விலை உயர்வு, விவசாயம் மற்றும் தொழில்துறை உற்பத்தி வீழ்ச்சி, 2 ஜி, எஸ்@பண்ட், ஆதர்ஷ் உள்ளிட்ட பல ஊழல்கள், கறுப்புப் பணம், சிறப்புப் பொருளாதார மண்டலம் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் நிலப் பறிப்புக்கு எதிரான பழங்குடியின மக்கள்விவசாயிகளின் போராட்டம் எனப் பல்வேறு சமூகபொருளாதார பிரச்சினைகள், நெருக்கடிகள் நாட்டை உலுக்கி வருவதற்கு இடையே 2011 - 12 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் வெளியாகியிருக்கிறது. இந்த நெருக்கடிகளைத் தீர்க்க பட்ஜெட்டில் புதிய திட்டங்களும், வழிமுறைகளும் அறிவிக்கப்பட்டிருக்கிறதா என அலசிப் பார்த்தால், தனியார்மயம்  தாராளமயம் என்ற பழைய செக்குமாட்டுப் பாதையில்தான் பட்ஜெட் பயணம் செய்கிறது. இந்த நெருக்கடிகள் தோன்றவும், முற்றவும் எந்தக் கொள்கைகள் காரணமாக அமைந்தனவோ, அதையே இன்னும் தீவிரமாக நடைமுறைப்படுத்த முனைகிறது, பட்ஜெட்.

 

 

உணவுப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த விளைச்சலை அதிகரிப்பதற்கான திட்டங்களைத் தொடங்கப் போவதாக பட்ஜெட்டில் தடபுடலாக அறிவிக்கப்பட்டிருந்தாலும், விவசாயத்திற்கும் விவசாயம் தொடர்பான பிற தொழில்களுக்கும் கடந்த ஆண்டு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட (மொத்த) நிதியைவிட (ரூ.1,24,451 கோடி) இந்த ஆண்டில் 5,422 கோடி ரூபாயை வெட்டிவிட்டுத்தான் நிதி (ரூ.1,18,883 கோடி) ஒதுக்கப்பட்டுள்ளது. "விவசாயத்தில் முதலீடு செய்வதை அரசு கைகழுவி விடவேண்டும்' என்ற தனியார்மய தாராளமயக் கொள்கைப்படிதான் இந்த ஆண்டிற்கான பட்ஜெட்டும் தயாரிக்கப்பட்டுள்ளது என்பதைத்தான் இந்த வெட்டு எடுத்துக் காட்டுகிறது. எனினும், வங்கிகள் மூலம் விவசாயிகளுக்குக் கடன் வழங்குவதற்காக இந்த ஆண்டு பட்ஜெட்டில் கடந்த ஆண்டைவிட 1 இலட்சம் கோடி ரூபாய் அதிகமாக நிதி (ரூ.4,75,000 கோடி) ஒதுக்கப்பட்டிருப்பதைக் காட்டி, இது விவசாயத்திற்கு ஊக்கம் தரும் பட்ஜெட் என காங்கிரஸ் கூட்டணி அரசு ஆரவாரம் செய்து வருகிறது.

2010 டிசம்பர் முடிய வங்கிகளிலிருந்த மொத்த சேமிப்பு 42.15 இலட்சம் கோடி ரூபாய். இச்சேமிப்பிலிருந்து வங்கிகள் 35.77 இலட்சம் கோடி ரூபாயைக் கடனாக வழங்கியிருக்கின்றன. கடந்த ஆண்டு விவசாயத்திற்கென வழங்கப்பட்ட 3.75 இலட்சம் கோடி ரூபாய், இந்த மொத்தக் கடனில் வெறும் 10 சதவீதம் தான். மீதிக் கடன்கள் அனைத்தும் முதலாளிகளின் தேவைகளுக்கு, குறிப்பாக ரியல் எஸ்டேட் முதலைகளுக்கும், கார் வாங்க, வீடு கட்ட என மேட்டுக்குடி, நடுத்தர வர்க்கத்தினரின் தேவைகளுக்கும்தான் வழங்கப்பட்டுள்ளன. எனவே, வங்கிகள் மூலம் விவசாயிகளுக்குத் தரப்படுவதாகச் சொல்லப்படும் கடன் தொகையைக் கண்டு மலைத்துப் போகத் தேவையில்லை.

