Language Selection

சமர் - 29 : 11 - 2001
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கிருஸ்துவ மதத்தின் பெயரில் உலகை அடிமைப்படுத்தும் காலனித்துவத்தை ஆதாரமாக கொண்ட கொள்ளையிலேயே வத்திக்கான் தன்னை நிலைநிறுத்திக் கொண்டது. இன்றைய வத்திக்கானின் செல்வ செழிப்பு அதிகாரமும் கூட உலக மக்களை அடிமைப்படுத்தி அடக்கி ஆண்ட பரம்பரையின் எச்சங்களே. மற்றவன் உழைப்பை உறுஞ்சியபடி வத்திக்கானின்; அதிகார பீடங்களில் கொழு வீற்றிருக்கும் பன்றிகள் 1958 இல் எடுத்த முடிவுக்கு இணங்க, ஆசிய மக்களின் உழைப்பை நிபந்தனையின்றி வேட்டையாட ஒரு வானொலியின் தேவையை உணர்ந்தது போன்று  ஏகாதிபத்தியமும் உணர்ந்தது. 1960 ஆண்டு மேற்கு ஜெர்மனியிடம் இதற்கான பணத்தை வத்திக்கான் கோரியது. ஏகாதிபத்தியமும் கிருஸ்துவ மதமும் இணைந்து மக்களின் உழைப்பை சுரண்ட, மக்களை மதத்தின் பின் அடிமைப்படுத்தி செம்மறிகளாக்க, 1963 இல்  ஜெர்மன் ஏகாதிபத்திய பாராளுமன்றம் இந்த வானொலியை அமைக்க நிதியை வழங்கியது. இந்த எகாதிபத்திய கிருஸ்துவ கூட்டு வானொலியான வெரிதாஸ், 17 ஆசிய மொழியில் தனது செம்மறிகளைத் தேடி இன்று களத்தில் உள்ளது. இந்த ஏகாதிபத்திய கிருஸ்துவ வானொலி, 2000 ஆண்டில் 126 000 நேயர் கடிதத்தை பெற்றதாம். இதில் அரைப்பகுதி இலங்கை தமிழருடையது என்பது கவனத்துக்குரியதாக எம்முன் உள்ளது.

 

இந்த எகாதிபத்திய கிருஸ்துவ புனித கூட்டு வெரிதாஸ் வானொலியின் தமிழ் மொழி ஒளிபரப்புகான வெள்ளிவிழாவை, அண்மையில் இலங்கைத் தமிழர்கள் பிரமாண்டமாக பெரும் தொகை பணம் செலவு செய்து கொண்டாடிக் கோமாளிக் கூத்துமாடினர். தமிழ் சேவையை நடத்தும் ஜெகத் கஸ்பர் அழைக்கப்பட்டு, அவருக்கே வெள்ளிவிழா நடத்தினர் மானம் கெட்ட தமிழர். விழாவே அவருக்குத்தான் என்பதும், அவர் தமிழ் மக்களின் தேசியத்தை தவறாக நிலைநிறுத்தி பிழைக்கும் கிருஸ்துவத்தை சர்வதேசமயமாக்கினர் என்பதால்தான் இந்த வெள்ளிவிழா. அதாவது தேசிய போராட்டத்தை சொல்லி வியாபாரம் முதல் பத்திரிகை வானொலி ஈறாக எத்தனையோ பிழைப்புகளை நடக்கின்றன. அதேபோல் இவர் கிருஸ்த்துவத்தை உலகமயமாதல் குடையின் கீழ் பரப்பியவர். மக்களின் அறியாமையை தேசியத்தின் குடையின் கீழ் பாதுகாத்து வளர்ப்பதே, இவரின் கிருஸ்துவ பிழைப்புவாதமாகும். மதத்தை அறிவியலுக்கு புறம்பாக திணிக்கும் கிருஸ்துவம், தேசியத்தை தேசிய உள்ளடகத்தின் மேல் அல்ல, அதை ஏகாதிபத்திய உலகமயமாதல் காலனிய உள்ளடகத்துக்குள்ளான அறியாமை மேல் கட்டமைப்பதே இவரின் குறிப்பான கிறிஸ்துவ செயலாகும். அதாவது தேசியம், தேசிய வளத்தை