குறிப்பு : காம்பிலிருந்தோர் மாத்தையா, விசு, சலீம், தீபன், மாஸ்டர், வினோத், கவியப்பா, ஹப்பி, சுரேவி, ரமேஸ், ஜெயக்குமார், பாலகிருஸ்ணன், தயாளன் ----

குறிப்பு : மிக அண்மையில் (தப்பிய காலத்தில்) இக் காம் இரண்டாக பிரிக்கப்பட்டு வேறு இடத்தில் போடப்பட்டது.

 

 

விளக்கம் : இந்த வதைமுகாமில் சித்திரவதை செய்யவும், அவர்களை உயிருடன் கொல்லவும் கணிசமானோர் தேசியத்தின் பெயரில் இதையே தொழிலாக செய்தனர். தாம் அல்லாதவரை வதைக்கவும், அதை ரசிக்கவும் தொடங்கியிருந்தனர். மனித வேட்டையாடுவது அதிகரித்த நிலையில் தான், இந்த வதைமுகாம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இந்த வதை முகாமில் இருந்தோரில் பாதிப் பேர், இறுதிக்காலத்தில் அங்கு இல்லாது மறைந்து போனார்கள்.

குறிப்பு : 03.5.87 இரண்டு மணியளவில் மாத்தையா வந்தான். மேசையில் ஏறி இருந்தான். உண்மையை கூறும்படி கேட்டுவிட்டு, என்னை முழங்காலில் இருக்க விட்டுவிட்டு முகம் முழுக்க கையால் தாக்கினான். பின் காலால் நெஞ்சில் அடித்தான். பின் முழங்காலில் இருக்கும்படி கூறிவிட்டு செனறான்.

குறிப்பு : 30 நிமிடத்துக்கு பின் திரும்பி வந்தான். என்னை எழும்பும்படி கூறி, மேசையில் எனது இரு கையையும் விரித்து வைக்கும்படி கூறி தும்புக்கட்டைத் தடியால் 200 மேற்பட்ட அடிகளை விரல் நுனியிலிருந்து மணிக்கட்டு வரை அடித்தான்.

விளக்கம் : மக்களையும், மக்கள் இயக்கத்தையும் காட்டிக் கொடுக்கும்படி, மீண்டும் மீண்டும் மாத்தையா கோரினான். தமிழ் மக்களுக்கு எதிரான இயக்க அராஜகத்தை எதிர்த்து அந்தப் போராட்டங்களில் யார் ஈடுபடுபவர்கள், என்பதைக் காட்டிக் கொடுக்கக் கோரினான். இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக உங்களுடன் யார் யார் எல்லாம் இணைந்து போராடுகின்றனர் என்பதை காட்டி தரக்கோரினான். இந்த போராட்டங்களுக்காக பயன்படுத்தப்பட்ட பொருட்கள் அனைத்தையும் காட்டிக் கொடுக்கக் கோரினான்.