வங்கிகள் மூலம் தரப்படும் விவசாயக் கடனை, விவசாயத்தில் அரசாங்கம் செய்ய வேண்டிய முதலீட்டிற்கு மாற்றாகப் பார்க்க முடியாது. மாணவர்களுக்குக் கல்வி தர வேண்டிய அரசு, கல்விக் கடன் வழங்கி தனது பொறுப்பைத் தட்டிக் கழிப்பது போன்றதுதான் இது. இப்படிக் கொடுக்கப்படும் கடன் பெரும்பாலான ஏழை, நடுத்தர விவசாயிகளுக்குக் கிடைப்பதில்லை என்

பதை விவசாயிகளின் தற்கொலைச் சாவுகளே நிரூபித்து வருகின்றன. அப்படியென்றால், இந்தக் கடனை வாங்கி அனுபவிக்கும் "விவசாயிகள்' யார் என்பதுதான் கேள்வி.

புதுப் பணக்கார விவசாயிகளும், கார்ப்பரேட் நிறுவனங்களும் அதிக அளவில் மூலதனமிட்டு, வர்த்தக, ஏற்றுமதி நோக்கில் பயிர் செய்வதையும் விவசாயமாக அங்கீகரித்துக் கடன் வழங்க வேண்டும்; விவசாயத் துறையில் இவர்களுக்கு வழங்கப்படும் மறைமுகக் கடன்களின் வரம்பையும் அதிகரிக்க வேண்டும் என்ற இரண்டு மாற்றங்கள் விவசாயக் கடன் கொள்கையில் மன்மோகன் சிங் கும்பலால் புகுத்தப்பட்ட பின், விவசாயக் கடன் வழங்குவதில் முன்னேப்போதும் இல்லாத பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

1990களில், வங்கிகள் மூலம் விவசாயத்திற்கு வழங்கப்பட்ட கடனில், 2 இலட்ச ரூபாய்க்கும் குறைவாக வழங்கப்பட்ட கடன்களின் பங்கு 83 சதவீதமாக இருந்தது. இப்பங்கு 2009இல் 44.3 சதவீதமாகக் குறைந்துவிட்டது. அதே சமயம், 1990களில் 10 இலட்சம் தொடங்கி 25 டீகாடிக்கும் டீமல் வழங்கப்பட்ட விவசாயக் கடனின் பங்கு 13.1 சதவீதமாக இருந்தது, இது, 2009 இல் 33.1 சதவீதமாக உயர்ந்துவிட்டது. 2008ஆம் ஆண்டு வங்கிகள் மூலம் வழங்கப்பட்ட விவசாயக் கடனில் 20 சதவீதக் கடன்கள் பெருநகரங்களிலுள்ள வங்கிக் கிளைகளிலிருந்தும், 14 சதவீதக் கடன்கள் நகர்ப்புறங்களைச் சார்ந்த வங்கிக் கிளைகளிலிருந்தும் தான் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக, விவசாயிகள் தற்கொலை பெருமளவில் நடந்துவரும் மகாராஷ்டிரா மாநிலத்தில் 58 சதவீத விவசாயக் கடன்கள் பெருநகர மற்றும் நகர்ப்புற வங்கிக் கிளைகளிலிருந்துதான் வழங்கப்பட்டுள்ளன.

