு சார்பாக பெருமளவு பக்கத்தை ஒதுக்கி பிரச்சாரத்தை தொடர்ச்சியாக செய்வதுடன் நாசிசத்தை எதிர்த்து தொடர்ந்து போராடுகின்றன.  இது போன்று தொலைகாட்சி நிகழ்ச்சிகள் நிறையவே தொகுக்கப்டுகின்றன.  கண்ணை மூடியபடி பால் குடிக்கும் பூனை போல் ஒரு மார்க்சிய விரோத கண்ணாடியை அ.மார்க்ஸ் போட்டு விட்டு அதற்கு ஏற்ப வெட்டி எழுத வெளிக்கிட்டால் யதார்த்த நிகழ்வு கூட கண்ணுக்கு தெரியாது.  சூரியனை கையால் பொத்தமுடியாது என்பது அ.மார்க்கசுக்கு கண்ணாடி போட்டவுடன் தெரிவதில்லை .

அடுத்து புலம் பெயர் சமூகம்  நிம்மதியாக இல்லை என்ற  அ.மார்க்சின் மற்றைய கண்டுபிடிப்பு  சூரியனை கையால் பொத்த நினைப்பது  போன்ற முட்டாள்களின் வெளிப்பாடுதான் .

புலம் பெயர் தமிழர்கள் நாட்டில் (இலங்கையில்)  அமைதி திரும்பின் எத்தனை பேர் திரும்புவர் எனகேட்பின் 99.9 வீதம் பேர் திரும்ப மறுப்பார்கள். திரும்ப எண்ணுவோர் யார்? எம் சமூகத்தில் அக்கறை கொண்டவர்கள், பெண்குழந்தைகளின் கற்பைப் பேண விரும்பும் ஆணாதிக்க வெறியர்களாக உள்ளோர் மற்றும் நேரடியாக ஏதாவது பாதிப்பை சந்தித்தோர் போன்றோரே.  இவர்கள் 0.1 வீதம் பேர் ஆவார். இதற்கு தனியான ஆய்வு தேவையில்லை  அ.மார்கஸ் அவர்களே. உங்கள் கண்ணாடியை சற்று கழற்றி வைத்துவிட்டு பார்த்தால் எல்லாம் சரியாக நன்கு தெரியும்.    பல இடத்தில் அ.மார்க்ஸ் எழுதுகின்றார் "ஒழுங்கு" தான் நாசிசத்தின் பாசிசத்தின் சின்னமாக உள்ளது என்கிறார். அராயகவாதம் முற்போக்கானது என்கிறார்.  ஒழுக்கத்தை தகர்த்த கட்டுடைப்புதான் புரட்சி என்கிறார்.  இதிலிருந்து தான் ஆட்டோநாம்களை உயர்த்துகின்றார்.

ஒழுங்கு ஒரு சமுதாயத்தில் பொருளாதார அமைப்புடன் அவசியமாக உள்ளது. அது இல்லாத சமூகம் அழிந்துவிடும்.  ஒவ்வொரு மனிதனும் வேலை செய்வது முதல்  அனைத்தும்  ஒரு ஒழுங்குங்கு உட்பட்டதே.