அடிப்படையாகவும் ஆதாரமாகவும் கொண்ட பொருளாதாரத்தையும், அதன் அடிப்படையில் அரசை நிறுவவும், அதன் பாற்பட்ட கலாச்சார கூறுகளையும் வளர்த்தெடுப்பது அடிப்படை நிபந்தனை. இது அனைத்து மத நிலப்பிரபுத்துவ உறவுகளையும் களையவேண்டும். களையாத வரை அந்த தேசியம் என்று எதுவும் இருப்பதில்லை. தேசிய பொருளாதார அடிப்படையில் சர்வதேச உறவுகளை, அரசியல் மதம் என அனைத்தின் மேலும் கையாள்வதே தேசியத்தின் சிறப்பு பண்பாகும்;. குறிப்பாக இன்றைய உலகமயமாதலை எதிர்த்தே தேசியம் இருக்கமுடியும், உயிர் வாழமுடியும்;. இதற்கு வெளியில் தேசியம் என்பது கற்பனையே. இதை ஏற்றுக் கொள்ளாத, இதை ஏற்றுக் கொண்டதன் அடிப்படையில் போராடாத யாவரும், தேசியத்தை தமது சொந்த குறிக்கோள் சாhந்து பயன்படுத்துபவர்களே. இந்த வகையில் தான் வெரிதாஸ் வானொலியின் தமிழ் மூலம் ஜெகத் கஸ்பர் நடத்தும் தேசிய மற்றும் கிருஸ்துவ பிழைப்புவாத ""அருட்பணி"" நீடிக்கின்றது. புலம் பெயர் சமூகத்தில் அண்மைக் காலமாக வேகமாக நடக்கும் கிருஸ்துவ மதமாற்றம் போன்று, மற்றொரு வழியில் தேசியத்தின் மேலான அறிவற்ற முட்டாள் தனத்தில் இந்த ""அருட்பணி"" நடக்கின்றது. தமிழன் தனது சொந்த அடையாளத்தைக் கூட வரலாற்று ரீதியாக அடையாளப்படுத்தி இனம் காண முடியாத குருட்டுத் தனத்தின் மேல், ஏகாதிபத்தியமும் கிருத்துவமும் போதகர்களுக்கு வழங்கும் விசேட புத்தியீவி அறிவை பயன்படுத்தியே இந்த "அருட்பணி" நடக்கின்றது

இந்த "அருட்பணி"யின் தொடர்ச்சியில் ஜெகத் கஸ்பர் வெளிநாட்டு தமிழர்களைப் பார்த்து கூறுவதைப் பார்ப்போம். "ஒரு சமுதாயத்தின் ஒட்டுமொத்த அழிவால் இது உங்களுக்கு கிடைத்த வாழ்க்கை என்றால், அந்த சமுதாயத்திற்கு பதில் சொல்ல வேண்டியது உங்கள் மனச்சாட்சியின் கடமை. உங்கள் வாழ்வுக் கடமை. உங்கள் ஆன்மீகக் கடமை. அதுவே நீங்கள் கடவுளுக்குச் செய்யும் புண்ணியமான கடமை" என்று வெள்ளிவிழா மலரில் எழுதுகின்றார். ஒட்டுமொத்த சமுதாய அழிவு என்றால் என்ன? ஒரு மக்கள் போராட்டம் சமுதாயத்தை அழிப்பதில்லை. மாறாக சமுதாயத்தின் வளர்ச்சி நிலைக்கு அல்லவா மக்கள்  போராட்டம் நடக்கின்றது. இதை மறுத்து நாசூக்காக போராட்டத்தின் மேல் வீசும் சேறு, இங்கு போராட்டத்தை ஆதரிப்பது போல் நடக்கின்றது. மக்கள் போராட்டம் அல்லாத தனிமனித பயங்கரவாத போராட்டம் ஒரு சமூகத்தை எப்போதும் அழிக்கின்றது. சமுதாயத்தின் அழிவால் புலம் பெயர் வாழ்க்கை கிடைத்தது என்றால், இவர்களா சமுதாயத்தை அழித்தனர்? அழிகின்ற போது இலாபம் அடைகின்றவன் தான் அழிக்கின்றான். இங்கு புலம் பெயர் சமூகமா சமுதாயத்தை அழித்தது! உங்களுக்கு