 

கிராமத்து விவசாயிகள் பிழைப்பு தேடித்தான் சென்னை, மும்பசூ போன்ற பெருநகரங்களை நோக்கி ஓடுகிறார்களே தவிர, பயிர்க் கடன் பெறுவதற்காக நகரத்துப் பக்கம் ஒதுங்குவதில்லை. பணப்பயிர் விவசாயத்தில் மட்டுமின்றி, உணவுப் பதப்படுத்துதல், சிப்ஸ் போன்ற நொறுக்குத் தீனி தயாரித்தல் உள்ளிட்ட விவசாயம் சார்ந்த மதிப்புக் கூட்டுத் தொழில்களில் இறங்கியுள்ள ஐ.டி.சி., ரிலையன்ஸ், பிர்லா போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் விவசாயக் கடன்களைச் சுருட்டி வருகின்றன என்பதைத்தான் இப்புள்ளிவிவரங்கள் எடுத்துக் காட்டுகின்றன. வங்கி கடன் மட்டுமின்றி, இக்கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விவசாயத்தை ஊக்குவிப்பது என்ற பெயரில் வட்டித் தள்ளுபடி, வரி விலக்கு, ஏற்றுமதி மானியம் எனவும் பல்வேறுவிதமான சலுகைகள் கொட்டிக் கொடுக்கப்படுகின்றன.

...

அரசின் விவசாயக் கடன் கொள்கை மட்டுமல்ல, பட்ஜெட்டில் விவசாயம், கல்வி, மருத்துவம், சமூக நலத் திட்டங்கள், கனரகத் தொழில்கள், அடிக்கட்டுமான தொழில்கள், இராணுவம் எனப் பல்வேறு துறைகளுக்கு ஒதுக்கப்படும் நிதி, மானியம் ஆகிய அனைத்தும் மக்களின் நலனை முன்னிறுத்துவதை விட, கார்ப்பரேட் நிறுவனங்களின் இலாபத்தைத்தான் முன்னிறுத்துகின்றன. இத்துறைகள் தொடர்பாக பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் திட்டங்கள், கொள்கை முடிவுகளும் கார்ப்பரேட் நிறுவனங்களின் பகற்கொள்ளைக்கு ஏற்றபடிதான் வகுக்கப்படுகின்றன.

 

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த உணவுப் பொருள் விநியோக சங்கிலித் தொடரை முறைப்படுத்த வேண்டும் என பட்ஜெட்டில் நிதியமைச்சர் அறிவித்துள்ளார். இதன்பொருள், உணவுப் பொருள் கொள்முதல், சேமிப்பு, விநியோகம், விற்பனை ஆகியவற்றில் இந்தியத் தரகு முதலாளிகளும் பன்னாட்டு நிறுவனங்களும் இன்னும் அதிக அளவில் நுழைவதற்கு அனுமதிக்க வேண்டும் என்பது தவிர வேறில்லை. இதற்கு ஏற்பவே, @வளாண் விளைபொருட்களைச் சேமித்து வைப்பதற்கான குளிர்சாதனக் கருவிகளுக்கு உற்பத்தி வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

வடகிழக்கு மாநிலங்களிலும் பசுமைப் புரட்சியை நடைமுறைப்படுத்த 400 கோடி ரூபாசூ நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பசுமைப் புரட்சி என்பது விவசாயிகளை விதை, உரம்பூச்சி மருந்து தயாரிக்கும் நிறுவனங்களின் பிடியில் சிக்க வைக்கும் பொறி என்பதைத்தான் பஞ்சாப் மற்றும் பிறமாநில விவசாயிகளின் அனுபவங்கள் நிரூபிக்கின்றன. என@வ, இத்திட்டம் வடகிழக்கு மாநிலங்களைப் பன்னாட்டு விவசாயக் கழங்களின் கொள்ளைக்குத் திறந்துவிடும் நரித்தனம் தவிர வேறில்லை. இதுபோல, வேளாண் விளைபொருட்கள் வீணாவதைத் தடுக்கத் தனியாருடன் இணைந்து 15 உணவுப் பூங்காக்கள் அமைக்கப்படும் என்ற திட்டம், உணவுப் பொருட்களைச் சட்டபூர்வமாகப் பதுக்கி வைத்துக் கொள்ளத் தனியார் முதலாளிகளுக்குத் தரப்படும் லைசென்சு தவிர வேறென்னவாக இருந்துவிட முடியும்? "விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளித்துள்ள பட்ஜெட்' என இப்பட்ஜெட்டை கார்ப்பரேட் முதலாளிகள் பாராட்டுவதன் பின்னேயுள்ள இரகசியங்கள் இவைதான்.