ஒழுங்கை நிராகரிப்பின் சமூக இயக்கத்தின், ஏன் இயற்க்கையின் அனைத்து செயலையும், பொருளையும் மறுத்த இயக்கமற்ற ஐடமாக கற்பனையை கோருவதாகும். அ.மார்க்ஸ் முன்வைக்கும் பாசிசம், நாசிசம்  என்பன ஒழுங்கில் கட்டமைக்கப்படுவது இல்லை. மாறாக உற்பத்திமுறை மீதான வர்க்கப்போராட்டத்தில் இருக்கும் சுரண்டும் முறையை  பாதுகாக்க உருவாகும் ஒரு அமைப்பு வடிவந்தான்  பாசிசம, நாசிசம்.  பாசிசம், நாசிசம் வர்க்கப் போராட்டத்தை கட்டுப்படுத்த ஒரு அரசியல் வடிவமாக எழுகின்றதே ஒழிய ஒழுங்கில் இருந்து கற்பனையாக உருவாகுவது இல்லை.  அ .மார்க்சின் ஒழுங்கு மீறல் படி அவர் தனது சாப்பாட்டுக் கோப்பையில் தான் மலம் சிறுநீர் கழிக்கிறாரோ என கேட்க தோன்றுகிறது. உழைப்பைப் போற்றி களைப்பை மறக்க நாட்டுப்புறபாடல் பாடியபடி கூலி விவசாயிகள் நெல் நாற்று நடும் ஒழுங்கு  தவறானது என்கிறார்.  ஏன்எனின்  அது பாசிசத்தின், நாசிசத்தின் வடிவம் என்கிறார். தாறு மாறாக ஒழுங்கை குலைத்து நாடுவது தான் புரட்சியின்,  பாசிசத்துக்கு எதிரான போக்கு என்கிறார். ஏன் பின் நவீனத்துவ அரசியலை முன்வைத்து ஒழுங்கை மறுத்த புரட்சியை கோரி சரடுவிட்ட அப்புத்தகத்துக்கு எதிர்மறையில் ஒழுங்கைக் கொண்டுள்ளார்.  பின் அட்டையில் அவர் தன் படத்தைப் போட்டு இருந்தார். அதில் ஒழுங்காக தலைவாரி, ஒழுங்காக முகச்சவரம்  செய்து , ஒழுங்காக மடிப்புக் குலையாத சேட் போட்டு ஒழுங்காக உலக அழகியல் வழியில் போஸ் கொடுத்து ஒழுங்கை கடைப்பிடித்து வாழ்வதைக் காட்டியது. ஏன் புத்தகம் தமிழ் ஒழுங்கைப் பின்பற்றி, புத்தக ஒழுங்கைப் பின்பற்றி என எல்லாம் ஒழுங்காக இருந்தது.  இப்படி செய்தபடி சரடு விடும்  அ.மார்க்சின் கட்டுரைகள்,  சுயமுரண்பாட்டை கொண்ட ஒழுங்கு அற்ற பலவண்ண கோட்பாட்டு சாக்கடையாக உள்ளது. இது மட்டும் தான் ஒழுங்கை மறுத்து வர்க்க புரட்சியை கோராது. அதுதான்  விழுந்து அடித்து மீசையில் மண்படாது அ.மார்க் எதிர்புரட்சிக்கு உழைக்கின்றார் .

“வேலை செய்யும் இடங்களில் தினம் பதினொரு மணிநேரம் மாதத்திற்கு இருபத்தாறு நாட்கள் வேலைசெய்யவேண்டியிருக்கின்றது என்றார் பிரான்சில் வசிக்கும் சிவநேசமூர்த்தி. ஆனால் எட்டுமணி நேரம் தான் வேலை செய்ததாக பதிவுகள் இருக்கும். புலம்பெயர்ந்தவர்கள் இவ்வாறு சுரண்டப்படுவதை தொழிற் சங்கங்கள்  கண்டு கொள்வதில்லை” என அ.மார்க்ஸ் குறிப்பிடுகின்றார் .

எம்மவர்களின்  பூர்சுவா மன இயல்பும் முதலாளிக்கு சில வேலைத்தளங்களில் குண்டி கழுவி வேலை செய்யும், தெய்வமாக மதிக்கும் இந்த புலம் பெயர் சமூகம் தானாகவே வலிந்து எடுத்ததுதான்.  இந்த புலம் பெயர்ந்தோரின் காட்டிக்கொடுப்பை ஒரே வேலைத்தளத்தில்  முதலாளிக்கு பந்தம் பிடித்தபடி மற்றவனைப் பற்றி குறை கூறி காக்காய் பிடித்து, குண்டி கழுவி 8 மணிநேர வேலை செய்தவனை நீக்கக் கோரி அந்த இடத்தை தனது  ஆக்கி காலை நக்கி நாயாக வாழும் இந்த பூர்சுவத் தமிழன் தனதாக்கி இதன் முதல் ஊண்றுகோல். எம்மவர் வேலை செய்யும் உணவுச்சாலைகளில் 90 வீதமானவை சட்டப்படியான சட்டபடி வேலைநாள் 26 உம் சட்டப்படி 8 மணித்தியாலத்தை விடக் கூட என்பதும் கவனத்துக்குரியது மட்டும் இன்றி அதற்கு சட்டப்படி சம்பளமும்  உண்டு. இந்த வேலை நேரத்தை குறைக்க தொடாச்சியாக தொழில் சங்கங்கள் போராடுவதுடன், பல போராட்டத்தை போராடத் தயாராக உள்ள தொழிளாருடன் சேர்ந்து போராடுகின்றனர்.

