மகிந்தம் தின்ற மானிடநேயர்……

எமக்காய் எழுந்த தோள்கள்
லலித் குகன் என்ன ஆயினர்
மகிந்தம் தின்ற மானிடர் வரிசையில்
இவர்களும் போயினர்
மௌனமான தமிழ்தேசியம் இன்னம்
இந்தியக் கனவில் நந்திக்கடலை நோக்கி நடக்கிறது

 

 

முந்தைய நாட்களும்
முடிவற்றுத் தொடர்ந்த அவலமும்
சிந்திக்கவைக்கா சிறைக்குள் மாழ்வதேன்
இந்திராவை தாயென்றோம்
இந்தியாவை தாய்மடியென்றோம்
எல்லா அவலத்துள்ளும்-இந்தாபார்
முள்ளிவாய்க்கால் வரையும் முடியா நம்பிக்கை
பொடிப்பொடியாய் சிதறுண்டும்
கிருஸ்ணா வரவில் கழிகொள்ள என்ன இருக்கிறது

போரெழுமென்ற புலத்துக்கனவுகள்
துயிலுமில்லத்து
எலும்பைத்தோண்டென கிழம்பியுள்ளது
சிறு வேர்விடும்
இனங்களின் ஜக்கியம்
சிதறுண்டு போகாது சிந்தித்து எழு(து)க…

எமக்காய் ஒலித்த குரல்களை
நெரித்தவர் செவிப்பறை வெடிக்கணும்
ஜக்கியம் மேலிட அதிரும் கோசங்கள்
ராஜபக்ச கோட்டையை இடிக்கணும்
லலித்தும் குகனும் எங்கள் உறவாய்
இந்திய மாயை எமைவிட்டு அகலணும்
லலித்தும் குகனும் சொல்லிய செய்தி
இலங்கை மக்களை இறுகப்பிணைக்கணும்

சேர்ந்து நடப்போம்! சேர்ந்து நடப்போம்!
எம் மண் சிவக்க சேர்ந்து நடப்போம்!

-கங்கா

12/02/2012