கோத்தபாயக் கோட்டைக்குள்-எந்தப்புலி

பயங்கரவாதத்தை அழித்ததாய்

மார்தட்டிய மன்னவர்

மடிக்குள் வளர்ந்தவை முட்டிக்கொள்கிறது

கட்சிக்குள்ளேயே வெடிக்கும்

ராஜபக்ச ரவைகள்

கொன்றுபோடுவதும் மனித உயிர்தான்

 

 

 

குண்டு வெடித்தால் புலி

கொலை நடந்தால் புலி

—-இப்போ

கோத்தபாய சிறிலங்கா கோட்டைக்குள்-எந்தப்புலி

எந்தக்குண்டும் இடுப்புப்பட்டியில் கட்டிவெடிக்காமல்

பதவிக்காய் மோதிக்கொள்கிறது

உழைப்பவர் ஒருமித்துக் குரல்கொடுக்கும் காலம்

—-கிட்டவருகிறது

லசந்தவை

பிரகீத் எலெனிகொடவை

கொட்டியா சுட்டதென்று சொல்லமுடியாக்காலம் போல்

கெட்டியாய் பிடித்த இனவாதம்

பேரினவாதிகட்கும்

குறுந்தேசியக் கூட்டமைப்புக்கும்

கைக்கெட்டாதிருக்கப்போகிறது

சிங்களமக்களொடு

சேர்ந்து குரல்கொடுக்கும் வேளை பிறக்கிறது

இனவெறி

தனக்கான மரணக்குழியை நோக்கி நடக்கிறது

இனம் மதம் கடந்து

எழும் இனி உழைக்கும் வர்க்கம்

 

கங்கா