எம்மவர்கள் அந்த சட்டப்படியை விட கூட,  சம்பளம் இன்றி வேலை செய்ய தாமாகவே விரும்பி ஏற்கும் அதேநேரம்  அதைக் கோருபவனைக் காட்டிக் கொடுத்தும் பிழைக்கும் இந்த மேல்மட்ட பூர்சுவா சமூகம் எம் நாட்டில் இருந்து சொகுசு தேடி பணத்துக்கான கனவுடன் தப்பி ஓடி வந்த (99 வீதமான பேர் ) பிரிவுகளே. தொழிற்சங்கங்கள் இவர்களை இனவெறியில் கண்டுகொள்வது இல்லை என்ற கணடு பிடிப்பு  அ.மார்க்கசின்  மா- லெ- மா சிந்தனை எதிர்ப்பினால் வெளிவந்த ஒரு கட்டமைக்கப்பட்ட கற்பிதப் புரட்டு ஆகும்.

தொழிற்சங்கங்களின் பொதுவான அரசியல் வழி துரோகத்தை விட்டு இவர்கள் நிறவாதத்தை கையாளுகின்றனர் என்பது அப்பட்டமான புரட்டும் பொய்யுமாகும். ஏன் எனின் பிரான்சிலும் ஐரோப்பாவிலும் முன்னனி தொழிற்சங்கங்கள் அனைத்தும் நாசி எதிர்ப்பு போராட்டத்தை தொடர்ச்சியாக நடத்துகின்றன .

இத்தொழிற்சங்கங்களின் போராட்டத்தில் சரி, பல்வேறு நாசி எதிர்ப்பு போராட்டத்தில் சரி ஒரு தமிழன் கூட பங்குகொள்வது இல்லை என்பது உண்மை.  அந்தளவுக்கு சுயநலம்பிடித்த மேல்தட்டு பூர்சுவா கண்ணோட்டம்  உடையவன் புலம்பெயர் தமிழன்.

ஏன் தமிழர்கள் நடத்திய போராட்டங்களில் கூட அதே தமிழன் (இன்றைய சில முன்னணி மூத்த இலக்கியவாதிகள் கூட) காட்டிக்கொடுத்தவனே ஒழிய, சுரண்டலுக்கு எதிராக அணி திரண்டது கிடையாது. ஏன் சிவனேசமூர்த்தி தனது ஈழமுரசு பத்திரிகையில் கூட இப் போராட்டத்தில் முக்கியத்தை கூறி அழைப்பதும் இல்லை.   (தற்போது அப் பத்திரிகையில் அவர் இல்லை) தொழிற்சங்கத்தில் இனணவது,  போராடச்செல்வதே கேவலமாக கருதும் யாழ்ப்பாண பூர்சுவா பிரிவின்  பூர்சுவாவின் இயல்பான மனித பண்பை  மறுதலித்தபடி தொழிற்சங்கத்தை நாசியாக காட்டுவது மா-லெ-மா சிந்தனை எதிர்ப்பின் ஒரு அங்கமே.  இப்படிக் காட்டி விட்டால் தொழிற் சங்கங்களின் வர்க்கப் போர் குணாம்சங்களை சிறுமைப்படுத்த முடியும் என்ற அ.மார்க்சின் கற்பிதங்களே.

