Language Selection

சமர் - 31 : 08 - 2002
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பரிசில் வன்முறை என்பது ஒரு மொழியாக, அதுவே கோஸ்டி கானமாக மீண்டும் ஒருமுறை அரங்கேறியுள்ளது. இம்முறை இந்த கோஸ்டி வாதம் வெகுஜன அமைப்பு ஒன்றை வலிய வன்முறையுடன் சம்பந்தப்படுத்தியுள்ளது. இந்த வெகுஜன அமைப்பின் கருத்தை கேட்பதற்கு பதில் அதற்கு ஒரு முத்திரையை வழங்கிய குறுங்குழுவாதம், கோஸ்டிவாதத்தை ஆழமாக்கியுள்ளது. இந்த முத்திரையை வன்முறையால் பாதிகப்பட்டவாகளின் கோஸ்டி வழங்கிய போது, ஜெர்மனியில் சிலரும் பரிசில் சிலரும் முந்தியடித்துக் கொண்டு, ஒருதலைப் படசமாக கருத்தை தெரிவித்தன் மூலம், இந்த கோஸ்டி கான இராகத்தில் பங்காளியாகியுள்ளனர்.

 

 

14.6.2002 அன்று பாரிசில் தமிழர் செறிந்த பகுதியில் தொடங்கிய கருத்து பரிமாற்றம், பரஸ்பர வாக்கு வாதமாகவும், தூற்றலாகவும் மாறிய பின், அந்த இடத்துக்கு சற்றுத் தொலைவில் வைத்து அசோக் மீதான வன்முறையானது. இதைத் தொடர்ந்து அவதூறை விதைப்பதில் குழுவாதம் களைகட்டியுள்ளது. இந்த வன்முறை கடந்த கால பல நிகழ்வுகள் போல் கண்டனத்துகுரியானவே. இதை எக்காரணம் கொண்டும் யாரும் நியாப்படுத்த முடியாது. வன்முறை என்பது உடல் ரீதியாக மட்டும் நாம் மதிப்பீடவில்லை. மொழி ரீதியாகவும் கூட நாம் வரையறை செய்தே, வன்முறைக்கு எதிராக நாம் போராடுகின்றோம். ஒற்றை வரி கிண்டல்கள், அவதூறுகள் போன்றன கூட மொழி ரீதியான வன்முறையே. மொழி ரீதியான வன்முறையின் படி நிலை வளர்ச்சி தான் உடல் ரீதியான வன்முறை. அரசியலற்ற வெற்று வம்புகளால் சிந்தனை மழுங்கடிக்கப்பட்டு வன்முறைகள் வித்திடப்படும் போது, குற்றத்தை ஒருதரப்பில் மட்டும் முத்திரை குத்த நாம் தயாரில்லை.

இங்கு நடந்த உடல் ரீதியான வன்முறைக்கு பின்பாக இது பற்றி பல்வேறு விதமான அபிராயங்களை எற்படுத்தவதில் ஒரு கோஸ்டி சார்ந்து முனைப்பாக செயல்படுகின்றது. "கிழக்கிலங்கை கல்வி கலாச்சார ஒன்றியம்" மீது குற்றச் சாட்டை முன்வைத்து வெளிவந்த இரண்டு துண்டு பிரசுரங்கள், இந்த சம்பவத்தை திரிப்பதில் கவனம் செலுத்தியுள்ளது. "கிழக்கிலங்கை கல்வி கலாச்சார ஒன்றியம்" என்ற அமைப்பை "மட்டக்களப்பு வளர்ச்சிக்கான சங்கம்" என்று திரித்தது முதல், தனிப்பட்ட அசோக்கின் அபிராயத்தை இத் துண்டுப் பிரசுரம் வாந்தியெடுத்துள்ளது. அசோகே "மட்டக்களப்பு சங்கம்" என்று கொச்சையாக தனிப்பட்ட நலன் சார்ந்து கூறித் திரிபவர். அதை அப்படியே வாந்தியெடுத்தத்தன் மூலம் உண்மையை இவர்கள் அறிய முடியாத குறுங் குழுவாத்தின் வக்கிரத்தை வெளிப்படுத்தி நின்றனர். பிரதேசவாத எதிப்பளார் அசோக் என்ற ஒரு மாயை பொய்யானது. மாறக விளம்பரத்தனமானது. ரி.பி.சி (புலி எதிர்ப்பை அடிப்படையாக கொண்ட இந்திய மற்றும் அரசு சார்பானது), ஐ.பி.சி (புலி சார்பானது) ரேடியோக்கிடையில் நடந்த போராட்டத்தின் போது, இதே அசோக் புலி எதிர்ப்பை அரசியலாக்க ரி.பி.சிக்கு (கிழக்கு பிரதேசத்தை சேர்ந்தோர் நடத்தியதால்) வக்காளத்து வாங்கி, ஐ.பி.சி ரேடியோவில் வேலை செய்ய கிழக்கைச் சேர்ந்தவர்களை பிரதேச ரீதியாக பிரிக்க முனைந்தவர். இதற்காக அவர் பல முயற்சியில் ஈடுபட்டவர். இவர் பிரதேசவாதத்துக்கு எதிராக போராடுவதாக பலர் கதை சொல்ல முனைகின்றனர். (உண்மையில் இந்த ரேடியோக்கு பின்னனியில் அசோக் சார்ந்த விடையங்கள் இன்னமும் உள்ளது.)