கிடைத்த வாழ்க்கை என்ற மெச்சும் கண்ணோட்டம், நக்கி வாழும் மேற்கு அடிமை வாழ்க்கையை கிருஸ்துவ கண்ணோட்டத்தில் போற்றுவதாகும். ஒட்டு மொத்த சமுதாய அழிவால் கிடைத்த வாழ்வு சார்ந்து பதில் சொல்ல வேண்டியதே புலம் பெயர் சமுகத்தின் கடமை. அதுவே கடவுளுக்கு செய்யும் கடமை. என்ன விசித்திரமான கிருஸ்துவ பிதற்றல்;. ஒரு  சமுதாயம் அழிகின்றது என்றால் எப்போதும் அழிப்பவர்கள் தான் பதில் சொல்ல வேண்டும்;. ஆனால் புலம் பெயர் சமூகம் பதில் சொல்ல வேண்டும் என கிருஸ்துவம் கோருவது ஏன்? இந்த நிலையில் புலம் பெயர் சமூகம் மண்ணில் இருந்து பிரிந்து, சொந்த பண்பாட்டு கலாச்சார கூறுகளை இழந்து, அன்னிய மதங்களின் பிடியில் சிக்கி ஆழமாகவும் அகலமாகவும் சிதைந்து வருகின்றனர்.

ஒருபுறம் இனவெறி சிங்கள் அரசுகள் எமது சமூகத்தை அழிக்கின்றது. அதனுடன் தமிழ் குறுந் தேசிய போராட்டமும் சமூகத்தை அழிக்கின்றது. இவர்கள் தான் அழிவுக்கு பதில் சொல்ல வேண்டும். வத்திக்கான் கிருஸ்துவ அதிகார பீடம் பல நூற்றாண்டாக கையாண்ட, காலனித்துவ கொள்கையே, தமிழ் மக்களின் அழிவுக்கும் வித்திட்டது. இலங்கை காலனியாக இருந்த வரலாற்றுச் சூழல் இன்றைய நிலைக்கு பிரதான காரணம். வத்திக்கானின் கிருஸ்துவமும் மேற்கும் புனித கூட்டு அமைத்து உலகையே மேற்கின் காலனியாக்கிய வரலாற்று வழியில் தான், எமது தேசிய இனப்பிரச்சைன இன்று நீடிக்கின்றது. இன்றும் ஏகாதிபத்தியமும் கிருஸ்துவமும் வைத்திருக்கும் புனித கூட்டே, ஏகாதிபத்தியத்தின் உலகமயமாதல் விரிவாகத்தை அங்கீகரிக்கின்றது. மறுகாலனியாக்கத்தை புனித கூட்டு அங்கிகாரித்து தேசிங்களுக்கு எதிராக குழிபறிக்கின்றது கிருஸ்துவம். புனித கூட்டின் அடிப்படையில் ஏகாதிபத்திய விரிவாக்கத்தை ஆதாரிப்பதும், தேசிய போராட்டங்களை (தமிழ்) அழிப்பதும் நிகழ்கின்றது. எமது தேசிய சுயநிர்ணயத்தை கொள்கை ரீதியாக அங்கீகரிக்கவும், அதற்கு ஆதாரவாக இலங்கை ஆக்கிரமிப்பையும்  வத்திக்கானால் விமர்சிக்க முடியுமா? தமிழ் மக்கள் மேல் ஆய்வு என்ற பெயரில் நடக்கும் கிருஸ்துவமும் தமிழ் குறுந்தேசிய புனித கூட்டுடன் கூடிய பிதற்றல்களை விடுத்த, உனது புனித ஆணாதிக்க கிருஸ்துவ தந்தைகளின் கடந்தகால வரலாற்று அடக்குமுறைகளையும், அதன் இன்றைய நீட்சியையும் ஆய்வு செய்யாத பிழைப்பவாதிகளே, தமிழ் மக்களை பற்றி மூக்கால் அழுகின்றனர். இலங்கையில் நேரடியான செய்தி சேகரிப்பில் ஈடுபடாதவர்கள், அங்கு இருந்து வரும் அரசு மற்றும் புலி சார்ந்த செய்திகளை வளைத்து நெளித்தும் ஒரு பக்க சார்பாக திரித்து கூறும் "அருட்பணி" உண்மையில் போலித்தனமானவை.