“ஒரு தமிழ் பெண் பாசிச வன்முறைக்குட்பட்டு கொலைசெய்யப்பட்டுள்ளாள்.  ஒரு தழிழ் இளைஞன் அடித்து ரயில் பாதையில் வீசப்பட்டு கொல்லப்பட்டிருக்கின்றான்”   என்ற அ.மார்க்சின் இனவாதத்திற்கு எதிரான கண்டுபிடிப்பு நகைப்புக்குரியது.  இக்கொலைகள் எம்மவர்களின் ஆணாதிக்க சாதித்திமிரில் நடத்தப்பட்டதாகவே தமிழ் பேசும் மக்கள் திட்டவட்டமாக சில ஊகங்களில் நம்புகின்றனர். ஆனால் அ.மார்க்சின் கண்ணாடிக்கு மட்டும் அது தெரிய மறுக்கின்றது.  இதை அவருக்கு புரிய வைத்த ஆணாதிக்க முற்போக்குகளுக்கு சபாஸ் பட்டம் கொடுக்கவேண்டும் ஏன்?  இதற்கு பின் ஆணாதிக்கம்  சாதிவெறி என்பன பல தொங்கிபோய் உள்ளது .

சுவிசில் அது  (அது என்பது மூன்றாம் உலகநாடுகள் பற்றிய விபரண சித்திரங்களை) ஒளிபரப்பப்படும் நோக்கம் வேறு. ஒரு சுவிஷ்  பார்வையாளருக்கு அது ஏற்படுத்தும் விளைவு வேறு என அ.மார்க்சின் வெளிநாடு பற்றிய சமூக ஆய்வு உள்ளது. இதில் ஒளிபரப்பு செய்தி ஊடகம் முற்போக்காக அ.மார்க்சுக்கு தெரிய,  மக்கள் பிற்போக்காக தெரிகிறது.

யாழ்ப்பாண மேல்மட்ட பூர்சுவாவின் கண்ணோட்டமே சுவிஷ்மக்களின் நோக்கத்தை விட வேறுபட்டு அதை பிரதிபலிக்கின்றார். அதையே தான் அ.மார்க்ஸ் மீள ஒப்புவிக்கின்றார்.  ஐரோப்பாவில் ஒளிபரப்பாகும் விபரணசித்திரங்கள் மக்களின் பிரச்சினையை அடிப்படையாகக்கொண்டு வெளிவரும் மூன்றாம் உலக சினிமா படங்களையிட்டு எம்மவர்கள் தீவிர எதிர்மனப்பான்மை கொண்டு உள்ளனர். ஏன் எனின் தனது சமூகம் சந்திக்கும் பல்வேறு சமூக அடக்குமுறை இங்கு அவன் முன்னால் கேள்விக்கு உள்ளாகும்போது இவனால் சகித்துக் கொள்ளமுடிவதில்லை. தான் ஒடுக்கப்பட்டவன் என இருந்து கொள்ள அதன் மூலம் சலுகை கோர அனுதாபத்தைப்பெற இவை தடையாக உள்ளதுடன் இதன் மீது கேள்வி கேட்பதை விரும்பவில்லை. இதை பாதுகாக்க விரும்புகின்றான். இதற்கு அ.மார்க்ஸ் வேறு நியாயம் கொடுக்கின்றார். இங்குள்ள ஐனநாயகவாதிகள், அகதிக்கு உதவுவோர், நீங்கள் உங்கள் சமூகத்துக்கு ஏன் அடக்குமுறையை செய்கின்றீர்கள்? நியாயப்படுத்துகிறீர்கள்? என்ற கேள்வியை சகிக்கமுடியாத வெளிப்பாடுதான், சுவிஸ் மனநிலை பற்றி ஐரோப்பிய மனநிலை பற்றி பேசமுற்படும் கூச்சல்கள். இதைத்தான் அப்படியே அ.மார்க்ஸ் பிரசவித்துள்ளார். மொழி தெரியாத நாட்டில் எம் சமூக ஒடுக்கு முறைகளை (ஆணாதிக்க மற்றும் சாதிவன்முறை போன்றவை) மொழி தெரியாத நாம் விளங்க இந்த விபரணச்சித்திரம் தான் உதவுவது. ஒரு சமூக அக்கறைக்கு ஆய்வுக்கு அடிப்படையாக  உள்ளதுடன் புதிய பல தகவல்களையும் எமக்கு தருகின்றது.