இந்த ஆண்டு பட்ஜெட்டில் இராணுவத்துக்கு 1,64,415 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியில் இராணுவத் தளவாடங்கள் வாங்குவதற்காகவே 69,199 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் பலனடையப் போவது பன்னாட்டு ஆயுத தொழிற்கழகங்களும், அவர்களின் இந்தியத் தரகர்களும், இராணுவ அதிகாரிகளும்தான். இக்கும்பலுக்குக் கிடைக்கும் இலாபமும், கமிஷனும் தேசப் பாதுகாப்பு என்ற போர்வையின் மூலம் வெளியே தெரியாமல் மூடப்படுகிறது.

 

இந்தியாவிலுள்ள 2.5 இலட்சம் கிராமப் பஞ்சாயத்துக்களையும் இணைய தள வலைப் பின்னலின் கீழ்கொண்டு வருவதற்காக இந்த பட்ஜெட்டில் 10,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விவசாயம் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த வலைப்பின்னல் பயன்படும் எனக் கூறுகிறது அரசு. விவசாயம் நசிவடைந்து வரும் வேளையில், விளைபொருட்களை இன்று சந்தைக்கு எடுத்துப்போகலாமா, இல்லை ரோட்டில் கொட்டிவிட்டுத்தலையில் துண்டைப் போட்டுக் கொள்ளலாமா என்பதைத் தெரிந்து கொள்ள @வண்டுமானால் இந்த வலைப்பின்னல் விவசாயிகளுக்குப் பயன்படலாம். இந்த நிதி தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் இலாபத்தைக் கூட்டுவதற்குப் பயன்தரும் அளவிற்கு கிராமத்து மக்களுக்குப் பயன்படப் போவதில்லை.

அதிவிரைவுச் சாலைகள், அடுக்கு மேம்பாலங்கள், சர்வதேசத் தரம் வாய்ந்த விமான நிலையங்கள் போன்ற அடிக்கட்டுமான வசதிகளை உருவாக்கவும், மேம்படுத்தவும் இந்த பட்ஜெட்டில் 2,14,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தை மேம்படுத்துவது என்ற பெயரில் கொண்டுவரப்படும் இத்திட்டங்கள் நகர்ப்புற ஏழை மக்களை அவர்களின் வாழ்விடங்களில் இருந்து துரத்தியடித்து வருவதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. இத்திட்டங்களை உருவாக்க ஆலோசனை வழங்குவதிலிருந்து, இத்திட்டங்களை நிறைவேற்றி, அதன் பின் சுங்கக் கட்டணம் வசூலிப்பது வரை அனைத்தும் தனியாரிடம்தான் ஒப்படைக்கப்படுகிறது. எனவே, இந்த அடிக்கட்டுமான வளர்ச்சிக்கான நிதி கட்டுமான கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், சொகுசு கார்களில் பறக்கும் மேட்டுக்குடிக் கும்பலுக்கும், அக்கார்களைத் தயாரித்துவரும் பன்னாட்டு கார் கம்பெனிகளுக்கும்தான் பெரும் பயனைக் கொடுக்கும்.

