Language Selection

சமர் - 25 : 08 - 1999
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தமிழ் பேசும் மக்களின் சுயநிர்ணயக் கோரிக்கையை மறுத்து, சிங்கள இனவெறிப் பாசிஸ்ட்டுக்கள் நடத்தும் இராணுவ ஆக்கிரமிப்புக்களை எதிர்த்துப் போராட, போராட்டத்தை தமிழ் மக்களிடம் இருந்து பலாத்காரமாக ஜனநாய விரோதமாக பறித்துப் பெற்ற புலிகள் இராணுவ ரீதியில், அரசியல் ரீதியில் தொடர்ச்சியாக தவறு இழைக்கின்றனர். தமிழ் பேசும் மக்களின் சுயநிர்ணயக் கோரிக்கை மீது தவறான இராணுவ அரசியல் மூல உபாயங்கள் தமிழ் மக்களின் இருப்பையே தகர்த்து விடும் அளவிற்கு நிலமை மாறிவிடுகிறது.

 

 

புலிகளின் செய்தி அமைப்புகள், ஊடகங்கள் இராணுவ வெற்றிகளைப் பிரச்சாரம் செய்யும் அளவிற்கு அதன் அரசியல் மூல உபாயங்களை, தமிழ் மக்களின் இருப்பு மீதான அக்கறையை கவனத்தில் எடுப்பதை தவிர்க்கின்றன.

இன்று இலங்கையில் இராணுவ ஆய்வாளர்கள் என்று எழுதுவோரும், சம்பவங்களில் இழுபட்டுச் செல்வோரும் புலிகளின் இராணுவ மூலோபாயத்தின் பின் சரியான பாதை பின்பற்றப் படுகின்றதா? என்பதை ஆய்வு செய்ய முடிவதில்லை.

நாம் புலிகளிகன் யுத்தத கள நிலமைகளை ஆய்வு செய்கின்ற போது  |புவிகளின் யுத்தமும், அதன் போக்கும் சிங்கள இராணுவ நடவடிக்கைக்கு பின் இழுபட்டுச் செல்வதை அவதானிக்க முடிகிறது. இதுதான் சிங்கள இராணுவத்துக்கு தேவையானதும் அடிப்படையானதுமாகும். புலிகளின் திட்டமிட்ட தாக்குதலுக்கு வெளியில் பொதுவான புலிகளின் இராணுவ மூலோபாயமும், புலிகளின் பிரதான இராணுவ மையமும் இனவெறி சிங்கள இராணுவத்தின் யுத்த முனைகளுக்குள் நிறுத்தி வைத்திருப்பதில் இராணுவம் வெற்றி பெற்றுள்ளது. இதுதான் கடந்த புலிகளின் இரானுவ வரலாற்றில் புலிகளை முடக்கிய மிகப்பெரிய  யுத்த நடவடிக்கையாகும்.

அந்தவகையில் யாழ்நோக்கிய "ஜெசிக்குரு" நடவடிக்கையை இராணுவம் தொடங்கிய போது, புலிகளின் சுயட்சையான நடவடிக்கையை முடிவுக்கு கொண்டுவந்தது.

முல்லைத்தீவு இராணுவ முகாம் போன்றும், பரந்தன் மீதான புலித்தாக்குதல் போன்ற தாக்குதலை நடத்துவதைத் தடுக்க, புலிகளின் அணிகளை தமது பிரதான தனது யுத்தமுனை நெருக்கடிக்குள் நிறுத்துவது இராணுவத்துக்கு அவசியமாக இருந்தது.

யாழ்குடாநாட்டை இராணுவம் ஆக்கிரமித்த போது வெளியேறிய புலிகளின் மிகப்பெரிய இராணுவ அணிகளை யுத்த முனை இனி எங்கே என்பது கேள்வியாக இருந்தது. இது முல்லைத்தீவைக் கைப்பற்றிய போது அடுத்த யுத்த முனை  எங்கே என்பது அரசுக்கு மிகப் பெரிய நெருக்கடியை கொண்டு வந்தது.

அது கிழக்கு மாகாணமாக இருக்கும் என்று (இதை நாம் முன்பு சமரில் குறிப்பிட்டிருந்தோம்) எதிர்பார்க்கப்பட்டது.