அடுத்து “ஒரு நிறுவனத்தில் பணிபுரியக் கூடிய பெரிய அதிகாரிக்கும், கீழ்  நிலைகளில் உள்ளவர்களுக்குமிடையில் ஊதிய வேறுபாடு அதிகமில்லை. பெரியவேலை கீழான வேலை என்ற விழுமிய வேறுபாடுகள் அதிகமில்லை. ...... தீட்டு, வருணாசிரமம் முதலியன இல்லாத போதும் அந்த இடத்தில் இனவெறியும் இன அடிப்படையிலான ஒதுக்கலும் அவற்றை ஈடு செய்கிறது. பேரூரு அரசியல், நுண் அரசியல், தொடர்புச்சாதனங்கள் இப்படி எங்கு பார்த்தாலும் இன வெறியும் பாசிசமும் தலைவிரித்தாடும் ஐரோப்பிய சூழலில் இடையிடையே சிறு சிறு மனிதாபிமானக் கீற்றுக்களை “ஆட்டோநாம்” எனச் சொல்லப்படும் எதிர் கலாச்சாரக் குழுக்களிடமே நாம் காணமுடிகிறது” என அ.மார்கஸ் தனது அரசியல் கண்ணாடிக்கு இசைவாக எதை பொருத்த முனைவகிறார் எனப் பார்ப்போம்

நிறுவனத்தில் மேல்-கீழ் நிலை ஊழியர்களுக்கு இடையில் சம்பள வேறுபாடு இல்லை என்கிறார். இப்படி பொய்யாக ஏன் சொல்ல முனைகின்றார். ஒரு வர்க்கப்போராட்டம் இன்றி மேல்- கீழ் என்ற இடைவெளி அமைதியாக பின்நவீனத்துவ உலகமயமாதலில் மாறிவிடும் என்கிறார். அது தான் பொய்யைக் கக்குகின்றார்.  இதைப் புள்ளிவிபர ரீதியாக பார்ப்போம்.

பிரான்சில் உள்ள 46 லட்சம் குடும்பங்களின் மாதவருமானத்தைப் பார்ப்போம்

குடும்பம் வீதத்தில்        வருமானம் பிராங்கில்

10        3070 குறைய

10        3070- 5477

10        5477- 9004

10        9004-10739

10        10739-12653

10        12653- 15001

10        15001-  17921

10        17921-  22389

10        22389-28793

5          28793-47376

5          47376 கூட

1994 இல் ஆகக்குறைந்த அடிப்படைச்சம்பளத்தை பெற்ற 15 லட்சம் பேர் 1996 இல் 22 லட்சம் பேராக அதிகரித்துள்ளது. அத்துடன் 60 லட்சம் பேர் அடிப்படைச்சம்பளத்தை விட குறைவாக பெற்று வேலையின்றி உள்ளனர். மொத்தமாக அடிப்படைச்சம்பளத்தை அல்லது அதை விட குறைவாக பெறுவோர் 80 லட்சம் பேர் உள்ளனர். இது பிரான்சில் உழைக்கும் பிரிவில் மூன்றில் ஒரு பகுதியாகும். இவர்கள் பரம ஏழையாக உள்ளனர்.

புள்ளிவிபரம் மிகத்தெளிவாக மேல்-கீழ் குடும்பவருமான இடைவெளியை தொடர்ச்சியாக பிளந்து அதிகரிக்கின்றது. 10 வீத குடும்பம் பெறும் 3070 பிராங்கை விட 5 வீதக் குடும்பம் பெறும் 47,376 பிராங்கு இடையில் உள்ள இடைவெளி 15 மடங்கு ஆகும். அதாவது இது  குடும்ப சராசரி வருமானம் இதை விட தனிநபர் வருமானத்தில் இந்த மடங்கு மேலும் பல மடங்காக உள்ளது. ஏன் பிரான்சில் 500 குடும்பங்களின் சொத்து தனித்தனியே 10 கோடி பிராங்கை விட கூடவாகும்.

கிட்டத்தட்ட உழைக்கும் தகுதியுள்ள பிரிவில் மூன்றிலொரு பங்கு அடிப்படைச்சம்பளத்தை விட குறைவாக பெறுகின்றனர். அதி உயர் பிரிவான 10 வீதம் அடுத்த 10 வீதத்தை தவிர மற்றவர்களுக்கு இடையில் தான் வேறுபாடு குறைவாக உள்ளது. அது  மடங்காக உள்ளது.