இவர்கள் தான்; "கிழக்கிலங்கை கல்வி கலாச்சார ஒன்றியத்தின்" அபிராயம் என்ன என்பதை அறியமுன்பு, ஒரு தலைப்பட்சமாக ஒரு சங்கத்தின் மீது அப்பட்டமான அபாண்டமான குற்றச் சட்டுகளை சுமத்தியுள்ளனர். ஒருபுறம் அவர்களுடன் இந்த வன்முறைக்கு எதிராக கருத்தை பரிமாறியபடியும், பேச்சு வார்த்தைக்கு வரும்படி அழைப்பு விட்டபடியும் ஒன்றியத்தை கொச்சைப்படுத்தவதில் வேகம் காட்டுகின்றனர். இந்த கண்டன தீர்மானம் இரண்டும் இணைய துண்டுபிரசுரம் மூலம்; எமக்கு கிடைத்த போது, 51 பேர் கையெழுத்திட்டு இருந்தனர். கையெழுத்திட்டோரில் எத்தனை பேர் கிழக்கிலங்கை ஒன்றியத்துடன் இது தொடர்பாக கதைத்தனர். கிழக்கிலங்கை ஒன்றியம் எப்போதாவது எங்கேயாவது இந்த வன்முறையை நியாப்படுத்தியதை காட்ட முடியுமா? அவர்களுடன் கதைக்காத நிலையில் கண்டணம் விடுவத்தில் காட்டிய அறியமை, குறுகிய குழுவாத கோஸ்டி தன்மை முதன்மை பெற்றதைக் காட்டி நிற்கின்றது. அத்துடன் முன்னைய வன்முறையை எதிர்க்காத வன்முறையாளராகவே இருப்பது மற்றோரு உண்மையுமாகும்;.

வன்முறை இன்று நேற்று நடந்தவைகள் அல்ல. வன்முறை இலங்கை வராலாற்றில் தொடருகின்றது. இதில் தனியாக பாரிஸ் வரலாறு உண்டு. இதிலும் மாற்றுக் கருத்து முன் வைக்கும் இலக்கிய நபர்களிடையேயும் வன்முறை நடந்துள்ளது. மாறக இப்போது நடந்த  வன்முறையே தூபமிட்டதாக "வன்முறையின் சாதாரணமாகலை மறுத்த…" என்ற துண்டுபிரசுரம் குறிப்பிடுகின்றது. ஆனால் வன்முறையை புலிகளும் மற்றும் இயக்கமும் அல்லாத தளத்தில் சாதாரணமாக்கியவாகள் யார்? இந்த வன்முறைக்கு அதித்திரவாரம் இட்டவர்கள் யார்? நீங்கள் தான் என்பது வெள்ளிடமலை. 1999ம் ஆண்டு பாரிசில் ஒரு இலக்கிய நிகழ்வில் மாற்றுக் கருத்து களங்களில் வன்முறை அப்பட்டமாக அரங்கேறியது. இன்று நடந்த வன்முறையால் பாதிக்கபட்ட அசோக் உட்பட இன்று கையெழுத்திட்ட பலர், அந்த வன்முறைக்கு ஆதாரவாக இருந்தனர், இன்றும் இருக்கின்றனர் என்ற உண்மையை நாம் எப்படி சாதரணமாக்கி ஐpரனிக்கமுடியும். இன்று வரை இந்தக் கணம் வரை அதைக் கண்டிக்கவில்லை. அன்று வன்முறையை நியாப்படுத்தி அதை ஆதாரித்து நின்ற அசோக் உட்பட யாரும், பொதுவான வன்முறையை கண்டிக்கவில்லை. மாறக குறிப்பாகவே கண்டிக்கின்றனர். இதில் தான் கையெழுத்திட்டவர்களின் குறுகிய குழுவாக கோஸ்டி வாதம் புதிய வடிவில்; பங்கேற்கின்றது.