அதாவது புலிகளின் மிக முக்கியமாக மைய அணிகள் இயல்பில் கிழக்கு நோக்கி நகரும் பட்சத்தில் இலங்கை பெயரளவில் பெற்ற சுதந்திரத்திற்கு முன்பு இருந்து திட்டமிட்டு நடத்திய சிங்கள மயமாக்கும் குடியேற்றங்கள் எல்லாம் ஒரே நொடியில் தகரும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நகர்வு என்பது இராணுவத்துக்கு எதிரான, அதையொட்டிய இலக்குகள் மீது நடத்தப்படும் அதே நேரம், குடியேறிய மக்களை வென்று எடுத்தும் அல்லது நடுநிலைப்படுத்தியும் அவர்களை எதிரியாக காணாது யுத்தம் கிழக்கு நோக்கி நகர்ந்திருக்கவேண்டும். இதுதான் சரியான இராணுவ வியூகமாகவும், இனஅழிப்பின் திட்டமிட்ட பிரதேச அழிப்பை தடுக்கும் ஒரு யுத்த முனை நகரும் பட்சத்தில் யாழ் குடாநாட்டு கைப்பற்றியது என்பது அரசியல் ரீதியில், இராணுவ ரீதியில் அரசு தோல்வியாக இருந்து இருக்கும்.

இதை அரசு மிக நுட்பமாகப் புரிந்திருந்தது. யாழ் குடாநாட்டில் சிவில் நிர்வாகத்தில் புலிகளின் இராணுவம் முற்றாக குவிந்து இருந்தது என்பதும், அது கிழக்கு நோக்கி நகரும் பட்சத்தில் இலங்கை தமிழ் விரோத சிங்கள இன ஆக்கிரமிப்பு யுத்தத்தின் மிக முக்கியமான திருப்பு முனையான ஒரு நிகழ்வாக இருந்திருக்கும்.

சிங்கள இனவெறி அரசு இதைத் தடுக்க ஒரு நீண்ட தொடர்ச்சியான தனது யுத்த முனையை, புலிகளின் பிரதான யுத்த முனையாக மாற்றுவது என்பது, இராணுவ அரசியல் இலங்கை அரசுக்கு சாதகமானது என்பதை உணர்ந்து. இதற்க்கு யுத்த வெற்றி காலகெடு எல்லாம் யுத்தத்தில் புலிகளை மிகவும் தீவிரமாக இறங்கவும், சிங்கள மக்களின் முன் அரசு சலுகை பெறவும் முன்வைத்தது தான். முன்பு  புளட் போன்றவை தமிழ் ஈழத்துக்கு காலம் விதித்தது போல் இதுவும் ஒன்றாகும்.

வன்னி யுத்த முனையை தொடங்கிய உடன்       புலிகள் யுத்தத்தை உத்தியோக பூர்வமாக நடத்துவதா அல்லது இல்லையா என்பதை தீர்மானிக்க முன்பே யுத்தம் தீர்மானகரமாகிவிட்டது.

24-5-1997 களத்தில் 135 இல் புலிகள் 13-5-1997 தொடங்கி ஆக்கிரமிப்பை எதிர்த்து பாரிய  எதிர் தாக்குதலை புலிகள் தொடுக்கின்றனர் என பிரகடனம் செய்தனர். 13.5.97 முதல் 16.5.97 வரையிலான தாக்குதலில் 37 புலிகள் இறந்ததாக அறிவித்தனர். 18.5.97 ஒரு திடீர் தாக்குதல் நடத்தினர்.

யுத்தம் இவர்கள் முன் சிங்கள இனவெறி அரசு நகர்த்த அதன்பின் இழுபட்டு புலிகள் எதிர் தாக்குதலை தொடங்கினர் கடந்த 24 மாதமாக இது தான் பொதுவான நிலையாக உள்ளது.

யுத்தத்தை புலிகள் திட்டு மிட்டு நடத்த முன் யுத்தம் இவர்களை நகர்த்துகின்றது. புலிகளின் கட்டுப்பாடு ஒழுங்கு என்பது தலைமையில் இருந்து இறுக்கமானது என்பதும், தலைமையை மீறி எந்த முடிவையையும் அணிகள் எடுக்க முடியாத வகையில் ஒழுங்கமைக்கப்பட்டவை தான்.

ஆனால் ஒரு விதிவிலக்கு எப்போது ஆதரவளர்களும், கீழ்மட்ட அணிகள் தலைமையை இராணுவத்தை நோக்கிய தாக்குதலில் தன்னெழுச்சியின் பின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருகின்றனர். அது இராணுவத்துக்கு எதிரான நீடித்த யுத்த முனை தாக்குதல்களை எங்கே எப்படி செய்வது என கீழ் அணிகள் தான் தலைமை வழிகாட்டுகின்றது. இது தன்னெழுச்சி வகைப்பட்டது.