மார்க்சியத்தின் மா-லெ-மா சிந்தனை வழியில் இந்த சம்பளவேறுபாடு முதலாளித்துவத்தின் கட்டமைப்பில் சரியாக உள்ளதை புள்ளிவிபரம் காட்டுகின்றது. அதாவது உயர் மட்ட இடைவெளியை கடக்க நிச்சயமாக ஒரு  வர்க்கப்போராட்டம் அவசியம் என்பதையும், இடைவெளி (மேல் - கீழ்) தானாக மறையாது என்பதையும் அ.மார்க்சுக்கு சுட்டிக்காட்ட வேண்டியதாகியுள்ளது. ஏன்எனின் சமுதாயம் வர்க்க வேறுபாட்டால் சுரண்டலுக்கு உள்ளாகி சமுதாயம் பல ஒடுக்குமுறையை இதனால் உருவாக்கியும் உள்ளது. வர்க்கப் போராட்டத்துக்கு வெளியில் மேல் கீழ் இடைவெளி மறையாது மடியாது.

அடுத்து தீட்டு, வருணாசிரமம் இல்லை ஆனால் இன அடிப்படையிலான ஏதோ ஒன்று உண்டு எனக் கூறுவது வெளிநாட்டவன் அவர்களுடன் இணைந்து போராடக்கூடாது என்பதற்காகவே. தீட்டு உள்ள இந்தியாவில் தலித்துக்கள் தனித்து பின்நவீனத்துவ வழியில் போராடவேண்டும் என்று பூர்சுவ பிரிவும், ஏகாதிபத்தியவாதிகளும் கோருவது (தன்னவர் குழு ஊடான செயல் கள வேலை போன்று பல) போன்று, இங்கு தொழிற்சங்கத்துடன் வெள்ளையருடன் இணைந்து வெளிநாட்டான் போராடக்கூடாது என்கிறார். அதாவது நிறவெறி தொழிற்சங்கமும் இனவெறி வெள்ளையனும் அல்லவா இவர்கள் என்று கூறுவது இதற்காகவே. நீ தனியாக தனித்துவமாக சிறுபான்மையாக பின்நவீனத்துவ வழியில் இரு என்கிறார் அ.மார்க்ஸ்.

எல்லாம் இனவெறி பாசிசம் ஆனால் “ஆட்டோநாம்” மட்டும் தான் எஞ்சி உள்ளது என கூறுவது மூலம் அராஐகவாத லும்பன்தளத்தில் இணையுங்கள் போராடவிரும்புவர்கள் என்கிறார். இதன் மூலம் வர்க்கப்போரை தடுக்கமுடியும் என்ற அ.மார்க்சின் கற்பிதக் கனவு தனது சகாக்களும் அவரின் சீடர்களும் காட்டும் வழியில் சீரழிவது எப்படி என்றே ஒழிய வேறு ஒன்றுமல்ல.

ஏன் இந்த ஆட்டோநாம் உடன் இணைந்து வேலைசெய்யும் சிங்கம் என்ற அ.மார்க்ஸ் தனது புத்தகத்தில் அறிமுகம் செய்து அடிக்கடி குறிப்பிடப்படும் நபர் Nஐர்மனிய அரசின் தன்னார்வக் குழுவின் பிரதிநிதியாக பெருமளவு நிதிப்பலத்துடன் வவுனியாவில் அகதிகளுக்கு செயல்படும் ஒரு ஏகாதிபத்திய கைக்கூலியாக உள்ளார். இதுபோல்  இன்று பலர் அதன் வழியில் இணைந்து வருகின்றனர்.

அ.மார்க்ஸ் விரும்பும் இந்த அமைப்பும் அதில் வேலை செய்பவர்களும் தமது உதிரித்தன அராஐகவாத லும்பன்தனத்தின் பிரதிவிளைவை இப்படித்தான் காட்டமுடியும். இது எதிர்கால இலங்கையின் முன்னைய சமூக அக்கறைக் குரியவர்கள் பொதுப்போக்காக தன்னார்வ குழுவுடன் இணைந்து செல்வது இன்றைய நிலையில் காணப்படுகின்றது.  இதை ஊக்கப்படுத்த, அங்கீகாரம் கொடுக்க அ.மார்க்ஸ் போன்றோரின் கோட்பாடு தேவையாக உள்ளது. அதுதான் தனித்துவம், பிரித்துப்பார்த்தால் என பலவாக  பின்நவீனத்துவ தத்துவம் தேவையாகின்றது.