இந்த ஏகாதிபத்திய குறுந்தேசிய கிருஸ்துவ புனித கூட்டுக்கு இணங்க ஜெகத் கஸ்பர் "அருட்பணி"யின் தொடர்ச்சியில் சிலவற்றை பார்ப்போம். அண்மையில் அமெரிக்கா மேல் நடந்த தாக்குதலை அடுத்து, அவரின் கருத்துகள் புனித கூட்டை பிரதிபலிக்க தயங்கவில்லை. அவர் "தாடி வளர்த்தல், பர்தா அணிதல் உள்ளிட்ட தாலிபானின் ஏனைய பைத்தியக்காரத் தனங்களை நாம் ஏற்கனவே அறிந்திருக்கின்றோம். ... இதுதான் இஸ்லாம் என்றால் ஹிட்லரின் நாஜிக் கொள்கைக்கும் இஸ்லாத்திற்கும் வேறுபாடு இல்லை." என்கிறார். என்ன அருமையான வாதம். ஐயா, உனது கிருஸ்துவத்தின் இருண்ட மக்கள் விரோத வரலாற்றை மறந்து போனது ஏன். "புனித பைபிளின்" பெயரில் அதில் உள்ள முட்டாள் தனமான காட்டு மிராண்டித்தனங்களை எல்லாம் சொல்லி அதையே இன்றும் புனிதமாக பிதற்றும் உங்களுக்கு, முஸ்லீம் அடிப்படைவாத காட்டுமிராண்டிகள் உங்களைப் போல் "புனிதகுரானின"; மூலம் நடத்தும் வக்கிரங்களை கண்டிக்கும் எதிர்க்கும் தார்மிக பலம் கிடையாது. உங்கள் கிருஸ்துவ பைத்தியக்காரத் தனங்கள் "புனித பைபிளில்" வக்கரித்துக் கிடப்பதை மறந்து, மற்றவனை குற்றம் சாட்டி நிற்பது தான் வேடிக்கை. இங்கு வேறுபாடு முஸ்லீம் அடிப்படைவாதம் மக்களிடையே ஆழமாக வேர் ஊன்றி அதிகாரத்தை நிலைநிறுத்த முனைகின்றது. கிருஸ்துவ அடிப்படைவாதம் அதிகாரமிழந்து ஏகாதிபத்தியத்தின் குண்டி கழுவி நக்கி பிழைக்கின்றது.