அதாவது பிரதான யுத்த முனையை புலிகளின் இராணுவ வெளிவட்ட ஆதரவு பிரிவுதான் எப்போதும் தலைமையை வழிநடத்துகின்றன. புலியின் தலைமை எப்போதும் கொரிலா, அதிரடித் தாக்குதலை மட்டுமே இராணுவ மூல உபாயத்தில் தனது கைகளில் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

யாழ்குடா நோக்கிய பாதை ஆக்கிரமிப்பு யுத்தம் தொடங்கிய உடன் புலிகள் இராணுவ தற்காப்பில் மோதத் தொடங்கிய உடன் அதன் வெளிவட்டப் பிரிவுதான் உடனடியாக அதை ஆதரித்து பிரச்சாரம், கோட்பாடுகளை கட்டமைத்து வெளிப்படுத்து கின்றனர். இது தலைமை யுத்தத்தை தீர்மானிக்க முன்பே தலைமையின் கையை கட்டிப் போட்டு விடுகின்றது.

இதை மீறும் எந்தத் தலமையும் தலைமையை இழந்து விடுகின்றது. ஏன் எனின் புலிகளின் அரசியல், இராணுவ வகை சார்ந்த பிரச்சார வகையில் உள்ளதால், அதன் மீதான ஆதரவும், ஊக்கமும் தலைமை மீற முடியாத ஒரு பிசுபிசுத்துப் போன றப்பர்களாக இழுபடுவதில் செல்கின்றது.

புலிகள் இராணுவ ரீதியில் மரபு ரீதியாக மாறிவிட்டதாக, தொடர்ச்சியான யுத்த முனையில் எதிர் கொண்டு செல்ல முடியும் என்று வன்னிப் போர் பற்றிய புலிகளின் ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. ஆனால் யுத்தத்தை ஆராயின் அது தவறான வீயூகம் மட்டுமின்றி, பிரதான தற்காப்பு யுத்த முனை வெளியில், புலிகளின் பாரிய வெற்றியை, வன்னியில் கொரிலா யுத்த மூலம் சாதிக்க முடியும் என்பதை அவர்களின் இராணுவ நடவடிக்கை தெரிவிக்கின்றன.

இதை அவர்களின் இராணுவ நடவடிக்கையின் வெற்றி தோல்விகளில் இருந்து ஆராய்வோம். புலிகளின் உத்தியோக பூர்வமான களத்தில், எரிமலை இதழ்களில் வெளியிடப்பட்ட புள்ளிவிபரங்கள் பல ஒன்றுக்கு ஒன்று முரணாக இருந்த போதும், புலிகளின் வெளியிடப்பட்ட புள்ளிவிபரங்களில் இருந்து ஆராய்வோம்.

ஏரிமலை நவம்பர் - டிசம்பர் 1997 இதழ் "மாவீரர் பணிமனை" வெளியிட்ட புள்ளி விபரங்களைப் பார்ப்போம்.

27.11.1982 முதல் 31.12.1997 வரை புலிகளின் இழப்பைப் பார்ப்போம்

ஆண்டு   போராட்டத்தில் இழந்தோர்

1982     1

1983     5

1984     36

1985     123

1986     256

1987     451

1988     364

1989     372

1990     960

1991     1613

1992     788

1993     925

1994     374

1995     1502

1996     1366

1997   2097

ஏனையோர் 264

தனிக்குழு 10

ஆண்    9916

பெண்    1591

மொத்தம்  11510

 

