இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு அகதியாக சென்றோர் வாழ்வு, பல சோகங்களைக் கொண்டவை. உள்ளுர் அதிகார வர்க்கமும் பொலிஸ்சும், துரோகக் குழுக்களின் முன்னாள் உறுபினர்களும் இனைந்து மக்களுக்கு எதிராக நடத்தும் வக்கிரம், பல வகையானது. தமது ரவுத்தனத்துக்கு எதிரானவர்களை தாக்குவது முதல் படுகொலை செய்வது வரை, இவர்களின் கைவந்த கலையாகும்.
திருச்சி கொட்டப்பட்டு அகதி முகமைச் சோந்த கோகுலதாஸ், 13.1.2002 அன்று 15 ரவடிகளால் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு, அகதி முகாங்களின் நிர்கதியைக் காட்டுகின்றது. ஈ.பி.ஆர்.எல்.எப் முன்னாள் உறுப்பினர்கள் பொலிஸ் துணையுடனேயே, இந்த கொலை வெறியாட்டத்தை நடத்தினர். சாதாரண பிரச்சனையில் பழிக்குபழி வாங்கும் படுகொலை வக்கிரங்கள் மூலம், மக்களை மிரட்டுகின்றது இந்த ரவுடிக் கும்பல்.
படுகொலை செய்ய முன்பு முகத்தைச் சிதைத்ததுடன், படுகொலை செய்து திருச்சி தென்னூர் உய்யகொண்டான் ஆற்றில் எறிந்துவிட்டே சென்றனர். இந்த கொலைகார கும்பல் கியு பிரிவு, உளவுத்துறை, பொலிஸ் ஆகியோருடன் இனைந்து, நக்கி பிழைத்த படி, முகாமில் உள்ள 350 குடும்பங்களையும் மிரட்டி வருகின்றனர். பல்வேறு கொலை, மிரட்டல் வழக்குகளில் சம்பந்தப்பட்டதுடன், பொறுக்கி வாழும் ரவுடிக் கும்பலாகவே செயற்படுகின்றனர்.
இந்த கொலைக்கு எதிராக மக்கள் திரண்டு போராடியதுடன், இந்த கொலைகார ரவடிக் கும்பலை தமது பிரதேசத்தில் இருந்து அகற்றக் கோரியும் போராடி வருகின்றனர்.
மக்களை எய்தும், மிரட்டியும் வாழும் ரவுடித்தனம்
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Helvetica Segoe Georgia Times
- Reading Mode