இந்நிலையில் கிருஸ்துவம் பெண்கள் கிருஸ்துவ போதகராக வர ஆணாதிக்க ஜனநாயகத் தடை. ஆண்போதகர் மற்றும் பெண் கன்னியாஸ்திரிகள் திருமணம் மற்றும் பாலியலில் ஈடுபடத்; தடை. இவை எல்லாம் பைத்தியக்காரத் தனமில்லையா? பைபிளை அடிப்படையாகவும் ஆதாரமாகவும் கொண்ட கிருஸ்துவம் "புனித பைபிளின்" பெயரில் நடத்தும் கூட்டுத் தற்கொலைகள், படுகொலைகள் எல்லாம் கிருஸ்துவத்தின் உள்ளீடுதான். கிருஸ்துவத்தின் வௌ;வேறு பிரிவுகள் "புனித பைபிளின்" விதிப்படி மருந்து குடிக்கத் தடை, இரத்தம் ஏற்றத் தடை என்ற எணணற்ற பைத்தியக்காரத்தனங்களின் காட்டுமிராண்டித்தனத்தை என்ன என்பது. ஏன் பைபிளின் பெயரில் அறிவியல் விஞ்ஞானிகளை உயிருடன் "புனித சிலுவையில்" அறைந்து தீயிட்ட நீங்கள், மற்றவனை குற்றம் சாட்ட எந்த உரிமையும் தார்மீகப் பலமும் கிடையாது. கிட்லரின் நாசிசத்துக்கு வேறுபாடு கிடையாது என்பது சிரிப்புக்குரிய ஒன்றாகும். கிட்லர் யாருடன் முரண்பட்டான். உலக மூலதனச் சந்தையை அடிப்படையாக கொண்டு நடந்த ஏகாதிபத்திய உலக விரிவாக்க நலன்களைச் சார்ந்தே, கிட்லர் உருவானவன். முதலாம் உலக யுத்தம் போல் இரண்டாம் உலகயுத்தம் ஒரே நோக்கத்துக்காக நடத்தப்பட்டது. இன்று ஏகாதிபத்தியம் செய்து குவிக்கும் ஆயுதங்களும் அதே நோக்கத்தில் தான். ஏன் புனித கிருஸ்துவம் அதிகாரத்தில் இருந்த போது, தனது காலனிய விரிவாக்கத்தை உலகத்தில் தொடங்கிய போது, கிட்லரை விட மிக மோசமான வகையில் மனித இனத்தை அழித்தவர்களின் குழந்தைகள், இன்று மற்றவனைச் சாடி கிருஸ்துவத்தை உலகமயமாக்குவது தான் வேடிக்கையானது. இதற்கு ஏகாதிபத்திய பக்கத்துணையாக இராணுவ ஆக்கிரமிப்புகள், நிதி மற்றும் அறிவியலால் துணைநிற்கின்றது. அவுஸ்திரேலியா முதல் அமெரிக்க செவ்விந்தியர்களின் தோலை உயிருடன் உரித்தது வரை, சில பத்து கோடி காலனிய மக்களை கொன்று குவித்த கிருஸ்துவம், அந்த மக்களை கொள்ளையடித்தும் உழைப்பை உறுஞ்சியும் தன்னை ஒரு உலக விரிவாக்க மதமாக நிறுவிய தொடர்ச்சியில் தான், அதன் கைக்கூலிகளான ஜெகத் கஸ்பர் தனது "அருட்பணி"யைத் தொடருகின்றார்.