அன்று வன்முறையை நிறைவேற்றிய போது அதைக் கண்டித்து துண்டுப்பிரசுரங்கள் வெளி வந்த போது, வன்முறைக்கு எதிராக துண்டுப்பிரசுரம் விட்டது துரோகம், காட்டிக்கொடுப்பு என்றவர்கள், இன்று ஏன் துண்டபிரசுரம் விடவில்லை என்று வேடிக்கையாக கேள்வி எழுப்புகின்றார்கள். எழுப்பியவர்கள் குறிப்பான வன்முறையை மட்டும் கண்டிக்க வேறு கோருகின்றனர்.

"கிழக்கிலங்கை கல்வி கலாச்சார ஒன்றியம்" இந்த வன்முறையை எதிர்த்தே குரல் கொடுத்துள்ளது இங்கு கவனிக்கத்தக்கது. அவர்களுக்கிடையில் நடந்த பேச்சு வார்த்தையில் இதை அவர்கள் தெளிவுபாடவே குறிபிட்டு இருந்தனர். ஆனால் அதை யாரும் கவணத்தில் எடுப்பதை திட்டமிட்டு மறுத்தனர். வன்முறையில் ஈடுபட்டவர்களின் நடத்தையை அவர்கள் தெளிவாகவே பேச்சு வார்த்தையின் போதும், துண்டு பிரசரத்திலும் கூட தெளிவுபடுத்தியுள்ளனர். ஆனால் ஒன்றியத்தின் மேல் ஒருதலைப்பட்சமாக குற்றம் சாட்டவதன் மூலம் எதை செய்ய விரும்புகின்றனர். உண்மையில் யாழ் மேலாதிக்க ஆதிகத்தையே.

"கிழக்கிலங்கை கல்வி கலாச்சார ஒன்றியம்" பிரதேசவாதத்தை விதைப்பதாகவும், அதானல் அதை எதிர்ப்பதாகவும் பசாங்கு செய்யும் கோஸ்டி வாதம், இதுவரையும் அந்த பிரதேசவாதத்தை முன்வைத்தில்லை. அவர்கள் தமது பெயரை "கிழக்கிலங்கை" என்ற வைத்தன் மூலம் இலங்கையின் ஒரு பகுதியாகவே தம்மை வெளிப்படுத்தி நிற்கின்றனர் என்ற உண்மையை, எவ்வளவு அழகாக இக் கோஸ்டியால் "மட்டக்களப்பு" என்று பூச்சூடி முடிமறைக்கப்பட்டுள்ளது. யாழ் பாடசாலைகள் பல தனக்குள் மட்டும் சங்கம் அமைத்து இயங்கும் போது அதில் பிரசன்னமாகும் இவர்கள், அதைவிட முன்னேறிய நிலையில் இலங்கையின் ஒரு பிரதேசத்தின் கல்வி சாhந்து உதவ முற்படுவதையே இவர்கள் வஞ்சிக்கின்றனர். மற்றைய பிரதேசங்களை (அதாவது வடக்கு, மற்றைய இலங்கை பிரதேசங்களை) இவர்கள் இழிவுபடுத்தி இருப்பின், அதை ஆதாரமாக வைக்கவேண்டும்;. இல்லாமல் வம்பு அரசியல் செய்யும் முத்திரை குத்தல்களை, ஒற்றை வரிகளில் சாதரணமான மனிதர்களுடன் சாதரணமாக்கும் போது, தனிப்ட்ட மனிதர்களின் உணர்வு சார்ந்து வன்முறை சாதாரணமாகிவிடுகின்றது. இவை திட்டமிட்ட நடத்தப்படுபவையல்ல. பாரிஸ் துண்டு பிரசுரம் இவை "எதேச்சையானவையல்ல" என்ற குறிப்பிடுவதன் மூலம், இவை திட்டமிட்டதாக புனைய முயலுகின்றனர். "கிழக்கிலங்கை கல்வி கலாச்சார ஒன்றியமே" இதை திட்டமிட்டு "எதேச்சையானவையல்ல" வகையில் நடத்தியதாக இவர்கள் அவதூறு செய்கின்றனர். இது ஒரு அப்பட்டமான கூற்று. நிகழ்ச்சிகள் நடந்த வடிவமும் தொடர்ச்சியும் பல நம்பகமற்ற கூற்றுகளின் பின்னனியிலும் கூட, தன்னியல்பாகவே நடந்தது. திட்டமிடப்படவை என்றால் அதாவது "எதேச்சையானவையல்ல" என்றால் அது யாரால் நடத்தப் பெற்றது என்பதை சொல்ல வக்கில்லாமல், சொற்களால் சேறு ப+சுகின்றனர்.

