ஈராண்டுகளுக்கு முன்பு நடந்த இறுதிக்கட்ட ஈழப் போரில், 2009, மே 18ஆம் நாளில்  பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழ் மக்களைக் கொன்றொழித்ததோடு, இலட்சக்கணக்கான ஈழத் தமிழர்களை இன்னமும் முட்கம்பியிடப்பட்ட  தடுப் பு  முக õம்களில் அடைத்து வதைத்து வரும் இன அழிப்புப் போர்க்குற்றவாளி ராஜபக்சேவைத் தண்டிக்குமாறும், இனப்படுகொலைப் போரை வழிகாட்டி இயக்கிய இந்திய மேலாதிக்க அரசையும் சோனியா  மன்மோகன் கும்பலையும் திரைகிழித்தும், ஈழ மக்களது சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவாகவும் மே 18 முள்ளிவாய்க்கால் படுகொலை நாளில் தமிழகமெங்கும் ம.க.இ.க் வி.வி.மு; பு.மா.இ.மு; பு.ஜ.தொ.மு; பெ.வி.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகள் ஆர்ப்பாட்டங்களை நடத்தின.

 

 

முள்ளிவாய்க்கால் படுகொலை நாளையொட்டி துண்டுப்  பிரசுரங்கள்,   சுவö ர õட்டிகள் வாயிலா கவிரிவான பிரச்சார இயக்கத்தை மேற்கொண்டு, அதன் தொடர்ச்சியாக சென்னை, பென்னாகரம், பள்ளிப்பாளையம், உடுமலை, கோத்தகிரி, கோவை, விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, சீர்காழி, தஞ்சை, திருச்சி, மதுரை, கோவில்பட்டி, விளாத்திகுளம், சிவகங்கை எனத் தமிழகமெங்கும் தாங்கள் செயல்படும் பகுதிகளில் இவ்வமைப்புகள் தோழமை அமைப்புகளுடன் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தின.

திருச்சி புத்தூர் நாலுரோட்டில் மே18 அன்று மாலை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ம.க.இ.க.  மையக் கலைக்குழுவின் சார்பாக, ஐ.நா. சபையை நைனா சபையாக எள்ளி நகையாடும் "ஐ.நா. மன்றத்தின் விசாரணை' என்ற வீதி நாடகம் நடத்தப்பட்டது. ராஜபக்சேவின் திமிர்த்தனத்தையும் ஓபாமாவுக்குக் கூழைக் கும்பிடு போடும் மன்மோகன் சிங்கையும் அம்பலப்படுத்தும் வகையில் அமைந்த இந்நாடகமும் புரட்சிகரப் பாடல்களும் உழைக்கும் மக்களிடம் பெருத்த வரவேற்பைப் பெற்றன.

ராஜபக்சேவுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரவளித்துவரும் இந்தியாவும் அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்களும் குற்றவாளிகள் என்பதையும், இந்திய அரசு தேசிய   இனப் போராட்டங்களை ஒடுக்கிவருவதையும், தமிழகத்தில் ஏற் பட்டுள்ள ஆட்சி மாற்றம் ஈழத் தமிழர் வாழ்வைப் பாதுகாத்துவிடாது என்பதையும் விளக்கி, இந்த ஆர்ப்பாட்டங்களில்  முன்னணியாளர்கள் சிறப்புரையாற்றினர். ஏகாதிபத்தியங்களின் கைப்பாவையான ஐ.நா.மன்றத்தின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தி, உலக மக்கள் மத்தியில் பொதுக்கருத்தை உருவாக்கி மக்கள்திரள் இயக்கங்களைக் கட்டியமைப்பதன் மூலம்தான்,  உலகெங்குமுள்ள தமிழர்களும் உழைக்கும் மக்களும் ஓரணியில் திரண்டு போராடுவதன் மூலம்தான் போர்க்குற்றவாளி ராஜபக்சே கும்பலைத் தண்டிக்க முடியும் என்பதை உணர்த்தினர்.

இறுதிக்கட்டப் போரின் போது மனிதஉரிமை அத்துமீறல்கள் நடந்துள்ளதாக இலங்கை அரசு மீது ஐ.நா. நிபுணர் குழுவின் அறக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள போதிலும், இரத்தக் கறைபடிந்த போர்க்குற்றவாளி ராஜபக்சேவுடன் இந்திய அரசு இன்னமும் கூடிக்குலாவுகிறது. ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையால் ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழலைச் சமாளிக்க இந்தியாவின் உதவி தேவைப்படுவதாகவும், அதற்கு இந்தியா உதவும் என்று நம்புவதாகவும் ராஜபக்சே கும்பல் அறிவித்துள்ளது.

இந்நிலையில், "போர்க்குற்றவாளியான ராஜபக்சேவை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தவும், இலங்கை மீது பொருளாதாரத் தடையினைக் கொண்டுவரவும் மைய  அரசை  வலியுறுத்துவேன்' என்று சவடால் அடிக்கிறார், ஆட்சியைப் பிடித்துள்ள ஜெயலலிதா. அவரது இச்சவடாலை நம்பி, "தாங்கள் முதல்வராக இருந்த போதுதான் ஈழத்   தமிழ் மக்களின் கௌரவமான வாழ்வும் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டது' என்று தமிழகத் தேர்தலில் வெற்றி பெற்ற ஜெயலலிதாவுக்கு நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் உருத்திரகுமாரன் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார். ராஜபக்சேவின் பிடியிலுள்ள புலிகள் இயக்கத்தின் முன்னாள் சர்வதேசப் பொறுப்பாளரான கே.பி. என்கிற குமரன் பத்மநாதன், "தி.மு.க.வின் பிராமண எதிர்ப்புக் கொள்கையில் பிரபாகரன் ஈர்க்கப்பட்டதால், ராஜீவ் படுகொலை நடந்தது. ஜெயலலிதாவைக் கொல்வதற்கும் புலிகள் திட்டமிட்டிருந்தனர்' என இந்தியத் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ளார். அதை வைத்து ஜெயலலிதாவும் ராஜீவ் கொலையில் தி.மு.க.வுக்குத் தொடர்பு உள்ளது என்று மீண்டும் சாமியாடக் கிளம்பியுள்ளார். ஒரு பிரிவு தமிழினவாதிகளோ, ஜெயலலிதாவை ஆதரித்து, தமிழக சட்டமன்றத் தேர்தலில் கருணாநிதி மற்றும் காங்கிரசு துரோகிகளை வீழ்த்தி பாடம் புகட்டி விட்டதாகப் பூரித்துப் போகின்றனர். இதர தமிழினக் குழுக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் போராட்டங்களுக்கு மேல் எதுவும் செய்யவில்லை. இத்தகைய கையாலாகாத,   சந்தர்ப்பவாத பிழைப்புவாதப் போக்குகளைத் திரைகிழித்து, இப்புரட்சிகர அமைப்புகள் உணர்வோடு நடத்திய இந்த ஆர்ப்பாட்டங்கள் மக்களிடம் பெருத்த தாக்கத்தை ஏற்படுத்தின.

பு.ஜ. செய்தியாளர்கள்.