மேலும் அவர் "தவறான ஒழுக்கத்தில் பிறந்ததென சின்னஞ்சிறு பிள்ளைகளுக்கக் கூட துப்பாக்கியால் தலையில் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றியிருக்கின்றது" என்கின்றார். ஏகாதிபத்தியம் போல் என்ன சமூக அக்கறை. ஐயா உங்கள் புனித சிலுவைகளில் இதே காரணத்துக்காக எத்தனை லட்சம் பெண்களை உயிருடன் அறைந்து தீயிட்ட வரலாற்றை மறந்து இப்படி கூறலாமா? ஆப்கான் பெண்கள் குழந்தைகளின் ஒழுக்கத்தின் மேலான இஸ்லாமிய அடிப்படைவாத படுகொலை வன்முறைகளையிட்டு, கிருஸ்துவ "புனித பைபிளை" தொழுபவர்கள் கருத்து சொல்ல என்ன தார்மிக அருகதையிருக்கின்றது. இன்றும் அதே "புனித பைபிள்" காலத்தின் தேவையுடன் பிழைக்க பல மாற்றத்தை கண்ட போதும், அதே ஆணாதிக்கம் கொலுவீற்று பெண்ணை அடிமையாக இருக்க போதிக்கின்றது. ஐரோப்பிய ஆணாதிக்க வரலாற்றில் அடிமைகளாக பெண்களை ஒடுக்கிய "புனித பைபிள்", அப் பெண்களின் ஒழுக்கம் மேல் நடத்திய சித்திரவதையையும் படுகொலைகளையுடன் கூடிய கிருஸ்துவத்தின் இருண்டகால வரலாற்றை வெளி உலகுக்கு காட்ட மறுக்கும் கிருஸ்துவ ஜனநாயகத்தில் தான், இன்றும் "அருட்பணி"கள் தொடர்கின்றன. அதே "புனிதபைபிள்" அதே ஆணாதிக்க கிருஸ்துவத்தின் தொடர்ச்சியில், முஸ்லீம் அடிப்படைவாதம் மீதான ஒருதலைபட்சமாக தாக்குதல் அனைத்தும் ஏகாதிபத்திய நலன்களை பாதுகாப்பதே.  வத்திக்கானின் ஆசி பெற்ற அமெரிக்க "புனிதபைபிள்";வாதிகள் அமெரிக்கா கொடியுடன் ஆக்கிரமிப்பு யுத்த பிரார்த்தனைகளை புனிதபைபிளின்" "புனித" மேற்கோளுடன் நடத்துகின்றனர்.

மேலும் இந்த ஏகாதிபத்திய நலன் சார்ந்த கிருஸ்துவ தூதர்கள் "விதவைகளை உன் சொந்தத் தாய்போலக் கருதி கருணை காட்டு என்று சொல்லி வந்தவர் முகம்மது நபி அவர்கள். ஆனால் விதவைகள் ஆண்களின் மனச்சபலத்திற்கு காரணமானவர்கள் என்பதால் நூற்றுக்கணக்கான விதவைத் தாய்மார்களை உயிரோடு புதைத்திருக்கின்றது." என்று குற்றம்சாட்டும் நீங்கள், உங்கள் புனித பைபிளின் பெயரில் செய்யாதையா அவர்கள் செய்கின்றனர் என்கின்றீர்கள். அவர்கள் உயிருடன் புதைக்கின்றார்கள், நீங்கள் உயிருடன் எரித்தீர்கள்;. கிருஸ்துவ மதத்தின் உலக விரிவாக்க போதகர்கள் தமது வரலாற்றை இருட்டில் வைத்தபடி, மற்றவனை குற்றவாளியாக்குவது ஏகாதிபத்தியத்தின் உலகமயமாக்கல் பலத்தில் தான். கிருஸ்துவம் விதவைத் திருமணத்தை எற்றுக் கொள்கின்றதா? விவாகரத்தை எற்றுக் கொள்கின்றதா? அதே காரணத்தை அடிப்படையாக கொண்டே, இஸ்லாமிய அடிப்படைவாதமும் திகழுகின்றது. அதன் மேல் தனது வக்கிரத்தை வேறுபட்ட வடிவில் திணிக்கின்றது

மேலும் அவர் "நாஜி வதைமுகாம்களில் யூதமக்களைப்  போலத்தான் இன்றைய அப்பாவி ஆப்கான் மக்களும்" என்கின்றார். நாஐp முகாம் படுகொலைக்கு, அப்போதைய வத்திக்கான் போப் கம்யூனிசத்துக்கு எதிராக, மக்களை சுரண்டும் உரிமைக்காக கிட்லருடன் கூடி வழங்கிய "புனித ஆசியி"லேயே நிகழ்ந்தவை. வத்திகானின் அதிகாரம் கொடிகட்டி பறந்த காலனிய காலத்தில் காலனி மக்களை கொல்ல வழங்கிய ஆசி செய்தியைப் போல், அதே நோக்கத்தில் இரண்டாம் உலக யுத்தத்தின் போது நாசிகளுக்கு வத்திகான் போப் ஆசி வழங்கினான்;. வத்திக்கானும் நாசிகளும் உருவாக்கிய "புனித கூட்டு" தான் நாசிய வதை முகாமாகி கள்ளக் குழந்தையாக பெத்துப் போட்ட வரலாற்றை மூடிமறைத்தபடி, மற்றவனை குற்றம் சாட்டும் ஏகாதிபத்திய முகத்துடன் கூடிய ஆசியை செய்தியாக்கின்றனர்.