நாம் வன்முறையின்  ஒன்றை கண்டிக்கின்றோம் என்றால் நிச்சயமாக

1.கடந்தகால மக்கள் விரோத வன்முறைகள் அனைத்தையும் கண்டிக்க வேண்டும்;. கடந்த காலத்தில் கண்டிக்க தவறியவைகளை நிகழ்காலத்தில் கண்டிக்கவேண்டும்;. சம்பந்தபட்டவர்களின் கடந்த காலம் முதல் நிகழ்காலம் வரை வன்முறை அடையளம் தெளிவாக கண்டிக்கப்பட்ட வேண்டும்;. இந்த வன்முறைகளில் ஈடுபட்டவர்கள் சொந்த சுயவிமர்சனத்தை தெளிவாக செய்ய வேண்டும்;. அதே நேரம் கடந்த கால வன்முறையை கண்டித்தவர்கள், நிகழ்கால வன்முறைiயையும் கண்டிக்க வேண்டும்.

2.கடந்த காலத்தில் மக்கள் விரோத வன்முறைக்கு எதிரான குரல்களை, நிபந்தனை இன்றி அங்கிகாரிக்க வேண்டும்;. அதை கொச்சபை;படுத்திய படி புதியதை கண்டிப்பது வன்முறையை நியாப்படுத்துவதாகும்;.

இவை இரண்டும் அல்லாத கண்டனங்கள் குறுகிய அரசியல் மற்றும் குழுவாக கோஸ்டி நோக்கம் கொண்டவை. "கிழக்கிலங்கை கல்வி கலாச்சார ஒன்றியம்" இந்த வன்முறையை கண்டிப்பதாக கூறி நடத்திய பேச்சுவார்த்தை முதலே, அந்த அமைப்பின் மீதான குற்றச்சாட்டுகள் அபத்தமான அவதூறுகளாகும்;. இந்த ஒன்றியத்துடன் கையெழுத்திட முன்பு அவர்களுடன் பேசி உண்மை நிலையை அறிய மறுத்தவர்களின் நோக்கம் சந்தேகத்துக்குரியதாகின்றது. இந்த ஒன்றியத்தை பிரதேசவாத கொண்டதாக குற்றம் சட்ட எந்த ஆதாரத்தை கோட்பாட்டு ரீதியாக வைக்க முடியாதவர்களின் அடிப்படை, யாழ் மையவாதம் என்பதும் கேள்விக்கிடமற்றது.

1.நாம் மக்கள் விரோத அனைத்து வன்முறையையும் எதிர்ப்போம். அதில் குறிப்பான நிகழ்வையும் எதிர்க்கின்றோம்;.

2.பிரதேச வாதம் என்ற ஆதாரமற்ற அவதூறு யாழ் மையவாத்தில் இருந்தே எழுகின்றது. இதை எதிர்த்து நாம் போராடுவோம்.;

3.மக்களின் நலன்களில் அக்கறையுள்ள அமைப்புகளின் வளர்ச்சிக்கான ஆதாரவுகளை நிபந்தனைகளுடன் நல்குவோம்;.

4.எதையும் ஆராயாத, ஆதாரமற்ற கோஸ்டி வாதங்கள், குழுவாதங்களின் அவதூறுகளை எதிர்த்து போராடுவோம்;.

5.அன்றைய மக்கள் விரோத வன்முறை முதல் இன்றைய வன்முறை வரை கண்டிக்காத கோஸ்டி குறுங்குழுவாத அரசியலை  நாம் எதிர்த்து போராடுவோம்;.

சமர்

22.06.2002

குறிப்பு: நடந்த வன்முறைக்கு எதிராக திட்டமிட்டு நடத்தும் கண்டன கூட்டத்தை நாம் பகிஸ்கரிக்க அழைப்பு விடுகின்றோம்;. இந்த வன்முறைக்கு எதிராக அழைப்புவிட்டவர்கள் கடந்த காலத்தில் இதே போன்ற வன்முறையில் ஈடுபட்டவர்கள்;. அதை சுயவிமர்சனம் செய்து கண்டனம் செய்யாது இன்றும் நியாப்படுத்தும்; அழைப்பு, தமது சொந்த வன்முறையை நியாப்படுத்த விடும் விளம்பர அழைப்பாகும்;.

