இலங்கை தூதரகத்துக்கு முன் நடந்த போராட்டத்தின் பின்புலத்தில், தமிழ் சிங்கள உறவுக்கு ஆப்பு வைக்கும் சதியும் கூடவே அரங்கேறியது. இந்தப் பின்புலத்தில் புலிகள் உள்ளிட்ட போலி இடதுசாரியம் பேசும் பிரிவினைவாத இனவாதிகளின் கூட்டுச் சதியுடன் தான் இது நடந்தேறியது.
1. அரசு புலி முத்திரை குத்தி முன்னிலை சோசலிசக் கட்சியை ஒடுக்க முனைகின்ற அரசின் திட்டமிட்ட சதிப் பின்னணியில், புலத்தில் சிலர் அதற்கு வலுச்சேர்க்கும் வண்ணம் கூட்டாகச் செயல்பட்டனர். நாடு கடந்த புலி மாபியாக்களுடன் சேர்ந்து இந்தப் போராட்டம் நடத்துவதான அறிவித்தல் திடீரென வெளியானது. அதுவும் இலங்கை அரசு சார்பான ஊடகத்தில் வெளியானது. அதேநேரம் போராட்டம் நடைபெற்ற இடத்தில் இருந்து பிபிசி தமிழ் சேவைக்கு தேசம்நெற்றைச் சேர்ந்தவர்தான் பேட்டியை வழங்குகின்றார்.
2. தமிழ் - சிங்கள ஒடுக்கப்பட்ட மக்களிடையே ஏற்பட்டு வரும் பரஸ்பர புரிந்துணர்வையும், ஒன்றுபட்ட நிகழ்ச்சி நிரலுக்கான அரசியல் தெரிவையும், இதன் மூலம் இவர்கள் வேட்டு வைத்திருக்கின்றனர். சிங்கள அப்பாவி தோழர்களின் அறியாமையை ஏமாற்றி இதை அரங்கேற்றினர். தமிழர்களின் இழிவான இந்த அரசியல் பாத்திரம், அரசியல்ரீதியான அவநம்பிக்கையையும் அச்சத்தையும் சந்தேகத்தையும், விலகிச்செல்லும் போக்கையும் அவர்களிடம் உருவாக்கியிருக்கின்றது. தமிழ் சிங்கள ஒடுக்கப்பட்ட மக்களை பிளக்கும் அரசியல் பின்னணியில், இந்தச் சதியை திட்டமிட்டு அரங்கேற்றினர்.
இதனால் தான் முதல் நாள் போராட்டத்தை எந்த முன்னறிவித்தலுமின்றி ரத்தாக்கினர். எமது தோழர்கள் உட்பட, இந்த அறிவித்தலை அடிப்படையாகக் கொண்டு அங்கு போராடச் சென்ற பலர் ஏமாற்றத்துடன் அன்று திரும்பினர். இந்த சதிப் பின்னணியில் செயல்பட்ட அனைத்து தமிழரும், தேசம்நெற் இணையத்தில் பின், ஒன்றாக கடந்த காலத்தில் இயங்கியவர்கள். இந்த அரசியல் பின்புலம், நோக்கம் இன்று இதன் மூலம் மறுபடியும் கேள்விக்கு உள்ளாகின்றது.
இந்த வகையில் லண்டனின் பிரேம்குமார் குணரத்னம் மற்றும் திமுது ஆட்டிகல கடத்தலுக்கு எதிராக நடத்த இருந்த போராட்டம், எந்த முன்னறிவித்தலுமின்றி திடீரென ரத்து செய்யப்பட்டது. ஏன் எதற்கு என்று தெரிந்து கொள்ள முன், அதுபற்றிய எந்த விளக்கமும் இன்றி அடுத்தநாள் போராட்டம் நடைபெறும் என்ற அறிவித்தல் திடீரெனப் புதிதாக வெளியாகியது. உண்மையில் இதன் பின்தான், இதற்குள் ஒரு சதி இருப்பதை இனம் காணமுடிந்தது.