மக்களுக்கு உதவுவதிலும், நீதிவழங்குவதிலும், ஏகாதிபத்திய கைக்கூலியாக இருப்பதில் இருந்து பிரித்துப்பார்க்க கோருவதே பின் நவீனத்துவம் என்ற சாக்கடையும் பின் காலனித்துவம் என்ற சாக்கடையும். இதற்காகவே அ.மார்க்ஸ் கைக்கூலித்தனத்தை நியாயப்படுத்த தீவிரமாக உழைக்கின்றார்.

அடுத்து ஏன் எம்மவர்கள் வெள்ளைக்கனவுடன், தனது குழந்தை வெள்ளையா? அடுத்த வீட்டுக் குழந்தை வெள்ளையா? என மணிக்கணக்காக உப்புச்சப்பு இன்று நேரிலும், போனிலும் அலம்பும் வெள்ளை இனவெறி தமிழனை மிஞ்சியது அல்ல இந்த நாட்டு மக்களின் சிந்தனை.  இந்த மக்களின் சிந்தனை இவர்களை விட நிறத்திலும் இனத்திலும் முற்போக்கானது. ஒரு சமூகத்துக்கு இருக்கக் கூடிய (அ.மார்க்ஸ் போன்றோரை விட) அறிவியல் விழிப்புணர்ச்சியின்மைக்கு அப்பால் அவர்கள்  முற்போக்கான நேர்மையான பாத்திரத்தை கறுப்பு நாசிகளை விட கைக்கொள்கின்றனர் .

வெள்ளையின பெண்கள் எல்லாம் பத்து பேருடன் படுக்கும் "வேசைகள்" எனபார்க்கும் எம்மவர் வெள்ளை கறுப்பு திருமணத்தையும், பிறக்கும் குழந்தையை சுட்டிக்காட்டி "வேசைக்கு" பிறந்ததுகள் என இப்படியாக பலவாக கூறும் கறுப்பு நாசித்தனத்தை ஒட்டியே அ.மார்க்ஸ் என்ற ஆய்வுக்குஞ்சும் எல்லா ஐரோப்பியனையும் நாசியாக காட்டுவது ஒன்றும் வேடிக்கை அல்ல. ஊறிப்போன தரகு பூர்சுவா ஏகாதிபத்திய சிந்தனையின் பிரதிபலிப்புத்தான்.  அ.மார்க்ஸ் என்ன விதிவிலக்கு.  இப்படி அ.மார்க்ஸ் பல பலவாக தனது கற்பனையில் உதித்தவை, தனது அரசியலுக்கு இசைவாக இட்டும் கட்டியும் ஐரோப்பிய சமூகத்தை கொச்சைப்படுத்தியும் தனது கறுப்பு நாசிதனத்தில் நின்று நிறையவே புத்தகத்தில் கூறி ஐரோப்பியர் பற்றி இந்தியர்களுக்கு ஒரு பிழையான பார்வை ஏற்படுத்த முனைந்துள்ளார்.

ஏன் எனின் அய்ரோப்பிய மக்களைபற்றி எதிர்ப்பை பொதுவில் விதைத்துவிட்டால் பின் மார்க்சியத்தை அய்ரோப்பிய வாதமாக காட்டி அது வெள்ளை நிறவாதமாக எதிர்ப்பதன் மூலம், ஏகாதிபத்திய எதிர்ப்பு வர்க்கபோராட்டத்தை தடுத்து நிறுத்த முடியும் என்ற கனவுதான் இந்த அய்ரோப்பிய மக்கள் பற்றி இட்டுக்கட்டப்பட்ட கட்டமைவின் கற்பிதங்கள்.

அ.மார்க்ஸ் இயல்பான யதார்த்த சமூகத்தை மறுத்து, தான் தனக்குவேண்டியவர்கள் உடன் இணைந்து புனைந்து கட்டமைத்த கறுப்பு திமிர் தனிநபர் "கற்பிதங்கள்" தான் "வெள்ளைதிமிர்" என்ற கனவுப்படைப்பு.