இவற்றைக் கோரிய மாத்தையா, நேரடியாக மறுபடியும் சித்திரவதையை தொடங்கி வைத்தான். இந்த புதிய வதைமுகாமில் புதிய முகங்களை காணமுடிந்தது. இங்கு மாத்தையாவே நேரடியாக சித்திரவதையை நடத்தினான். சித்திரவதையில் நேரடியாக ஈடுபட்ட மற்றையவர்கள் அனைவரும், பழைய முகங்களே. மாத்தையா சித்திரவதையில் கைதேர்ந்த ஒருவன் மட்டுமல்ல, அவன் கொலையாளியும் கூட. அடி உதையிலும் சரி, அதை எப்படி எல்லாம் செய்ய வேண்டும் என்பதில் அனுபவமுள்ளவனாக இருந்தான். பலிபீடத்தில் முழங்காலிட வைத்த ஆண்டவன், எப்படி மக்களை அடிமைப்படுத்தி இழிவாக்கி உள்ளானோ, அதையே மாத்தையாவும் செய்தான். முழங்காலிட்ட என்னை, காலாலும் கையாலும் தாக்கினான். மேசையில் ஏறி நின்று முகத்தை குறிவைத்தே அடித்தான். நான் எதிர்த்து நின்ற நிலையில், தண்டிக்கும் முறையை மாற்றினான். கைவிரல் மேலான தாக்குதலாக மாறியது. என் பத்து விரல்களையும் மேசையில் விரித்து வைத்த பின்பு, தும்புக்கட்டை தடியால் விளாசப்பட்டேன். அடிகள் ஒன்றன் மேல் ஒன்றாக இறங்கியது. இதை மாறி மாறி இருவர் செய்தனர். தடி முறிந்த போது புதிய தடி மாற்றப்பட்டது. இந்த சித்திரவதையைச் செய்த போது, மாத்தையா களைத்துப் போனான். இந்த நிலையில் குளிர்பானம் எடுப்பித்து அதைக் குடித்தபடி தொடர்ந்தான். கீழ் மூச்சு மேல் மூச்சு வாங்க, என் முன் மாத்தையா கோழைக்குரிய வீரத்துடன் தமிழ் தேசிய வீரரான நின்றான். இந்த கோழைத்தனமான வீரத் தாக்குதலை தொடர்ந்தும், நான் அவர்களை எதிர்த்து நின்றேன். அவர்கள் விரும்பிய எதையும் என்னிடம் பெற முடியவில்லை. ஆனால் பிரதி தேசிய தலைவர்களுக்கோ, ஒய்வு தேவைப்பட்டது. அதனால் நேரடியான சித்திரவதையில் இருந்து எனக்கு ஒய்வு கிட்டியது.

குறிப்பு : மீண்டும் இரண்டு கைகளும் பின்புறம் கட்டி, தோள் மூட்டில் கயிறிட்டு யன்னலில் மீண்டும் கட்டி தொங்கவிடப்பட்டேன்.

விளக்கம் : இந்த தொடங்க விடப்படும் முறை எப்போதும் யன்னலுக்கு அருகிலானதாகவே இருந்தது. முதல் முகாம் போலவே இங்கும் தொங்கவிடும் வசதி செய்யப்பட்டு இருந்தது. இந்த வதையை தொடர்ச்சியாக பலர் அங்கு சந்தித்ததை, அறையில் வதைக்குரிய வசதிகள் உறுதி செய்தன. சிறை, சித்திரவதை, அதற்கான உபகரணம், அதற்கான அனுபவ நடைமுறைகள் அனைத்தும், புலிகளின் வதைமுகாமில் அதற்கு இருந்த வசதிகள் பளிச்சென நிர்வாணமாக்குகின்றது. எனக்கு நடந்த வதைக்கு பிந்திய காலத்தில், அதாவது பூரணமான கட்டுப்பாட்டு பிரதேச சித்திரவதைகள், இதைவிட மிக மோசமானதாகவே இருந்தன. அதைப் பற்றிய செய்திகள் பல வெளியாகியுள்ளது.

குறிப்பு : 2ம் திகதி முதல் மீண்டும் தண்ணீர் உணவு நிறுத்தப்பட்டது. அரை மணிநேரத்துக்கு ஒரு முறை தலையில் தண்ணீர் ஊற்றப்பட்டது இந்தநிலை நான்கு நாட்கள் தொடர்ந்தது.

குறிப்பு : 05.5.87 காலை திரும்பவும் அதேநிலையில் வைத்து கொட்டனால் மிகப் பயங்கரமாக தாக்கப்பட்டேன்.