இப்படி அடுத்த நாள் போராட்டத்தை, நாடு கடந்த மாபியா புலிகளுடன் சேர்ந்து, அரசுக்கு எதிரான போராட்டமாக நடைபெறவுள்ளதான அறிவித்தல், முன்னிலை சோசலிசக் கட்சி பெயரில் தேசம் நெற்றில் வெளியாகியது. இதேபோல் இதில் இருந்து சற்று வேறுபட்ட மற்றொரு அறிவித்தல் இனியொருவில் வெளியாகியது. அதேநேரம் அன்றைய போராட்டத்தில் இருந்து அதன் நோக்கம் பற்றி, பிபிசி தமிழ்சேவைக்கு பேட்டி அளித்தவரோ தேசம்நெற்றை சேர்ந்தவர். தேசம்நெற்றும், தேசம்நெற்றுடன் உள்ளவர்களும் அரசுக்கு ஆதரவாக அங்கும் - இங்கும் செயல்படுகின்றவர்கள். இந்தப் பின்னணியில் என்ன நடந்தது, நடக்கின்றது என்பது அனைத்தும் வெளிப்படையற்றது.
தேசம்நெற் அறிவித்தலை பாருங்கள்
" The Frontline Socialist party ( FSP) called for an emergency protest against the Sri Lankan government which will be held outside the Sri Lankan embassy on 10 April at 1pm.
Date: 10/4/2012 Time: 1pm
Place: Outside Sri Lankan High Commission, No.13, Hyde Park Gardens, London
W2 2LU
Organised by:
Frontline Socialist party
Tamil Solidarity
Following organisations also support the protest
TGTE (Transnational government of Tamil Eelam)
Socialist Party (England & Wales)
Nava Sama Samaja Party
Tamil Information Center
New Direction
We invite all those who stand against repression and in defence of freedom of speech and freedom to organise to take part in this protest against the abduction of political activists Premakumar Gunaratnam and Dimuthu Attygalle in Sri Lanka. They are leading members of the new Frontline Socialist Party (FSP) launched on 9 April.
The FSP was formed by dissident former JVP members – mainly youth –who vehemently oppose both the current Sri Lankan regime and the JVP’s collaborative politics. The formation of the FSP represents a decisive step forward in Sri Lankan politics and has been welcomed by Tamil Solidarity.
The fate of two other activists, Lalith Kumara Weeraraju and KuganMuruganandan, who were abducted at the end of last year, is still not known. There has been a huge increase in clamping down on any voice of dissent by the government (Sri Lanka’s sinister white van abductions -BBC).
The setting up of the FSP and the increasing support for mass struggle against the regime is seen as a turning point and one that is potentially capable of leading to the downfall of this brutal, bloody and vicious regime. The panic-stricken regime is now abducting its leaders two by two.
Internationally, among workers and young people, there is widespread anger and concern against these ruthless actions, as there is against the war against the Tamil-speaking people and its aftermath where thousands still suffer in horrendous and inhumane conditions. Meanwhile the so-called international community, pro-big business governments such as the Tories in Britain, are happy to conduct ‘business as usual’ with Rajapaksa.
The FSP called for an emergency protest against the Sri Lankan government which will be held outside the Sri Lankan embassy on 10 April at 1pm."
இனியொரு அறிவித்தலை பாருங்கள்
"குமார், திமுது ஆகியோரை விடுதலை செய்யக்கோரி லண்டனில் ஆர்ப்பாட்டம்
பிரேகுமார் குணரத்னம் மற்றும் திமுது ஆட்டிகல ஆகியோரை விடுதலை செய்யக் கோரி லண்டன் இலங்கைத் தூதரகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று ஒழுங்கு செய்யபட்டுள்ளது. இலங்கை அரச பாசிஸ்டுக்கள் அனைத்து மக்களதும் அரசியல் உரிமைகளையும் அழித்து குடும்ப சர்வாதிகாரத்தை நிறுவிக்கொள்ளும் இன்றைய சூழலில் சமூகப்பற்றுள்ள அனைவரும் ஆர்ப்பட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு அழைக்கப்படுகின்றனர். நாளை மதியம் ஒரு மணிக்கு ஆரம்பமாகும் ஆர்ப்பாட்டம் மூன்று மணிக்கு நிறைவுறும். முன்னிலை சோசலிசக் கட்சியின் லண்டன் கிளையினருடன் தமிழ் சொலிடாரிட்டி மற்றும் புதிய திசைகள் ஆகிய அமைப்புக்கள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்துள்ளன."
இந்த அறிவித்தல் பின்னணியில் சில வேறுபாட்டுடன் வெளியாகிய அறிவித்தலின் பின் உள்ளவர்கள் அனைவரும், பரஸ்பரம் நெருங்கிய தளத்தில் ஒன்றாக ஒரு புள்ளியில் செயல்பட்டவர்கள். இன்று இந்தப் பின்னணியில் ஒரு நோக்கில் செயல்படுகின்றனர்.