ஆகாயக் கடல் வழிச் சமர்    602

மணலாறு சமர்             233

ஓப்பிறேசன் தவளை          469

கொக்கு தொடுவாய்          175

இடிமுழக்கம்               181

சூரியக் கதிர்              438

ஓயாத அலைகள்           315

சுத்ஜெய 2                100

சுத்ஜெய 3                133

பரந்தன் ஆணையிறவு        193

ஜெயசிக்குறுவும் எதிர் தாக்குதலும்                        1178

தரைக் கரும் புலி           ஆண்  38 - பெண் 1    - 39

கடற் கரும் புலி            ஆண்  54  - பெண் 22  - 76

கரும்புலிகள் மொத்தம்        ஆண்  92  - பெண் 23  - 115

இது புலிகள் 1997 வiயில் அவர்கள் உத்தியோக பூர்வமாக வெளியிடப்பட்ட புள்ளி விபரங்கள். இதில் 1997-5-13 தொடங்கிய ஜெயக்குறுத் தாக்குதலில் 1178 பேர் இறந்துள்ளனர். 7மாதத்தில் மிகப் பெரிய இழப்பாக இருந்ததுடன், 1997 இன் மிக முக்கியமான யுத்த முனையாக இது இருந்துள்ளது. மிகுதிப் போர் முனைகளில் இறந்தோர் 919 பேர் மட்டுமெயாகும். இதில்  9-1-97 புலிகளின் பரந்தன்-ஆனையிறவு தாக்குதலில் 158 புலிகள் கொல்லப்பட்டனர். (களம் 26-2-1997 இலக்கம் 129) இது போல் திருகோணமலை சினக்குடாவிலும், மட்டக்களப்பு வவுணதீவிலும்  6-9-97 நடத்திய புலிகளின் தாக்குதலிலும் 84 புலிகள் (களம் 12-3-97 இலக்கம் 130)  இறந்தனர்.

1997 ஆம் ஆண்டு இந்த இரு பிரதான கொரிலாத் தாக்குதல்களை எடுத்தால் (இங்கு ஜெயசிக்குறு உள்ளடக்கவில்லை) 242 பேர் இறந்தனர். ஆகவே இந்த 254 பேர் மற்றும் ஜெயசிக்குறு 1178 பேரையும் விடுத்தால் 677 பேர் மட்டுமே மற்றைய போர்  முனைகளில் இறந்துள்ளனர். இது மொத்த இழப்பில் மூன்றில் ஒன்றாகும். அதாவது யுத்த முனையில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே மற்றைய யுத்த முனை இழப்புக்களாகும் இதன் இராணுவ இழப்புக்கள், கொரிலாத் தாக்குதல் போன்றவை மதிப்பிட முடியாத வகையில் செய்திகளை விரிவாக கொண்டிருக்கவில்லை.

1997 யுத்தம் ஜெயசிக்குறுவுக்குள் நகர முன் 1996 நிலமையை ஆராய்வோம். களத்தில் 1-1-97 இலக்கம் 125 இல் 1996 முக்கிய இராணுவ நிகழ்வுகள் பற்றிய குறிப்பில் 38 தாக்குதல்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. இது வான், கடல், நிலம் என அனைத்தையும் உள்ளடக்கியது. இதில் 25 தாக்குதல் கிழக்கு மாகாணத்தில் நடந்துள்ளது. யாழ் குடாவில் 5 தாக்குதல்களும் கொழும்பில் ஒன்றும், முல்லைத்தீவு முகாம் அழிப்பும், மிகுதி வன்னியிலும் எல்லைப்புறங்களிலும் அமைந்திருந்தன.

எனவே 1996 ஆம் ஆண்டு நடத்திய முக்கிய புலிகளின் தாக்குதல்கள் கிழக்காக இருந்தது தெளிவாகின்றது. இது சிங்கள குடியேற்றங்களை தமிழ் தேசிய பிரதேச வரையறையை நோக்கிய நகர்வை புலிகளை மீறியும் இருந்தது. இதனால் இதைத் தடுக்க கிழக்கில் இருந்து புலிகளை நகர்த்த ஒரு யுத்த முனை அரசுக்கு அவசியமாக இருந்தது. அந்த யுத்த முனைதான் 24 மாதங்களுக்கு மேலாக தொடரும் ஜெயசிக்குரு இராணுவ வீயுகமாகும்.

இந்த வன்னி யுத்தம் என்பது புலிகளின் ஆட்பலம், யுத்த மையம் என அனைத்தையும் இராணும் விரும்பிய ஒரு பிரதேசத்தில் நிறுத்தியதுடன், புலிகளை ஆப்பு வைத்து சிக்க வைத்துள்ளது. இதன் மூலம் புலிகளை யுத்தமுனையில் அழிக்கும் தந்திர உபாயமும் கையாளப்படுகின்றது. அதாவது ஆக்கிரமிப்புகளின் போது ஒரு நாட்டின் மீது படை நகரும் போது எதை எதிரி செய்வனோ அதே பாணியில் முன்னேகிற போது, எதிர்த்து போராடுபவர் எதைச் செய்யக் கூடாதோ அதையே புலிகள் செய்கின்றனர். தற்காப்பு என்பது வரையறுக்கப்பட்ட எல்லைக்குள்ளும், பிரதான யுத்தமுனை இதற்க்கு வெளியிலும் இருக்கவேண்டும்;. எதிரியை திசைதிருப்புகின்ற, அலைக்களிக்கின்ற, தொந்தரவு செய்கின்ற, புதிய இடங்களில் எதிரியை அழித்து ஒழிக்கின்ற வகையில் போராட்டத்தின் பிரதான யுத்தமுனை வெளியில் இருக்கவேண்டும்;.