பின் இனைப்பு:

*வன்முறை எதிர்ப்பாளர்கள் என்ற விளம்பரத்துடன் சொந்த வன்முறையை பாதுகாத்தபடி கூத்தாடிய அசோக், சம்பவம் நடந்த அடுத்த நாளே அதாவது 15.6.2002 அன்று மீள் வன்முறைக்காக வீதிகளில் அலைந்த போது ஜனநாயகம் சிரித்துக் கொண்டிருந்தது. முதல் நாள் வன்முறையில் சம்பந்தப்பட்டதாக ஒருவரை அடையாளம் கண்டு ஒரு குழுவாக துரத்திச் சென்ற கதை, இதற்குள் ஒரு தனிக் கதையாகவே உள்ளது. ஆனால் இதை வன்முறைக்கு எதிரானது என்ற அடிப்படையில் இதுவரை யாரும் அம்பலம் செய்யப்படவுமில்லை, யாரும் கண்டிக்கவுமில்லை.

* தாக்குதல் நடத்தியவர் "மட்டக்களப்பு வளர்ச்சிக்கான சங்கத்"தைச் சோந்தவர் என்று துண்டுபிரசுரம் மூலம் கூறவைத்தவர், பின்னர் அடித்தவரின் மன்னிப்புடன் சங்கத்தை கைவிட்டு விடுகின்ற முரண்பாடு தொடங்குகின்றது. இதே நபர் வன்முறை நடந்த இரண்டாம் நாளே மன்னிப்பு கேட்க தயாராக இருந்த போதும், அதை நிராகரித்து துண்டுபிரசுரங்கள் மூலம் கோஸ்டி வாதம் மெருகுட்டப்பட்டது. வன்முறையை ஒன்றியம் கண்டிக்க தயாரக இருந்த போதும், அசோக் கோஸ்டி ஆரம்பம் முதலே கூட்டாக வன்முறையை கண்டிக்க தயாராக இருக்கவில்லை. கோஸ்டி வாதத்தைக் கட்டமைப்பது அவசியமாக இருந்தது. கொழும்பு செய்திப் பத்திரிகை வரை இதை விளம்பரம் செய்வதன் மூலம் இதை மன வெட்கமின்றி கோஸ்டி அரசியலாக்கினர். இந்த அரசியல் தற்செயலானவையல்ல. கடந்தகால புளாட் இயக்கம் மக்கள் விரோத அரசியலை எப்படி சதிப்பாணியில் ஜனநாயகப்படுத்தி பூச்சடித்து மக்களை எமாற்ற முடிந்ததோ, அதை அப்படியே அதே தொடர்ச்சியில் இது மீள அரங்கேறியுள்ளனர்.

*அசோக்கிடம் பணம் கேட்டும், இணையக் கோரி அடித்தாக கூறவது முழுபுரட்டாகும்;. இனையக் கோருவதும், உதவி கோருவது ஒரு ஜனநாயக உரிமையாகும். அதை கொச்சைப்படுத்தி கேவலப்படுத்தி வன்முறையைத் துண்டுவது கூட வன்முறையாகும்;. இதற்கு பலியாபர்வர்கள் தனிமனித குணம் சாhந்துவிடுகின்றது. அசோக்கை தாக்கியவர் துப்பாக்கி முனையில் மிரட்டியதாக கூறப்படும் சம்பவம், தாக்குதலை மெருகுட்ட  புனையப்பட்ட இனைப்பாகும் என்ற சந்தேகம் மேலும் வலுக்கின்றது. இவருடன் அருகில் இருந்தவர் துப்பாக்கியை தான் நேரடியாக காணவில்லை என்று எனக்கு ஒத்துக் கொண்டுள்ளார். எதோ ஒன்றை வைத்திருந்தாகவும், தான் தூர இருந்தால் சரியாக தெரிந்து கொள்ள முடியவில்லை என்றே கூறினர். அசோக் தனது பெயரில் 26.06.2002 இல் வெளியிட்ட துண்டுபிரசுரத்தில் முதன் முறையாக இரண்டவது நபரே தூப்பாக்கி வைத்திருந்தாக கூறுகின்றர். முதலில் தாக்கியவர் கீழே விழுந்த போது தனது கழுத்தில் தூப்பாக்கி வைத்திருந்தார் என்று முன்பு வாய் மூலம் கூறியவர், இரண்டவது நபர் வைத்திருந்தாக துண்டுபிரசுரத்தில் கூறுகின்றார். அடித்தவருடன்; வந்த மற்றவர்கள் சங்க நடவடிக்கைக்கு ஆதாரவாக வந்தவர்கள் என்கின்ற போது, அடித்தவருக்கு மன்னிப்பு மற்றவர்களுக்கு நடவடிக்கை என்ற கேலிச் சித்திரம் அரங்கேற்றும் கதையளப்பு அபிராயங்கள் எல்லாம், கோஸ்டி வாதம் அம்பலமாகி தனக்கு எதிராக மாறுவதை தடுக்கும் ஒரு தற்காப்பு முயற்சியாகும்;. இதை புனைந்து காட்ட ஒன்றியத்தின் நிறுவனர் பெயரை மீள இனைத்தன் மூலம் "யன்னலைத் திற" என்ற பழைய இவரின் பிரசுரம் ஒன்றின் தொடாச்சியை, அதே கோஸ்டி கானத்துடன் தொடரும் புனைவுகளாக்கவே மீள முயல்கின்றார். ஆயுதத்துடன் திட்டமிட்ட தாக்கி, சுட்டுக் கொள்ளவும் வந்தனர் எனின்