இந்த பின்னணியில் முன்னிலை சோசலிசக் கட்சியை பயன்படுத்தி அரசியல் செய்ய முனைந்தனர். அதன் நோக்கத்தை கொச்சைப்படுத்தினர். அதன் இனவாதத்துக்கு எதிரான, தமிழ் சிங்கள ஒடுக்கப்பட்டவர்களின் உறவுக்கு ஆப்பு வைத்திருக்கின்றனர். இந்த அரசியல் பின்புலம் இன்று மீண்டும் தெளிவாகி இருக்கின்றது.
ஆக இந்த நோக்கில் தான் முதல் நாள் முன்னிலை சோசலிசக் கட்சி ஒழுங்கு செய்த போராட்டத்தை இவர்கள் ரத்தாக்கினர். அரசு முன்னிலை சோசலிசக் கட்சியை புலி முத்திரை குத்தி ஒடுக்க முனைகின்ற இன்றைய நிலையில், புலத்தில் அவர்களுக்கே தெரியாது அவர்களின் பெயரில் அதை அரங்கேற்றினர். இந்த அறிவித்தலை தாங்கள் கொடுக்கவில்லை என்றும், இந்த அறிவித்தல் பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது என்றும் அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
இதன் மூலம் தமிழ் சிங்கள உறவுகளை சந்தேகங்களுடன் அணுகும் வண்ணம், பரஸ்பர புரிந்துணர்வை இது தெளிவாக தகர்த்து இருக்கின்றது. திட்டமிட்ட சதியை தமிழ் சிங்கள முன்னணி பிரிவுக்குள் இவர்கள் இதன் மூலம் திணித்திருக்கின்றனர். முதல் நாள் போராட்டம் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட, அதற்கான அறிவித்;தலை அவர்களே வெளியிட்டு இருந்தனர். இதற்கு மாறாக அடுத்த நாள் கூத்து அவர்களின் பெயரால் திட்டமிட்டு சிலர் அரங்கேற்றியதையும், இரு வேறுபட்ட அறிவித்தல்கள், அதை நடத்துவது யார் யார் என்ற அறிவித்தல் இதை மேலும் எடுத்துக் காட்டுகின்றது.
தமிழ் - சிங்கள ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இடையிலான பரஸ்பர புரிந்துணர்வு ஏற்படக் கூடாது என்பது இனவாதிகளின் அரசியல் புள்ளி. சிங்கள இனவாதிகள் மட்டுமல்ல தமிழ் இனவாதிகளின் நோக்கமும் இதுதான். பிரிவினை தீர்வென்று கருதுகின்ற தமிழினவாதக் கூட்டம், இடதுசாரியம் பேசும் சதிக் கூட்டம், அரசுக்கு எதிராக அனைத்தையும் பயன்படுத்த முனைகின்றது. அந்த வகையில் முன்னிலை சோசலிசக் கட்சி இனங்களுக்கு இடையில் ஐக்கியத்தை உருவாக்காத வண்ணம், அதைத் தனிமைப்படுத்தி ஒடுக்கும் வண்ணம் இவர்களின் சதி அரங்கேறியது. இந்த வகையில் புலியுடன் சேர்ந்த போராட்டமாக காட்ட முனைந்த பின்னணியில், புலி முத்திரை குத்தி ஒடுக்குமாறு அரசுக்கு வழிகாட்டுகின்றனர். மறுதளத்தில் இதன் மூலம் தமிழர்களுடன் அவர்கள் நெருங்கி வருவதை தடுக்கும் வண்ணம், சந்தேகத்தையும் பிளவையும் உருவாக்கியுள்ளனர். லண்டன் போராட்டத்தின் பின்னான இவர்களின் சதி இதுவாகும்.
தமிழ் - சிங்கள ஒடுக்கப்பட்ட அரசியல் என்பது, இது போன்ற பல்வேறு சதிகள் மற்றும் நெருக்கடிகளுக்கு ஊடாகத்தான் மேலெழுகின்றது. தமிழ் - சிங்கள ஒடுக்கப்பட்ட மக்களின் ஒற்றுமையும், ஒன்றுபட்ட அரசியல் என்பதும், தமிழ்-சிங்கள இனவாதிகளை முறியடிக்காமல் சாத்தியமில்லை. இந்தச் சதிகளை இனம் காணாமல் சாத்தியமில்லை.
பி.இரயாகரன்
13.04.2012