ஜெயசிக்குரு நடவடிக்கை தொடங்கிய பின் புலிகளின் யுத்த புள்ளி விபரங்கள் (பல முரண்பாடு அவர்களின் புள்ளி விபரத்தில் உள்ள போதும்) ஆராய்வோம்.

யுத்தம் தொடங்கி ஒரு மாதத்தின் பின் (10.6.97) ஒரு திடீர் தாக்குதலை புலிகள் தாண்டிக்குளத்தில் நடத்தினர். இதில் 325 இராணுவம் பலியாக 80 புலிகள் இறந்தனர். (களத்தில் 18-6-97 இலக்கம் 137)

24-6-97 பெரியமடு  மீதான தீடிர் தாக்குதலின் போது 230 இராணுவம் பலியானது 95 புலிகள் இறந்தனர். (களத்தில் 2-7-97 இலக்கம் 138, களத்தில் 20-5-98 இல் இலக்கம் 161)

1-8-97 ஓமந்தை - ரம்பைக் குளம் தீடிர் தாக்குதலில் 135 இராணுவம் இறக்க 126 புலிகள் இறந்தனர். (களத்தில் 20-5-98 -161, களத்தில் 13-8-97 இல 141)

3 மாதச்சண்டையில் 1000 இராணுவ வீரர் இறந்தனர். (களத்தில் 13-8-97 இலக்கம் 141)

19-8-1997 பழைய வாடிப் பகுதியில் நடத்திய தீடிர் தாக்குதலில் 50 இராணுவம் இறக்க புலிகள் 7 பேர் இறப்பு (களத்தில் 27-8-97 இலக் 142)

5-10-97 முதல் 10-10-97 வரை கட்டம் கட்டமான ஜெயசிக்குரு படை மீது நடத்திய தீடிர் தாக்குதலில் 500 இராணுவம் இறக்க 154 புலிகள் இறந்தனர். (களத்தில்20-10-97 இலக் 146)

ஜெயசிக்குரு 145 நாட்களில் 1400 மேற்பட்ட இராணுவ இழப்பும் புலிகள் 662 மேற்பட்ட புலிகள் இறப்பு (களத்தில் 3-12-97 இலக் 149)

1-2-98 பரந்தன் கிளிநொச்சி மீதான தீடிர் தாக்குதலில் 400 இராணுவம் இறப்பு 150 புலிகள் இறப்பு (களத்தில் 7-6-98 இல 163)

1997 -5-13 முதல் 15-6-98 வரையிலான 400 நாள் யுத்தத்தில் 3500 மேற்பட்ட இராணுவம் இறக்க புலிகள் 1400 இழப்பு (களத்தில் 15-7-98 இல 165)

பிரபாகரன் 13-5-98 ஒரு வருட யுத்த நிறைவை ஒட்டி பேசிய பேச்சில் மூவாயிரம் இராணுவம் இறக்க 1300 புலிகள் இறந்தனர்  (எரிமலை மே 1998)

26- 9-98 கிளிநேச்சி-பரந்தன் மீதான தீடிர் தாக்குதலில் 1500 மேற்பட்ட இராணுவம் பலி புலிகள் 240 பேர் இறப்பு (களத்தில் 7-10-98 இல171)

இப் புள்ளி விபரங்களைக் கொண்டு ஆராயும் போது அண்ணளவாக 1750 புலிகள் இறக்க 5000 இராணுவம் இறந்துள்ளது. இப் புள்ளி விபரத்தில் பல முரண்பாடுகளை அவர்களின் கட்டுரைகள் உள்ளடக்கி உள்ளதால் புலிகளின் இழப்பு சற்று அதிகமாக (யுத்தத்தின் பின் காயமடைந்து பின் இறந்தோர், தவறியவர்கள் எனப்பார்க்கும் போது ) இருக்கும் என்பது தெளிவு. மறுபக்கம் இராணுவம் இறந்த எண்ணிக்கை சற்று குறைவாக இருக்கும் ஏன் எனின் இராணுவ இறப்பு ஒரு மதிப்பீடு மட்டுமே யாகும்.

1998இல் மாவீரர் பணிமனை விடுத்த அறிக்கையில் ஜெயசிக்குரு நடவடிக்கையில் இறந்தோர் முதல் ஆறு மாதத்தில் 1178 என்கின்ற போது பின்னர் நடந்த 9 மாதச் சண்டையில் 575 பேர் அளவில் மட்டுமே இழப்பு நிகழ்ந்துள்ளதென்பதாகிறது.