*"கிழக்கிலங்கை கல்வி கலாச்சார ஒன்றியுமா" ஆயுதத்தைக் கொடுத்த அனுப்பியது! அல்லது

*எக்சில் அல்லது அதன் ஆசிரியர்களில் ஒருவரான ஞானம் என்ற ஸ்ராலின் கொடுத்த அனுப்பினரா! அல்லது

*தனிநபராக கொண்டு வந்தரா! அல்லது

*புலிகள் கொடுத்த விட்டனரா! (வன்முறைக்கு எதிராக பாரிஸ் துண்டுபிரசுரத்தில் புலிகளின்; ஈழமுரசு ஆசிரியரும் கையெழுத்திட்டுள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. எல்லாம் புலி மயமாவது போல் வன்முறைக்கு எதிரான குரலும் புலிமயமாகின்றது அல்லவா!.) அல்லது

*பின்னனி நோக்கத்துடன் குறுந்தேசியவாதிகள் வதந்தியாக பாரப்பும் ராசிக் குழு கிழக்கில் இருந்து ஆயுதத்துடன் வந்துள்ளனரா! அல்லது வேறு யாருமா!

இரண்டாவது அல்லது முதலாவது  நபரிடம் யார் ஆயுதம் கொடுத்த விட்டனர். வன்முறைக்கு எதிரான கோஸ்டியைச் சேர்ந்தோர் தெரிந்து தானே கையெழுத்திட்டர்கள். இதை தெளிவாக கூறுங்களேன் யாரென்று!

*எதேச்சையாக அல்லாது திட்டமிட்டு தாக்க வந்தவர்கள் திடமிட்டு தாக்கவும் துப்பாக்கியால் சுடுவதற்கும் பதில், பல தமிழர்கள் பார்த்து நிற்கவும், பல பொலிஸ் உளவாளிகள் நாடமாடும் கடையிலும் வீதியிலும் வைத்து ஏன் வாக்குவாதப்பட்டனர். உண்மையில் தாக்கவரவில்லை என்பதும், தற்செயலான வாக்குவாதம் தனிப்பட்ட மனித இயல்யுடன் வன்முறைக்கு இட்டுச் சென்றதுமே உண்மை. அப்போது அவர்கள் துவக்கை இழுப்பில் வைத்திருந்தனரா! அல்லது தற்செயலான வாக்குவாத்தின் பின் தாக்குதல் நடந்த சில நிமிடங்களில் ஆயுதத்தை எங்கிருந்த பெற்றிருப்பார்கள்!

*அடுத்த மத்தியஸ்தம் என்ற போர்வையில் (புஸ்பராஜா தான் மத்தியஸ்தம் செய்யவில்லை, அசோக் சார்பாக செயற்பட்டதாக இது வெளிவந்த பின் எனக்கு நேரடியாக கூறினார்) புஸ்பராஜா இந்த விவகரத்தை அசோக் சார்பாக ஊதிப் பெருகியதன் மூலம், இதை வக்கிரப்படுத்தினர். "கிழக்கிலங்கை கல்வி கலாச்சார ஒன்றியம்" சமன் எக்சில் என்ற அசோக்கின் கூற்றுக்கு இணங்க, எக்சில் அபிராயத்தை "கிழக்கிலங்கை கல்வி கலாச்சார ஒன்றிய"த்தின் முடிவாக உலகமயமாக்கினர். எக்சில் ஆசிரியர் ஒருவரின் கூற்றை (இதிலும் அவர் கூறியிருந்தால்) கொண்டு செய்த மோசடி கேவலமானது. இதே எக்சில் ஆசிரியர் ஞானத்துக்கு யாராவது அடித்திருந்தால், அசோக்கும் அதே போன்றே கூறியிருப்பார். இது அவர்களின் தனிப்பட்ட வக்கிர கண்ணோட்டம் தான். இதில் வேறுபாடு அவர்களுக்கு இடையில் இருப்பதில்லை. எக்சில் ஆசிரியர் தாக்கப்பட்டு இருந்தால் அசோக் உட்பட இதில் பெரும்பான்மையானோர் கடைசி வரையும் கண்டனம் விட்டிருக்க மாட்டார்கள். இவை எல்லாம் உங்கள் மனச்சாட்சிக்கு முன் எழுப்பும் கேள்விளே. அசோக் அன்று வன்முறையில் ஈடுபட்ட போது அதை எத்தனை பேர் கண்டித்தீர்கள்! உங்கள் மனச்சாட்சியை தொட்டுச் சொல்லுங்கள்.