விளக்கம் : முதலாம் திகதி இரவும், 2ம் திகதி காலையும் உணவு தந்தவர்கள், மதியம் தரவில்லை. மீண்டும் உணவு, நீர் தருவது நிறுத்தப்பட்டது. 2 மணியளவில் மாத்தையா தொடங்கிய சித்திரவதையுடன், மீண்டும் நித்திரை செய்வது பலாத்காரமாக மறுக்கப்பட்டது. குளிர்நீரால் அடிக்கடி என்னை நடுங்க வைத்தனர். சிறுநீரோ நின்ற நிலையில் தொடர்ச்சியாக வெளியேறியது. வயிற்றால் அடித்தது. அப்படியே வெளியேறிக் கொண்டிருந்தது. அறை நாற்றத்தால் அழுகி நாறியது. அவர்களால் கூட அதைச் சகிக்க முடியவில்லை. மலத்துக்கு தெளிக்கும் நெருப்புத் தண்ணீரை வாளியுடன் கவிழ்த்து ஊற்றுவார்கள். நீண்ட நாள் உணவு உண்ணாமையால் அதிக மலம் வெளியேறவில்லை. ஆனால் நாறும். நீர் குடிக்காமையால் மலம் வெளியேறும் அளவு குறைந்தது. அதே நேரம் என்னை கொட்டான் தடிகளால் தொடர்ந்து தாக்கினர். வீங்கிய கைகள் மேல் குறிவைத்து தொடர்ச்சியாக தாக்கினர். வலி உச்சத்தில் ஏறி மூளையை சுள்ளென்று குடைந்தது. அவர்கள் உருவாக்கிய ஆனால் ஆறிவரும் காயங்களை, மீண்டும் மீண்டும் விறாண்டியதன் மூலம் வலியை ஏற்படுத்தினர். சித்திரவதையின் தொடர்ச்சியில் கேள்விகள் கேட்கப்பட்டது. காட்டிக் கொடு என்பது, அவர்களின் தேசியக் கோரிக்கை. என்ன கொடுத்தாய் என்பதை, கீழ்மட்ட உறுப்பினர்கள் எனக்கு பிடி கொடுத்தே கேட்டனர். அறையில் மல நாற்றத்தை அவர்களால் கூட தாங்க முடியாது போக, என்னை சுத்தம் செய்யக் கோரி அவிழ்த்தனர். மலம் வந்தால் தம்மிடம் கூறக் கோரினார். நான் மலம் வருகிறது என்றேன்.

குறிப்பு : அங்கு இருந்த காலத்தில் தொடர்ந்து எனக்கு வயிற்றாலை அடித்தது. கக்கூசு இருக்கும் போது வாசலில் நிற்பார்கள். நான் களவாக கக்கூஸ் வாளித் தண்ணியில் வாயை வைத்துக் குடித்தேன்.

விளக்கம் : சித்திரவதை அற்ற நாளில், ஒரு நாளுக்கு இரண்டு குவளை தண்ணீரே குடிக்கத் தந்தனர். இந்த நிலையில் மலம் கழிப்பதன் மூலம், தண்ணீரைக் களவாக குடிக்க முடிந்தது. மலம் கழிக்கும் போதே, அவர்களின் கவனம் திரும்பிய போது, திடீரென வாளியில் இருந்த தண்ணீரில் வாயை வைத்து நீரை உறிஞ்சுவேன். கையை வைத்தால் ஈரலிப்பை கண்டு விடுவார்கள் என்பதால் வாயை வைத்தே உறிஞ்சினேன். இதை பின்னால் தண்ணீர் குடிக்கும் ஒரு வழியாக, தொடர்ச்சியாக எப்போதும் செய்யத் தொடங்கினேன். பின்னால் தண்ணீரில் கையை வைத்து இருப்பதை ஒரு நடைமுறையாக்கினேன். இதன் மூலம் கையால் அள்ளிக் குடிக்கவும் தொடங்கினேன். இதன் மூலம் சித்திரை வெய்யிலின் (கோடை வெம்மையை) கோரத்தை தாங்கும் சக்தியை, கணிசமாக சமாளிக்க முடிந்தது.

குறிப்பு : கட்டிய நிலையிலேயே மூத்திரம் பெய்ய விடுவார்கள். அதைவிட தண்ணீரும் ஊற்றுவதனால் நிலம் ஒரே ஈரமாக இருக்கும்.