ஜெயசிக்குருவிற்குள் ஏழு முக்கிய தாக்குதல்கள் கெரிலாப்பணியில் (இத்தகவல் தொடுப்பதில் நிறையவே தகவல் பற்றாக் குறைகள் முரண்பாடுகள் உள்ளது) நடத்தப்பட்டுள்ளது.

இந்த ஏழு முக்கிய தாக்குதலில் 852 புலிகள் இறக்க 3140 இராணுவம் இறந்துள்ளது. மிகுதி நேரடி மோதல்களில் அதாவது 898 புலிகள் இறக்க 1860 இராணுவம் இறந்துள்ளது.

புலிகளின் நடவடிக்கை என்பது கொரிலா நடவடிக்கை மட்டுமே வெற்றியான பாதையாக மீள மீள உள்ளது. மரபு ரீதியான தொடர்ச்சியான மோதல் என்பது இழப்பீடுகள் சமனாகவே சற்று குறைவாகவே மட்டும் உள்ளது.

புலிகளின் தரப்பு இழப்பைக் குறைக்கவும், அதிக இராணுவத்தை அழித்தெழிக்கவும் உள்ள ஒரே யுத்த முனை கொரிலாப் பாணித் தாக்குதல்க ளாகும். இதுவே புலிகளின் வரலாற்றில் இதுவரை பொதுவன நிலையாக உள்ளது.

இந்நிலையில் வன்னிச் சமரில் நேருக்கு நேர் நின்று மோதல் யுத்தம் புலிகளை பலத்த இழப்புக்குள் நகர்த்துவதுடன், தமிழ் பேசும் மக்களின் சுயநிர்ணய கோரிக்கையை மறைமுகமாக அழித்தொழிக்க உதவியளிக் கின்றது. ஏன்எனின் தமிழ்மக்களின் நியாயமான கோரிக்கையை புலிகள் பலாக்காரமாக தமது ஆக்கியுள்ளதால், ஏற்படும் பின்னடைவுகள் அனைத்து தமிழ்மக்களின் மீதான சிங்கள ஆக்கிரமிப்பாக வெற்றிபெறும். வன்னியை நோக்கிய இராணுவ புலி எதிர்ப்பு இன்றி முன்னேறின் அது என்ன பொது விளைவுகளை ஏற்படுத்தும் என ஆராய்வோம்.

பாதை திறக்கப்படின் பொதுமக்களின் போக்குவரத்து சீராகும். மக்களின் உணவு நெருக்கடி நீங்கும். தமிழ் மக்களின் மீது உணவுத் தடை என்பது குறித்த பிரதேசத்தை நோக்கி கட்டுப்படுத்த முடியாது ஓரே சீராகும். புலிகள் சுதந்திரமாக உள் ஊடுருவவும், வேவு பார்க்கவும் வாய்பளிக்கும். புலிகள் நடத்திய முக்கிய 7 அதிரடி நடவடிக்கை போல் பல பத்துத் தாக்குதலை விரும்பிய இடத்தில் மிகப் பலமான ரீதியில் நடத்த முடியும். இராணுவ இழப்பு மிக அதிகமாகவும், புலியின் இழப்பு மிக குறைவாகவும் இருக்கும்.

மறு தரப்பில் பாதகமாக யாழ் குடாநாட்டுக்கு இராணுவ விநியோகத்தை இலகுவாக்கும். வன்னி நிலப் பரப்பை ஊடுறுத்த பாதை இரண்டாகும்.

யுத்தத்தின் போக்கில் பாதை மீதான யுத்தத்தை புலிகள் கைவிடுவதன் மூலம் கிழக்கில் மிக முக்கியமான யுத்த மையமாக மாற்றுவதன் அவசியம் இன்று அவசரமானது. தமிழ் மக்களின் சொந்த நிலம் மீதான குடியேற்றமும், ஆக்கிரமிப்பும் செய்யப்படும் நிலையில், அதைத் தடுக்க யுத்தம் கிழக்கை நோக்கி நகர வேண்டும். ஆனால் இது அப்பாவி சிங்கள மக்கள் மீது அல்ல குடியேற்ற நிறுவனங்கள் மீது, இராணுவத்தின் மீது அவசியமான தாக்குதலாக இருக்கும் பட்சத்தில் அரசும், இராணுவமும் இயல்பில் சிதறடிக்கப்படும்.