*தாக்கியவர்களை "கடையர்கள், பிரதேசவாதிகள், குழுவாதிகள், வன்முறையாளர்கள்" என்ற எதோ ஒன்றை அல்லது பலதைத் கூறி உண்மைக்கு புறம்பாக குற்றம்சாட்டி கையெழுத்திட்டர்கள். இவை ஏதார்த்ததில்  உண்மைக்கு புறம்பானதாக நாற்றம் எடுத்தபோது, கையெழுத்திட்டவாகள் யாரும் இதுவரை தமது நிலையை சுயவிமர்சனம் செய்யவில்லை. தவறுகளை தவறுகளாக சுயவிமர்சனம் செய்ய முடியாதவர்கள் யாரும், மக்களுக்காக எதையும் கிழித்துவிடப்போவதில்லை என்பதே இதன் ஏதார்த்த நிலையாகும்;. அத்துடன் இவர்களின் சமூக அக்கறை என்பது போலித்தனமானதாகும்.

*"கிழக்கிலங்கை கல்வி கலாச்சார ஒன்றியம்" வன்முறைக்கு எதிராக குரல் கொடுத்த அதே கணத்தில், சங்கம் மீதான அவதுறை வாபஸ் பெறும்படி கோரியது. இதன் பின்னால் ஏக்சில் கோஸ்டியும், தலித் பெயரில் இயங்குவோரும் ஒட்டிக் கொண்டனர். கடந்த காலத்தில் தம்மீது அசோக் நடத்த முனைந்த வன்முறையை எதிர்த்து பல துண்டுப் பிரசுரங்கைள விட்டனர். ஆனால் அசோக் மீது வன்முறை நிகழ்ந்த போது, இந்த வன்முறையை இவர்களில் எவரும் ஒரு வரியில் தன்னும் கண்டிக்கவில்லை. மாறக வன்முறையை கண்டிக்கத் தவறிய போது, அதை ஆதாரிப்பது வெள்ளிடைமலை. மாறாக தமது கோஸ்டிவாதத்தை அசோக்கு எதிராக பலப்படுத்த, ~கிழக்கிலங்கை கல்வி கலாச்சார ஒன்றிய~த்தின்" கோரிக்கைக்குள் இடையில் நசுக்காக தம்மைப் புகுத்திக் கொண்டனர். ஒரு சங்கத்தின் சதாரண அறிவு எல்லைக்குள் எந்த கோட்பாட்டு எல்லைகளுமற்ற நிலையில், அவர்களில் சிலர் விடக் கூடிய தவறுகளை தமது கோஸ்டிவாதத்துக்கு பயன்படுத்த முனைகின்றனர். இதன் மூலம் எதிர்தரப்பு கோஸ்டிவாதம் வன்முறை மேல் மெதுவாகவும் நசுக்காக குளிர்காய தொடங்கியுள்ளது. அவர்கள் தமது கருத்தை தெளிவாக சொல்ல தவறுவதன் மூலம் வன்முறைக்கு ஆதாரவு தெரிவித்தும், கோஸ்டிவாதத்தை பின்பக்கத்தால் புகுத்திவிடுகின்றனர்.

* ஏக்சிலும் தலித் பெயரில் சாதி குறுங்குழுவாதத்தை முன் தள்ளி குளிர் காய்பவர்களும் மற்றும் அசை உயிர்நிழல் கோஸ்டியும் மார்க்சியம் வன்முறையை இழைப்பதாக ஒன்றுபட்டு கானம் பாடுபவர்கள். இதில் ஏக்சிலும், சாதிய குறுங்குழுவாதிகளும் மார்க்சியம் வன்முறை இழைத்தால் மார்க்சியத்தை ஒழித்துக்கட்டப்; போவதாக வலதுசாரி நிலையில் நின்று கோஸ்டி கட்டுபவர்கள். அசையும் உயிர்நிழலும் மாhக்சியம் வன்முறையை இழைத்தால் இடதுநிலையில் நின்று மார்க்சிய அடிப்படையை திருத்தப் போவதாக கூறி மார்க்சியத்தை திரிப்பவர்கள். இந்த கோஸ்டிவாத்தின் பின்பலம் இந்த இரு தெளிவான அடிப்படையில் உலகமயமாகி, கோஸ்டி கானத்தை கட்டமைத்து இசைக்கின்றது. இவர்களுக்கிடையிலும், எதிர்தரப்பின் மீதும் வன்முறை நிகழும் போது, வன்முறையை ஆதரிப்பவர்களாக இருப்பதே இதன் அரசியலாவும் எதார்த்தமாக உள்ளது.