எரிசக்தித் துறை, கனிம வளத் துறை ஆகியவற்றுக்கு இந்த பட்ஜெட்டில் 2 இலட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்துறைகளில் தீவிரமாகத் தனியார்  மயம் புகுத்தப்படும்பொழுது, இவ்வளவு பெரிய தொகையை அரசு மூலதனமாகப் போட வேண்டிய அவசியமென்ன? அரசு, தனது சொந்த செலவில் இத்துறைகளை மேம்படுத்தி, ரிலையன்ஸ், எஸ்ஸார் போன்ற தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் நோக்கத்தைத் தவிர, வேறேன்ன நல்ல எண்ணம் இந்த நிதி ஒதுக்கீடின் பின்னே இருந்துவிட முடியும்?

கடந்த ஆண்டு பட்ஜெட்டில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வருமான வரி விலக்காக 88,263 கோடி ரூபாயும், சுங்க மற்றும் உற்பத்தி வரி விலக்காக 3,72,709 கோடி ரூபாயும் ஆக மொத்தம் 4,60,972 கோடி ரூபாய் வரி விலக்காக அளிக்கப்பட்டது. இவ்வரி விலக்கு அதற்கு முந்தைய ஆண்டில் (200910) 4,37,290 கோடி ரூபாயாகும். 200506 ஆம் ஆண்டு தொடங்கி 2010-11ஆம் ஆண்டு முடிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள மொத்த வரி விலக்கு 21,25,023 கோடி ரூபாய்.

 

இவ்வரி விலக்குகள் ஒருபுறமிருக்க, 200506 ஆம் ஆண்டு தொடங்கி 201011 ஆம் ஆண்டு முடிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட வரிக் குறைப்பு 1,34,000 கோடி ரூபாய். இதுவன்றி, பொருளாதார நெருக்கடியைக் காரணமாகக் காட்டி 2008-09 ஆம் ஆண்டு தொடங்கி 201011 ஆம் ஆண்டு முடிய 3,36,000 கோடி ரூபாய் மானியமாகவும் அளிக்கப்பட்டுள்ளது.

உணவுக்கும், உரத்திற்கும், கல்விக்கும், சுகாதாரத்திற்கும் மானியம் அளிப்பதைப் பொருளாதாரச் சுமையாகவும், பட்ஜெட் பற்றாக்குறையை அதிகரிப்பதாவும் குற்றஞ்சுமத்தி வரும் ஆளுங் கும்பல், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் இத்தகைய மானியங்களை நாட்டின் வளர்ச்சிக்கு அவசியமானதாகச் சித்தரிக்கின்றன. இச்சலுகைகளை முதலாளிகளின் தனிப்பட்ட இலாபத்திற்கு அளிக்கப்பட்டதாகக் கருதக் கூடாது என வாதிடுகின்றன.

முகேஷ் அம்பானிக்குத் தாரை வார்க்கப்பட்ட எரிவாயு வயல்களின் உற்பத்தியின் மீது முன் தேதியிட்டு 91,000 கோடி ரூபாய் வரித் தள்ளுபடி செய்வதற்கான முன்மொழிதலை ப.சிதம்பரம் 2009ஆம் ஆண்டு பட்ஜெட்டில் முன்வைத்தார். "இந்த வரிச் சலுகை நாட்டின் எரிசக்தித் துறையின் வளர்ச்சிக்கு அவசியமானது' என காங்கிரசும், பா.ஜ.க.வும் ஒரசேர ஆதரித்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தன.

1,76,000 கோடி ரூபாய் பெறுமான 2 ஜி அலைக்கற்றையை அடிமாட்டு விலைக்கு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விற்றதை, கைபேசிக் கட்டணம் குறைந்ததைக் காட்டி தி.மு.க.  காங்கிரசு கும்பல் நியாயப்படுத்தியதையும் இங்கு நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். அலைக்கற்றை விற்பனையை அரசாங்கத்தின் வருமானத்தோடு முடிச்சுப் போட்டுப் பார்க்கக் கூடாதென்றும், நாட்டின் தொலைபேசிக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கத்திற்காகவே குறைவான கட்டணத்தில் அலைக்கற்றை விற்கப்பட்டதாகவும், உலகின் பல நாடுகளில் ஏலமுறை கைவிடப்பட்டதாகவும் கூறி, இந்த விற்பனையை நியாயப்படுத்தினார், மான்டேக் சிங் அலுவாலியா.