மேலும் அந்த ஆசி செய்தியில் "... தலிபான் காட்டு மிராண்டிகளால் வல்லுறவுக்கு உள்ளாகிச் சிதைந்து கிடக்கும் ஓர் அப்பாவி இளம் பெண்ணை ..." என்ற கூறுவது, வரலாற்றை உயிருடன் புதைப்பதாகும். தலிபானை சீராட்டி வளர்த்து ஆளாக்கியது அமெரிக்கா ஏகாதிபத்தியமே. இதற்கு வத்திகானின் ஆசியுடன் கூடிய எதிர்ப்பற்ற அங்கீகாரத்தை வழங்கியவர்கள் இவர்கள். ஏகாதிபத்திய பொருளாதார நலன்களே அங்கு ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பாகி, அந்த மண்ணும் வளமும் சிதைந்தது. ஏகாதிபத்தியம் சொல்வது போல் கிளிப் பிள்ளiயாக கிருஸ்துவமும், நாட்டை தலிபான் சிதைத்தாக கூறுவது வரலாற்றை கிருத்துவம் போல் மூடிமறைப்பதாகும்;. ஏன் அமெரிக்கா தலைமையில் ஆப்கான் மேல் தொடங்கிய ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு, பல பத்து லட்சம் ஆப்கான் மக்களை வரலாறு காணத வகையில் நாடு கடந்த அகதியாக்கியுள்ளது. சிதைந்த நாட்டை தூசு மண்டலமாக்கும் அமெரிக்காவின் குண்டுவீச்சு, மக்களின் இரததத்;தால் தணிக்கின்றது.

இந்த ஆக்கிரமிப்பை எப்படி செய்யவேண்டும் என கிருத்துவம் கூறும் ஆலோசனையை பார்ப்போம். "ஹிட்லரின் படைகளை முறியடித்து நாஜிக் கொடுமைகளை முடிவுக்குக் கொண்டு வந்தது போல் தலிபான் - ஒசமா பின்லாடனின் மனநோய் பிடித்த குற்றக் கும்பலின்  பிடியிலிருந்து அப்பாவி ஆப்கான் மக்களை விடுவிக்க உலக சமுதாயம் இணைந்து முயற்சி மேற்கொள்ளுமேயானால் அதனை நாம் வரவேற்கின்றோம்." என்ன அருமையான ஆக்கிரமிப்பு மறு காலனித்துவ வாதம். உலக சமூகம் என்பது உலகமயமாதல் அதிகாரத்தை கொண்ட சமூகம் தான். ஏகாதிபத்தியங்களின் மறுகாலனியாக ஆப்கான் அடிமைப்பட்டு அடங்கி வாழ, உலக சமூகம் ஒத்துழைக்க அழைக்கின்றார். தேசிய வளத்தையும், சொந்த உழைப்பை ஏகாதிபத்திய சுரண்டலுக்கு தாரைவார்த்துக் கொடுக்கும் அமைதியான சமாதானமே ஆப்கான் மக்களுக்கு தீர்வு என்கிறார். இதைத் தான் அவர் தமிழ் மக்களுக்கு தீர்வு என்கின்றார்.  இங்கு எல்லாம் கிருஸ்துவம் கொடிகட்டி பறந்தால் சிறப்பு என்று சொல்லாமல் சொல்லுகின்றார் கிருத்துவ உலக விரிவாக்க வாதி.