கிழக்கு மீதான தாக்குதல் அதிகரிக்க அதிகரிக்க வடக்கு இராணுவம் தவிர்க்க முடியாது கிழக்கு  நகர்த வேண்டி ஏற்படும். இது இரு பிரதேசத்தையும் அரசு இழக்க பலவீனம் அடையச் செய்யும்.

இல்லாத பட்சத்தில் வன்னி யுத்தம் புலிகளின் தோல்விப் பாதைக்கு போடப்படும் கடிவாளமாகும். வன்னிப் பாதையை இராணுவம் திறந்தாலும் அதன் மீதான தளர்தலை செய்ய முடியாது ஒர் இராணுவ சூனியப் பிரதேசத்தை எதிர்த்து புலிகள் நிறுத்த வேண்டிய நிலை பாதை நெடுக்க நீடிக்கும்.

இராணுவ சூனியப் பிரதேசத்தை எதிர்த்து புலிகள் நிறுத்த வேண்டிய நிலை பாதை நெடுக நீடிக்கும். இது இரானுவத்துக்கு வடக்கு கிழக்கில் தனது உறுதியான நிலையை பேன உதவும். வன்னிக் காடுகளை ஊடுறுத்த, அதை அண்டிய பிரதேசம் யுத்த தந்திர ரீதியில், தமிழ் பேசும் மக்களின் சுயநிர்ணயப் போராட வெற்றியில் தீர்க்கமானவையல்ல. மாறாக கிழக்கு மிகமுக்கியமான யுத்தத்தை தீர்மானிக்கும் மையமாக உள்ளது.

புலிகளின் யுத்தமும் அதன் போக்கு சுத்த இராணுவ வாத கண்ணோட்டத்தால், மக்களிடம் இருந்து அன்னியப்பட்ட நிலையில் யுத்தங்களில் பின் வாங்கியபடி இராணுவம் விருபும் யுத்தமுனையில் யுத்தம் செய்வதாக உள்ளது.

யுத்தம் மக்களுக்கானதாக, மக்களின் நலன் சார்ந்தாக, அவர்களின்  விடுதலையை பெறுவதாக அமைய வேண்டுமாயின் யுத்ததை அரசியலால் ஆராய்ய வேண்டும். அரசியலை ஆணையில் வைக்க வேண்டும்.

மக்களின் விடுதலை என்பது அரசியலில் ஆகும் போது தான்  யுத்தத்தை எப்படி, எங்கே எதற்காக என்று கேள்விகளின் மாபெரும் வெற்றிகளை சாதிக்க முடியும்.

ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை பற்றி அக்கறை இன்றி, இருக்கும் அமைப்பைச் சிதைவின்றி பேனுகின்ற அரசியல் நிலையில், குட்டி பூர்சுவா இயல்புடன் தப்பித்து ஓடுதலை தீவிரமாக நகர்த்தும். இதை மட்டுப்படுத்த அணிகளை இணைக்க யுத்த நெருக்கடி இடையில் இராணுவ சூனியப் பிரதேசம் போன்ற இராணுவவாத அரசியல் உண்மையில் போராட்டத்தை அழிக்கத்தான் உதவும். ஒருபுறம் நிரந்தர இரணுவமாக கருதிய போக்கில் நேருக்கு நேர் நடத்த யுத்தத்தில் இழப்புகள் அதிகரிக்கின்றன. இவ்யுத்தம் கருவிக்கானதாக, அனேகமாக சில ஆயுதங்களை குறிவைத்து நகர்த்துவதும், இதனால் அர்த்தமற்ற இழப்புகளும் அதிகரிக்கின்றன. ஆயுதங்களை தீர்க்கமானவை என்ற கண்ணோட்டமும், ஆயுதம் வைத்திருப்ப வனை எதிரியாக காண்பதும் புலிகளின் அரசியலாக உள்ளது. போராட்டத்தை எப்படி வெல்வது என்பதற்க்குப் பதில் ஆயுதத்தை எப்படி பெறுவது கைப்பற்றுவது அழிப்பது என திட்டமிடுதல் என்பது போராட்டத்தின் எதிர் நிலைக்கு நகர்த்துகின்றது.