விளக்கம் : தொடர்ந்தும் நித்திரையை குழப்ப தண்ணீரை என் மீது ஊற்றுவதால், சிறுநீர் தண்ணீரில் கலந்து விடுவதால் சிறுநீர் மணம் அறையை குமட்டியது. நிலம் ஈரலிப்பாக இருந்தது. அத்துடன் என் மீது நீரை ஊற்றுவதால் வெக்கையை சமாளிக்கும் குளிர்மையை வதை முகாம் தந்தது. உணர்ச்சியற்ற ஒரு நிலையில் அதன் இயல்பான போக்கில், அந்த வதை முகாமில் வாழ்வது தவிர்க்க முடியாதாகியது. சிறுநீரை இந்த இடத்தில் தான் கழிக்க வேண்டும் என்றோ, மலத்தை இப்படித் தான் கழிக்க வேண்டும் என்றோ, ஒரு ஒழுங்கு நியதி கிடையாது. அதைக் கையாண்டால், கையாள நினைத்தால் அதுவும் புதிய வதையாகிவிடும். இயற்கைக் கடனைக் கழிப்பதற்கு கூட கெஞ்சிக் கூத்தாடி அடிமையாக வாழ்வதை விட, அதன் பாட்டுக்கு விட்டு விடுவதன் மூலம் எதிரியை திணறடிக்க முடியும். அவர்கள் ஊளையிட்டு கூச்சல் போடுவதற்கு அப்பால், இயற்கையான இயக்கத்தை நிறுத்த நிர்ப்பந்திக்க முடியாது. இதை எந்த மனிதனும் கட்டுப்படுத்த முடியாது. வேண்டும் என்றால் கொன்று விடுவதன் மூலம் இதை நிறுத்தமுடியும். அதை நான் பாசிட்டுகளின் தேர்வாகவே விட்டுவிட்டேன்.

 

40.அறைச் சுவரில் துப்பாக்கிச் சூட்டு அடையாளங்களும், கிரனையிற் சிதறல்களும் - (வதைமுகாமில் நான் : பாகம் - 40)

39.சிலதைக் கூற, பயங்கரத் திருப்பம் என்று கூறிய சலீம் ..(வதைமுகாமில் நான் : பாகம் - 39)

38.  வதைமுகாமின் உள்ளே…(வதைமுகாமில் நான் : பாகம் - 38)

37.வதைமுகாமில் இருந்து தப்பிய பின் முதல் இரண்டு நாட்களில் எழுதப்பட்ட சிறு குறிப்புகளில் இருந்து (வதைமுகாமில் நான் : பாகம் - 37)

36.துருப்பிடித்த வாள்,கத்தி, கோடாலி மூலம், என்னைக் கடத்தியது புலிகளல்ல, என்.எல்.எவ்.ரி. என்று நிறுவிய புலிகள் (வதைமுகாமில் நான் : பாகம் - 36)

35.வாய்க்குள் துப்பாக்கியை வைத்து மிரட்ட, சுடடா நாயே என்று கத்தினேன் (வதைமுகாமில் நான் : பாகம் - 35)

34.நான் மத்தியகுழு உறுப்பினர் என்பதை தெரிந்து கொண்டு, தகவல்களை கோரித் தாக்கினர் (வதைமுகாமில் நான் : பாகம் - 34)


33.கற்றன் நாசனல் வங்கி நடவடிக்கையில் நீ பங்கு பற்றினாயா? யார் இதைச் செய்தனர்? பணம் எங்கே? (வதைமுகாமில் நான் : பாகம் - 33)


32.மத்தியகுழு உறுப்பினர் என்பதை தெரிந்தவுடன் மூன்றாவது முறை வதைகள் தொடங்கியது (வதை முகாமில் நான் : பாகம் - 32)


31நான் ஒப்புக் கொண்ட பொருட்கள் மற்றும் விபரங்கள் தொடர்பாக (வதை முகாமில் நான் : பாகம் - 31)


30.03.05.1987 – 06.05.1987 வரை இரண்டாவது வதை முகாமில் நடந்த சித்திரவதைகள் (வதை முகாமில் நான் : பாகம் - 30)


29. புதிய வதைமுகாமில் மலத்தை நடுவறையிலேயே இருக்கத் தொடங்கி அதன் அருகில் வாழத்தொடங்கினேன். (வதைமுகாமில் நான் : பாகம் - 29)


28.மே 2ம் திகதி 1987 இல் புதிய வதைமுகாம் நோக்கி பயணம் (வதை முகாமில் நான் : பாகம் - 28)


27.முதலாவது வதைமுகாமில் எனது அறை (வதை முகாமில் நான் : பாகம் - 27)


26.முதல் நான்கு நாட்களும் தொங்கவிட்ட நிலையில் நடந்த சித்திரவதைகள் (வதை முகாமில் நான் : பாகம் - 26)


25.என்.எல்.எப்.ரி.யே என்னைக் கடத்தியிருப்பதாக சொன்ன முட்டாள் புலிகள் (வதை முகாமில் நான் : பாகம் - 25)