பொருளாதார நெருக்கடியைக் காரணமாகக் காட்டி, வைரம் பட்டை தீட்டும் தொழிலுக்கும், தங்கம் மற்றும் வைர நகைகள் தயாரிக்கும் தொழில் நிறுவனங்களுக்கும் கடந்த மூன்று ஆண்டுகளில் 95,675 கோடி ரூபாய் அளவிற்கு சுங்க வரி விலக்கு அளிக்கப்பட்டது. இத்தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் வேலைவாய்ப்புகளைக் காப்பாற்றவே இவ்வரி விலக்கு அளிக்கப்பட்டிருப்பதாக நியாயப்படுத்தியது, அரசு.

நாட்டின் வளர்ச்சியோடு சம்பந்தப்படுத்தி நியாயப்படுத்தப்படும் இந்த கார்ப்பரேட் வரி விலக்குகள் முதலாளிகளின் பணப் பெட்டியை நிரப்பிக் கொள்ளப் பயன்பட்டதேயொழிய, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவோ, இருக்கும் வேலை வாய்ப்புகளைப் பாதுகாக்கவோ, உற்பத்தி வளர்ச்சிக்கோ பயன்படவில்லை என்பதே உண்மை.

குஜராத்தின் சூரத்நகரில் வைரம் பட்டை தீட்டும் தொழிற்சாலைகளில் கூலி வேலை பார்த்து வந்த ஒரிசாவைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலையிழந்து சொந்த கிராமத்திற்குத் திரும்பியதாகவும், பல தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொண்டதாகவும், மகாராஷ்டிரா மாநிலத்தில் இத்தொழிலில் இருந்து நாளொன்றுக்கு 1,800 தொழிலாளர்கள் வேலையிலிருந்து துரத்தப்பட்டதாகவும் கூறுகிறார், பத்திரிகையாளர் பி.சாய்நாத்.

"எந்த அளவுக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறதோ, அந்த அளவுக்கு பொருள்களின் விலையை கம்பெனிகள் குறைக்க வேண்டும். ஆனால், நடந்ததோ விபரீதம். வரி விலக்குக் காரணமாக பொருள்களின் விலை குறையாமல் கம்பெனிகளின் இலாபம் பெருகியது. 200607 ஆம் ஆண்டில் கார்ப்பரேட் நிறுவனங்கள் அடைந்த இலாபம் 7.12 இலட்சம் கோடி ரூபாய். இது, பொருளாதரா நெருக்கடி உச்சத்திலிருந்த 2008-09 ஆம் ஆண்டில் 6.68 இலட்சம் கோடி ரூபாயாகக் "குறைந்து', 2009-10 ஆம் ஆண்டில் 8.24 இலட்சம் கோடி ரூபாயாக உயர்ந்தது' என அம்பலப்படுத்துகிறார், சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் அகில இந்திய இணை அமைப்பாளர் எஸ்.குருமூர்த்தி.

இவ்விவரங்கள் அனைத்தும் இரகசியமானவை அல்ல. பட்ஜெட் ஆவணங்களிலிலேயே இவைதொகுக்கப்பட்டுள்ளன. ஆனாலும், பொருளாதார நெருக்கடி இன்னும் தொடருவதாகவும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த இவ்விலக்குகள் அவசியமானவை என்றும் கூறி, இச்சலுகைகள் இந்த பட்ஜெட்டிலும் நீட்டிக்கப்பட்டுள்ளன.

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வாரி வழங்கப்பட்டுள்ள இந்தச் சலுகைகளோடு ஒப்பிட்டால், இந்த பட்ஜெட்டில் நடுத்தர வர்க்கத்தினருக்கு வழங்கப்பட்டுள்ள வருமான வரிச் சலுகை; அங்கன்வாடி பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள ஊதிய உயர்வு, தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கூலி உயர்வு போன்றவையெல்லாம் சுண்டைக்காய்தான்.

