புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் சமூக அரசியல் கல்விச் சுற்று – முதலாவது ஒலி நூல்
கேட்பதற்கு இங்கே அழுத்தவும்
{play}http://olinool.net/files/ndp_front/ndpfront_1.mp3{/play}
புதிய ஜனநாயக மக்கள் முன்னணியினரின் கல்விச்சுற்றாக வெளிவரும் தோழர் மாவோவின் கட்டுரை.
இப்பிரசுரத்தை PDF வடிவிலும் இங்கே தரவிறக்கலாம்.
மனித சமூகம் என்பது வர்க்கங்களால் ஆனது. அதனாலேதான் அனைத்துச் சமூகங்களிலும் மனித முரண்பாடுகள் பலவிதமாக வெளிப்படுகின்றது. இந்த நிலையில் மனிதன் மனிதனாக வாழ முற்படும்போது, எங்கும் எதிலும்; போராட்டங்கள் வெடிக்கின்றது. அவற்றுக்கான உரிய தீர்வுகள் கிடைக்கும்வரை அவை தொடர்கின்றது. இந்த வகையிலேதான், நாமும் புதிய ஜனநாயக மக்கள் முன்னணி ஊடாக அணிதிரண்டுள்ளோம்.
இதில் மக்களின் எந்தவொரு அனுபவத்தையும், நாம் மக்களிடம் இருந்து கற்றுக்கொள்வதன் மூலமே, அவற்றை மீளவும் செப்பனிட்ட கருத்தியல் – செயற்பாடாக, அம் மக்களுக்குக் கற்றுக்கொடுக்க முடியும். அதேபோற்தான் கடந்தகால மக்கள் போராட்டங்களை சிறப்புற வழி நடாத்திய தத்துவங்கள் அனைத்தையும், நாம் மீளக் கற்றுக்கொள்வதன் மூலந்தான், புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் அரசியல் நோக்கத்தை சிறப்பாக்கி வென்றடைய முடியும்.
இந்த வகையில் வர்க்கங்கள் மீதான மாற்றுத் தீர்வைக்காண, வர்க்கப் போராட்டத்தை முன்னெடுத்த மார்க்சிய வரலாற்று அனுவங்களையும், அதன் செறிவான வழி காட்டல்களையும் நாம் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. மார்க்சிய – லெனினிய – மாவோயிச சிந்தனையை நாம் விளங்கிக் கொள்வதோடு, அதனைக் கற்றவாறு போராட்டப் பாதையில் தொடர்ந்தும் நாம் முன்னேற வேண்டியமை மிகமிக முக்கியமாகின்றது. ஆகவேதான் இந்த ஆழ்ந்த அனுபவ அடிப்படைக்கு உரிய அரசியற் கல்வி முறையினை இங்கு நாம் அறிமுகப்படுத்துகின்றோம்.
இந்த சமூக அரசில் கல்விச் சுற்று முறைக்காக, எம்மால் தெரிவு செய்யப்பட்ட கட்டுரைகள், கல்விச் சுற்றுத் தொடர் முறையில் வெளியிடப்படும். அவற்றைத் தொடராக வாசிப்பதுடன், அவற்றின் உள்ளடக்கத்தை நன்கு புரிந்து கொள்வது அவசியமாகும். மாறாக “இவற்றை நான்ஃநாம் ஏற்கனவே வாசித்து விட்டேன்ஃவிட்டோம்” எனத் தூக்கிப் போடாமல், மீண்டும் மீண்டும் வாசித்து, அவற்றின் உள்ளார்ந்த அர்த்தத்தை விளங்கிக் கொள்வது அவசியமாகும்.
இக் கருத்து வடிவங்களை, கட்டுரையாகவும் – ஒலி வடிவிலும் தற்போது தங்களுக்கு அறிமுகம் செய்கின்றோம். நீங்கள் இதனை வாசிக்கும்போதும் அல்லது செவியுறும்போதும், வௌ;வேறு விதமான பாதிப்புகளையும், உணர்வுகளையும் இவை தரலாம். இவற்றைப் புரிந்துகொண்டு மீளமீளப் படிப்பதன் மூலமே, ஆழமான – தெழிவான அறிவையும், ஒருவர் முதல் சமூகங்கள் வரைக்கான வழிகாட்டும் ஆற்றலையும் பெருக்கமுடியும்.
இந்த வகையில், தோழர் மாவோ எழுதிய “கட்சியில் நிலவும் தவறான கருத்துக்களைத் திருத்துவது பற்றி” என்ற தோழர் மாவோவின் இராணுவப் படைப்பிலிருந்து தெரிவு செய்யப்பட்ட தொகுப்பினை, இந்த சமூக அரசியல் கல்விச் சுற்றின் முதல் தொகுப்பாக வெளியிடுகின்றோம். இதன் மூலம், இந்த அமைப்புக்கான உருவாக்கத்தில் இணைந்து, ஆரம்பப் புள்ளியில் நிற்கும் எமக்குள் ஏற்படக்கூடிய மனக் குழப்பங்களையும் – விமர்சனங்களையும் – விரக்திகளையும் – முரண்பாடுகளையும்…, அறிவியலால் செப்பனிட்டு – தீர்வுகண்டு, எம்மை வழிகாட்ட இவை மிகவும் உதவும். தோழர் மாவோ தனது அனுபவ ரீதியாகவே சமூக – வர்க்கப் போராளிகளுக்காக இதனை முன்வைத்திருக்கிறார்.
இக் கல்விச் சுற்று, புதிய ஜனநாயக மக்கள் முன்னணிக்கு மட்டுமானதல்ல. கற்றுக்கொள்ளவும் – மக்களுடன் இணைந்து போராட விரும்பும் அனைவருக்குமானது. இதனை அனைவருக்கும் இலகுவாகக் கற்றுக் கொடுக்கும் வண்ணம், நீங்களும் மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும்.
சிறப்புறக் கற்போம்..!
கற்றுக் கொண்டே போராடி முன்னேறுவோம்..!!
புதிய ஜனநாயக மக்கள் முன்னணி