24.7.30 மணிக்கு தொடங்கிய சித்திரவதை (வதை முகாமில் நான் : பாகம் - 24)

 

23."தற்கொலை செய்வது பற்றி நீ என்ன நினைக்கின்றாய்" இதுதான் புலிகள் கேட்ட முதற் கேள்வி (வதை முகாமில் நான் : பாகம் - 23)

 

22.மாலை 6.30 மணிக்கு புலித் தளபதி தீபன் என் தலையில் துப்பாக்கியை வைத்துக் கடத்தினான் (வதை முகாமில் நான் : பாகம் - 22)

 

21.28.04.1987 புலிகள் என்னை கடத்திய அன்று (வதை முகாமில் நான் : பாகம் - 21)

 

20.புலி அல்லாத அனைவரும் சமூக விரோதிகள் - மாத்தையா (வதை முகாமில் நான் : பாகம் - 20)

 

19.புலிப் பாசிசத்துக்கு அஞ்சி, பத்திரிகைகள் அன்று வெளியிடாத எனது உரை (வதை முகாமில் நான் : பாகம் - 19)

 

18.என்னைக் கடத்துவதற்கு முன் (வதைமுகாமில் நான் : பாகம் - 18)

 

17.புலிகள் என்னை கடத்துவதற்கான என் மீதான கண்காணிப்பு (வதை முகாமில் நான் : பாகம் - 17)

 

16. எனது போராட்டமும் புலிகளின் கடத்தலும் (வதை முகாமில் நான் : பாகம் - 16)

 

15. ஈவிரக்கமற்ற கொலைகாரத்தனம் தலைமைத்துவத்தை வழங்க, அது தேசியமாகியது (வதை முகாமில் நான் : பாகம் - 15)

 

14. சுயநிர்ணயம் என்பது மனித உரிமையைக் கோருவதாகும் (வதை முகாமில் நான் : பாகம் - 14)

 

13. கருத்து எழுத்து பேச்சு சுதந்திரத்தை மறுத்து உருவானதே புலிப்பாசிசம் (வதை முகாமில் நான் : பாகம் - 13)

 

12. புலிப் பாசிசத்தின் தோற்றுவாய் (வதை முகாமில் நான் : பாகம் - 12)

 

11. புலிப் பாசிசத்தின் தோற்றமும் என்பது வரலாற்று நீட்சி (வதை முகாமில் நான் : பாகம் - 11)

 

10. புலிகள் பாசிட்டுகளே ஒழிய ஒரு மக்கள் இயக்கமல்ல (வதை முகாமில் நான் : பாகம் - 10)

 

09. பாசிசம் குறித்து அடிப்படையான தரவுகள் (வதை முகாமில் நான் : பாகம் - 09)

 

08. மக்கள் விரோத துரோகக் குழுக்களும், அவர்களின் பாசிசக் கோட்பாடுகளும் (வதை முகாமில் நான் : பாகம் - 08)

 

07. இனவாத யுத்தம் மக்களின் அவலங்களை முடிவின்றி பெருக்கியது (வதை முகாமில் நான் : பாகம் - 07)

 

06. சிறுபான்மை தேசிய இனங்களுக்கு எதிராக சிங்கள பேரினவாதம் (வதை முகாமில் நான் : பாகம் - 06)

 

05. பாசிசம் கட்டமைத்த அரசியல் மீது (வதை முகாமில் நான் : பாகம் - 05)

 

04. புலியின் இந்த வதைமுகாமுக்கு முன்னும் பின்னுமான படுகொலை முயற்சிகள் (வதை முகாமில் நான் : பாகம் - 04)

 

03. மக்களை ஒடுக்கும் தேசியம், பாசிசத்தை விதைக்கின்றது (வதைமுகாமில் நான் : பாகம் - 03)

 

02. 1987ம் ஆண்டு என் நினைவுக்குள் நுழைய முன்.. (வதை முகாமில் நான் : பாகம் - 02)

 

01. வதை முகாமில் நான் : மரணத்தை முத்தமிட்ட என் நினைவுகள் அழிவதில்லை - (வதை முகாமில் நான் : பாகம் - 01)