இதுவொருபுறமிருக்க, இந்த ஆண்டு பட்ஜெட்டில் உணவு மானியத்திற்குக் கடந்த ஆண்டு ஒதுக்கியதை விட 27 கோடி ரூபாய் குறைவாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தேசிய உணவுப் பாதுக்காப்புச் சட்டத்தைக் கொண்டுவரப் போவதாகச் சவடால் அடித்து வரும் ஆளும்கும்பல், இந்த பட்ஜெட்டில் அதற்காக ஒரு நயா பைசாகூட நிதியாக ஒதுக்கவில்லை. விலைவாசி உயரும் எனத் தெரிந்தும் மண்ணெண்ணெய்க்கும் சமையல் எரிவாயுவுக்கும் வழங்கப்பட்டு வரும் மானியத்தில் 15,000 கோடி ரூபாயையும், உரமானியத்தில் 5,000 கோடி ரூபாயையும் வெட்டிவிட்டது.

வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தைக் கைப்பற்றிக் கொண்டுவருவது பற்றி உச்ச நீதிமன்றம் சண்டமாருதம் செய்து கொண்டிருக்க, மன்மோகன் சிங் அரசோ கறுப்புப் பணத்தைக் கொல்லைப்புற வழியில் வெள்ளையாக்கிக் கொள்ளுவதற்கு வழி ஏற்படுத்திக் கொடுக்கும் இரண்டு திட்டங்களை, அந்நிய முதலீட்டைக் கவருவது என்ற பெயரில் பட்ஜெட்டில் அறிவித்திருக்கிறது. மேலும், 2 ஜி, 3 ஜி அலைக்கற்றைகளுக்கு அடுத்து, 40,000 கோடி ரூபாய் பெறுமான பொதுத்துறை நிறுவனப் பங்குகளை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வாரிக் கொடுக்கும் திட்டமும் பட்ஜெட்டில் வெளியாகியிருக்கிறது.

கார்ப்பரேட் முதலாளித்துவக் கும்பலின் நலன்தான் மன்மோகன் சிங்கின் முதலும் முடிவுமான கொள்கை. ஓட்டுப் பொறுக்கவாவது ஒரு சில கவர்ச்சிகரமான மக்கள் நலத் திட்டங்களை பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும் என்ற "நல்லெண்ணம்'கூட இல்லாதவர்தான் மன்மோகன் சிங். தனியார்மய  தாராளமயக் கொள்கைகளைத் தீவிரமாக நடைமுறைப்படுத்தாததால்தான் விலைவாசி உயர்வு, விவசாய உற்பத்தி வீழ்ச்சி உள்ளிட்ட நெருக்கடிகள் உருவாகிவிட்டதாகவும், இக்கொள்கைகளை இன்னும் தீவிரமாக நடைமுறைப்படுத்துவதன் மூலம்தான் இப்பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் எனத் திரும்பத் திரும்பக் கூறிவரும் அவரது அரசு, அதற்கேற்றபடிதான் இந்த ஆண்டு பட்ஜெட்டையும் தயாரித்து அளித்திருக்கிறது.

தென் அமெரிக்க நாடுகளில் கார்ப்பரேட் நிறுவனங்கள் இப்படிப் பகற்கொள்ளை அடிப்பதற்கு அங்கெல்லாம் வெளிப்படையான இராணுவ சர்வாதிகார ஆட்சியோ அல்லது ஒரு கட்சி பாசிச ஆட்சியோ நிறுவப்பட்டது. இந்தியாவிலோ, நாடாளுமன்ற ஜனநாயக ஆட்சி முறையின் மூலமே, கார்ப்பரேடிசம் என்ற இப்பாசிசம் சட்டபூர்வமான முறையிலேயே திணிக்கப்படுகிறது.

செல்வம்