இதனால் ஏற்படும் மனித இழப்புகள் ஒருபுறம், மறுபுறம் மக்களில் இருந்து அன்னியப்படுத்தப்பட்ட அரசியல் புலிகளுக்கு ஆள்பற்றக் குறையை அண்மைக்காலத்தில் ஏற்படுத்தியுள்ளது. ஆயிரம் ஆயிரமாக போராட்டத்துக்கு அணிதிரள்வதாக புலிகளின் பிரச்சார அமைப்புகள் அடிக்கடி கூறிய போதும் அண்மையில் மறைமுகமான கட்டாய இராணுவ சேவையை அறிமுகம் செய்துள்ளனர்.  35 வதுக்கு உட்பட்டோர் நட்டை விட்டு வெளியேறாமல் தடுதத்துடன் 55 வயதுக்கு உட்பட்ட அனைவரும் பயிற்சி எடுக்க வேண்டும் என்ற நடைமுறை அமுலுக்கு புலிக்கள் கொண்டு வந்துள்ளனர். இதை சாதிக்க அரசு கொடுக்கும் இலவச உணவை இது போன்றவைகளை  பணயமாக வைத்துள்ளனர். 35 வதுக்கு உட்பட்டோர் நட்டை விட்டு வெளியேறமால் தடுத்துடன் 55 வயதுக்கு உட்பட்ட அனைவரும் பயிற்சி எடுக்க வேண்டும் என்ற நடைமுறை அமுலுக்கு புலிக்கள் கொண்டு வந்துள்ளனர். இதை சாதிக்க அரசு கொடுக்கும் இலவச உணவை இத போன்றவைகளை  பணயமாக வைத்துள்ளனர்.

புலிகள் மிளவும் மாபெரும் அரசியல் தவறை இழைக்கின்றனர். நிர்பந்தங்கள் ஊடாக கட்டும் இராணுவங்கள், நெருக்கடியுடாக உருவாக்கும் நிர்பந்தங்களும் மக்களுக்கும் புலிக்கும் இடையில் பாரிய பிளவை மேலும் வளர்க்கின்றது. இது மக்களை போராட்டத்தில் இருந்து மேலும் அண்ணியப்படுத்தும் அரசியலாகும்

அண்மையில் துரோகக் குழுக்களுக்கு மிரட்டல் ஊடாக விடப்பட்ட அழைப்பு கூட ஐனநாயக பூர்வமானவையல்ல. இதில் இருந்த புலிகள் தமது கடந்தகால, நிகழ்கால அரசியலை மீள்பரீசிலனைக்கு எடுத்துக் கொள் இம்மியும் தயராற்ற நிலையில், புதிய தவறுகளை செய்யவும் அதை நியாப்படுத்தவும் கங்கனம் கட்டி செயல்படுவது என்பது போராட்டத்தை மேலும் மேலும் சீராழிக்கவே துணைபோகின்றது.

போராட்டத்தை வளப்படுத்த குட்டிபூர்சுவ நலன்களை பாதுகாக்க, அந்த அணிகளை அணிதிரட்ட எடுக்கு வழிமுறை மேலும் போராட்டத்தை சிதைக்கும். குட்டி பூர்சுவா வர்க்கம் எப்போதும் ஊசலாட்டம் கொண்ட தப்பி ஓடும் பிரிவு. ஒடுக்கப்பட்ட மக்கள் எப்போதும் போர் குணம் உள்ளவர்கள். அவர்களின் நலன்களை விடுதலையை முன் வைக்கும் போராட்டம் யுத்த நெருக்கடியை அவசியமற்றதாக்கின்றது. மாறாக யுத்தம் அவர்களின் விடுதலைக்கானதாக மாறிவிடும் எனவே ஒடுக்கப்பட்ட மக்களின் நலனைச் சார்ந்திருக்க, அதற்காக போராடாத எந்தப் போராட்டமும், எந்த பெரிய இராணுவ வெற்றியையும் மீறி தோல்வி அடைவது தவிர்க்க முடியாது. அதுபோல் முன்நோக்கு அற்ற இராணுவ இழுபறிக்குள் சிக்கி, தமது சுய தாக்குதல் முனையை தீர்மானிக்க முடியாது போய,; இராணுவம் விரும்பும் இடத்தில் நடத்தும் யுத்த முனையை பிரதான தாக்குதல் இடமாக மாறிவிடும். இது ஆப்பு இ;ழுத்த குரங்காகி தற்கொலைக்கு இட்டுச் செல்லும். ஏனவே ஒடுக்கப்பட்ட மக்களின் தலைமையில், அதன் அரசியல் ஒளியில் யுத்தத்தை பார்க்க போராடவேண்டிய நிலையில் இன்று தமிழ் மக்கள் உள்ளனர். இதை நாம் வென்று எடுக்கும் போராட்ட நெருக்கடியில் வாழ்கின்றோம்.

12.3.1999