*குறுங்கு குழுவாத கோஸ்டி கானம் எப்படி யாழ் மையவாதத்தை பிரதேச எதிர்ப்புக்கு பயன்படுத்திவிடுகின்றது என்பதை அம்பலம் செய்யத போது, அசோக் தனது துண்டுபிரசுரத்தில் சிறுகுழந்தை போல "சமூக அக்கறையாளர்கள் அனைவரையும் பிரதேச, யாழ்ப்பாண மேலாதிக்கம் கொண்டவாகளாகக் காட்டமுனையும் போக்கு" பற்றி பேசுகின்றார். யாரெல்லாம் கோஸ்டிவாத வெற்றுப் பேப்பர்களில் கையெழுத்திட தயாராக இருக்கின்றனரோ, அவர்கள் அரசில் குறுங்குழுவாத தன்மை கொண்டவை. ஒரு பிரதேசவாத நடத்தைகளை ஆராய்வின்றி அங்கிகரித்து கையெழுத்திட்ட நிகழ்வே பிரதேசவாதத்தை உறுதி செய்கின்றது. தனிப்பட்டவர் என்ன நிலை என்பது அல்ல பிரச்சனை, அதன் ஒட்டமொத்த வெளிப்பாடு பிரதேசவாதமாக இருந்தால் கையெழுத்திட்டவர்களும் அதற்கு துனைபோபவர்களே. இங்கு "சமூக அக்கறையாளர்கள்" என்று மகுடம் சூட்டும் போது, அசோக் வன்முறையில் ஈடுபட்ட போது இந்த சமூக அக்கறை துங்கிக் கிடந்ததா? எனது அறிக்கையைத் தொடாந்து பிரதேசவாத உண்ணிகள் அம்பலமானதை அடுத்து, அதை முடிமறைக்க எடுத்த பலதரப்பட்ட வேஷங்களும் முயற்சிகளை தொடர்ந்து, எந்த விதத்திலும் யாரும் சுயவிமர்சனம் செய்ய முன்வரவில்லை. சுயவிமாசனம் அற்ற போலி சமூக அக்கறை தொடரும் வரை, பிரதேசவாதத்தின் கறை கையெழுத்திட்ட அனைவருக்கும் இன்னமும் பொருந்தும்;. சமூக அக்கறையின் வெட்டுமுகம் என்பது கூட இதன் அடிப்படையில் போலித்தனமானது.

*கொழுப்பு ரேடியோ செய்திகளில் கூட "இனம் தெரியாத பாசிட்டுகள் அசோக் மேல் தாக்குதல்;. அதற்கு எதிராக பரிசில் ஆர்ப்பட்ட பேரனி நடக்கவுள்ளது" என்ற பொய் பிரச்சாரத்தைக் கூட பல தளத்தில் முன்னைய புளாடின் பலத்தினால் கட்டமைக்க முடிந்தது. உண்மையில் கடந்தகாலத்தில் தம் உயிரையே தியாகம் செய்த போராடிய ஜனநாயகத்துக்கான போராட்டத்தையே இழிவுபடுத்தி கேவலப்படுத்துமளவுக்கு, கோஸ்டிவாதம் வரலாற்று போராட்டத்தையே தரம் தாழ்த்தியுள்ளனர். சொந்த புகழ் மற்றும் கோஸ்டிவாத்தை நிலைநிறுத்த வன்முறையை அரசியல் ரீதியாகவே மலினப்படுத்திதனர். கருத்து எழுத்து பேச்சு சுதந்திரத்துக்காக போராடிய போது உள் இயக்க படுகொலைகள், மாற்று இயக்க படுகொலைகள், அரசு படுகொலைகள் முதல் மக்கள் கூட்டத்தின் மேல் ஏவிவிடப்பட்ட வன்முறைகள் அனைத்தையும் மிதித்து, அதன் மேல்தான் கோஸ்டிவாதத்தின் சிம்மசனத்தை நிறுவிக் கொண்டனர்.